search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தி.மு.க., அ.தி.மு.க., ம.தி.மு.க. உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தேர்தல் அறிக்கை தயாரிப்பில் தீவிரம்
    X

    தி.மு.க., அ.தி.மு.க., ம.தி.மு.க. உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தேர்தல் அறிக்கை தயாரிப்பில் தீவிரம்

    • வாக்காளர்களை சந்திக்க ஒவ்வொரு கட்சியினரும் களத்தில் இறங்கி விட்டனர்.
    • பொதுமக்களுக்கு செய்யப் போகிற புதிய திட்டங்கள் தேர்தல் வாக்குறுதிகளாக அறிவிக்கப்படும்.

    சென்னை:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலில் 4 முனைப் போட்டி நிலவுகிறது. தி.மு.க. அ.தி.மு.க., பா.ஜனதா, நாம் தமிழர் கட்சி ஆகிய கட்சிகள் 4 ஆண்டுகளாக களத்தில் உள்ளன.

    இந்த கட்சிகளின் தலைமையின் கீழ் உள்ள கூட்டணி கட்சிகள் தேர்தலை சந்திக்க தயாராகி விட்டன. தொகுதிகள் முடிவு செய்யப்பட்டு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட உள்ளனர்.

    வாக்காளர்களை சந்திக்க ஒவ்வொரு கட்சியினரும் களத்தில் இறங்கி விட்டனர். பொதுமக்களின் வாக்குகளை பெற கட்சிகள் தேர்தல் வாக்குறுதிகளை கொடுப்பது வழக்கம். பிரசாரத்தின் போது நாங்கள் ஜெயித்தால் பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவோம் என்று கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை அளிப்பார்கள்.


    பெண்கள், இளைஞர்கள், முதியவர்கள், பட்டதாரிகள் என பல்வேறு தரப்பினருக்கும் ஏற்றாற் போல் செயல் திட்டங்களை அறிவிப்பார்கள். தேர்தல் அறிக்கையாக இதனை புத்தக வடிவில் ஒவ்வொரு கட்சியினரும் தயாரித்து பிரசாரத்திற்கு முன்னதாக வெளியிடுவார்கள்.

    அந்த வகையில் தி.மு.க. அ.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்டுகள், பா.ம.க., ம.தி.மு.க., தே.மு.தி.க. போன்ற கட்சிகள் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றன.

    ஒருசில நாட்களில் தேர்தல் வாக்குறுதிகள் அடங்கிய இந்த அறிக்கை தயாரிக்கும் பணி நிறைவடைகிறது. விரைவில் அக்கட்சிகளின் தலைவர்கள் இதனை வெளியிட உள்ளனர்.


    தி.மு.க., அ.தி.மு.க.வில் தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்கு என தனி குழுக்கள் அமைத்து அந்த பணியை செய்து வருகின்றனர். பொது மக்களுக்கு செய்யப் போகிற புதிய திட்டங்கள் தேர்தல் வாக்குறுதிகளாக அறிவிக்கப்படும்.

    பா.ஜனதா, காங்கிரஸ் கட்சிகள் நாடு முழுவதும் ஒரே வகையான தேர்தல் அறிக்கையை தயாரித்து வெளியிட்டனர். தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் வாக்காளர்களை சந்திப்பதற்கு முன்பு தேர்தல் அறிக்கையை வெளியிட்டு பிரசாரத்திற்கு செல்வார்கள். அதன் அடிப்படையில் அடுத்து வரும் நாட்களில் தேர்தல் அறிக்கையை வெளியிட கட்சி தலைவர்கள் தயாராகி விட்டனர்.

    Next Story
    ×