என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    • 1969-ம் ஆண்டு தமிழ்நாடு அரசின் மாநில விருது சுசீலாவிற்கு கிடைத்தது.
    • இசை கர்நாடக இசை ராகங்களின் அடிப்படையில் இருந்தாலும் எல்லாராலும் பாடமுடிந்தது.

    ஆரம்பகாலம் தொட்டே சி.ஆர்.சுப்பாராமனிடத்தில் வயலினிஸ்டாக இருந்த டி.கே. ராமமூர்த்தியும், அவரிடம் முக்கிய உதவியாளராக இருந்த எம்.எஸ்.விஸ்வநாதனும் ஜூன் 1952 ல் சி.ஆர்.சுப்பாராமன் இறந்த நிலையில் அவரால் ஒப்புக்கொள்ளப்பட்ட படங்களுக்கு அதன் தயாரிப்பாளர்கள் கேட்டுக்கொண்டதன் பேரில் மீதி படங்களை முடித்துக் கொடுத்து தமிழ் திரையுலகையே திரும்பிப் பார்க்க வைத்தார்கள் மெல்லிசை மன்னர்கள்.

    'தேவதாஸ்' பட ஒளிப்பதிவாளர் பி.எஸ். ரங்கா, தனது ஐந்து படங்களிலும், மார்டன் தியேட்டர்ஸ் மூன்று படங்களிலும், கண்ணதாசன் தயாரித்த மற்றும் கதை வசனம் எழுதிய படங்களில் ஆறு எனத்தொடர்ந்து வரவேற்றுக் கொடுத்த வாய்ப்பில் இரட்டையர்கள் அப்போதைய இசையமைப்பு பாணியில் இருந்து முற்றிலும் புதிதாக கர்நாடக இசையுடன் மேற்கத்திய இசை முறையை அறிமுகப்படுத்தி இசையை மென்மைப்படுத்தினார்கள்.

    இவர்களது இசை கர்நாடக இசை ராகங்களின் அடிப்படையில் இருந்தாலும் எல்லாராலும் பாடமுடிந்தது. எல்லோரிடத்திலும் போய் சேர்ந்தது.

    1960-களில் வந்த படப்பாடல்கள் பொற்காலத் திரையிசைப் பாடல்கள் என்றே வர்ணிக்கப்படுகின்றன!!

    வல்லிசையை மெல்லிசை ஆக்கிய எம்.எஸ். விஸ்வநாதன் - டி.கே.ராமமூர்த்தி இருவருக்கும் பட்டம் வழங்கி சிறப்பிக்க நடிகர் திலகம் சிவாஜி கணேசன் முன்னிலையில் திருவல்லிக்கேணி கல்ச்சுரல் அகாடமி சார்பில் சென்னை என்.கே.டி. கலா மண்டபத்தில் பத்திரிக்கையாளர்கள், நடிகர் ஜெமினிகணேசன், கவியரசர் கண்ணதாசன், இயக்குனர் ஸ்ரீதர், நடிகர் சந்திரபாபு, நடிகை சாவித்திரி மற்றும் பலர் கலந்து கொண்டு பாராட்ட ஜூன் 1963ல் "மெல்லிசை மன்னர்"என்ற பட்டத்தை நடிகர் சிவாஜி கணேசன் வழங்கினார். பட்டத்திற்கான பெயரை தேர்ந்தெடுத்தவர் கவியரசர் கண்ணதாசன்!

    பெரும்பாலும் பாடல் எழுதி இசையமைத்து ஒன்றாகவே பணி செய்யும் வாய்ப்பு கவியரசருக்கும் எம்.எஸ்.வி.க்கும் வாய்த்தாலும் வீட்டுக்கு வந்த பின்பு இரவு 10 மணிக்கு மேல் தினமும் இருவரும் அரை மணி நேரத்திற்கு மேல் பேசுவது வழக்கம். அப்படித்தான் மெல்லிசை மன்னர்கள் பட்டம் வாங்கும் முன் நாள் இரவு கவியரசர், எம்.எஸ்.வி.க்கு போன் செய்கிறார்.

    "ஹலோ மெல்லிசை மன்னரே.."

    "என்னது மெல்லிசை மன்னரா?"

    "ஆமா விசு, உனக்கு நாளை மெல்லிசை மன்னர் பட்டம் தர போறாங்க."

    "என்னது பட்டமா? அதெல்லாம் வேண்டாம் கவிஞரே, அப்புறம் நான் விழாவிற்கு வரமாட்டேன்."

    "விசு, நாளைக்கு நீ வர்றே, உனக்கும் ராமமூர்த்திக்கும் மெல்லிசை மன்னர் பட்டம் தரப் போறாங்க. எல்லாம் தயார். நாளைக்கு கட்டாயம் நீ வந்து பட்டத்தை ஏத்துக்கணும்"

    கவியரசர் பேச்சுக்கு மறு பேச்சு ஏது எம்.எஸ்.வி. யிடம்.

    "சரி கவிஞரே"

    மறுநாள், விழாவில் அறிவித்து வழங்கி பாராட்டப்பட்ட பட்டத்தை திரையரங்குகளில் பெயர் காட்டப்படும் டைட்டில் காட்சிகளில் மெல்லிசை மன்னர்கள் என்றோ, பின்னாளில் இருவரும் தனித்தனியாக இசையமைக்க ஆரம்பித்த பிறகு மெல்லிசை மன்னர் என்று துவங்கி இரு இசை மேதைகள் பெயர் வந்தாலோ அரங்கமே அதிரும் விசிலாலும், கைத்தட்டல்களாலும்!!

    இன்றுவரை இருவர் பெயருடன் "மெல்லிசை மன்னர்" என்ற அடைமொழி நிலைத்து வாழ்கிறது.

    பாடல்களை இசையமைத்துப் பாடியவுடன், இந்தப் பாடலுக்கு "தேசிய விருது" கிடைக்கும் என்பதை எம்.எஸ்.வி சொல்லிவிடுவார். அவரது கணிப்பு மிகச் சரியாகவும் இருந்திருக்கிறது!

    'உயர்ந்த மனிதன்' என்றத் திரைப்படம். நடிகர் திலகம் சிவாஜி கணேசன், வாணிஸ்ரீ நடித்த படம். அதில் "நாளை இந்த வேளைப் பார்த்து ஓடி வா நிலா"- என்ற பாடல். சுசீலா பாடியிருந்தார். காவியக் கவிஞர் வாலி எழுதியிருப்பார். வால்ட்ஸ் இசை 'ஹபானாரா' என்ற வகையில் அமைத்தப் பாடல் அது.

    ஒவ்வொரு எழுத்துக்கும் பாவனைகளை மெட்டமைத்து பாடலை பாட வைத்திருப்பார் எம்.எஸ்.வி! சுசிலாவின் குரலில் இழையோடும் ஏக்கம், சோகம், காதல் எல்லாம் இன்றும் நம்மை கேட்டுக் கொண்டே இருக்கச் செய்யும்! மிகவும் சிரமமாக இந்த பாடலை பாடி முடித்த போது, எம்.எஸ்.வி. சொன்னாராம், இந்த பாடலுக்கு உங்களுக்கு நிச்சயம் விருது கிடைக்கும் என்று.

    1969-ம் ஆண்டு தமிழ்நாடு அரசின் மாநில விருது சுசீலாவிற்கு கிடைத்தது. அது மட்டுமல்ல அதே ஆண்டு முதன்முதலாக தேசிய விருதுக்கு பின்னணி பாடகியர் பிரிவும் ஏற்படுத்தப்பட்டு அந்த பிரிவில் முதலில் "தேசிய விருது" பி.சுசீலாவிற்கு தான் வழங்கப்பட்டது.

    இதே போல் இன்னொரு பாடலின் ஒலிப்பதிவு முடிந்தவுடன் ஒரு மிகச்சிறந்த பாடகியிடம் இந்த பாடலுக்கு உங்களுக்கு தேசிய விருது கிடைக்கும் என்று சொன்னார். அதை பற்றி பின்வரும் தொடரில் பார்ப்போம்.

    சுசிலா 1953-ல் முதன் முதலாக பாட வந்தாலும் 1956-ல் தெனாலிராமன் என்ற படத்தில் ஜெயதேவர் அஷ்டபதி பாடல் ஒன்றை பாட அவருக்கு வாய்ப்பு தந்தார் எம்.எஸ்.வி.

    கி. பானுமதி கிருஷ்ணகுமார்

    கி. பானுமதி கிருஷ்ணகுமார்

    பிறகு பக்த மார்க்கண்டேயாவில் ஒரு பாடல் பாடுகிறார். இவரது குரலின் தனித்தன்மை ஈர்க்க, 'பத்தினி தெய்வம்' படத்தில் டி.எம். சவுந்தரராஜனுடன் இரண்டு டூயட் பாட வைக்கிறார். 'புதையல்' படத்தில் ஐந்து பாடல்கள். ஒவ்வொன்றும் ஒருவகை. இரண்டு குழுவினருடன், ஒரு டூயட், ஒரு சோகம், ஒரு கிராமியம் என்று எல்லா வகை பாடலுக்கும் சுசீலாவின் குரல் பொருந்தி போகிறது. எவ்வளவு உச்சத்தோணியில் பாடினாலும் பிசிறடிக்காத அவரது குரல் எல்லோரையும் கட்டிப்போட்டது.

    ஆரம்பத்தில் இவரது குரலில் இருந்த மிக மெலிதான கர்நாடகா பாணியிலான அதிர்வு இல்லாமல் முழுக்க முழுக்க குழைவான இனிய குரலில் 'மகாதேவி' படத்தில் வந்த "கண்மூடும் வேளையிலும் கலை என்ன கலையே" என்ற பாடல் பட்டித் தொட்டி எங்கும் பிரபலமானது. அதன் பிறகு தமிழ் திரைப்பட உலகில் பி.சுசிலா பாடாத படமே இல்லை என்று சொல்லலாம். (போலீஸ்காரன் மகள் படத்தை தவிர) உச்சாணி கொம்பில் ஏறியது அவரது வளர்ச்சியும் புகழும்!

    'அமுதவல்லி' என்ற படத்தில் ஒரு பாடல் 'ஆடைகட்டி வந்த நிலாவோ' டி.ஆர். மகாலிங்கம் பி.சுசீலா பாடியது. இது, சுசிலா குரல் எவ்வளவு தூரம் நெகிழ்த்தன்மையுடன் இழுக்க வரும் என்று சோதனை வைத்து பார்த்தது போன்ற பாடல்!

    'ஆடைகட்டி வந்த நிலாவோ' என்ற பெரிய பல்லவியை டி.ஆர்.மகாலிங்கம் பாடியிருப்பார். அவர் எட்டுக்கட்டையில் பாடுபவர். மூச்சடக்கி இவ்வளவு பெரிய பல்லவியை பாடுவதில் வியப்பில்லை.

    சரணத்தில் சுசீலா பாடும் போது "துள்ளித்துள்ளி ஆடும் இன்ப லோக மங்கை சொந்தமுள்ள ராணி இவள் நாகமங்கை" இந்த வரிகளை இரண்டு முறை பாடி தொடர்ந்து "எல்லையற்ற ஆசையில் ஓடி வந்தாள். தள்ளிவிட்டு போனபின் தேடி வந்தாள்" என்ற வரிகளையும் இரண்டு முறை பாடி,

    கிளை தான் இழந்து,

    கனியை சுமந்து,

    தனியே கிடந்த கொடி நானே,

    கண்ணாலனுடன் கலந்தானந்தமே பெற

    காவினில் வாழும் வாடும் கிளி நானே

    என்ற வரிகளையும் பாடி மீண்டும்

    "துள்ளித்துள்ளி ஆடும்"- என்ற இரு வரிகளை எங்கும் இடைவெளி விடாமல் மூச்செடுக்காமல் பாடி நிறுத்துவார்!

    பட்டுக்கோட்டையாரின் அழகான வரிகள்! என்ன ஒரு மெட்டமைப்பு! சுசீலா தொடர்ந்து 40 நொடிகள் பாடுகிறார்! சவாலாக எடுத்து பாடி இருக்கலாம்! இந்தப் பாடல் வந்த பிறகு எல்லோர் மனதிலும் கூடு கட்டி வாழும் குயிலானார் சுசிலா!!

    'மன்னாதி மன்னன்' படத்தில் "கண்கள் இரண்டும் என்று உன்னை கண்டு பேசுமோ?" என்ற கண்ணதாசன் வரிகளில் இருந்த சோகமும், ஆதங்கமும், ஏக்கமும் மெட்டமைப்பில் உணர்ச்சி பூர்வமான பாவனையையும் அப்படியே தனது குரலில் மொழிபெயர்த்தார் சுசிலா. கேட்போர் காதிலே நாளெல்லாம் ரீங்காரமிடும்!

    தமிழ் திரையுலகில், குறிப்பாக மெல்லிசை மன்னர்கள் பாடலென்றால் அங்கே முடி சூடா அரசி ஆகிவிட்டார் பி.சுசிலா!

    பொதுவாக கவிஞர்களின் வரிகளில் வரும் உணர்வுகளை அப்படியே தனது குரலில் அது துள்ளலோ, தொண்டை தழுதழுக்கும் துக்கமோ, பக்தியின் பாந்தமோ, தாலாட்டின் பாசமோ எதுவானாலும் அப்படியே தனது குரலில் தருபவர் அவர்.

    ஒருமுறை, அவர் வீட்டில் நேரில் சந்தித்தபோது கேட்டேன், உங்களது குரலில் உணர்வுகள் அப்படியே பொங்கி வருகிறதே எப்படி? என்றேன்.

    அதற்கு அவர், பாடல் எந்த சூழ்நிலையில் பாடப்படுகிறது என்று கேட்டு தெரிந்து கொள்வேன். அதைக் குரலில் கொண்டு வந்து விடுவேன் என சொன்னார். அதனால் தானோ என்னவோ வரிகளில் இருப்பதை பாடும் குரலிலேயே நடித்துவிடுவார்! அதை அப்படியே கதாநாயகிகள் காட்சியில் கொண்டு வந்துவிடலாம்.

    கே.எஸ். கோபாலகிருஷ்ணன் இயக்கிய 'கற்பகம்' படத்தில் ஐந்து பாடல்கள். ஐந்து பாடல்களையும் சுசீலாவை வைத்தே பாட வைத்திருந்தார்கள் இரட்டையர்கள். ஆண் குரலில் பாடலே இல்லாத படம் அது.

    இதே இயக்குனர் ஒரு பாடலை சுசீலா தான் பாட வேண்டும் என்று காத்திருந்தார் என்றால் என்ன சொல்வது? 'சித்தி' என்று ஒரு படம். அதில் தாலாட்டு பாடிய குழந்தையை தூங்க வைக்கும் போது 'இப்போதே தூங்கு, இதை விட்டால் தூங்க நேரம் கிடைப்பது அரிது' என்று பாடல் எழுத வேண்டும் என்று கவியரசரிடம் சொன்னார்.

    கவியரசரோ, குழந்தைப் பருவம் தவிர பெண்களுக்கான பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அறிவை, தெரிவை - பேரினப் பெண் என்ற தமிழ் சமுதாயம் வரையறுத்து வைத்திருக்கிற அத்தனை பருவங்களுக்கு ம் இரண்டிரண்டு வரிகளை வைத்து பிரமாதமாக எழுதிவிட்டார். இதை சுசீலா தான் பாட வேண்டும் என்கிறார் இயக்குனர். ஆனால் அப்போது அவருக்கு குழந்தை பேறு நேரம். அதனால் என்ன என்று சில மாதங்கள் ஆன பிறகு அவரே வந்து பாடிய பாடல் தான் "காலமிது காலமிது கண்ணுறங்கு மகளே" என்ற பாடல். ஆறு மாத குழந்தை முதல் 100 வயது மனிதர்களும் சொக்கிப் போகும் குரல். காட்சியிலும் அப்படித்தான், குழந்தையும் பாட்டியும் ஒரு சேர தூங்கிவிடுவார்கள். கவியரசரின் வைர வரிகள் மட்டுமா? சுசிலாம்மாவின் ஆரீ ராரீரீ ஆரீ ராரோ

    ஆரீ ராரீ ராரோ....?

    ஹலோ தூங்கிடாதீங்க, இன்னும் இது போல பல பாடல்கள் வருதே!

    தொடர்ந்து புதையல் எடுப்போம்...

    • உறுப்புமாற்று அறுவைச் சிகிச்சை எவ்வளவு நேரத்திற்குள் செய்யப்பட வேண்டும்.
    • மூளைதானம் மற்ற உறுப்பு தானத்தில் இருந்து வேறுபட்டது.

    உறுப்புதானம் என்பது மனித இனத்திற்கே கிடைத்த ஒரு பெரும் வரம் ஆகும். ஒருவரின் வாழ்க்கையில் ஏதாவது ஒரு உறுப்பு செயலிழந்து விட்டால், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையின் மூலம் அவருக்கு வாழ்நாளை அதிகப்படுத்தித்தர முடியும் என்பது, மருத்துவத்துறையின் மிகப்பெரிய சாதனையாகும்.

    இந்தியாவில் "நவம்பர் 27" அன்று உடல் உறுப்புதான நாளாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. உடல் உறுப்புதானம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கும், அதன் சிறப்பைப் பற்றித் தெரிந்து கொள்வதற்கும் இந்த நாள் மேற்கொள்ளப்படுகிறது. இந்த உறுப்பு தானத்தைப் பற்றி இப்பகுதியில் காணலாம்.

    உடல் உறுப்பு தானம் என்றால் என்ன?: நோயுற்று, உடலுறுப்பு பாதிக்கப்பட்ட ஒருவருக்கு, நலமாக இருக்கும் மற்றொருவர் தேவையான உடல் உறுப்பைத் தானமாக அளிப்பது மட்டு மல்ல, மூளைசாவு அடைந்த ஒருவரிடமிருந்தோ, இயற்கையாக இறந்தவரிடமிருந்தோ சில மணிநேரங்களுக்குள் உடல் உறுப்புகளை எடுத்து, தேவையானவர்களுக்கு (ஒன்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு) அறுவை சிகிச்சையின் மூலம் பொருத்துவது ஆகும்.

    உடல் உறுப்பு தானம் எத்தனை வகைப்படும்?:

    1. உயிருடன் இருக்கையில் கொடுப்பது:- இதில் நோயாளிக்கு அவரின் உறவினர்களோ அல்லது நண்பர்களோ, அவர்களின் முழு ஒப்புதலுடன் உடல் உறுப்புகளைத் தானமாக அளிப்பது. இவர்கள் தானமாக அளிக்கக்கூடிய உறுப்புகள்:- ஒரு சிறுநீரகம், கல்லீரலின் ஒரு பகுதி, நுரையீரலின் ஒரு பகுதி, குடலின் ஒரு பகுதி, கணையத்தின் ஒரு பகுதி.

    2. மூளை சாவிற்குப் பிறகு கொடுத்தல்:- மூளைச்சாவு அடைந்தவரின் உறுப்புகளை அவரின் குடும்பத்தினரின் ஒப்பத்துடன் பெறுவது இவர்கள் தானமாக அளிக்கக் கூடிய உறுப்புகள்:- இரண்டு சிறுநீரகங்கள், கணையம், கல்லீரல், நுரையீரல், குடல் முழுவதும், கண் விழித்திரை (கார்னியா), எலும்பு மஜ்ஜை, எலும்பு, இதயத்தின் வால்வுகள், தசைநார் (டெண்டன்) மற்றும் தோல்.

