என் மலர்tooltip icon

    செய்திகள்

    தவான் - ரோகித்சர்மா ஜோடி சாதனை
    X

    தவான் - ரோகித்சர்மா ஜோடி சாதனை

    நியூசிலாந்துக்கு எதிரான நேற்றைய 20 ஓவர் போட்டியில் தவான், ரோகித்சர்மா ஜோடி தொடக்க விக்கெட்டுக்கு 98 பந்துகளில் 158 ரன் குவித்து புதிய சாதனை படைத்துள்ளது.

    நியூசிலாந்துக்கு எதிரான முதல் 20 ஓவர் போட்டியில் தவான்-ரோகித்சர்மா ஜோடி தொடக்க விக்கெட்டுக்கு 98 பந்துகளில் 158 ரன் குவித்தது. இந்திய ஜோடியில் இது புதிய சாதனையாகும். இதற்கு முன்பு ரோகித்சர்மாவும், வீராட்கோலியும் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக 2015-ம் ஆண்டு தர்மசாலாவில் 2-வது விக்கெட்டுக்கு 138 ரன் எடுத்தது சாதனையாக இருந்தது. சர்வதேச அளவில் 3-வது சிறந்த ரன் குவித்த ஜோடி என்ற பெருமையை தவான்- ரோகித் பெற்றனர்.

    மேலும் அதிக பந்துகளை (98) சந்தித்து நீண்ட நேரம் களத்தில் நின்ற (முதல் இன்னிங்ஸ்) ஜோடி என்ற சாதனையும் படைத்தது. இதற்கு முன்பு கமரன் அகமல்- சல்மான்பட் (பாகிஸ்தான்) ஜோடி 2010-ம் ஆண்டு வங்காளதேசத்துக்கு எதிராக 95 பந்துகளை சந்தித்து இருந்தது.
    Next Story
    ×