என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்

X
கோவையில் நாளை மறுநாள் மு.க.ஸ்டாலின் போராட்டம்- பொங்கலூர் பழனிசாமி
By
மாலை மலர்2 May 2018 10:21 AM GMT (Updated: 2 May 2018 10:21 AM GMT)

தி.மு.க.வினர் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்குகளை வாபஸ் பெறாவிட்டால் நாளை மறுநாள் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நேரடியாக வந்து போராட்டத்தில் ஈடுபட உள்ளார் என்று பொங்கலூர் பழனிசாமி கூறினார். #dmk #mkstalin
கோவை:
கோவை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முற்றுகை போராட்டம் முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி தலைமையில் நடந்தது.
குட்கா ஊழல் வழக்கு பற்றி அனைவருக்கும் தெரியும். இதில் அமைச்சர் விஜயபாஸ்கர், மற்றும் போலீஸ் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதாக டைரியில் தகவல்கள் இருந்தது. இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரித்து வருகின்றனர்.
இந்த நிலையில் கோவை கண்ணம் பாளையத்தில் இயங்கி வந்த குட்கா குடோனில் போலீசார் சோதனை நடத்தினர். அங்கு நடக்கும் அக்கிரமங்களை பார்க்க சென்ற தி.மு.க. எம்.எல்.ஏ, கார்த்திக், மற்றும் நிர்வாகிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்ததோடு அதிகாலை நேரத்தில் வீட்டிற்கு சென்று தி.மு.க. நிர்வாகிளை கைது செய்து உள்ளனர்.
போலீசார் விசாரணை தொடங்குவதற்கு முன்னரே இந்த வழக்கில் தி.மு.க. வை சேர்ந்த முன்னாள் பேரூராட்சி தலைவருக்கு உடந்தை இருப்பதாக அதிகாரிகள் கூறியிருப்பது சரியல்ல. வேண்டும் என்றே போலீசார் இந்த வழக்கில் தி.மு.க.வினர் மீது பழி போட்டுள்ளனர்.
எனவே தான் இன்று மாவட்டம் முழுவதிலும் இருந்து தி.மு.க.வினர் தன்எழுச்சியாக திரண்டு வந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தி.மு.க.வினர் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்குகளை வாபஸ் பெறாவிட்டால் நாளை மறுநாள் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நேரடியாக வந்து போராட்டத்தில் ஈடுபட உள்ளார்.
ஆளுங்கட்சியின் தூண்டுதலின் பேரிலேயே போலீசார் இந்த நடவடிக்கையை மேற்கொண்டு உள்ளனர். எனவே இதை வன்மையாக கண்டிக்கிறோம். தி.மு.க.வினர் மீது வழக்குகளை வாபஸ் பெறாவிட்டால் தமிழகம் முழுவதும் தீப்பற்றி எரியும்.
கோவை குட்கா ஆலை வழக்கையும் சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும். இங்குள்ள போலீஸ் அதிகாரி மாதா மாதம் 25 லட்சம் லஞ்சம் வாங்குகிறார் என்று நாங்கள் கூறினால் எப்படி இருக்குமோ, அதே போலத்தான் போலீஸ் சூப்பிரண்டும் தி.மு.க. முன்னாள் பேரூராட்சி தலைவர் மீது குற்றம் சாட்டியுள்ளார். ஆனால் நாங்கள் அவ்வாறு கூறவில்லை.
எந்த முன் யோசனையும் இல்லாமல் உயர் போலீஸ் அதிகாரியே இந்த வழக்கில் தி.மு.க. மீது பழிபோடுவது சரியல்ல. எனவே போலீசார் நேர்மையான முறையில் விசாரிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். #dmk #mkstalin

Next Story
×