    3. இறந்தபின் தானம் செய்வது:- இறந்த சில நிமிடங்களில் ஒருவரின் உடலில் இருந்து கண், தோல், எலும்பு மற்றும் தசைநார் (டெண்டன்) ஆகியவை தானமாகப் பெறப்படுகின்றன.

    ஒரு சிலர் தன் வாழ்நாட்களுக்குப் பிறகு, தன் உறுப்புகளை தானம் செய்ய விருப்பம் கொண்டுள்ளனர். ஆனால் எப்படிச் செய்ய வேண்டும் என்று தெரியாமல் உள்ளனர், அவர்கள் தமிழ்நாடு அரசின் https://transtan.tn.gov.in/ என்ற இணைய தளத்தில் தன் உறுப்பைத் தானம் செய்வதற்குப் பதிவு செய்து வைத்துக்கொள்ளலாம்.

    உறுப்புதானம் செய்வதற்குத் தகுதியானவர்கள் யார்?:

    அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்

    என்பும் உரியர் பிறர்க்கு.

    என்கிறார் திருவள்ளுவர்.

    அன்பு இல்லாதவர் எல்லாவற்றையும் தமக்கே உரிமை உடையதாய் இருப்பர். அன்புள்ளவரோ பொருளால் மட்டும் அன்று உடம்பாலும் பிறர்க்கு உரியவராய் இருப்பர்.

    18 வயது முதல் 60 வயதிற்குட்பட்டவர்கள், ஆணாக இருந்தாலும் சரி அல்லது பெண்ணாக இருந்தாலும் சரி, தாமாக முன் வந்து உடலுறுப்புத் தானம் செய்யலாம்.

    நலமாக இருப்பவர்கள், ரத்தக் கொதிப்பு, சர்க்கரை நோய், புற்று நோய், இதய நோய், பால்வினை நோய், மஞ்சள் காமாலை, ஊது காமாலை போன்ற நோய்கள் எதுவும் இல்லாதவர்கள் அனைவரும் உயிருடன் இருக்கும் போது ரத்ததானம் செய்வது போன்று உறுப்பு தானமும் செய்யத் தகுதியானவர்கள்.

    உறுப்பு தானம் செய்பவர் மருத்துவமனையில் இறந்தால் உறுப்பு தானம் செய்ய எளிதாக இருக்கும். ஏனென்றால் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குள்ளாகவே அவரின் உடலில் இருந்து உறுப்புகள் அறுவைச் சிகிச்சையின் மூலம் எடுக்கப்படுகிறது. அதைத் தொடர்ந்து மாற்று அறுவைச் சிகிச்சை செய்து, தேவையானோருக்கு உடனடியாகப் பொருத்தப்படுகிறது. இதற்கான காலத்தேவை பற்றிக் கீழே பார்ப்போம்.

    உறுப்புமாற்று அறுவைச் சிகிச்சை எவ்வளவு நேரத்திற்குள் செய்யப்பட வேண்டும்?: ஒருவரிடமிருந்து பெறப்பட்ட உறுப்பை, மாற்று அறுவை சிகிச்சையின் மூலம் யாருக்குத் தேவையோ அவர்களுக்கு, குறிப்பிட்ட நேரத்திற்குள் பொருத்திவிட வேண்டும், குறிப்பாகச் சில உறுப்புகள் இவ்வளவு நேரத்திற்குள் மாற்றிவிட வேண்டும் என்ற வரையறை உள்ளது. ஏனென்றால் அதற்கு மேல் பொருத்தப்படும்போது, அந்த உறுப்புகள் தம் செயல்படும் திறனை இழந்துவிடுகின்றன.

    மரு.அ.வேணி

    மரு.அ.வேணி

    சிறுநீரகம் : 48-72 மணி நேரம் வரை

    கல்லீரல் : 12-18 மணி நேரம் வரை

    இதயம் : 5 மணி நேரம் வரை

    இதயம் / நுரையீரல் : 5 மணி நேரம் வரை

    கணையம் : 8-12 மணி நேரம் வரை

    கண் விழித்திரை (கார்னியா) : 10 நாட்கள் வரை

    எலும்பு மஜ்ஜை : கால அளவு மாறும்

    குடல் : 8 மணிநேரம்

    தோல் : 5 வருடமும், அதற்கு மேலும்

    எலும்பு : 5 வருடமும், அதற்கு மேலும்

    இதயத்தின் வால்வுகள் : 5 வருடமும், அதற்கு மேலும் பாதுகாத்து, வைத்து பயன்படுத்தலாம்.

    ஒருவரிடம் இருந்து பெறப்படும் உறுப்புதானம் எட்டு அல்லது அதற்கு மேற்பட்டவர்களின் வாழ்க்கைக்குப் பயன்படுத்தப்படுகிறது.

    உறுப்புதானம் எல்லோருக்கும் பொருந்துமா? பொதுவாகவே நம் உடம்பிற்கு ஓர் இயல்பு உண்டு, தனக்குப் பொருந்தாத எதையும் அது ஏற்றுக் கொள்ளாமல், ஒதுக்கிவிடும். இதற்குக் காரணம் நம் உடலின் எதிப்பாற்றல்தான் (ரத்தத்திலுள்ள ஆன்டிபாடி). அதனால்தான் தானமாக பெற்ற உறுப்பை பொருத்துவதற்கு முன்னால் 'பிளாஸ்மாபெரிஸிஸ்' என்ற முறை மூலமும், சில மருந்து மாத்திரைகளின் மூலமும், உடலில் உள்ள எதிர்ப்பாற்றலைக் குறைத்து விட்டுத்தான் பொருத்தப்படுகின்றன. அப்போதுதான் அந்த உறுப்பைப் பொருத்தப்பட்டவரின் உடல் ஏற்றுக் கொள்கிறது. இரத்ததானம் செய்வதற்கு முன்பு இரத்த ஆய்வு செய்வதுபோல், உறுப்புதானம் செய்வதற்கு முன்பும் உறுப்புப் பொருத்தம் உள்ளதா? இல்லையா? என்று ஆய்வு செய்த பிறகுதான் தானம் பெறப்படுகிறது.

    மூளைதானம் செய்ய முடியுமா?:

    மூளைதானம் மற்ற உறுப்பு தானத்தில் இருந்து வேறுபட்டது. இன்றளவும் மூளைதானம் ஆராய்ச்சி நோக்கங்களுக்காக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. இதை மற்றொருவருக்கு பொருத்த முடியாது.

    கண்தானம்;

    வயது, பாலினம் மற்றும் ரத்தப்பிரிவு ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் யார் வேண்டுமானாலும் தங்கள் கண்களைக் கொடுக்கலாம். இறந்த ஒரு மணிநேரத்திற்குள் கார்னியாவை அகற்ற வேண்டும். தானம் செய்யப்பட்ட நபரின்கண்கள், இரண்டு கண் பார்வையற்றவர்களின் பார்வையைக் காப்பாற்றும். கண்களை அகற்றுவதற்கு 10-15 நிமிடங்கள் மட்டுமே ஆகும். உறுப்புதானத்தில் மிக அதிகமாகத் தேவைப்படுவது, சிறுநீரகம் மற்றும் கண்கள் ஆகும். தற்போது மாறியுள்ள உணவுக் கலாச்சாரத்தில் கல்லீரலின் தேவையும் அதிகரித்துக் கொண்டே போகிறது. காற்றுமாசுபாடு மற்றும் புகைப்பழக்கத்தால் இரண்டு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சையும் தற்போது தேவைப்படுகிறது. நாம் விரும்பும் ஒருவரின் இறப்பும் அவரை நம்மிடம் இருந்து பிரித்துவிட முடியாதவாறு, அவரின் உறுப்புகளைத் தானம் செய்வதன் மூலம் என்றுமே அவர் நம் வாழ்நாள் வரை இவ்வுலகில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார் என்ற உணர்வை ஏற்படுத்து வதற்கு இந்த உறுப்பு தானம் பெரிதும் உதவுகிறது என்றே நினைக்கிறேன்.

    எனவே இதைப் படிக்கும் நீங்கள் உங்கள் வாழ்நாட்களுக்குப் பிறகு தானம் தரப் பதிவு செய்து கொள்ளுங்கள். வாழும்போது மட்டுமல்லாமல், வாழ்க்கைக்குப் பின்னும் நாம் பிறருக்குப் பயன்படுமாறு வாழலாமே!

    செல்: 75980-01010, 80564-01010.

    • கர்நாடக பகுதிகளில் ஆலயங்கள் எல்லாம் கேரளத்து கோவில்களை போன்று இருக்கும்.
    • சுற்றுலா பயணிகளுக்கு சிறந்த பொழுதுபோக்கு அம்சமாக திகழ்கிறது.

    அழகும் ஆன்மீகமும் நிறைந்த ஸ்ரீ கிருஷ்ணர் குடி கொண்டுள்ள உடுப்பி கோவில் நகரத்தை பார்த்தோம். அப்படியே இன்னும் பார்க்க வேண்டிய இடங்கள் பல உள்ளன.

    கண்ணும் கருத்தும் கவரும் வண்ணமாக அமைதியான சூழலில் அமைந்திருக்கக் கூடிய ஆலயங்கள், பரசுராம சேத்திரம் என்று அழைக்கப்படுகின்ற மேற்கு கடற்கரை பகுதியில் மங்களூர், உடுப்பி போன்ற மாவட்டங்களிலேயே அதிக அளவில் பார்க்க முடியும்.

    நம்முடைய தமிழ்நாட்டில் கட்டப்பட்டுள்ள கோவில்களின் அமைப்புகள் வேறு. இங்குள்ள கோவில் கட்டிடக்கலை வேறுவித அமைப்பைக் கொண்டவை.

    தமிழக கோவில்களில் உயர்ந்த வானளாவிய கோபுரங்கள், கல்லில் வடிக்கப்பட்ட தெய்வ சிலைகள், கருவறையிலும், சுற்றி வருகின்ற பிரகாரங்களிலும் கலை வேலைப்பாடுகள் நிறைந்த தெய்வாம்சம் பொருந்திய சிலைகள் முதல்... இறை நெறி பரப்பிய அடியவர்கள்.. தெய்வத் திருமணங்கள் நிகழ்ந்ததற்கான காட்சிகள்... என்று பல்வேறு சிற்ப கலைகளை எல்லாம் விதவிதமாக காண முடியும்.

    ஆனால் மேற்கு கடற்கரையோர கர்நாடக பகுதிகளில் ஆலயங்கள் எல்லாம் கேரளத்து கோவில்களை போன்று இருக்கும். உயர்தர மரங்களைக் கொண்டு கட்டப்பட்டு ஓடுகளால் வேயப்பட்டே இருக்கின்றன.

    காரணம் மேற்குத் தொடர்ச்சி மலையில் பெய்யக்கூடிய கனமழையை தாங்கும் பொருட்டு இருக்கலாம். முற்காலத்தில் இந்த பகுதியில் அதிகமாக பெய்யும் மழை, ஓடுகளில் சரிவினில் நொடியும் நிற்காமல் இறங்கி விடும் என்ற நோக்கினில் இவ்வாறு இருக்கலாம்.

    மேற்கு கடற்கரை பகுதி மலைகளும் காடுகளும் சூழ்ந்த பகுதியாக இருப்பதால் செரிவான மரங்கள் எங்கும் எளிதாக கிடைத்திருக்க கூடும் என்பதால் இப்பகுதியில் கட்டப்பட்ட கோவில்களின் சுற்றுச்சுவர்கள்... மேற்கூரை... கோபுரங்கள்...வெளி பிரகாரங்கள் என அனைத்தும் மரங்களால் அமைக்கப்பட்டுள்ளது.

    இதனால் இங்கு கட்டப்பட்டுள்ள கோவில்கள் நம் தமிழ்நாட்டு கோவில்களை போன்று உயர்ந்தும் பரந்தும் இல்லாமல் அங்கிருக்க கூடிய இயற்கையின் சூழலையொட்டி கட்டப்பட்டுள்ளன.

    கர்நாடகாவின் மேற்கு தொடர்ச்சி மலையில் ஆகும்பே காட் என்று ஒரு பகுதி உள்ளது. இது அதிக மழைப்பொழிவை உடையதால் தென்னிந்தியாவின் சிரபுஞ்சி என்று ஆகும்பே அழைக்கப்படுகிறது.


    உடுப்பியில் இருந்து இந்த மலைப்பகுதிக்கு செல்லும் வழியில் கார்காலா என்னுமிடத்தில் கோமடீஸ்வரா என்ற சமண ஆலயம் உள்ளது. சரவணபெலகுலாவில் இருப்பது போன்று இங்கும் ஒரே கல்லிலான உயரமான சிலை உள்ளது. பார்ப்பதற்கு வியப்பூட்டுவதாக இருக்கும்.

    உடுப்பியை ஒரு புறம் மேற்குத் தொடர்ச்சி மலைகள் தழுவிக் கொண்டு இருப்பதால் ஆங்காங்கே நீர்வீழ்ச்சிகளும் ஆறுகளும் அமைந்து கண்களுக்கு விருந்தளிக்கின்றன.

    குறிப்பாக ஆகும்பேயில் உருவாகி பெருகி வரும் சீதா நதி, காடுகளை தாண்டி சமதளத்தில் பாயும் இடத்தில் ராப்டிங் என்ற நீர் விளையாட்டு உள்ளது. இது சுற்றுலா பயணிகளுக்கு சிறந்த பொழுதுபோக்கு அம்சமாக திகழ்கிறது. மேலும் சீதா நீர்வீழ்ச்சி அருகே தங்கி கண்டுகளிக்க பசுமையான இடங்களும் உள்ளன. இங்கு சுற்றுலா வருபவர்களுக்கு இது ஒரு ஆனந்தமான அனுபவத்தை தருவதாக இருக்கும். அருகில் இருக்கும் சீதா நீர்வீழ்ச்சியே குட்லு தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது.

    உடுப்பியில் இருந்து கொல்லூர் போகும் வழியில் சில கிலோமீட்டர் தூரத்திலேயே கும்பாஷி ஆனேகுட்டா என்ற இடம் உள்ளது. இந்த இடத்தில் ஒரே கல்லில் செதுக்கிய விநாயகர் வீற்றிருக்கும் திருக்கோவிலை தவிர்க்காமல் தரிசித்தல் சிறப்பு.

    இன்னும் 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அட்டியங்கடி எனும் இடத்தில் வீற்றிருக்கக் கூடிய சித்தி விநாயகர் ஆலயமும் மிக சிறப்பு வாய்ந்த ஆலயமாகும்.

    குந்தாபூரில் இருந்து கொல்லூர் செல்லும் வழியில் மிகவும் பிரசித்திப் பெற்ற சங்கர நாராயணன் ஆலயம் உள்ளது. "அரியும் அரனும் ஒன்று அறிந்தவர் வாழ்க்கை நன்று" என்று சொல்லப்படும் வகையில் மேற்கு கடற்கரையொட்டி பரசுராமரால் உருவாக்கப்பட்ட ஏழுத் தலங்களில் சங்கரநாராயணன் தலமும் ஒன்றாகும்.

    பக்தர்கள் பார்வையில் வலப்புறம் நாராயண லிங்கம் என்றும் இடப்புறம் சங்கரலிங்கம் என்றும் வணங்கப்படுகிறது. இந்த சுயம்புலிங்கத்தை எப்போதும் நீர் சூழ்ந்து இருக்கும். இந்த நீரை சுத்தாமிர்த தீர்த்தம் என்று அழைக்கின்றனர். இந்த கோவிலுக்கு பக்தர்கள் வருகை அதிக அளவில் உள்ளது.

    கர்நாடக மாநிலத்தின் மேற்கு கடற்கரையையொட்டியே மலைத்தொடரும் அமைந்துள்ளதால் இங்குள்ள ஆலயங்களும், மலை பிரதேச பகுதிகளும், கடற்கரையும் சுற்றுலா தலங்களாக சிறந்து விளங்குகின்றன. வழிபாட்டோடு சுற்றுலா இடங்களையும் கண்டுகளிக்கலாம் என்பதால் நாடெங்கிலும் இருந்து ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இது போன்று இன்னும் காணவேண்டிய பல அற்புதமான இடங்கள் உள்ளன. அவைபற்றி வரும் தொடரில் பார்க்கலாம்.

    • விகிதாசாரம் மாற்றம் பெரும்போது உடலில் நோய் உருவாகிறது.
    • உடலில் உருவாகும் நோய்களுக்கு உணவு கட்டுப்பாடு என்பது மிகவும் அவசியம்.

    மனிதர்களுடைய உடலில் உள்ள காந்த சக்தியை உயிர் ஆற்றலாக வெளிக்கொண்டு வந்து நோய் தீர்க்கும் ஒரு கலையை தான் யோகத்தில் முத்திரைகள் என்கிறோம். இந்த யோகம் முத்திரைகள் நம்முடைய உடலில் உள் உறுப்புகளை ஆளுமை செய்து பயிற்சிகள் மூலம், ஏதேனும் குறைகள் இருந்தால் அதை சரி செய்வதுடன் வராமலும் தடுக்க பயன்படுகிறது.

    இறைவனால் படைக்கப்பட்ட இந்த பிரபஞ்சம் என்பது பஞ்சபூதங்களால் உருவாக்கப்பட்டது. அதுபோல நம்முடைய உடலும் பஞ்சபூதங்களின் கலவை ஆகும். இந்த முத்திரை கலையில் பஞ்சபூதங்கள் என்பது நமது கை விரல்களில், நெருப்பு, காற்று, ஆகாயம், நிலம், நீர் என்று ஐந்து பஞ்சபூத தத்துவங்களாக வேலை செய்கிறது.

    1. நெருப்பு என்பது கட்டை விரல்

    2. காற்று என்பது ஆள்காட்டி விரல்

    3. ஆகாயம் என்பது நடுவிரல்

    4. நிலம் என்பது மோதிர விரல்

    5. நீர் என்பது சிறுவிரல்

    கி. சௌமித்ரன், பொன்னி சௌமித்ரன்

    கி. சௌமித்ரன், பொன்னி சௌமித்ரன்

    ஒரு மனிதருடைய உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால், இந்த பஞ்சபூதங்களும் சமநிலையில் இறை தத்துவ விகிதாசாரப்படி இருக்க வேண்டும். அப்போதுதான் உடல் ஆரோக்கியமாக சிறந்து விளங்கும். இந்த விகிதாசாரம் மாற்றம் பெரும்போது உடலில் நோய் உருவாகிறது. எனவே இந்தப் பஞ்சபூதங்களை நாம் யோக முத்திரை கலையின் மூலம் இயக்கும்போது உடல் உறுப்புகள் அதன் செயல்பாடுகள், அதில் உள்ள ஓட்டங்கள் சீரமைக்கப்படும். இதனால் உடல் ஆரோக்கியம் பெறும்.

    மேலும் வாதம், பித்தம், கபம் என்று கூறும் முக்குற்றங்கள் அதிகமானாலும் குறைந்தாலும் உடலில் நோய் உண்டாகும். நம்முடைய வாழும் இடத்தின் தன்மைக்கு ஏற்பவும், காலநிலை மாற்றத்தினாலும் நோய் வர வாய்ப்புகள் இருக்கிறது. எனவே இந்த முத்திரை செய்பவர்களுக்கு உணவு கட்டுப்பாடு என்பது இல்லை. ஆனால் உடலில் உருவாகும் நோய்களுக்கு உணவு கட்டுப்பாடு என்பது மிகவும் அவசியம். பொதுவாக இந்த முத்திரைகளை பிரம்ம முகூர்த்த நேரத்தில் ஆரம்பித்து இரவு வரை எப்போது வேண்டுமானாலும் செய்யலாம். முத்திரைகளை குறைந்தது 5 நிமிடம் முதல் அதிகபட்சம் 20 நிமிடம் வரை செய்யலாம்.

