என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    சேட்டன் வந்தல்லே.. சிஎஸ்கே வெளியிட்ட AI வீடியோ வைரல்
    X

    சேட்டன் வந்தல்லே.. சிஎஸ்கே வெளியிட்ட AI வீடியோ வைரல்

    • சஞ்சு சாம்சனை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டிரேட் முறையில் வாங்கியுள்ளது.
    • ஜடேஜா, சாம் கரன் ராஜஸ்தான் அணி வாங்கியுள்ளது.

    19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் ஏலம் அடுத்த மாதம் 16-ந் தேதி நடக்கவுள்ளது. இதையொட்டி தக்கவைக்கப்படும் மற்றும் விடுவிக்கப்படும் வீரர்களின் பட்டியலை இன்றுக்குள் 10 அணிகளும் சமர்ப்பிக்க கெடு விதிக்கப்பட்டுள்ளது. இன்னொரு பக்கம் வீரர்கள் பரிமாற்றத்துக்கான பரஸ்பர பேச்சுவார்த்தையும் நடந்து வந்தது.

    அந்த வகையில் இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகி வருகிறது. அந்த வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் சஞ்சு சாம்சன் இடம் பெற்றுள்ளார். அவரை டிரேட் முறையில் சிஎஸ்கே அணி வாங்கியுள்ளது. அவரை வரவேற்கும் விதமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சமூக வலைதளங்களில் AI வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

    அதில் சென்னை மைதானத்தில் எம்எஸ் தோனி சிஎஸ்கே ஜெர்சியிலும் சஞ்சு சாம்சன் ராஜஸ்தான் ஜெர்சியிலும் ரசிகர்களுக்கு மத்தியில் உள்ளனர். அப்போது தோனி ரசிகர்கள் கூட்டத்தை பார்த்து கை காட்டுவார். அந்த கூட்டத்தில் ஒரு பேனரில் விசில் போடு சஞ்சு சாம்சன் என எழுத்தப்பட்டிருந்தது.

    இதனை பார்த்த சஞ்சு சந்தோசத்தில் குதிப்பார். உடனே அவரது ஜெர்சியில் மஞ்சள் நிறமாக மாறும். இவ்வாறு அந்த AI வீடியோ உருவாக்கப்பட்டுள்ளது. இது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    Next Story
    ×