    முத்திரைகள் செய்யும்போது மனம் அதனோடு இணைந்து செய்தால் பலன் உடனடியாக கிடைக்கும். அந்த வகையில் சில அடிப்படை முத்திரைகள் எப்படி செய்வது மற்றும் அதன் பயன்களை பற்றி விரிவாக பார்ப்போம். முத்திரைகள் செய்யும்போது உணவுக்கு முன் செய்யலாம் அல்லது உணவிக்கு பிறகு 30 நிமிடம் கழித்து செய்யலாம். கருவுற்றிருக்கும் பெண்கள், அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் தக்க ஆலோசனை செய்த பிறகு தான் செய்ய வேண்டும்.

    1. சின்முத்திரை அல்லது ஞான முத்திரை: கட்டைவிரல் மற்றும் ஆள் காட்டி விரல் இரண்டையும் நுனியில் தொட வேண்டும். மற்ற மூன்று விரல்கள் நேராக கீழ்நோக்கி இருக்க வேண்டும்.


    பயன்கள்: மன அமைதி பெறும், மூளை செல்களுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும், ஞாபக சக்தி அதிகரிக்கும், தலைவலி, தூக்கமின்மை விலகும், கோபம் தவிர்க்கப்படும், வாயில் ஏற்படும் புண்கள் விலகும்.

    2. வாயு முத்திரை:

    கட்டை விரலின் அடிப்பகுதியில் ஆள்காட்டி விரலை வைத்து அழுத்தி அதற்கு மேல் கட்டை விரலால் லேசாக அழுத்தம் கொடுக்க வேண்டும். மற்ற மூன்று விரல்கள் நேராக இருக்க வேண்டும்.

    பயன்கள்: உடல் முழுவதும் ரத்த ஓட்டம் சீராகும், வாயு பிடிப்பு சரியாகும், புத்தி கூர்மை அதிக மாகும், உடல் வலி பறந்து போகும், நடையில் ஏற்படும் தடுமாற்றத்தை குறைக்கும், ஜீரண மண்டலம் சரியாக வேலை செய்யும், தேவையற்ற கழிவுகள் வெளியே செல்லும்.


    3. சூனிய முத்திரை:

    கட்டை விரலின் அடிப்ப குதியில் நடுவி ரலை வைத்து, கட்டை விரலால் அழுத்தவும். மற்ற மூன்று விரல்கள் நேராக இருக்க வேண்டும்.



    பயன்கள்: கழுத்து வலி சரியாகும், தைராய்டு பிரச்சனைகள் விலகும், எலும்புகளுக்கு பலம் கூடும், இதய பிரச்சனைகள் தீரும், பல் வலி சரியாகும், தலை சுற்றல் விலகும், காது சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் சரியாகும்.

    4. பிருதிவி முத்திரை:


    கட்டை விரல் மற்றும் மோதிர விரலின் நுனிப்பாக இரண்டும் தொட வேண்டும். மற்ற மூன்று விரல்கள் நேராக இருக்க வேண்டும்.

    பயன்கள்: தசை பிடிப்பு, சுளுக்கு நீங்கும், மூளை செல்கள் ஆயுளை அதிகரிக்கும், உடலுக்கு சத்துக்கள் அதிகமாக கிடைக்கும், உடல் உறுப்புகளுக்கு பலத்தை கொடுக்கும்.

    5. சூரிய முத்திரை:

    கட்டைவிரலின் அடிப்பகுதியில் மோதிர விரலை வைத்து லேசாக அழுத்தம் கொடுக்க வேண்டும். மற்ற மூன்று விரல்கள் நேராக இருக்க வேண்டும்.


    பயன்கள்: இருமல் சரியாகும், வயிற்றுப் பிரச்சனைகள் சரியாகும், உடலின் எடை குறைக்க உதவும், உடலின் வெப்பத்தை கூட்டும், சீரன மண்டலம் சரியாக வேலை செய்யும், பிராண சக்தி சீராக இருக்கும்.

    6. வருண முத்திரை:

    கட்டை விரலின் நுனியும், சுண்டு விரல் நுனியும் தொட்டு க்கொண்டு இருக்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும்.


    பயன்கள்: நீர் சத்துக் கூடும், நல்ல உறக்கம் வரும், பல் வலி சரியாகும், ரத்தத்தை சுத்தம் செய்யும், முகப்பரு சரியாகும், தோல் வறட்சி விலகும், தோல் வியாதிகள் குறையும்.

    7. பிராண முத்திரை: சுண்டுவிரல், மோதிர விரல் இரண்டையும் கட்டவிரல் நுனியில் சேர்க்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும்.


    பயன்கள்: நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டும், கண் சம்பந்தப்பட்ட கோளாறுகள் சரியாகும், தூக்கமின்மையை போக்கும், உடல் ஆரோக்கியமாக இருக்கும், பசி கட்டுக்குள் வரும்.

    8. அபான முத்திரை:

    நடுவிரல், மோதிர விரல் இரண்டையும் மடக்கி கட்ட விரல் நுனியை தொட வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும்.


    பயன்கள்: தேவையற்ற கழிவுகளை வெளியேற்றும், வாயு பிடிப்பு, வாயு தொல்லையிலிருந்து விடுதலை கிடைக்கும், மூலம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் சரியாகும், மலச்சிக்கலுக்கு தீர்வு கிடைக்கும்.

    9. அபான வாயு முத்திரை: மோதிர விரல், நடுவிரல் மற்றும் கட்டைவிரல் நுனிகள் சேர்ந்து இருக்க வேண்டும். ஆள்காட்டி விரல் கட்ட விரலின் அடிப்பாகத்தில் தொட வேண்டும். சுண்டு விரல் நேராக இருக்க வேண்டும்.


    பயன்கள்:

    ரத்த ஓட்டம் சரியாகும், பக்கவாதத்தை சரி செய்யும், மாரடைப்பு வராது, அடைப்புகளை சரி செய்யும், இதய துடிப்பு சீராக இருக்கும், சளி, இருமல் நீங்கும், காய்ச்சலை சரி செய்யும்.

    10. லிங்க முத்திரை:


    இரண்டு கை விரல்களை கோர்த்து, கட்டை விரலை லிங்கம் போல் உயர்த்தி வைக்க வேண்டும். படத்தில் உள்ளதை கவனிக்கவும். (ஆண்கள் வலது கை கட்டை விரலையும், பெண்கள் இடது கை கட்டை விரலையும் உயர்த்த வேண்டும்) பயன்கள்:

    கபத்தை போக்கும், கெட்ட கொழுப்பை கரைக்கும், வறட்டு இருமலை சரி செய்யும், தொப்பையை குறைக்கும், அதிக சூட்டை சரி செய்யும், ஆஸ்துமா சரியாகும்.

    மூச்சுப் பயிற்சி மற்றும் ஆசனங்கள் மட்டுமின்றி முத்திரைகளும் நம்முடைய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

    போன்: 9444234348

    • பல தடைகளை கடந்து பெண்கள் இத்தகைய சுதந்திரத்தையும், உரிமையையும் பெற்றுள்ளனர்.
    • மகாராஷ்டிர மாநிலம் தானே பகுதியில் 2 சிறுமிகளுக்கும் பள்ளியில் வைத்து இந்த கொடூரம் நடந்துள்ளது.

    பெண்கள்...

    பல நூறாண்டு போராட்டத்துக்கு பின்னர் இன்று கல்வி, வேலைகளில் குறிப்பிடத்தக்க வாய்ப்பை பெற்று வருகிறார்கள்.

    வெளியூர் பள்ளிகளுக்கு அனுப்பவே தயங்கிய கிராமப்புற பெற்றோர்களும், தங்களது பெண் குழந்தைகளை தைரியமாக வெளியூர்களுக்கு அனுப்பி வருகிறார்கள். அதுபோல்தான் வேலைக்கும் பெண் பிள்ளைகள் வெளியிடங்களுக்கு செல்கிறார்கள்.

    இதனால் பெண் குழந்தைகளின் கல்வித்தரமும், வேலைவாய்ப்பும் உயர்ந்துள்ளது.

    பல தடைகளை கடந்து பெண்கள் இத்தகைய சுதந்திரத்தையும், உரிமையையும் பெற்றுள்ளர்.

    மகிழ்ச்சி அடைகிறோம்...

    ஆனால்... இன்று நாட்டில் நடைபெறும் சம்பவங்கள், பெண்களின் பாதுகாப்பை கேள்விக்குள்ளாக்கி இருக்கின்றன.

    நிர்பயா

    ஆம்!... கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு டெல்லியில் நடைபெற்ற இளம்பெண் ஓடும் பஸ்சில், கும்பலால் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.

    அந்த பெண்ணுக்கு 'நிர்பயா' என்று அடையாளப் பெயர் வைக்கப்பட்டது. இதற்கு அச்சமற்றவர் என்று அர்த்தம். பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாகும் பெண்கள், தங்களை தற்காத்துக்கொள்ள, தைரியத்துடன் போராட வேண்டும். அதற்கு அவர்கள் அச்சமற்றவர்களாக மாறவேண்டும் என்பதே இந்த பெயரின் நோக்கம்.

    இனி ஒரு பெண், இதுபோன்ற பாதிப்பை சந்திக்கக்கூடாது என்பதற்காக, பாலியல் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டு, கடந்த 2013-ம் ஆண்டு நிர்பயா சட்டம் கொண்டு வரப்பட்டது.

    இத்தகைய கடுமையான சட்டங்கள் இருந்தும்... பாலியல் குற்றங்கள் குறைந்ததா என்றால் இல்லை என்றே கூறலாம். பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.

    பெண் குழந்தைகளையும் தொடர்கிறது

    இதில் இன்னொரு கொடுமை என்னவென்றால், பாலியல் வக்கிரத்தில் பாதிக்கப்படுவது இளம் பெண்கள் மட்டுமல்ல. சின்னஞ்சிறு பிஞ்சுகளும் தான். வீட்டில், பள்ளியில், விளையாட செல்லும் இடத்தில் இப்படி பல இடங்களில் பெண் குழந்தைகளுக்கு பாலியல் சீண்டல்கள் மற்றும் பலாத்காரங்கள் நடக்கின்றன. இதில் பல பிஞ்சுக்குழந்தைகள் தங்களது இன்னுயிரை இழந்துள்ளனர்.இத்தனைக்கும் குழந்தைகளுக்கு எதிராக நடத்தப்படும் பாலியல் குற்றங்களுக்காக போக்சோ என்னும் சட்டமும் உள்ளது. இருந்தபோதும் கொடுமைகள் குறைந்தபாடு இல்லை.

    கொல்கத்தா சம்பவம்

    சமீபத்தில் நாட்டையே உலுக்கிக்கொண்டு இருக்கும் சம்பவம், கொல்கத்தா மருத்துவக் கல்லூரியில் பயிற்சி டாக்டராக இருந்த இளம் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, படுகொலை செய்யப்பட்டதுதான்.

    நடுத்தர குடும்பத்தை சேர்ந்த அந்த பெண், மருத்துவம் படித்துவிட்டு, முதுகலை மருத்துவம் படிப்பதற்காக கொல்கத்தாவில் உள்ள அரசு ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தார்.

    வழக்கம்போல் நள்ளிரவில் பணி முடிந்த பின்னர், அவர் அங்குள்ள ஒரு அறையில் சக டாக்டர்கள் மற்றும் ஊழியர்களுடன் இரவு உணவை சாப்பிட்டு உள்ளார். அதன்பிறகு அதே அறையில் படுத்து தூங்கினார்.

    மறுநாள் காலை (அதாவது கடந்த 9-ம் தேதி) அவர் பிணமாகத்தான் கிடந்தார். அவர் கிடந்த நிலையை சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை.

    இதை கேள்விப்பட்ட அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள். இது தொடர்பாக சஞ்சய் ராய் என்பவன் கைது செய்யப்பட்டு உள்ளான்.

    கொல்கத்தா ஐகோர்ட்டு இந்த வழக்கை கையில் எடுத்து, வழக்கு விசாரணையை சிபிஐ வசம் ஒப்படைத்து உள்ளது. அது ஒருபுறம் விசாரணை நடந்து வருகிறது.

    இந்த கொலை சம்பவத்துக்கு நாடு முழுவதிலும் இருந்து கண்டன குரல்கள் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. சுப்ரீம் கோர்ட்டும் இந்த விவகாரத்தில் தலையிட்டு, தாமாக முன்வந்து வழக்கை விசாரிக்கிறது.

    கிருஷ்ணகிரி கொடூரம்

    நாடு முழுவதும் கொந்தளிப்பு ஒரு புறம் நடந்து கொண்டு இருந்த வேளையில் தமிழ் நாட்டில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பள்ளி ஒன்றில் சிறுமி பாலியல் வக்கிரத்துக்கு உள்ளக்கப்பட்டுள்ளார் என்ற செய்தி பேரிடியாக வந்தது.

    விசாரணையில் போலியாக என்.சி.சி. முகாம் நடத்தி, அதில் கலந்து கொண்ட அந்த சிறுமிகளுக்கு இத்தகைய கொடூரம் நடந்துள்ளது. பாதிக்கப்பட்ட மாணவிகளின் புகாரின்பேரில் அதில் தொடர்புடைய நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    அதில் ஒருவர் தப்பி ஓடும்போது, கால் முறிவு ஏற்பட்டு 'மாவுக்கட்டு' போடப்பட்டுள்ள செய்தியும் வந்துள்ளது.

    மகாராஷ்டிர மாநிலம் தானே பகுதியில் 2 சிறுமிகளுக்கும் பள்ளியில் வைத்து இந்த கொடூரம் நடந்துள்ளது. இப்போது அந்த பகுதி மக்கள் நீதி கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    பச்சிளம் குழந்தைகள் மீது நடத்தப்படும் இந்த பாலியல் வக்கிரங்களை பார்க்கும்போது நாம் நாகரிக சமூகத்தில்தான் வாழ்கிறோமா என்று கேட்கத்தோன்றுகிறது.

    நெஞ்சை உலுக்கியது

    காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை இதுபோல் எத்தனையோ சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டு இருக்கின்றன.

    இந்த குற்றச்சம்பவங்கள் நடக்கும்போது அதுபற்றி பரபரப்பாக பேசுகிறோம். அதன்பின்னர் அதை கடந்து சென்று விடுகிறோம். நமக்கு எவ்வளவோ பிரச்சினைகள் இருக்கின்றன. அதனை நோக்கி ஓடிக்கொண்டு இருக்கிறோம்.

    சில ஆண்டுகளுக்கு முன்பு பொள்ளாச்சியில் நடந்த பாலியல் குற்றவழக்கு பரபரப்பாக பேசப்பட்டது. அப்போது வெளியான வீடியோ மற்றும் ஆடியோவில் வந்த 'அண்ணா... வலிக்குது அண்ணா... அடிக்காதே...' என்ற குரல்... கேட்ட அனைவரின் மனச்சாட்சியை உலுக்கி எடுத்தது.

    அது தொடர்பான வழக்கு நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால் இப்போது அதுபற்றி நாம் பேசுவதில்லை. மறந்து விடுகிறோம்.

    இந்த குரல் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு வீட்டிலும் இன்னமும் ஒலித்துக்கொண்டு இருக்கிறது.

    இதற்கெல்லாம் என்ன தீர்வு

    வேலை பார்க்கும் இடங்களில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் தொல்லைகளை விசாரிக்க விசாகா கமிட்டி உள்ளது. பிரச்சினைகள் ஓயவில்லை. பாலியல் குற்ற வழக்குகளை விசாரிக்கும் பெண் போலீசாரே, அந்த வக்கிரக் கொடுமைக்கு ஆளாகும் சம்பவங்களும் நடப்பது அதைவிட கொடுமை.

    பொது இடங்களில் விழிப்புணர்வு நோட்டீஸ் ஒட்டுகிறோம். அத்துடன் வேலை முடிந்துவிட்டதா?

    இதுபோன்றவற்றுக்கு தீர்வு நம் எல்லோர் கைகளிலும் இருக்கிறது. பொறுப்பும், கடமையும் அரசுக்கு மட்டுமே இல்லை நம் ஒவ்வொருவரின் கையிலும் இருக்கிறது.

    வீட்டில் இருக்கும் ஆண் பிள்ளைகளுக்கு, பெண் குழந்தைகளின் பாதுகாப்பு பற்றி சொல்லிக்கொடுங்கள். அவர்களது வலி, வேதனைகளை உணர்த்துங்கள். அடுத்து வரும் தலைமுறையாவது இதில் இருந்து விடுபடும்.

    அடுத்து இதுபோன்ற குற்றங்களுக்கு, இப்போது விரைவில் தீர்ப்பு வருகிறது. ஆனால் புலனாய்வு விசாரணை காலதாமதமாகிறது. அதையும் விரைந்து நடத்தி குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.

    இதுபோன்ற சம்பவங்கள் இனி நடக்காதவாறு 'இனி ஒரு விதி செய்வோம்'.

    • நான்கு வருடங்களுக்கு ஒரு முறை ஒலிம்பிக் போட்டி நடைபெறுகிறது.
    • ஒலிம்பிக் போட்டிகளில் 200 குழுக்கள் கலந்து கொள்கின்றன.

    ஒரு பெண் நினைத்தால் எந்த சூழ்நிலையையும் சாதகமாக்கி கடுமையாக உழைத்து இமாலய வெற்றி பெறலாம் என்பதை நிரூபித்தவர் ரஷியப் பெண்மணியான லரிசா லடிநினா. மங்கையர் அனைவருக்கும் உத்வேகமும் ஊக்கமும் ஊட்டும் இவர் 18 ஒலிம்பிக் மெடல்களைப் பெற்று ஒலிம்பிக் நாயகியாக விளங்குகிறார். 90 வயதிலும் சுறுசுறுப்பாக அனைவருக்கும் வழிகாட்டும் இவரைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டாமா?

    பிறப்பும் இளமையும்: ரஷியப் பெண்மணியான லரிசா செமியோனோவ்னா டிரியி உக்ரேனில் கெர்ஸன் என்ற இடத்தில் 1934-ம் ஆண்டு டிசம்பர் 27-ந் தேதி பிறந்தார். அவர் பதினோரு மாதக் குழந்தையாக இருக்கும் போது அவரை விட்டு தந்தையார் பிரிந்து சென்றார். அவரை வளர்த்தவர் படிப்பறிவில்லாத அவரது தாயார் தான். அவர் பகல் நேரத்தில் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டார். இரவில் வாட்ச்மேன் வேலையைப் பார்த்தார். குழந்தையை வளர்த்தார்.

    ஸ்டாலின்கிராட் போரில் லரிசாவின் தந்தை மெஷின் கன் ஆபரேட்டராக இருந்த போது கொல்லப்பட்டார்.

    இளமையில் 'பாலட்' டான்ஸை பயிற்சி செய்த லரிஸா பின்னர் அவரது நடனப் பயிற்சியாளர் கெர்ஸனை விட்டுச் சென்று விடவே சீருடற்பயிற்சி என்னும் ஜிம்னாஸ்டிக்சில் தீவிரமாக ஈடுபட்டார்.

    1953-ல் உயர்நிலைப் பள்ளியில் படிப்பை முடித்த அவர் கியிவ் என்ற இடத்தில் பாலிடெக்னிக்கில் சேர்ந்தார். 19 வயதே ஆன போது 1954-ல் ரோமில் நடந்த உலக சாம்பியன் போட்டியில் கலந்து கொண்டு அவர் ஒரு தங்கப் பதக்கத்தை வென்றார்.

    ஒலிம்பிக் போட்டி பற்றிய சுவையான செய்திகள்:

    கிரேக்க நாட்டில் 3200 ஆண்டுகளுக்கு முன்னர் கிரீசில் நடந்த போட்டிகளால் உத்வேகம் பெறப்பட்டு ஒலிம்பிக் போட்டி துவங்கப்பட்டது.

    1894-ல் இண்டர்நேஷனல் ஒலிம்பிக் கமிட்டி அமைக்கப்பட்டது.

    1896-ல் முதன் முதலாக ஏதன்ஸ் நகரில் இந்தப் போட்டி ஆரம்பிக்கப்பட்டது.

    நான்கு வருடங்களுக்கு ஒரு முறை ஒலிம்பிக் போட்டி நடைபெறுகிறது. 1994 முதல் சம்மர் ஒலிம்பிக், விண்டர் ஒலிம்பிக் என்று இது இரண்டாகப் பிரிக்கப்பட்டு இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறுகிறது.

    உடல் ஊனமுற்றோருக்காக பாராஒலிம்பிக் என்னும் போட்டிகள் தனியே தொடங்கப்பட்டு நடத்தப்படுகிறது.

    முதல் உலகப் போர், இரண்டாம் உலகப் போர் காலத்தில் 1916, 1940, 1944 ஆகிய வருடங்களில் போட்டி நடத்தப்படவில்லை.


    ஒலிம்பிக் போட்டிகளில் 200 குழுக்கள் கலந்து கொள்கின்றன.

    2020 சம்மர் ஒலிம்பிக்கிலும் 2022 விண்டர் ஒலிம்பிக்கிலும் 14000 பேர் போட்டிகளில் கலந்து கொண்டனர்.

    40 வெவ்வேறு விளையாட்டுகளில் 448 நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. போட்டியில் வென்ற முதல் மூவருக்கு முறையே தங்கம், வெள்ளி, வெண்கலம் ஆகிய பதக்கம் வழங்கப்படுகிறது. இதுவரை நடந்த ஒலிம்பிக் போட்டிகளில் அதிகப் பதக்கங்கள் பெற்ற முதல் மூன்று நாடுகள் பின் வருமாறு:

    அமெரிக்கா 2259 மெடல்கள்

    ரஷியா 2011 மெடல்கள்

    ஜெர்மனி 1821 மெடல்கள்

    சம்மர் ஒலிம்பிக் போட்டி நடத்துவதற்கான செலவு 520 கோடி அமெரிக்க டாலர் ஆகும். விண்டர் ஒலிம்பிக் போட்டி நடத்துவதற்கான செலவு 310 கோடி அமெரிக்க டாலர் ஆகும்.

    ஒலிம்பிக் கொடி வெள்ளை நிறத்தில் ஐந்து ஒன்றுடன் ஒன்று கோர்க்கப்பட்ட வளையங்களைக் கொண்டிருக்கிறது. ஐந்து வளையங்கள் ஐந்து கண்டங்களைக் குறிக்கிறது. இந்த வளையங்களின் வண்ணங்கள் நீலம், மஞ்சள், கறுப்பு, பச்சை, சிவப்பு.

    இப்படிப்பட்ட வண்ணங்களின் தேர்வு ஏனெனில், உலகில் உள்ள அனைத்து தேசங்களின் கொடிகளிலும் இந்த ஐந்து வண்ணங்களில் ஏதோ ஒரு வண்ணம் இடம் பெறுகிறது, அதனால் தான்.

    ஒலிம்பிக் உத்வேகமூட்டும் வாசகம்:

    சிடியஸ், ஆல்டியஸ், பார்டியஸ் (வேகமாக, உயரமாக, வலிமையாக) என்பதாகும்.

    ஒலிம்பிக் போட்டிகளில் பெண்களின் பங்கேற்பு: ஏதென்சில் 1896-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி தொடங்கப்பட்டதென்றாலும், 1900ல் தான் பெண்கள் அதில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர்.

    ச. நாகராஜன்

    ச. நாகராஜன்

    2012-ல் லண்டனில் நடந்த ஒலிம்பிக்கில் தான் முதன்முறையாக எல்லாப் போட்டிகளிலும் பெண்கள் பங்கேற்றனர். ஜிம்னாஸ்டிக் போட்டிகளில் பெண்கள் கலந்து கொள்ள 1928 முதல் அனுமதிக்கப்பட்டனர்.

    ஒலிம்பிக் போட்டிகளில் லரிஸாவின் வெற்றி: மிகத் திறனுடன் ஜிம்னாஸ்டிக்ஸில் தேர்ச்சி பெற்ற லரிஸா 1956இல் மெல்போர்ன் ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொண்டார். 21 வயதான அவர் ஹங்கேரியைச் சேர்ந்த 35 வயதான அக்னஸ் கேலடியுடன் மோத வேண்டியதாக இருந்தது.

    மிகக் கடுமையான போட்டியில் தனது திறமையைக் காண்பித்த அவர் 4 தங்கப் பதக்கங்களையும் ஒரு வெள்ளிப் பதக்கத்தையும் வென்று தன் பதக்கக் கணக்கைத் தொடங்கினார். பிளோர் ஜிம்னாஸ்டிக்சில் கேலடியுடனான போட்டி வெற்றி தோல்வி இன்றி 'டை'யில் முடிந்தது.

    அடுத்து 1960-ல் ஒலிம்பிக் போட்டி ரோமில் நடந்தது. 3 தங்கப் பதக்கங்களையும் 2 வெள்ளிப் பதக்கங்களையும் வென்று அவர் சோவியத் யூனியனைப் பெருமைப்பட வைத்தார். அடுத்து 1964-ல் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் நடந்தது. அதில் 2 தங்கப் பதக்கங்களையும் 2 வெள்ளிப் பதக்கங்களையும் வென்றார். இந்த மூன்று போட்டிகளிலும் அவர் நான்கு வெண்கலப் பதக்கங்களையும் வென்றார். ஆக 1956 மெல்போர்ன், 1960 ரோம், 1964 டோக்கியோ ஆகிய மூன்று ஒலிம்பிக் போட்டிகளிலும் 'டை'யில் முடிந்த தங்கப் பதக்கத்தையும் சேர்த்து அவர் 18 பதக்கங்களை வென்றார்.

    நீண்ட நெடுங்காலம் அதாவது 1964-ல் இருந்து 2012-ம் ஆண்டு முடிய இவரே அதிக பதக்கங்களைப் பெற்ற ஒரே பெண்மணி என்ற பெருமை இவருக்கு இருந்தது.

    2012-ல் தான் அமெரிக்கரான நீச்சல் வீரர் மைக்கேல் பெல்ப்ஸ் 28 பதக்கங்களை வென்று இவரது சாதனையை முறியடித்தார். என்றாலும் கூட மங்கையரில் அதிக மெடல்களைப் பெற்ற பெண்மணி என்ற இவரது சாதனையை முறியடிக்க இதுவரை பெண்மணிகளில் ஒருவரும் இல்லை. அமெரிக்கப் பெண்மணியான ஷெனான் மில்லர் இரண்டு ஒலிம்பிக் போட்டிகளில் ஏழு மெடல்களை வென்றுள்ளார்.

    மைக்கேல் பெல்ப்ஸ் இவரது சாதனையை முறியடித்த போது, "ஒரு பெண்மணி நெடுங்காலத்திற்கு முன்னர் செய்த சாதனையை ஒரு ஆண் முறியடிக்க இப்போதாவது காலம் வந்ததே" என்று அவர் கூறியதை உலகமே ரசித்தது.

    அவர் 14 உலக சாம்பியன்ஷிப் மெடல்களையும் 14 யூரோபியன் சாம்பியன்ஷிப் மெடல்களையும் வென்றதால் உலகின் அதிசயமான ஜிம்னாஸ்டிக் பெண்மணி என்ற புகழையும் பெற்றார்.

    தான் பெற்ற முதல் தங்கப் பதக்கத்தை தனது பயிற்சியாளரான (கோச்)

    சோட்னிசென்கோவிற்குத் தந்தார் லரிசா. இறக்கும் வரை அவர் தன்னிடம் அதை வைத்திருந்தார். அவரது இறப்பிற்குப் பின் அவரது மனைவி அந்தத் தங்கப் பதக்கத்தை லரிசாவுக்குத் திருப்பித் தந்தார்.

    அனைவரிடமும் அவர் காட்டும் மரியாதைக்கு இது ஒரு சான்றாகும்.

    பழைய காலத்தைப் பற்றி அவர் கூறுவது இது: "1964-ல் டோக்கியோவில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொண்ட எங்களுக்கு ராணுவ கூடாரங்களில் தான் தங்க இடம் தந்தனர்; பொதுக் கழிப்பறைகளையே தான் நாங்கள் உபயோகித்தோம். ஆனால் அமெரிக்க ஜிம்னாஸ்டிக் குழுவினரோ சொகுசு ஓட்டல்களில் தங்க வைக்கப்பட்டனர்.

    சோவியத் யூனியன் சார்பில் போட்டியிட்ட எங்களுக்கு எல்லாப் பக்கங்களில் இருந்தும் ஜெயித்தே ஆக வேண்டும் என்ற அழுத்தம் நிறைய இருந்தது. என்றாலும் அதிகாரிகள் எங்களை கண்ணியத்துடன் நடத்தினர். எங்களுக்கு தேசத்தின் கவுரவத்தை உயர்த்த வேண்டும் என்ற அடங்காத ஆசையும் இருந்தது. எங்கள் நாட்டின் கொடி ஏற்றப்படும் போதும் தேசீய கீதம் இசைக்கப்படும்போதும் நாங்கள் ஓவென்று ஆர்ப்பரிப்போம்." என்கிறார் அவர்.

    பயிற்சியாளர்: 1966-ம் ஆண்டு அவர் போட்டிகளில் ஈடுபடுவதிலிருந்து ஓய்வு பெற்றார்.

    சோவியத் யூனியன் ஜிம்னாஸ்டிக் குழுவிற்கு பயிற்சியாளராக ஆனார். இவரது நேரடிப் பயிற்சியால் சோவியத் யூனியன் விளையாட்டு வீராங்கனைகள் பல பதக்கங்களைப் பெற்றனர்.

    தினமும் ஏராளமான கடிதங்கள் ரஷியாவின் மூலை முடுக்கிலிருந்தெல்லாம் இவருக்கு வரும். அனைத்தையும் இரவு நேரத்தில் ஒவ்வொன்றாகப் படிப்பார். "எனக்கு விளையாட்டில் ஆர்வம் அதிகம். என்ன செய்வது?, இப்படி ஒரு கடிதம்; எனக்கு திறமையே இல்லையோ என்று ஒரு கடிதம் – அனைத்திற்கும் ஊக்கமூட்டும் பதிலை அனுப்பி உற்சாகத்தை அளிப்பது இவரது பழக்கம்.

    குடும்பம்: லரிசா மூன்று முறை திருமணம் செய்து கொண்டார். அவரது மகள் டாட்யானா இவாநோவா லாடிநினா நாட்டுப்புற நடனத்தில் நிபுணர். அவருக்கு ஒரு மகனும் உண்டு.

    மாஸ்கோவில் இப்போது வாழ்ந்து வரும் அவர் ரஷிய - உக்ரேன் போரினால் ரஷிய விளையாட்டு வீரர்கள் நடுநிலைமைக் கொடியைப் பிடித்துக் கொண்டு ஒலிம்பிக்கில் கலந்து கொண்டதை தேசப்பற்று இல்லாத செய்கை என்று விமர்சித்தார்.

    சமூக சேவை: கியவ் நகரில் சமூக சேவைக் குழுவைச் சேர்ந்த வயதான ஒருவர் அவரைப் பார்த்து உங்களை அடிக்கடி பார்த்த மாதிரி இருக்கிறது, எனக்கு இந்த சமூக சேவையில் உதவி புரிய வர முடியுமா என்றார்.

    புன்னகை புரிந்த லாரிசா, "ஓகே" என்றார்.

    தினமும் அவரிடம் உதவி நாடி ஏராளமானோர் வருவர். உடல் பிரச்சனை ஒருவருக்கு இருக்கும், இன்னொரு வயதானவருக்கு தரை அடுக்கில் இல்லாமல் நான்காம் மாடியில் குடியிருப்பு வீடு ஒதுக்கப்பட்ட குறை இருக்கும், – ஒவ்வொன்றாக அவர் தீர்த்து வைப்பார்.

    ஒரு நாள் ஒரு பெண்மணி வேகமாக அவரிடம் வந்து ஒரு பேப்பரை ஆட்டி ஆட்டிப் பேசினார். "இடம் இல்லையாம். இடமே இல்லையாம்" என்று அவர் கோபத்துடன் கத்தினார். லாரிசா பொறுமையுடன் உங்கள் வீட்டிற்குப் போகலாமா? என்றார்.

    அவர் வீட்டிற்குச் சென்று டீயை அருந்தியவாறே அவரது குறையைக் கேட்டார். தனிப் பெண்மணியாக குழந்தையை வளர்க்கும் சிங்கிள் மதரான அவரது குழந்தைக்கு நர்சரியில் இடம் இல்லை என்று சொல்லி விட்டார்கள். அவர் என்ன செய்வார், பாவம்! உடனே நர்சரி மானேஜருடன் லரிஸா பேசினார்: உங்களுக்குக் குழந்தை இருக்கிறதல்லவா என்ற அவரது மென்மையான குரலைக் கேட்ட மானேஜர் உடனடியாக அந்தக் குழந்தைக்கு நர்சரியில் இடம் கொடுத்தார். இப்படி தினமும் விதம் விதமாக ஒரு பிரச்சனை வரும்.

    89 வயதான இவர் இன்னும் இந்த சேவையில் ஈடுபடுவது அனைவரையும் பிரமிக்க வைக்கிறது.

    உற்சாகமூட்டும் பெண்மணி: அனைத்துப் பெண்மணிகளையும் உற்சாகத்துடன் விளையாட்டுக்களில் பங்கேற்குமாறு அறைகூவல் விடும் லரிசா தன்னைப் பற்றிக் கூறுவது இது: "ஒரு சாதனையை 48 ஆண்டுகள் முறியடிக்காமல் தக்க வைத்திருப்பது போதுமான காலம் தானே!"

    • மூன்றாவது முக்கியமான விஷயம், நரம்பு மண்டலங்களின் செயல்பாடு ஆகும்.
    • பல நேரங்களில் பெண்களுக்கு உடல் ரீதியாக ஏதாவது ஒரு பிரச்சனை இருக்கலாம்.

    பெரும்பாலான பெண்கள் இன்று பொதுவாக எதிர்நோக்குவது பாலியல் உறவு சம்பந்தமான பிரச்சனையாகும். பாலியல் உறவு என்பது பெண்களை பொருத்த வரைக்கும் ஒரு முக்கியமான விஷயமாக கருதப்படுகிறது. இன்றும் உலக அளவில் 40 முதல் 50 சதவீதம் பெண்கள் பாலியல் உறவு பிரச்சனைகளால் பாதிக்கப்படுகிறார்கள்.

    கேள்வி:- பெண்களுக்கு பாலியல் உறவு பிரச்சனைகள் எதனால் ஏற்படுகிறது?

    பதில்:- பாலியல் உறவு பிரச்சனை என்பது பெண்களை பொருத்தவரைக்கும் பல்வேறு விஷயங்களை சார்ந்தது. இதில் முதல் பிரச்சனை உடல்ரீதியாக பெண்ணுறுப்பில் ஏற்படும் பிரச்சனையாகும். குறிப்பாக பெண்ணுறுப்பின் வெஜைனா, கிளைட்டோடஸ், வல்வா ஆகிய அனைத்தும் சீராக செயல்பட வேண்டும். அவை சீரான முறையில் செயல்பட்டால் பாலியல் உறவும் சீராக இருக்கும்.

    அதேபோல் பெண்ணுறுப்பு பகுதிக்கு செல்கின்ற ரத்த ஓட்டம் சீரான நிலையில் இருக்க வேண்டும். பல நேரங்களில் ரத்த ஓட்டம் குறைவாக இருந்தால் கூட பாலியல் உறவு கொள்வதில் பிரச்சனைகள் ஏற்படலாம். இதில் மூன்றாவது முக்கியமான விஷயம், நரம்பு மண்டலங்களின் செயல்பாடு ஆகும். இந்த 3 விஷயங்களுமே பாலியல் உறவுக்கு மிக முக்கியமானதாகும். இவை அனைத்தும் சீராக இருந்து, மனரீதியாக ஒரு பெண் ஆரோக்கியமாக இருந்தால் உடல் ரீதியான பாலியல் உறவு என்பது சீராக நடைபெறும்.

    கேள்வி:- பாலியல் உறவு பிரச்சனை தொடர்பான விழிப்புணர்வு பெண்களிடம் இருக்கிறதா?

    பதில்:- பொதுவாக பாலியல் உறவில் ஒரு பெண்ணின் உச்சகட்டமான ஆர்கஸம் என்பது பெண்கள் பலரும் அறியாத விசயமாக உள்ளது. இன்றும் இது போன்ற பாலியல் பிரச்சனைகளால் பாதிக்கப்படும் பெண்களின் எண்ணிக்கை அதிகம். ஆனால் இதுபற்றி பெண்கள் மற்றவர்களிடமோ, குறிப்பாக பெண் மருத்துவர்களிடம் கூட ஆலோசனை கேட்பதில்லை. நான் குழந்தையின்மை சிகிச்சை நிபுணராக இருக்கிறேன். குழந்தை பேறு தொடர்பாக உறுப்புகளின் செயல்பாடுகளை கவனிக்கின்ற மருத்துவராக இருந்தாலும் கூட எங்களை போன்ற மருத்துவர்களிடம் பாலியல் பிரச்சனை தொடர்பாக ஆலோசனை கேட்கின்ற பெண்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது.

    டாக்டர் ஜெயராணி காமராஜ்

    டாக்டர் ஜெயராணி காமராஜ்

    உலக அளவில் பார்த்தோமென்றால் இரண்டில் ஒரு பெண்ணுக்கு ஏதாவது ஒரு காலகட்டத்தில் பாலியல் பிரச்சனைகள் ஏற்படுகிறது. ஆனால் அவர்கள் ஒரு மருத்துவரை அணுகி முறையாக இந்த பிரச்சனை பற்றி ஆலோசிப்பது என்பது பல நேரங்களில் நடைபெறாத விஷயமாகவே இருக்கிறது. அந்த வகையில் பாலியல் உறவு பிரச்சனை தொடர்பான விழிப்புணர்வு பெண்களிடம் குறைவாகவே இருக்கிறது.

    கேள்வி:- பெண்களுக்கு ஏற்படும் பாலியல் பிரச்சனைகள் என்னென்ன?

    பதில்:- பாலியல் சார்ந்த விஷயங்களில் பெண்கள் அதிகமாக எதிர்நோக்கும் பிரச்சனைகள்:

    1. பெண் உறுப்பில் ஏற்படும் உலர்வு தன்மை (Lubrication):

    பொதுவாக பாலியல் உறவுமுறைகள் சீராக நடப்பதற்கு முதலாவது பெண் உறுப்பில் லூப்ரிகேஷன், அதாவது நீர் சுரப்பு சீராக இருக்க வேண்டும். இன்று 40 சதவீதம் பெண்கள் பாலியல் பிரச்சனைகளில் முதல் பிரச்சனையாக எதிர்நோக்குவது பெண்ணுறுப்பில் லூப்ரிகேஷன் குறைவு தான். இந்த லூப்ரிகேஷன் குறைவாவதால் பெண்களுக்கு பாலியல் உறவு கொள்ளும் போது வலிகள் ஏற்பட்டு அதுவும் ஒரு பிரச்சனையாக மாறுகிறது.

    2. பாலியல் உறவுகளில் வலிகள்

    (Painful sex)

    பாலியல் உறவு கொள்ளும் போது உலர்வு தன்மை அதிகமாக இருக்கும் பெண்களுக்கு வலிகள் ஏற்படும். இந்த வலிகள் 2 விதமான வலிகள். ஒன்று, பெண்ணுறுப்புக்குள் ஆணுறுப்பு செலுத்தும்போது ஏற்படுகின்ற வலி. இரண்டாவது பெண்களுக்கு பெண்ணுறுப்பில் ஏற்படுகிற சில பிரச்சனைகள். முக்கியமாக தொற்றுக்கள், புண்கள், எண்டோமெட்ரியோசிஸ் மற்றும் பெண்ணுறுப்பில் ஏற்படுகிற நரம்புகள் சம்பந்தமான வலி பிரச்சனைகள் (Vulvo dynia). இவை தான் வலி சார்ந்த பாலியல் பிரச்சனைகள் ஆகும்.

    3. பெண்களுக்கு பாலியல் உறவுகளில் ஆர்வம் குறைவாக இருப்பது (Low desire, Low libido):

    பொதுவாக பெண்களுக்கு பாலியல் ஆர்வக்குறைவு என்பது வாழ்நாளில் ஏதாவது ஒரு காலகட்டத்தில் பெண்கள் எதிர்நோக்கும் பாலியல் பிரச்சனைகள் ஆகும். இதற்கு முக்கியமான காரணம் மனம் சார்ந்த பல விஷயங்கள் ஆகும். உடல் சார்ந்த விஷயங்கள் இருக்குமானால் அதுவும் மன ஆர்வக் குறைபாடுகளை ஏற்படுத்தும். பல நேரங்களில் கணவருக்கு ஏற்படும் சில பாலியல் பிரச்சனைகளாலும் கூட உறவு கொள்ள முடியாத நிலையில், பெண்களுக்கும் இந்த ஆர்வக் குறைவு ஏற்படலாம்.

    இவை தவிர பெண்கள் பல்வேறு பிரச்சனைகளுக்கு உட்கொள்ளும் மருந்துகளாலும் பாலியல் உறவுகளில் ஆர்வக் குறைபாடுகள் ஏற்படலாம்.

    கேள்வி:- பாலியல் பிரச்சனைக்கு மனரீதியான காரணம் ஏதும் உள்ளதா?

    பதில்:- என்னிடம் சிகிச்சைக்கு வரும் பெண்களில், பாலியல் உறவில் ஆர்வம் இல்லை என்று சொல்லும் பெண்களின் எண்ணிக்கை தான் அதிகம். இவர்களின் வயது 30 முதல் 45 வயதுக்குள் இருக்கும். இவர்களுக்கு மன ரீதியாக ஏற்படும் பிரச்சனைகள் தான் பாலியல் பிரச்சனைக்கு முக்கியமான அடிப்படை காரணமாக அமைகிறது.

    மேலும் பல உளவியல் ரீதியான பிரச்சனைகளும் பாலியல் பிரச்சனைகளுக்கு காரணமாகும். பல நேரங்களில் பெண்களுக்கு உடல் ரீதியாக ஏதாவது ஒரு பிரச்சனை இருக்கலாம். அந்த பிரச்சனைகளால் அவர்கள் மனரீதியாக பாதிக்கப்படுவார்கள். அல்லது குடும்ப உறவுகளில் ஏதாவது பிரச்சனைகள் ஏற்படலாம். இதனால் பாலியல் உறவில் ஆர்வம் இருக்காது.

    பல நேரங்களில் குடும்ப சூழ்நிலைகள், உறவுகளுக்குள் ஏற்படுகிற பிரச்சனைகள், சண்டைகள், மன ரீதியான பிரச்சனைகள் ஆகிய அனைத்துமே முக்கியமான காரணங்களாக கருதப்படுகிறது. எனவே ஒரு பெண் பாலியல் ஆர்வம் குறைவு என்று சிகிச்சைக்காக வந்தால் முதல் முக்கியமான காரணம் மனரீதியான பிரச்சனைகள் ஏதாவது இருக்கிறதா என்று பார்க்கிறோம். கணவன், மனைவி இடையேயான உறவுகள், அவர்களின் குடும்ப சூழல்கள், பொருளாதார நிலைமை ஆகிய அனைத்துமே இதற்கு ஒரு முக்கியமான அடிப்படை காரணமாக அமைகிறது. இந்த வகையில் ஒரு பெண்ணை பொருத்த வரைக்கும் பாலியல் ஆர்வ மில்லாமைக்கு முக்கியமான அடிப்படையான விஷயமே மனதளவில் ஏற்படுகிற பிரச்சனைகளாக இருக்கலாம்.

    கேள்வி:- பாலியல் பிரச்சனைக்கு உடல் ரீதியாக ஏற்படும் காரணங்கள் என்ன?

    பதில்:- உடல் ரீதியான பிரச்சனைகள், குறிப்பாக இருதய பிரச்சனை, சிறுநீரக பிரச்சனை, சர்க்கரை வியாதி இவை அனைத்தும் பாலியல் பிரச்சனைகளோடு உள்ளடங்கும்.

    நரம்பு சம்பந்தமான பிரச்சனைகள்:

    அதாவது பாலியல் உறவு ஈடுபாட்டுக்கு தேவையான நரம்பியல் சம்பந்தமான பிரச்சனைகள். குறிப்பாக மூளை மற்றும் நரம்பு மண்டலங்களில் ஏற்படுகிற பிரச்சனைகளால் பாலியல் உறவு கொள்வதில் பிரச்சனைகள் ஏற்படும். ஏனென்றால், பாலியல் உறவுக்கான அடிப்படையான ஹார்மோன் டோபமைன் என்ற நியூரோ டிரான்ஸ்மிட்டர். பாலியல் உறவு நன்றாக இருப்பதற்கு இந்த ஹார்மோன் அளவு சீராக இருக்க வேண்டும். இந்த டோபமைன் ஹார்மோன் குறைவாக இருப்பவர்களுக்கு பாலியல் பிரச்சனைகள் ஏற்படும்.

    ரத்த ஓட்டம் சம்பந்தமான பிரச்சனைகள்:

    பெண் உறுப்பில் ஏற்படுகிற ரத்த ஓட்டம் பாலியல் உறவுக்கு முக்கியமான அடிப்படையாக அமைகிறது. ரத்த ஓட்ட குறைபாட்டால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு பாலியல் உறவு கொள்வதில் பிரச்சனைகள் ஏற்படலாம் (வாஸ்குலர் காரணங்கள்).

    பெண்கள் 40 வயதை தொடும்போது அவர்களுக்கு சில நேரங்களில் ரத்த ஓட்டம் குறைவு, நரம்பு மண்டலங்களில் பாதிப்பு ஏற்படுகிறது. இதனால் பெண்ணுறுப்புக்கு போகும் ரத்த ஓட்டம் குறைவாகும் போது பாலியல் உறவு கொள்வதில் பிரச்சனைகள் ஏற்படுகின்றது.

    கேள்வி:- வஜினிஸ்மஸ் பிரச்சனை என்றால் என்ன?

    பதில்:- வஜினிஸ்மஸ் என்பது பெண்ணுறுப்பில் ஏற்படும் பய உணர்வாகும். பெண்ணுறுப்பில் எந்தவொரு பொருட்களையும் உள் செலுத்தும் போது இந்த பய உணர்வு ஏற்படுகிறது. பெண்கள் பயன்படுத்துகிற டேம்போன், ஆணுறுப்பு மற்றும் மருத்துவ பரிசோதனை கருவிகள் உள் செல்வதில் இந்த பெண்களுக்கு பயம் ஏற்பட்டு அதனால் ஏற்படுகிற பிரச்சனைதான் வஜினிஸ்மஸ். இதனால் பாதிக்கப்பட்ட பெண்கள் திருமண உறவில் ஈடுபட முடியாது. குழந்தை பேறு பிரச்சனைகளும் ஏற்படலாம். இதை முறையாக பரிசோதித்து நல்ல சிகிச்சை முறையில் சரி செய்ய முடியும். இவை அனைத்தும் பெண்களை பொதுவாக பாதிக்கிற பாலியல் பிரச்சனைகள் ஆகும். பெண்கள் தங்களுக்கு ஏற்படும் பாலியல் உறவு பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பது எப்படி என்பதை அடுத்த வாரம் பார்ப்போம்.

    செல்: 72999 74701

    • அதீந்திர மடத்தின் பீடாதிபதியாக ஸ்ரீ ராகவேந்திர தீர்த்தராகப் பொறுப்பேற்றார்.
    • மகாசக்தி பெற்றிருந்தாலும் கர்வம் இல்லாமல் மக்களுக்கு உதவும் குருவாக இருந்தார்.

    ராகவேந்திர சுவாமிகளின் 353-வது ஆராதனை தினம் நாளை (புதன்கிழமை) நடைபெற உள்ளது.  

    இவர் 16-ம் நூற்றாண்டில் வாழ்ந்த மகா தெய்வம், வைணவ நெறியில் துவைத மதத்தையும் போதித்தவர்.

    சிதம்பரம் நகரில் இருந்து சுமார் 9 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள புவனகிரி என்ற சுவேத நதி கரையில், குரு ராகவேந்தர் கி.பி 1595-ம் வருடம் பால்குண ஆண்டு சுக்லபட்ச சப்தமி திதியில், தனுர் லக்கினத்தில் ரிஷப ராசியில், வியாழக்கிழமையன்று, மிருக சீரிடம்  நட்சத்திரத்தில் அவதரித்தார்.

    இவரது பெற்றோர்களான திம்மண்ண பட்டர், கோபிகாம்பாள் தம்பதியர் திருப்பதி ஏழுமலையானை நினைத்து வேண்டிப் பிறந்த மூன்றாவது குழந்தை என்பதால் இவருக்கு வேங்கடநாதன் என்று பெயரிட்டனர்.  

    இவர் மிகச்சிறு வயதிலிருந்தே நல்ல அறிவாற்றலுடன் திகழ்ந்தார். புவனகிரியில் பிறந்து பின்பு மதுரையில் வளர்ந்து, கும்பகோணத்தில் குடியேறினார். இவருக்கு சரஸ்வதி என்பவரை மணந்து ஒரு ஆண் குழந்தையும் பிறந்தது. வேங்கட நாதர், தஞ்சாவூரில் 1621-ம் ஆண்டு பால்குண மாசம், சுக்கில பட்சம், துவிதியை அன்று துறவறம் ஏற்று அதீந்திர மடத்தின் பீடாதிபதியாக ஸ்ரீ ராகவேந்திர தீர்த்தராகப் பொறுப்பேற்றார்.

    இவர் விஷ்ணுவின், பிரகலாதரின் அவதாரமாக கருதப்படுகிறார். குடும்பம் வறுமையில் இருந்தாலும் நாட்டு மக்களுக்கு மழையை வரவைத்தார், பஞ்சத்தை போக்கியவர், மனைவிக்கு கர்மாவை முடித்து மோட்சத்தினை அளித்தவர், தான் கற்றதை மற்றவருக்குச் சொல்லிக்கொடுக்கும் ஆசிரியராக, தகுதிக்குரிய மக்களுக்குச் செய்யப்படும் உதவியாளனாக, நோயாளியைக் குணமாக்கும் மருத்துவராக, பாதயாத்திரை மூலம் ஆன்மீக சிந்தனையை தூண்டியவராக, சரியான வாழ்க்கை கற்றுக்கொடுப்பவனாக, அமைதியின் உருவமாக, கடவுளின் மேல் நல்ல பக்தி கொண்டவராக, குருட்டு நம்பிக்கை இல்லாதவராக, மகாசக்தி பெற்றிருந்தாலும் கர்வம் இல்லாமல் மக்களுக்கு உதவும் குருவாக இருந்தார்.

    ராகவேந்திரர் தன் வாழ்நாள் முழுக்க எத்தனையோ அற்புதங்களை நிகழ்த்தினார். இன்றும் நிகழ்த்திக் கொண்டிருக்கிறார். மக்கள் மனதை விட்டு அகலாத அந்த அற்புதங்களில் சில...ஒரு தடவை கிரிடகீரி என்ற ஊரில் தேசாயி ரகுநாதராயன் என்ற பணக்கார பக்தர் அழைத்ததால் அவரது வீட்டுக்கு ராகவேந்திரர் விருந்துக்கு சென்றிருந்தார். தடபுடல் விருந்து தயாரானது. அப்போது மாம்பழச் சாறு இருந்த பெரிய பாத்திரத்தில் தேசாயி ரகுநாதராயரின் மகன் விழுந்து இறந்து போனான்.

    இதை அறிந்த ராகவேந்திரர், அந்த சிறுவன் உடலை எடுத்து வரச் சொன்னார். பிறகு சிறுவன் உடல் மீது ராகவேந்திரர் புனித நீரை தெளித்தார். மறு வினாடி அந்த சிறுவன் உயிர்பெற்று எழுந்து உட்கார்ந்தான்.

    மற்றொரு சமயம் ராகவேந்திரரை சோதித்து பார்க்க நினைத்த சில இளைஞர்கள் தங்களுள் ஒருவனை செத்தவன் போல நடிக்க செய்தனர். அவனை தூக்கிச் சென்று ராகவேந்திரர் முன் கிடத்தி இவனுக்கு உயிர் கொடுங்கள் என்றனர்.

    ராகவேந்திரர் சிரித்தபடியே செத்தவன், செத்தவனாகவே இருக்கட்டுமே என்றார். உண்மையிலேயே அவன் செத்துப் போனான்.

    இதை அறிந்ததும் அவனைத் தூக்கி வந்தவர்கள் அரண்டு போனார்கள். அழுது புலம்பினார்கள். அவர்களுக்கு அறிவுரை கூறிய ராகவேந்திரர் பிறகு செத்தவன்போல் நடித்தவனுக்கு மீண்டும் உயிர் கொடுத்து ஆசி வழங்கினார்.

    ஒரு தடவை சாவனூர் என்ற ஊருக்கு சென்ற ராகவேந்திரர் அங்கிருந்த ஒரு இடத்தில் அமர்ந்தார். உடனே ஒருவன் ஓடி வந்து, "இது நவாப் மகன் புதைக்கப்பட்டுள்ள சமாதி. அதன் மீது உட்காராதீர்கள்" என்றான்.

    அவனிடம் ராகவேந்திரர், "உங்கள் நவாப் மகன் பாம்பு கடித்துதானே இறந்தான். அவன் உடலை தோண்டி எடுங்கள். நான் உயிர் கொடுக்கிறேன்" என்றார்.

    இதை அறிந்த நவாப் அங்கு ஓடோடி வந்தார். "புதைக்கப்பட்ட என் மகன் உடலை தோண்டி எடுக்க எனது இஸ்லாமிய மார்க்கம் ஒத்துக் கொள்ளாது" என்றார்.

    அவரிடம் ராகவேந்திரர், "உனக்கு மகன் வேண்டுமா? அல்லது மார்க்கம் வேண்டுமா என்றார். அதற்கு நவாப் எனக்கு மகன்தான் வேண்டும் என்றார்.

    உடனே நவாப் மகன் உடல் தோண்டி எடுக்கப்பட்டது. அந்த உடல் மீது கமண்டலத்தில் இருந்த புனித நீரை தெளித்த ராகவேந்திரர் அம்ருத மந்திரம் ஓதினார். மறுவினாடி நவாப் மகன் தூங்கி விழித்தவன் போல எழுந்தான். இதனால் மகிழ்ச்சி அடைந்த நவாப், கிருஷ்ணா என்ற கிராமத்தை ராகவேந்திரருக்கு தானமாக கொடுத்தார்.

    ராகவேந்திரர் கும்பகோணம் பீடாதிபதியாக பொறுப்பேற்ற பிறகு ஒரு அற்புதம் நடந்தது. ராகவேந்திரரின் ஆற்றலை சோதிக்க விரும்பி 3 வாலிபர் கள் வந்தனர்.

    அவர்கள் 3 பேரும் தங்களுக்கு பிடித்த பலகாரம், மடத்தில் நடத்தப்படும் அன்னதானத்தில் இருக்குமா... அப்படி இருந்தால் ராகவேந்திரர் உண்மையிலேயே சக்தி படைத்தவர்தான் என்று சொல்லிக் கொண்டு சாப்பிட உட்கார்ந்தனர்.

    என்ன ஆச்சரியம், அவர்கள் 3 பேரும் நினைத்த பலகாரம், இலையில் வைக்கப்பட்டது. அப்போது அங்கு வந்த ராகவேந்திரர் 3 வாலிபர்களையும் பார்த்து, என்ன நீங்கள் நினைத்த பலகாரம் கிடைத்துவிட்டதா என்றார். மறு வினாடி 3 வாலிபர்களும் ராகவேந்திரர் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டு ஆசி பெற்றனர்.

    ஒரு சமயம் அன்வாரி மாதவராவ் என்ற எம்.பி அமெரிக்கா சென்றிருந்தார். திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் நியூயார்க் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

    டாக்டர்கள் அவர் பிழைக்க மாட்டார் என கைவிட்டு விட்டனர். இதனால் அவர் அந்த நாட்டு வழக்கப்படி தனி ஐஸ் அறையில் வைக்கப்பட்டார்.

    ராகவேந்திரரின் தீவிர பக்தரான அன்வாரி மாதவராவ் எம்.பி, அவரது நாமத்தை உச்சரித்தப்படி இருந்தார். அன்றிரவு ஐஸ் அறைக்குள் ஒரு முதியவர் நுழைந்தார். மாதவராயை தொட்டு ஆசீர்வதித்தார்.

    மறு நாள் காலை மாதவராய் தெம்புடன் எழுந்து நடந்தார். டாக்டர்கள் ஆச்சரியப்பட்டனர். ஐஸ் அறையில் இருந்த நோட்டில் ராகவேந்திரரின் கையெழுத்து இருந்ததை கண்டு மருத்துவ உலகமே ஆச்சரியத்தின் உச்சத்துக்கு சென்றது.

    மசூத்கான் என்ற அரசன் மகான் ஸ்ரீராகவேந்திரரின் மீது அபார பக்தி கொண்டவன். என்றாலும் அவனுக்குள் குறும்புத்தனம் ஒன்று எட்டிபார்த்தது. ஸ்ரீராகவேந்திரரின் சக்தியைச் சோதித்துப்பார்க்க அவன் திட்டமிட்டான்.

    ஸ்ரீராகவேந்திரர் தங்கியிருந்த இடத்திற்கு அவரைக் காணச் சென்ற மசூத்கான், வெள்ளித்தட்டு ஒன்றில் மாமிசத் துண்டுகளை நிரப்பி அழகான துணியால் மூடி, அதனை ஸ்ரீராகவேந்திரருக்குச் சமர்ப்பித்தான். ராகவேந்திரர் என்ன செய்யப் போகிறார் பார்க்கலாம் என்று அவன் நினைத்தான்.

    இறைவனுக்கு அதனைப் படைக்குமாறு ஸ்ரீராகவேந்திரரை அவன் வேண்டினான். மகானும் அதனை ஏற்றுக் கொண்டு புன்னகைத் தவாறே அதன் மீது தீர்த்தம் தெளித்தார். மசூத்கானின் குறும்புத்தனத்தை அவர் அறிந்து கொண்டார்.

    பின்னர் மூடப்பட்டிருந்த துணியை விலக்குமாறு அவர் கட்டளையிட்டார். துணியை எடுத்தவுடன், உள்ளே மலர்களும் கனிகளுமாக கண்ணை கவர்ந்திழுத்தன.

    அர்த்தத்தோடு பார்த்தார் ஸ்ரீராகவேந்திரர். வெட்கித் தலை குனிந்தான் மசூத்கான். பின்னர் அவன் ராகவேந்திரரிடம் மன்னிப்பு கேட்டான்.

    ஒருசமயம் ஸ்ரீராகவேந்திரர் தங்கியிருந்த இடத்திற்கு வந்த மூன்று மலையாள ஜோதிடர்கள், அவருடைய ஜாதகத்தை வாங்கி அவருடைய ஆயுள் காலத்தைக் குறித்துத் தந்தனர். ஒரு ஜோதிடர் சுவாமிகளுடைய ஆயுள் எழுபது ஆண்டுகள் எனவும், இரண்டாமவர் முந்நூறு ஆண்டுகள் எனவும், மூன்றாவது ஜோதிடர் எழுநூறு ஆண்டுகள் எனவும் சொல்ல, கூடியிருந்த மக்கள் ஜோதிடர்களைக் கேலி செய்தார்கள்.

    "ஒரு மனிதர் முந்நூறு ஆண்டுகளும் எழுநூறு ஆண்டுகளும் உயிர் வாழ முடியுமா?" என்று அவர்கள் கேட்க, சுவாமிகள் அனைவரையும் அமைதியாக இருக்கச் சொல்லி, மூவரும் சரியாகக் கணித்திருக்கிறார்கள் என்று கூறி, அதற்கு விளக்கமும் அளித்தார். அதாவது, தன்னுடைய உடல் இந்த மண்ணில் எழுபது ஆண்டுகள் இருக்கும் என்றும், ஜீவசமாதி அடைந்து முந்நூறு ஆண்டுகள் பிருந்தாவனத்தில் இருக்கப் போவதாகவும், தன்னை உள்ளன்போடு நேசிக்கும் மக்களோடு தான் எழுநூறு ஆண்டுகள் இருக்கப் போவதாகவும், முடிவாக பிரம்மலோகம் சென்று சங்குகர்ணனாக இருக்கப் போவதாகவும் தெரிவித்தார்.

    1601-ம் ஆண்டு தமிழகத்தில் கடலூர் மாவட்டத்தில் உள்ள புவனகிரியில் அவதரித்த சுவாமிகள், 1671-ம் ஆண்டு ஆந்திரப் பிரதேசம் மந்திராலயத்தில் பிருந்தாவனப் பிரவேசம் (ஜீவ சமாதி) செய்தார். பின்னர் முந்நூறு ஆண்டுகள் அதாவது 1971-ம் ஆண்டு வரை பிருந்தாவனத்தில் இருந்தவாறே தன் பக்தர்களுக்கு அருள்புரிந்தார். பின்னர் 2671-ம் ஆண்டு வரை தன் பக்தர்களுக்காக நேரிலேயே வந்து அருள்புரிவார் என்பது ஐதீகம். இதை ஸ்ரீ ராகவேந்திரர் பலமுறை தன் பக்தர்களுக்கு உணர்த்தியிருக்கிறார்.

    சிறுவயதில் இருந்து வேங்கடநாதருக்கு வலிமை வாய்ந்த அக்னி சூக்தம், வருண மந்திரம், சமஸ்கிருத வேத சுலோகங்கள் மற்றும் நிறைய ஸ்தோத்திரம் கற்றுக்கொண்டவர். அவற்றினை எப்பொழுதும் உச்சரித்துக் கொண்டு இருப்பார். இன்றும் மந்திராலய பிருந்தாவனத்தில் உள்ள ஜீவசமாதியில் அந்த சுலோக அதிர்வலைகள் உள்ளதாகக் கூறப்படுகிறது.

    • கிருத்திகை ராசி மண்டலத்தின் 3-வது நட்சத்திரமாகும்.
    • சூரியனின் நட்சத்திரமாகும்.

    கிருத்திகை ராசி மண்டலத்தின் 3-வது நட்சத்திரமாகும். இது சூரியனின் நட்சத்திரமாகும். இதன் முதல் பாதம் செவ்வாயின் மேஷ ராசியிலும் 2, 3, 4ம் பாதங்கள் சுக்ரனின் வீடான ரிஷபத்திலும் உள்ளது. இந்த நட்சத்திரம் சிவப்பு நிறத்தில் கூரிய கத்தி போல் காட்சியளிப்பதால் இதற்கு கிருத்திகை என்று பெயர் வைக்கப்பட்டது.

    இதன் தமிழ் பெயர் ஆரல் என்பதாகும். ஆரல் என்றால் தீச்சுடர் என்று பொருள்.இது ஒரு பெண் நட்சத்திரமாகும். இந்த நட்சத்திரத்தின் முதல் பாதமானது தலை மற்றும் கண்களையும், 2,3,4ம் பாதங்கள் கழுத்து, தாடை, முகம் போன்ற பாகங்களையும் ஆளுமை செய்கிறது.

    கிருத்திகை நட்சத்திர பலன்கள்

    இது சூரியனின் ஆதிக்கம் பெற்ற நட்சத்திரம் என்பதால் ஆன்ம பலம் ஆளுமைத் தன்மை, நிர்வாகத்திறன், சுய கவுரவம், கம்பீரத் தோற்றம் நிறைந்தவர். இவர்களுக்கு நல்ல உடல் வலிமையும் புத்திசாலித்தனமும் இருக்கும். சுறுசுறுப்பாக செயல்படும் ஆற்றலும், எதையும் வெளிப்படையாக பேசும் குணமும் உண்டு.

    சிந்தித்து செயல் ஆற்றுவதில் வல்லவர்கள். அழகிய தோற்றப் பொழிவு நிறைந்தவர். முன் கோபமும் அதிகமிருக்கும். ஆடம்பரமான, பகட்டான வாழ்க்கையை வாழ விரும்புவார்கள். புகழ், முன்னேற்றம், அந்தஸ்து அனைத்தும் தேடி வரும்.

    புத்திக் கூர்மை, விவேகம் நிறைந்தவர்கள். எதிர்காலத்தில் வரக்கூடிய நன்மை தீமைகளை முன்பே அறியும் ஞானம் இருக்கும்.

    தந்தையின் ஆதரவு உண்டு. அரசியல் ஆதாயம் உண்டு. ஏதாவது ஒரு துறையில் நிச்சயம் முன்னேற்றம் அடைவார்கள் . பெரிய அந்தஸ்து, அதிகாரம் நிறைந்த பதவியில் இருப்பார்கள். முன்னோர் வழி குலத் தொழிலைச் செய்யும் பாக்கியம் பெற்றவர்கள்.

    எதிர்காலம் பற்றிய சிந்தனை, முறையான திட்டமிடுதல் மூலம் அனைத்து விதமான நன்மைகளையும் அடைவார்கள். தன் சுய முயற்சியால் வாழ்க்கையில் முன்னேறுவார்கள். அதிகார வர்க்கத்தின் தொடர்பு டையவர்கள். தொட்டது துலங்கும்.

    நல்ல சந்தர்ப்பம், வாய்ப்புகள் தேடி வரும்.தொழிலுக்கு அரசு ஆதரவு உண்டு.பூர்வீகச் சொத்தால் மிகுதியான பலன் உண்டு. மற்றவர்களிடம் எதற்காவும் கையேந்த விரும்ப மாட்டார்கள். தங்களின் தேவைகளை தாங்களே சமாளிக்கும் திறமை உள்ளவர்கள். இது உடைபட்ட நட்சத்திரம் என்பதால் வாழ்க்கையில் சில இடர்களை சந்திக்க நேரும்.

    கல்வி

    கல்வியில் அதிக ஆர்வம் உடையவராக இருப்பார்கள். கிருத்திகை சூரியனின் நட்சத்திரம் என்பதால் நிர்வாகம் சம்பந்தமான படிப்பு, பொருளாதாரம், வணிகவியல், மருத்துவம், ஜெம்மாலஜி, ஜோதிடம் போன்ற படிப்பில் அதிக நாட்டம் உண்டு.

    தொழில்

    முழு சுதந்திரம் உள்ள இடத்தில் மட்டுமே பணி புரியும் ஆர்வம் இருக்கும். மற்றவர்களின் கட்டளைக்கு கீழ் படியக்கூடிய வேலையாக இருந்தால் எவ்வளவு லாபம் வந்தாலும் ஒரு நிமிடம் கூட வேலை பார்க்க மாட்டார்கள். நானே ராஜா, நானே மந்திரி என்ற எண்ணத்துடன் வாழ்வார்கள். அதிகார பதவிகள், அரசியல், அரசு சார்ந்த தொழில் உத்தியோகங்கள் அமையும்.

    சுய தொழில், பள்ளி ஆசிரியர்களாகவும், கல்லூரி பேராசிரியர்களாகவும் பணியாற்றும் திறன் கொண்டவர்கள். மருத்துவ துறையிலும் சமூக சேவையிலும், அதீத ஆர்வம் உள்ளவர்கள். ஜோதிடம், ஆன்மிகம் போன்ற கலைகளில் ஈடுபாடு உண்டு.

    தனம், வாக்கு, குடும்ப ஸ்தானம்

    மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை குடும்ப உறவுகளின் ஆதரவு உண்டு. வாழ்க்கைத் துணையுடன் கெத்தாக நடந்து கொள்வார்கள். மனைவி பிள்ளைகளிடம் கூட விட்டு கொடுத்து போக மாட்டார்கள். தனக்கென ஒரு பாதையை அமைத்துக் கொண்டு தனி வாழ்க்கையை வாழ்வார்கள் உணவு வகைகளை ரசித்தும் ருசித்தும் உண்பார்கள்.

    தொழில் சம்பந்தமாக அடிக்கடி குடும்ப உறவுகளை பிரிந்து வாழ்வார்கள். தாங்கள் உடுத்தும் உடைகள் மற்றும் அணிகலன்கள் மிகவும் மதிப்பாக தெரிய வேண்டும் என்று விரும்புவார்கள். குடும்ப கவுரவத்தை காப்பாற்றவதில் அதீத அக்கரையுடன் இருப்பார்கள். தொட்டது துலங்கும். தாராள தன வரவு இருந்து கொண்டே இருக்கும்.

    திரண்ட சொத்து உண்டு. பேச்சுத் திறமையால் அனைவரையும் கவர்வதில் வல்லவர்கள். தாய், தந்தையின் ஆதரவு மற்றும் ஆதாயம் உண்டு.

    தசா புத்தி பலன்கள் சூரிய தசா:

    இவர்களுக்கு முதல் தசா சூரிய தசாவாகும். இது 6 வருடம் உள்ள சிறிய தசா. பிறப்பில் மீதம் உள்ள தசா வருடத்திற்கு ஏற்ற பலன் நடக்கும். இது ஜென்ம தாரையின் நட்சத்திரம். இது பால் பருவம் என்பதால் சிறு சிறு உஷ்ண நோய் தாக்கம் இருக்கும். தந்தையின் புகழ், அந்தஸ்து, கவுரவம் உயரும். தந்தைக்கு அரசு உத்தியோகம் அரசியல் ஆதாயம் உண்டு.

    சந்திர தசா

    இதன் கால அளவு 10 வருடம். பள்ளிப்பருவம். இது தன தாரையின் நட்சத்திரம் என்பதால் சந்திரன் பலம் பெற்றால் இளம் பருவத்திலேயே சம்பாதிக்க துவங்குவார்கள். பெற்றோர்கள் நல்ல தொழில், உத்தியோகத்தில் பணியாற்றுவார்கள். சூரியன், சந்திரன் பலம் குறைந்தால் தாய், தந்தையின் ஆதரவு கிடைக்காது.

    குடும்பத்தை விட்டு பிரிந்து வாழ நேரும். பொருளாதார தட்டுப்பாடு அதிகம் இருக்கும்.வெப்ப நோய், ஜீரணக் கோளாறு, பார்வை குறைபாடு, தண்ணீர் கண்டம், வீசிங் தொந்தரவு இருக்கும்.

    செவ்வாய் தசா

    இது 7 வருடம் கொண்ட தசாவாகும். வாலிப பருவம். பள்ளி, கல்லுரி படிப்புகளை கடக்கும் பருவம். பேச்சிலும் முடிவெடுப்பதிலும் வேகமாக செயல்படுவார்கள். மற்றவர்களுக்கு புரியவில்லை என்றால் கோபம் எளிதில் வந்து விடும். வீரதீரச் செயலினால் புகழ் உண்டு. விபத்து தாரையின் நட்சத்திரம் என்பதால் கவனமாக இருக்க வேண்டும்.

    ராகு தசா

    இதன் தசா வருடம் 18. பல விதமான முதல் திருமணம் குழந்தை, வேலை, தொழில் என முக்கிய சம்பவங்கள் நடக்கும் காலகட்டம்.சேஷம தாரையின் தசை என்பதால் புதிய மனிதர்கள் ஆதரவு உண்டு.

    புதுப்புது கருத்துக்களை தன்னையறியாமல் வெளிப்ப டுத்துபவர். பிறர் யோசனைப்படி நடக்க மாட்டார்கள். சமயோசிதபுத்தி,வேடிக்கையாக பேசும் திறன், மேதாவித் தனம் இருக்கும். சிலர் வெளியூர் அல்லது வெளிநாட்டு வேலை க்கு செல்வார்கள். எந்த வயதினராக இருந்தாலும் நிச்சயம் காதல் வலையில் சிக்குவார்கள். புதிய சாதனைகளை விரைந்து செய்ய வேண்டும் என்ற பிரமாண்ட விருப்பம், திட்டமிடுதல் இருக்கும். காதல் திருமணத்திற்கு வாய்ப்புகள் அதிகம்.

    குரு தசா

    இதன் தசா வருடம் 16 ஆண்டுகள். இது பிரத்யக் தாரையின் தசாவாகும். ஒருவிதக் குருட்டுத் தைரியம் இவர்களுக்கு மனதில் இருந்து கொண்டே இருக்கும். இறைவனின் அருளால், திடீர் யோசனைகள் அல்லது ஞானோதயம் ஏற்படும். எல்லாத் துறையிலும் தனித் தன்மையுடன் ஜொலிப்பவர்கள் பலர். வீடு, வாசல் என நிலையாக வாழ்க்கையில் செட்டிலாகுவார்கள்.

    சனி தசா

    இது 19 வருட காலம் உள்ள பெரிய தசாவாகும். சாதக தாரை ஏனும் 6-வது தசாவாகும். இந்த தசை முடியும் முன்பு பெரும்பான்மை யாக 70 வயதை கடப்பார்கள். வயோ திகத்தால் ஓய்வை மனம் விரும்பும். தன் சக்திக்கு எது முடியுமோ அதையே செய்து முடிப்பர்.

    புதன் தசா

    இதுவும் 17 வருடம் கொண்ட தசாவாகும். இது வரை தாரையின் தசா. சற்று முன் கோபம் அதிகம் இருப்பதால் ரத்த அழுத்தம் சம்மந்தப்பட்ட நோய்கள் தாக்கும். இதய நோய், ஒற்றை தலைவலி உஷ்ணம் சம்மந்தப்பட்ட நோய்கள், கண்களில் கோளாறு, காதுவலி போன்றவை உண்டாகி மருத்துவச் செலவுகளை ஏற்படுத்தும். ஆரோக்கியம் விஷயத்தில் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கேது, சுக்ர தசை நடக்கும் வாய்ப்புகள் குறைவு.

    கிருத்திகை நட்சத்திரத்தின் சிறப்பு அம்சங்கள் கத்தி அல்லது வாள் போன்ற உருவத்துடன் காட்சி தருவதால் மரம் வெட்ட, மண் தோண்ட, சுரங்கம் தோண்ட சிறந்த நட்சத்திரமாகும். இது உடைபட்ட நட்சத்திரம் என்பதால் சுப காரியம் செய்ய உகந்ததல்ல. ஆனால் பரிகாரங்கள் செய்வதற்கு உடைபட்ட நட்சத்திரங்களே சிறப்பு உடையது.

    இந்த நட்சத்திரம் கடனுக்கு காரக கிரகமான செவ்வாயின் வீட்டிலும் பண வரவிற்கு காரக கிரகமான சுக்ரன் வீட்டிலும் உள்ளது. மீள முடியாத கடன் தொல்லையில் இருப்பவர்கள் தொடர்ந்து ஆறு மாத காலம் கிருத்திகை நட்சத்திர நாளில் முருகனை வழிபட கடன் தொல்லை நிவர்த்தியாகும். பெண் ஜாதகத்தில் கணவனைக் குறிக்கும் கிரகம் செவ்வாயாகும் ஆண் ஜாதகத்தில் மனைவியை குறிக்கும் கிரகம் சுக்கிரனாகும்.

    திருமணத் தடை இருப்பவர்கள் தொடர்ந்து 6 மாதம் கிருத்திகை நட்சத்திர நாளில் திருச்செந்தூர் சென்று முருகனை வழிபட்டு வர திருமணத் தடை அகலும். செவ்வாய், சுக்ரன் வீட்டை இந்த நட்சத்திரம் இணைப்பதால் திருமணம் ஆகி பிரிந்து வாழும் இந்த நட்சத்திர நாளில் விரதமிருந்து முருகனை வழிபட தம்பதிகள் மீண்டும் இணைந்து வாழ்வார்கள்.

    கிருத்திகை நட்சத்திரம் ரிஷப ராசியில் சந்திரன் உச்சம் பெறுவதால் உயிர் குல பெண்மணிகள் உயர்ந்த பதவியில் இருக்கும் பெண்களை சந்திக்க உகந்த நட்சத்திரமாகும்.கலைத்துறையினர் மற்றும் கவிஞர்கள் கிருத்திகை விரதமிருந்து சென்னை கற்பகாம்பாள் சமேத கபாலீஸ்வரரை வழிபட்டால் நிச்சயமாக அவர்களுடைய எண்ணம் நிறைவேறும். புகழின் உச்சிக்குச் செல்வார்கள்.

    நட்சத்திர பட்சி: மயில்

    யோகம்: ஆயுஸ்மான்

    நவரத்தினம்:மாணிக்கம் தலை

    உடல் உறுப்பு:தலை

    திசை:கிழக்கு

    பஞ்சபூதம்:நிலம்

    அதிதேவதை:அக்னி தேவதை

    நட்சத்திர மிருகம்: பெண் ஆடு

    நட்சத்திர வடிவம்: கத்தி, வாள்

    நன்மை தரும் நட்சத்திரங்கள்:

    சம்பத்து தாரை:ரோகிணி, அஸ்தம், திருவோணம்

    சேம தாரை: திருவாதிரை, சுவாதி, சதயம்

    சாதக தாரை: பூசம், அனுஷம், உத்திரட்டாதி

    பரம மிக்ர. தாரை: பரணி, பூரம், பூராடம்.

    பரிகாரம்

    இது சூரியனின் நட்சத்திரம் என்பதால் தினமும் சூரிய நமஸ்காரம் செய்ய வேண்டும். சூரியனின் ரத்தினமான மாணிக்கம் அணியலாம். ஜென்ம நட்சத்திர நாளில் வறிய நிலையுள்ள ஆடு அல்லது மாடு வளர்ப்பவர்களின் தேவையறிந்து இயன்ற உதவி செய்ய வேண்டும். முருகன் மற்றும் சிவ வழிபாடு அனைத்து விதமான நன்மைகளையும் பெற்றுத்தரும்.

    சந்தர்ப்பம் கிடைக்கும் போது முருகவழிபாடு செய்தல், ரத்த தானம் செய்தல், தாழம்பூ குங்குமம் தரித்தல் போன்றவை சிறப்பான பலன் தரும். இவர்களின் சாதக தாரையான 6வது நட்சத்திர நாளில் தட்சிணாமூர்த்தியை வழிபட அனைத்து வளங்களும் கிடைக்கப்பெறும்.

    • ரத்தத்தில் இருக்கும் கார்ட்டிசால் 2 வகைப்படும்.
    • ஆல்கஹால் பாதிப்புகள் மனிதனை அதிகமாகவே தாக்கும்.

    குடிமகன்கள் மட்டுமல்ல அவர்களைச் சுற்றி இருப்பவர்களும் அத்தனை பேரும் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் இது.

    மதுவுக்கு அடிமை, மதுவால் ஏற்படும் ஆரோக்கிய குறைபாடுகள், அதனால் ஏற்படக் கூடிய பாதிப்புகளை டெக்சாஸ் பல்கலைக் கழகத்தின் மருத்துவ மையம் ஆராய்ந்து சில முடிவுகளை வெளியிட்டிருக்கிறது.

    இடைவிடாது குடிப்பவர்களுக்கும் சரி, குடியை விட்டவர்களுக்கும் சரி, அவர்கள் ரத்தத்தில் கார்ட்டிசால் அளவு உயர்ந்தே காணப்படும். இந்த கார்ட்டிசால்தான் ஒருவரது உணர்ச்சிகளை முறைப்படுத்தல், பாகுபாடு செய்யும் திறமை, நோய் எதிர்க்கும் இயல்பு, உடலின் சக்தி ஆகிய எல்லாவற்றுக்குமே மூலகாரணம்.

    பல மாதங்களுக்குத் தொடர்ந்து மது அருந்துபவர் உடலில் இந்த கார்டிசால் அளவு அதிகமாக இருக்கிறது. அத்தோடு மட்டுமல்ல, அவர் குடிப்பதை நிறுத்தினாலும் இந்த கார்டிசாலின் அளவு இன்னும் அதிகமாகி விடுகிறது.

    அந்த நிலையில் காணப்படும் கார்ட்டிசாலின் அளவு சாதாரணமாக இருக்கும் நிலையை விட 2 அல்லது 3 மடங்கு அதிகம். ஆல்கஹால் நேரடியாக மூளையின் ரசாயனக் கூறுகளையும் அட்ரினல் சுரப்பிகளையும் பாதித்து கார்ட்டிசாலை உற்பத்தி செய்கிறது.

    நெடு நாளைக்கு அதிக அளவில் குடித்து விட்டுப் பின் திடீரென்று நிறுத்தினாலும், இந்த கார்ட்டிசாலின் உற்பத்தி அதிகரிக்கிறதே தவிர குறைவதில்லை. ரத்தப் பரிசோதனை மூலம் கார்ட்டிசாலின் அளவைத் தீர்மானிக்கிறார்கள். உமிழ் நீரைச் சோதித்துக் கண்டு பிடிக்கிறார்கள்.

    ரத்தத்தில் இருக்கும் கார்ட்டிசால் 2 வகைப்படும். கட்டுப்பட்ட கார்ட்டிசால், கட்டுப்படாத கார்ட்டிசால் என்று இருவகை உள்ளது. இவற்றில் கட்டுப்பட்ட கார்ட்டிசால் புரோட்டீனுடன் பிணைக்கப் பட்டிருப்பதால் அது செயல்படாது.

    ஆனால் கட்டுப்பாடில்லாத கார்ட்டிசால்தான் செயல்படுகிறது. ரத்தத்தில் உள்ள பெரும்பாலான கார்ட்டிசால் கட்டுப்பட்டவைதான்.

    ஆனால் உமிழ்நீரில் உள்ளது சுதந்திரப்பறவை. அது தான் ஜம்மென்று செயல்படுகிறது. அதனால் ரத்தத்தைபரிசோதிப்பதை விட உமிழ் நீர் சோதனையே சிறந்தது.

    ஆல்கஹால் பாதிப்புகள் மனிதனை அதிகமாகவே தாக்கும். ஆல்கஹாலால் ரத்தத்தில் அதிகமாகிற கார்ட்டிசால் என்சைம்தான் மனித உடலுக்கு மிகப் பெரிய வில்லன். வேறு எந்த நோயையும் விட கொடூரமானதும் கூட. பல்வேறு நோய்களை உருவாக்கக் கூடிய தன்மை ஆல்கஹாலுக்கு உண்டு.


    கார்ட்டிசாலின் கைங்கரியத்தை முழுமையாக அறிந்து கொண்டவர்கள் மதுபானக் கடை முன்பு நிற்கக் கூட பயப்படுவார்கள். அந்த அளவிற்கு உடலைச் செயலிழக்கச் செய்துவிடும்.

    ஆல்கஹாலின் அளவு ரத்தத்தில் அதிகமானால் உடல் விபரீதத்தை நோக்கி போக ஆரம்பித்து விடும். சிறுநீரகக் கோளாறு, நரம்புத் தளர்ச்சி, ரத்த அழுத்தம், இருதய அதிர்ச்சி என எல்லா நோய்களுமே வர வாய்ப்பிருக்கிறது.

    மதுபான பழக்கம் உள்ளவர்களின் ரத்தத்தில் கார்டிசால் என்கிற என்சைம் அளவு அதிகமாக ஆகிறது. அதனால் மூளையின் செயல்படும் தன்மையில் மாற்றமும், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைதல், கோபம் வருவது. மன அழுத்தம் போன்றவையும் ஏற்படுகின்றன.

    முதல் கார்ட்டிசால் சிறுநீரகத்தைத் தாக்கி அதனுடைய செயல்பாட்டைக் குறைத்து விடுவதுடன் பாதிப்பு தொடரும் போது சிறுநீரகத்தில் அடைப்பு ஏற்படுகிறது. இதனால் ரத்தத்தில் அல்கலைன் பாஸ்பேட் யூரியா கிரியேடிரைன்னான், சோடியம், பொட்டாசியம் போன்றவற்றின் அளவுகளைப் பரிசோதித்துப் பார்க்க வேண்டும்.

    கே.எஸ்.சுப்பையாபாண்டியன்

    கே.எஸ்.சுப்பையாபாண்டியன்

    மேற்கண்டவை ரத்தத்தில் அதிகரிப்பதால் ஏற்படக் கூடியவையே மேற்சொன்ன பாதிப்புகள்.

    இப்பாதிப்பானது மூளையில் உள்ள கட்டுப்பாட்டு இயக்க அமைப்புகளையும், அட்ரினல் சுரப்பியையும் உசுப்பி விட்டு கார்ட்டிசாலின் உற்பத்தியை அதிகரித்து விடுகிறது. இதனால் ஞாபக சக்தி குறைய ஆரம்பிக்கும். நரம்புத் தளர்ச்சி ஏற்படும். உடலில் வியர்வை அதிகமாக சுரக்கும். கோபம் அதிகரிக்கும்.

    கால்வலி, உடலில் உள்ள தசைகளில் சுழற்சி போன்று வலி ஏற்படும். உடலில் பதற்றம் அதிகரிக்கும். வாயில் உமிழ்நீர் அதிகமாக சுரக்க ஆரம்பிக்கும். உமிழ் நீர் தன்னிச்சையாக வெளியில் ஒழுகக் கூட செய்யும்.

    உடலில் ஏற்படும் இயற்கை உபாதைகளான மலம், சிறுநீர் போன்றவை மூளையின் கட்டுப்பாட்டில் இல்லாமல் தன்னிச்சையாக வெளியேறக்கூட வாய்ப்பு இருக்கிறது. மன ரீதியான பாதிப்பும் உண்டு.

    குடிபழக்கம் உள்ளவர்களிடையே வேலையில் கவனம் இருக்காது. குடிக்கிற நேரம் வரும் போது எந்த விஷயத்திலும் கவனம் போகாது.

    எரிச்சல் காரணமாக குடும்பத்தினரிடையே அன்றாடம் பிரச்சனை வர வாய்ப்பு இருக்கிறது.

    அடுத்து இதயத்தில் ஏற்படக் கூடிய பிரச்சனைகள். கார்ட்டில் என்சைம் அதிகரிப்பதால் கொழுப்பு அதிகமாகி ரத்தக் குழாய்களில் தங்கி விடும். இதனால் இதயத்தில் இருந்து மற்ற உறுப்புகளுக்கு கொண்டு செல்லப்படும் ரத்தத்தின் வேகம் குறைந்து ஒவ்வொரு செயல்பாடும் மந்தமடையும் அல்லது பாதிக்கப்படும். இதனால் மாரடைப்பு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. இதனை சரி செய்ய பைபாஸ் சர்ஜரி செய்ய வேண்டியது இருக்கும்.

    மூளை பாதிப்படைவதால் கண்ணின் பார்வை குறைய ஆரம்பிக்கும். பாதிக்கப்பட்ட மனிதரின் பேச்சுத் திறன் குறைந்து குரல் பிசிறடிக்கும். நாள் ஆக ஆக பேசும் போது வார்த்தைகளை புரிந்து கொள்ள முடியாத அளவிற்குப் போய்விடும்.

    மேற்கண்ட பாதிப்புகளின் தன்மை அதிகரிக்க அதிகரிக்க ஒரு கட்டத்தில் பாதிக்கப்பட்டவர் கோமா நிலைக்குக்கூட தள்ளப்படுவார். அதுபோல உடலின் வெளிப்புற தோலின் நிறம் மாறும், தோல் அரிப்பு ஏற்படும்.

    மொத்தத்தில் மனித உடலுக்கு அத்தியாவசியத் தேவையான நோய் எதிர்ப்பு சக்தி முற்றிலும் குறைந்து போய் மற்ற நோய்கள் உடலைத் தாக்கும் நிலைக்கு ஆல்கஹால் ஆட்பட்டு விடும். மதுபானம் அருந்தும் பழக்கத்தை உடனடியாக நிறுத்த முடியவில்லை என்றால் டாக்டரிடம் சென்று அதற்கான ஆலோசனையைப் பெற்று படிப்படியாக மதுப்பழக்கத்தில் இருந்து விடுபடுவது நல்லது.

    பின் விளைவுகளுக்கு பயந்து அவசர அவசரமாக குடிப்பதை நிறுத்தினால் படபடப்பு, வேலையில் கவனம் செலுத்த முடியாமை, எரிந்து விழுவது போன்ற மனரீதியான பிரச்சனைகள் உங்களை வாட்டி எடுக்கும். இந்த எச்சரிக்கையை குடிமகன்கள் ஏற்றுக் கொண்டால் உடலுக்கும் நல்லது, குடும்பத்திற்கும் நல்லது.

    போன்- 9994932121

    • தேங்காயை அளவிற்கு அதிகமாக உண்டால் வாயில் நீர் சுரக்கும்.
    • ஒருவருடைய ஆரோக்கியமும், நோயும் அவன் உண்ணும் உணவையே சார்ந்து இருக்கின்றது.

    நஞ்சுப் பொருட்களைத் தவிர, நாம் அன்றாடம் உண்ணும் உணவுப் பொருட்களே சில வேளைகளில் நஞ்சாக மாறிவிடுவதுண்டு. இதனில் இருவகை உண்டு. ஒன்று, உணவின் அளவு அதிகமாதல், இரண்டாவது உணவில் சேரும் பொருட்களினால் நஞ்சாதல். இதனை அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதன் மூலம், சேரிடம் அறிந்து சேர் என்பதன் மூலம் அறியலாம். இதனைப் பற்றிய விபரங்கள் பின்வருமாறு:

    1. சக்திக்கு மீறிய உணவை அருந்தினால், உணவு செல்லும் வழி பெருத்து, மலம் அடைத்து, தன்னிலை கெட்டு, பெருமூச்சு விட்டு தலையை உருட்டும், வயிறு உப்பும், உடம்பு அனல் பட்டாற் போல் வியர்த்துத் துன்புறுத்தும்.

    இதற்கு முறிவு: கீழ் நோக்கிப் பேதிக்கு இஞ்சிக் குடிநீர் (அ) மாத்திரை கொடுத்தல் வேண்டும்.

    2. "உப்பில்லாப் பண்டம் குப்பையிலே" என்றபடி உப்பை அளவுடன் உணவில் சேர்த்து உபயோகிக்க நலமாம். சோற்றுடன் அதிக உப்புச்சேர்த்து அதிகம் அருந்தினால் உரிய மூச்சு அடைத்து, இதயம் குறுகி, மூச்சுத்திணறி, மலவாய் சுருங்கி, அடைத்து, மலம் விழ முடியாமல் துன்பங்களைத் தரும்.

    இதற்கு முறிவு: தயிரையாவது, புளித்த மோரையாவது உடனே கொடுக்கவும். .

    3. உடல் வலுவாக, சோற்றுடன் நல்லெண்ணெய் சேர்த்து சாப்பிடுவது வழக்கம். இது அதிகப்படியானால் பலம் வாய்ந்த உடம்பானாலும், கை, கால்களை இழுக்கும். உடம்பை இசிவுடன் முறுக்கி, நரம்பையும் விறைப் பாக்கிவிடும்.


    4. ஒரே வேளையில் நெய்யை அளவுக்கு மீறி உண்டவர்களுக்கு வயிற்று மந்தமும், செரியாமையும் உண்டாவதோடு, கல்லீரல் பாதிப்பும் உண்டாகும்.

    இதற்கு முறிவு: பசுவின் பால் குடித்தால், நெய்யின் நஞ்சு வேகம் தணியும்.

    5. வேர்க்கடலையை அதிகமாக உண்டால் வாந்தியும், தலைமயக்கமும் வாயில் நீர் சுரத்தலும் சிலருக்கு கழிச்சலும் உண்டாகும். அழல் அதிகமாக உண்டாவதால், நாவின் சுவை மாறும். நீர் வேட்கை உண்டாகும்.

    இதற்கு முறிவு: கரும்பு, வெல்லம் தின்றால் வேர்க்கடலையின் நஞ்சுவேகம் முறியும்.

    6. தேங்காயை அளவிற்கு அதிகமாக உண்டால் வாயில் நீர் சுரக்கும். நாவில் சுவை இருக்காது. வாந்தி, கழிச்சல், தலைமயக்கம், தண்ணீர் வேட்கை முதலியன உண்டாகும்.

    இதற்கு முறிவு: கரும்பு, வெல்லம் அல்லது பச்சரிசி இவைகளில் ஒன்றை அளவோடு உட்கொண்டால் தேங்காய் நஞ்சு முறியும்.

    7. கோழி முட்டையை அளவு கடந்து வேகவைத்தோ, அளவிற்கு அதிகமாகவோ உட்கொள்வதால் பசிமந்தமும், புளிஏப்பமும், செரியாமையும் உண்டாகும்.

    இதற்கு முறிவு: முள்ளங்கிக்கிழங்கை உட்கொண்டால் முட்டையினால் உண்டான நஞ்சு வேகம் தணியும்.


    8. வாழைப்பழத்தை அதிகமாக உண்டால் வயிறு மந்தப்பட்டு பொறுமும், பலமுறை வயிற்றை வலிக்கும். மலம் மிகவும் சூடாக வெளிப்படும்.

    இதற்கு முறிவு : தேயிலைக் குடிநீரை உண்டால் வாழைப்பழத்தினால் உண்டான நஞ்சு நீங்கும்.

    9. பலாப்பழம் அதிகமாக உட்கொண்டால் ஐயமும், மயக்கமும். வாய்கரித்தலும் உண்டாவதோடு வேறு பல பிணிகள் உண்டாவதற்கு காரணமாகவும் இருக்கும்.

    இதற்கு முறிவு: நஞ்சின் வன்மைத்தகுந்த அளவு நெய் அல்லது தேன் கொடுக்க வேண்டும்.

    10. நுங்கினை அதிகம் புசிப்பதால் வயிறு அடிக்கடிபோகும். வயிற்று வலி, வயிற்று உப்பிசம், பசியின்மை, மந்தப்படுதல் போன்றவைகள் உண்டாகும்.

    இதற்கு முறிவு: பெருங்காயத்தைப் பொரித்து நோய் வன்மைக்குத் தக்க அளவு கொடுத்தால் நுங்கு நஞ்சு நீங்கும்.

    நந்தினி

    நந்தினி


    11. மிளகாயை உண்டால் கண்களிலிருந்து நீர்வடியும், கண்சிவக்கும், குடல் தீனிப்பை- மார்பு - வாய் முதலியவை புண்படும், காரம் பட முடியாது. சீதக் கழிச்சலுண்டாகும். சாதாரணமாக மலம் போனாலும் கொதிப்பாக இருக்கும். வயிற்று நோய் உண்டாகும்.

    இதற்கு முறிவு: கொத்தமல்லியையும், நெய்யையும் அதிக அளவாகச் சேர்த்து உட்கொண்டால் மிளகாய் வேகம் தணியும்,

    12.தேன்,மீன்,கொழுப்பு, எண்ணெய், நீர் இவைகளில் இரண்டோ, மூன்றோ அல்லது அனைத்துமோ சம அளவில் சேர்த்தால் நஞ்சுத் தன்மை உண்டாகும்.

    13. பாலுடன், மீன், புளிப்புக்கனிகள், கொள்ளு, கம்பு, காட்டுப்பயிறு, கீரைகள் இவைகளுடன் ஒன்றை சேர்த்து உண்டால் நஞ்சுத் தன்மை உண்டாகும்.

    14. தயிருடன் கோழிக்கறி அல்லது மாமிசத்தை கலந்தால் நஞ்சுத் தன்மை உண்டாகும்.

    15.தயிருடன் வாழைப்பழத்தை சேர்த்தால் நஞ்சுத் தன்மை உண்டாகும்.

    16.முள்ளங்கியையும் உளுத்தம் பருப்பும் சேர்த்து உண்டால் நஞ்சாகும்.

    17. மணத்தக்காளியுடன், திப்பிலி, தேன், மிளகு, வெல்லம் இவைகளுடன் ஒன்றையோ அல்லது பலவற்றையோ சேர்த்தால் நஞ்சாகும்.

    18. மீன், முள்ளங்கி, கீரைகள், புசித்தவுடன் பால் அருந்தினால் நஞ்சு ஏற்படும்.

    19. கரும்புதின்றவுடன் நீர் அருந்தினால் நாக்கு புண்ணாகும்..

    20. பனம்பழத்தையும்,வாழைப்பழத்தையும் அடுத்தடுத்துப் புசித்தால் நஞ்சத்தன்மையை அடையும்.

    பொதுப்பரிகாரம்:

    உணவின் குற்றத்தால் உண்டாகும் செரியாமை, மந்தம் முதலிய வினைகளை ஒழிப்பதில் குளிர்ந்த நீரே நல்ல பலன் தரும்

    எவ்வித நஞ்சுக்கும் இரண்டு வெற்றிலை, ஐந்து மிளகு எடுத்து கஷாயமாக செய்து காலை, மாலை இரண்டு வேளையாக மூன்று நாள் குடித்து வந்தால் உணவினால் ஏற்பட்ட நஞ்சுகள் போகும். இது பொதுவான பரிகாரமாகும்.

    வள்ளுவர் கூறும் உணவு முறை:

    நம்முடைய உடல் அன்னமயத்தினால் (உணவினால்) ஆனது என்கிறது சித்தர் மருத்துவம்.

    ஒருவருடைய ஆரோக்கியமும், நோயும் அவன் உண்ணும் உணவையே சார்ந்து இருக்கின்றது.

    உணவில் ஏற்படும் தவறுகளினால் அஜீரணம் உண்டாகிறது. இந்த அஜீரணத்தினால் நஞ்சுத் தன்மை உருவாகி எல்லா அணுக்களையும் கெடுக்கிறது.

    தீபாவளி அன்று எண்ணெய் பலகாரங்கள் போன்றவற்றை சாப்பிட்டால் அதற்கு மருந்தாக தீபாவளி லேகியம் செய்து சாப்பிட்டு வந்தார்கள் நம் முன்னோர்கள்.

    சர்க்கரைநோய், கொழுப்பு மற்றும் பல நோய்கள் தவறான உணவு முறைகளாலேயே வருகிறது.

    இவற்றையெல்லாம் அறிந்த மாமருத்துவராகிய வள்ளுவர் உணவின் பெருமைகளையும், தவறான உணவினால் வரும் நோய்களையும் அழகாக 'மருந்து' என்ற அதிகாரத்தில்.

    ஒருவன் முன்பு உண்ட உணவு ஜீரணம் ஆகிவிட்டதா என்பதை நன்றாக அறிந்து பின்பு அடுத்த வேளை உணவு உட்கொண்டால் அவரின் உடலுக்கு மருந்து எதுவும் வேண்டாம் என்றும்,

    செரிமானம் ஆகும் உணவை மட்டும் பசி வந்தபின் உண்டு வந்தால் நோய் வருவதில்லை என்றும், உடலுக்கு ஒத்துக்கொள்ளும் உணவை மட்டுமே உண்டு வந்தால் நோய் வராது என்றும் திருவள்ளுவர் திருக்குறளில் மருந்து என்ற அதிகாரத்தில் குறிப்பிட்டுள்ளார்.

    அறுசுவை அதிக மானால் வரும் பாதிப்புகள்:

    1. இனிப்பு சுவை சார்ந்த உணவுப் பொருட்கள் அதிகம் எடுத்துக் கொள்வதால் கொழுப்பு, கபம் சார்ந்த நோய்கள் அதிகரிக்கும். உடல் எடை அதிகரிக்கும், பசி குறையும். சோம்பல், மெத்தனம் போன்றவை மனதளவில் அதிகரிக்கும்.

    2. புளிப்பு அதிகம் எடுத்துக் கொண்டால் உடல் தளர்ச்சி, பார்வை மங்கல், ரத்தசோகை, வீக்கம், கொப்புளம் போன்றவை ஏற்படும். மன அளவில் எரிச்சலையும், கடுப்பு தன்மையும், சிடுசிடுப்பையும் உண்டு பண்ணும் .

    3. உப்பு உணவில் அதிகம் சேர்த்து உண்டு வந்தால் தலை வழுக்கை, நரை, நாவறட்சி, தோல் நோய்கள் போன்றவற்றை உண்டாக்கும். அதிகமாக உப்பு எடுப்பவர்கள் உணர்ச்சிவசப்படுவார்களாகவும், கோபதாபங்கள் உடையவர்களாகவும், ரத்த கொதிப்பு உடையவர்களாகவும் காணப்படுகின்றன.

    4. கசப்பு சுவை உள்ள உணவுகள் அதிகம் சாப்பிட்டால் உடலில் வறட்சியும், சிந்திக்கும் ஆற்றலில் குறைபாடும், எண்ணங்கள் வேகமாக செலுத்த இயலாத தன்மையும் ஏற்படும்.

    5. காரம் நிறைய சாப்பிடுபவர்களுக்கு பலம் குறைவு, தோல் சுருக்கம் நடுக்கம், இடுப்பு மற்றும் முதுகு முதலிய இடங்களில் வலி, சுக்கிலம் குறைவு போன்றவை உண்டாகும்.

    6. துவர்ப்பு சுவை உள்ள உணவுகள் அதிகம் எடுத்துக் கொண்டால் வயிற்றுப் பொருமல், மலச்சிக்கல், சுக்கில குறைவு, உடல் இளைப்பு போன்றவற்றை உண்டாக்கும். மன அளவில் பொறாமை போன்றவற்றை ஏற்படுத்தும்.

    அறுசுவை உணவு பொருட்களையும் அளவோடு உண்டு நோயில்லாமல் மகிழ்ச்சியாக வாழ்வதற்கு கற்றுக் கொள்வோம்.

    ஆதாரநூல்கள்:

    1.நோயில்லாநெறி,2.நஞ்சுமுறிவுநூல்,

    3.திருக்குறள் 4.மருத்துவத்தனிப்பாடல்கள்

    போன்: 9500676684

    • சனிப்பிரதோஷம் சிவராத்திரிக்கு முன் வந்தால் சனி மகா பிரதோஷம் ஆகும்.
    • பிரதோஷ கால விரதம் தொடங்குவோர் ஆவணி, கார்த்திகை ஆகிய மாதங்களில் தொடங்குவது மகா உத்தமம்.

    "பிரதோஷம்" என்பது வடமொழிச் சொல்லாகும். "ப்ர" என்றால் விரிந்த, பெரிய என்றும், "தோஷம்" என்றால் பாவம், துன்பம் என்றும், "பிரதோஷம்" என்றால் விரிந்த பாவம், பெரிய துன்பம் என்றும், "பிரதோஷ காலம்" என்றால் விரிந்த பாவகாலம், பெரிய துன்பகாலம் என்றும் சொல்லப்படுகிறது.

    பிரதோஷ காலத்தில் சிவ வழிபாடு செய்தால் துன்பத் தைப்போக்கி இன்பம் பெறலாம். தோஷம் என்றால் "குற்றம்" என்றும், பிரதோஷம் என்றால் குற்றம் என்பதின் எதிர்ச்சொல்லாக "குற்றம் இல்லாதது" என்றும் கூறுவர். எனவே, குற்றமற்ற இக்காலத்தில் இறைவனாம் சிவனை வணங்கி வழிபாடு செய்தால் குற்றங்கள் நீங்கி இன்பம் பெறலாம் என்றும் சொல்லப்படுகிறது.

    அதுமட்டுமல்ல, பிரதோஷ காலம் என்பது ஆன்மாக்களின் முற்பிறப்பு குற்றங்கள் நீங்கி மனம் ஈஸ்வரனிடத்தில் ஒடுங்குவதற்கு உகந்த காலம் ஆகும். அதனால்தான் பெரியோர்கள் "பிரதோஷ காலம் என்றாலே துன்பங்களைப்போக்கி இன்பங்களை அளிக்கும் புனிதமான காலம்" என்று கூறுகிறார்கள்.

    சூரியன் மறைவதற்கு முன் உள்ள கடைசி மூன்றே முக்கால் நாழிகையும்+சூரியன் மறைந்த பின் உள்ள முதல் மூன்றே முக்கால் நாழிகையும் சேர்ந்த கூட்டு நேரமே பிரதோஷ காலத்தின் மொத்த நேரமாகும். ஒரு நாழிகை நேரம் என்பது 24 நிமிடம்.

    அதாவது, மாலை 04 மணி 30 நிமிடம் முதல் இரவு 07 மணி 30 நிமிடம் வரையுள்ள மூன்று மணி (ஏழு நாளிகை) நேரமும் பிரதோஷ காலமே. என்றாலும், பிரதோஷ கால வழிபாடு செய்வதற்கு மிகவும் சரியான நேரம் என்பது இவைகளின் மைய நேரமாகிய மாலை 05 மணி 15 நிமிடம் முதல் இரவு 06 மணி 45 நிமிடம் வரையுள்ள ஒன்னரை மணி (மூன்றே முக்கால் நாழிகை) நேரமே ஆகும். மூன்றே முக்கால் நாழிகை (ஒன்னரை மணி) நேரம் என்பது ஒரு முகூர்த்த கால அளவாகும்.

    இந்தச் சரியான பிரதோஷ கால நேரம் என்பது அன்றைய தினம் சூரிய உதயம் மற்றும் அஸ்தமனம் ஆகியவை பொருத்து சற்று மாறுபடலாம்.

    பிரதோஷங்கள் பல இருப்பினும் அவை அனைத்திலும் முக்கியத்துவம் வாய்ந்த பிரதோஷம் என்பது சனிப்பிரதோஷம் தான். இதற்கு பெரிய பிரதோஷம் என்றும் ஒரு பெயர் உண்டு.

    தேவர்களைக் காக்க ஈசன் ஆலகால நஞ்சை உண்ட நாள் சனிக்கிழமை அல்லவா? அத்துடன், தேவர்கள் தங்கள் தவறை உணர்ந்து ஈசனிடம் சரணம் அடைந்த போது சந்தியா நிருத்தம் என்னும் அற்புத நடனத்தை ஈசன் ஆடிய நாள் திரயோதசி திதி கூடிய மாலை நேரம் அல்லவா? ஆக, சனிக்கிழமையும், திரயோதசி திதி கூடிய நாளில் வரும் பிரதோஷம் சனிப்பிரதோஷம் ஆகும். அப்போது நாம் செய்கின்ற வழிபாடே சனிப்பிரதோஷ கால வழிபாடு ஆகும். இந்த சனிப்பிரதோஷம் சிவராத்திரிக்கு முன் வந்தால் சனி மகா பிரதோஷம் ஆகும்.

    சிவ பெருமானை நினைத்து தியானம் செய்வதற்கு மிக உகந்த நேரம் பிரதோஷ நேரம் தான்.

    பிரதோஷ நேரத்தில் உலகம் ஒடுங்குகிறது. எனவே ஈசுவரனிடம் நாம் ஒடுங்க அதுவே சரியான நேரம்.

    பிரதோஷ நேரத்தில் ஈசுவரன் எல்லாவற்றையும் தன்னுள் அடக்கிக்கொள்வதாக ஐதீகம்.

    பிரதோஷ நேரத்தில் சிவன் ஆடுகின்ற ஆனந்த நடனத்தை தேவர்களும், முனிவர்களும் கண்டுகளிப்பதாக புராணங்களில் கூறப்பட்டுள்ளது.

    பிரதோஷ நேரத்தில் சிவாலயத்தில் இருக்க இயலா விட்டாலும், ஈசுவரனை மனதில் நினைத்து கொண்டால் நினைத்தது நடக்கும்.

    இரவும், பகலும் சந்திக்கும் நேரத்துக்கு உஷத்காலம் என்று பெயர். இந்த வேளையின் அதிதேவதை சூரியனின் மனைவி உஷாதேவி. அதே பேபால பகலும், இரவும் சந்திக்கும் நேரம் பிரத்யஷத் காலம். இதன் அதிதேவதை சூரியனின் மற்றொரு தேவியாகிய பிரத்யுஷா. அவள் பெயரால் அந்த நேரம் பிரத்யுஷத் காலம் என அழைக்கப்பட்டது. நாளடைவில் அது பேச்சு வழக்கில் பிரதோஷ காலம் ஆகிவிட்டது.

    பிரதோஷ வழிபாட்டை தொடர்ந்து செய்து வந்தால் மறுமையிலும் பலன்கள் கிடைக்கும்.

    சனிப்பிரதோஷம் தினத்தன்று விரதம் தொடங்கி, பிரதோஷம் தோறும் விரதம் இருந்து வந்தால், ஈசுவரனிடம் நீங்கள் வைக்கும் கோரிக்கைகள் எல்லாம் நிறைவேறும்.

    பிரதோஷ நாட்களில் தவறாது விரதம் இருந்து வழி பட்டால் கடன், வறுமை, நோய், பயம், மரண வேதனை நீங்கும் என்று புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்து.

    பச்சரிசி, பயித்தம் பருப்பு ஆகியவற்றை தண்ணீரில் ஊற வைத்து பிறகு அதை வடிகட்டி வெல்லம், தேங்காய்ப்பூ சேர்த்து காப்பரிசி தயாரிக்க வேண்டும். பிரதோஷ காலத்தில் இந்த காப்பரிசி நிவேதனத்தை நந்திக்கு சமர்பிப்பது மிகவும் சிறப்பானது.

    பிரதோஷ கால விரதம் தொடங்குவோர் ஆவணி, கார்த்திகை ஆகிய மாதங்களில் தொடங்குவது மகா உத்தமம்.

    பிரதோஷ நேரத்தில் பெருமாள் கயிலாய மலையில் இருப்பதால், பிரதோஷ நேரத்தில் பெருமாள் கோவில்களில் திரை பேபாட்டு மூடி இருப்பார்கள்.

    ஒவ்வொரு பிரதோஷத்திலும் வில்வஇலை அலங்காரம் செய்து பூஜித்தால் கூடுதல் பலன்கள் கிடைக்கும்.

    நந்தி தேவருக்கு அபிஷேகம் செய்யும் போது எண்ணை, பால், தயிர், சந்தனம், இளநீர், பன்னீர் போன்றவை தரலாம். அபிஷேகம் முடிந்த பின் அருகம்புல் பூ சாற்றிய பின் வில்வத்தால் அர்ச்சனை செய்வது நமக்கு நன்மை தரும்.

    உற்சவமூர்த்திக்கு பூஜையின் போது பால், இளநீர், தயிர், பஞ்சாமிர்தம், சந்தனம் இவற்றினைத் தரலாம். உற்சவ மூர்த்திக்கான பூஜையின் போது நமது அணிகலன்களை (நகைகளை) உற்சவமூர்த்திக்கு அணிவித்து தீபாராதனை முடிந்த பின்னர் நகையை அணிந்து கொண்டால் நன்மை பல நமக்கு கிடைக்கும்.

    நந்திதேவரது தீபாராதனைக்குப் பிறகு மூலவருக்கு நடக்கும் தீபாராதனையை நந்தி தேவரது இரண்டு கொம்புகளுக்கு இடையே பார்த்தால் சகல தோஷமும், பாவமும் நீங்கும்.

    மூலவரது தீபாராதனை முடிந்த பின்பு நந்திகேஸ்வரரது காதில் பிறர் கேட்காதவாறு நம்முடைய குறைகளையம், கோரிக்கைகளையும் அவரிடம் கூறுதல் வேண்டும். இவ்வாறு பன்னிரெண்டு பிரதோஷ காலங்கள் வரை கூறி வந்தால் நீங்கள் நினைத்தது நிச்சயம் நடக்கும்.

    நந்திகேஸ்வரருக்கு நைவேத்தியமாக பச்சரிசியுடன் வெல்லம் கலந்து வைத்து வழிபாட்டிற்குப் பிறகு எல்லாருக்கும் கொடுக்க வேண்டும். இவ்வாறு கொடுப்பதாலோ அல்லது கொடுப்பதை வாங்கி சாப்பிடுவதாலோ நமது தோஷங்கள் தொலையும்.

    நந்திதேவர் மற்றும் உற்சவர், மூலவர் ஆகியோருக்கு தீபாராதனை செய்யும்போது இறைவனின் திருநாமங்களையும், சிவபுராணப் பாடல்களையும் பாடுதல் வேண்டும். இவ்வாறு பக்தியுடன் பாடுவதால் தோஷம், பாவம், கஷ்டம் நீங்கி நன்மை பல பெபறலாம்.

    முக்கியமாக பிரதோஷ நாளன்று உபவாசம் இருந்து கடவுளை வழிபட வேண்டும். தரிசனம் முடிந்த பின்னர் பால், பழம் அருந்தி வெறும் தரையில் படுத்து உறங்கினால் பிரதோஷத்திற்கான முழு பலன் கிட்டும்.

    பிரதோஷ காலத்தில் சிவாலயம் சென்று, பிரதோஷ கால வழிபாட்டில் கலந்து கொண்டு முறையாகச் சிவனை வழிபாடு செய்தால் பதினைந்து நாட்கள் சிவாலயம் சென்று சிவனை வழிபட்ட பலன் கிடைக்கும். தொடர்ந்து ஐந்து முறை பிரதோஷ கால வழிபாட்டில் சிவனை வணங்கி வழிபாடு செய்தால் ஓர் ஆண்டுக்காலம் சிவாலயம் சென்று சிவனை வழிபட்ட பலன் கிடைக்கும்.

    தொடர்ந்து பன்னிரண்டு முறை பிரதோஷ கால வழிபாட்டில் கலந்து கொண்டு முறையாக சிவனைத் தரிசித்து வணங்கி வழிபாடு செய்தால் ஒரு கும்பாபிஷேகம் கண்ட பலன் கிடைக்கும். அத்துடன் மனம் வலிமை பெபறும் சந்தோஷம் கூடும். தொடர்ந்த பன்னிரண்டு ஆண்டு காலம் தவறாமல் பிரதோஷம் கால வழிபாட்டில் கலந்து கொண்டு முறயைாகச் சிவனைத் தரிசித்து வணங்கி வழிபாடு செய்தால் பாவங்கள் தொலைந்து, துன்பங்கள் அகன்று, கடன்கள் தீர்ந்து, தீராத நோய்கள் விலகும் அதோடு, செல்வங்கள் பெருகும், மக்கட்ேபறு கிட்டும். எல்லாவகையான நன்மைகளும் ஏற்படும் இன்பமான வாழ்வு அமையும். அத்துடன் 'முக்தி' என்கின்ற மீண்டும் இவ்வுலகில் பிறவாத நிலையாகிய பேரின்பப் பெபருவாழ்வு அமையும்.

    ராமபிரானின் மகன்களான குசன் லவன் ஆகியோர் தொடர்ந்து பன்னிரண்டு ஆண்டுகள் பிரதோஷ வழிபாடு செய்து 'முக்தி' பெபற்றனர் என்கிறது புராணம்

    திரயோதசி திதியுடன் 'திரு ஆதிரை' நட்சத்திரம் கூடிய நாளில் வரும் பிரதோஷத்திற்கு 'பாசாங்குலி' என்று பெபயர். சிவபெபருமானுக்கு திங்கட்கிழமையும், திருவாதிரை நட்சத்திரமும் உகந்ததாகும். இதனால் சிவபெபருமானுக்கு 'ஆதிரையான்' என்ற ஒரு பெபயரும் உண்டு.

    மது, மங்கை, கொள்ளை, பெபாய் கூறுதல், இவற்றினால் பல்வேறான பாவங்கள், பாதகம் ஏற்படும். இந்த பாதகத்தை துடைத்து நன்னெறி அடைய சனிக்கிழமைகளில் வரும் பிரதோஷ தினத்தன்று முழு உபவாசம் இருந்து பிரதோஷ நேரத்தில் வழிபடுதல் வேண்டும். சாதாரண பிரதோஷ வேளைகளில் சிவாலயத்தில் வழிபாடுகள் செய்தால் ஒரு வருடம் ஆலயம் சென்று வழிபாடு செய்த பலனும் சனிப்பிரதோஷத்தன்று சிவாலயத்தில் இறைவழிபாடு செய்தால் ஐந்து வருடம் ஆலய வழிபாடு செய்த பலனும் கிடைக்கும். பதினொன்று பிரதோஷம் பார்ப்பது ஒரு கும்பாபிஷேகம் கண்ட பலன் உண்டு. 120 பிரதோஷம் பார்ப்பவர்களுக்கு மறுபிறவி கிடையாது.

    ×