என் மலர்
சிறப்புக் கட்டுரைகள்
- கபிலர் கூட தன் பாடலில் வரகுப் பயிரைக் குறித்துப் பாடியுள்ளார்.
- சிறிய அளவிலான தானியம் தானே வரகு.
சிறுதானியங்களிலேயே மிகவும் சன்னமானது வரகு. ஆனால் அவற்றில் மிகவும் வீரியம் மிக்கதும் வரகுதான். நெற்பயிரைப் போன்று குத்தாக அடிப்பாகம் கிளைத்துத் தாள்கள் வளரும். அதிகபட்சமாக ஒன்றரை அடி உயரமே வளரும். குருத்தில் இருந்து தானியக் கதிர்கள் எழுந்து மேல்நோக்கி நிற்கும். முன் மழைப்பொழிவு பிற பயிர்கள் வைக்கப் போதியளவு கிடைக்கவில்லை என்றால் பின் பட்டமாக வரகினை விதைப்பார்கள். இதனை விதைக்க விசேசமான மண் எதுவும் தேவையில்லை. களி மண், மணற்பாங்கு, சரளைமண் என எந்த நிலத்திலும் வேர் பற்றி வளரும் தன்மையே இதன் தனித்துவம் ஆகும். இனி மழைவருமோ, வராதோ என்ற காலத்தில் கூட வறண்ட நிலத்தில் விதைத்து விட்டுப் போனாலும் மழை வரும் வரைப் பொறுமையாக நிலத்தில் உறங்கிக் கொண்டிருக்கும் வரகு ஒருமழை பொழிந்ததும் முளை விட்டு வளரும். மயிற்தோகை விரித்தது போல விசிறி வடிவத்தில் தூறில் இருந்தே கிளைத்து வளரும் இப்பயிரைப் பார்க்கவே அழகு. கபிலர் கூட தன் பாடலில் வரகுப் பயிரைக் குறித்துப் பாடியுள்ளார்.
பிற சிறுதானியங்களைக் காட்டிலும் குறைவான நீரில் நன்றாக விளையும் வரகு அரிசிக்கு மேலாக ஏழடுக்கு உமியைக் கொண்டுள்ளது. எனவே குருவி, புறா போன்ற எந்தப் பறவை இனங்களும் கதிராக இருக்கும் பொழுது கொத்தித் தின்று விட்டுப் போகமுடியாது. வரகின் உமியைப் பிரித்தெடுப்பதே அபாரமான கலை. திருகையில் கெட்டியான துணியை ஒட்டி நன்றாகக் காய வைத்துக் கொள்வார்கள். அச்சுடன் கூடிய புனல் போன்ற பகுதியில் வரகு தானியத்தை குத்துக் குத்தாக எடுத்து ஊற்றித் திருகத்திருக வரகு அரிசியும் பொட்டும் விளிம்பில் சரிந்து விழும். உமி ஏழடுக்கில் இருந்தாலும் மிக எளிதாக கழன்று விடும். இந்த உமியை சாணியுடன் பிசைந்து வறட்டி தட்டி எடுத்து வைத்துக் கொண்டால் விறகு சேகரிக்க முடியாத அடை மழைக்காலங்களில் அடுப்பெரிக்கப் பயன்படும்.
வரகு தானியம் நீண்ட நாட்களுக்குக் கெடாமல் இருப்பதால் உமியுடன் நீண்ட நாட்களுக்குச் சேமித்து வைப்பார்கள். பிற தானியங்கள் தீர்ந்த பின்னரே வரகினை எடுத்து திரித்து அரிசியெடுத்துச் சமைப்பார்கள். நெல் விளைவிக்கும் நாடுகள் கிட்டத்தட்ட அனைத்திலும் வரகும் விளைவிக்கப்படும். ஆனால் பெரிய பாசன வசதியற்ற வறண்ட பகுதிகளில் தான் இதனை விளைவிப்பார்கள். ஆப்பிரிக்கா, ஆசியா, தென் அமெரிக்க நாடுகளில் பரவலாக விளையும் வரகு அரிசிக்கு நிகரான பயன்பாட்டைக் கொண்டுள்ளது. ஆயிரம் வருடங்களுக்குக் கூட தானியத்தைச் சேமித்து வைத்திருந்தாலும் இதன் முளைப்புத் திறன் குறையாது. காரணம் இதன் ஏழடுக்கு உமியும், நீரினை ஈர்க்காத பண்பும் ஆகும்.
இலங்கை, ஆப்பிரிக்கா, இந்தியாவில் மத்தியபிரதேசம், ராஜஸ்தான் போன்ற பகுதிகளில் பயிர் செய்யப்படும் வரகு தமிழகத்தில் விளைவிக்கும் பகுதி குறைந்து கொண்டே வருகிறது. காரணம் அதிக உழைப்பைக் கோருவது வணிகப் பலன்கள் பெரிய அளவு இல்லை என்பதோடு மரபுப் பெருமை மிகுந்த தமிழர்கள் நாம் இன்று நம்மை நவீனப்படுத்துவதில் பெருமையடைகிறோம்.
வரகு தானியம் உடல் வாகு இளக்கமான சதைப்பிடிப்பைக் கொண்டிருக்கும். வரகு விளைவிக்க நம்மிடம் எவ்வளவு உழைப்பை வாங்குகிறதோ அந்தளவிற்கு உழைக்கும் திறனையும் தரக்கூடியது. எவ்வளவுக்கு எவ்வளவு நீரினை எதிர்பார்க்காமல் சூரிய ஒளியில் வளர்கிறதோ அந்தளவிற்கு நம்முடலில் நீர்த்தன்மையை நீக்கவும் வல்லது. அதனால் தான் நீரிழிவு நோயில் துன்புறுவோர் வரகு உண்பது மிகவும் பயன்தரக்கூடியது.

போப்பு
உடல் பருத்தவர்கள், எலும்பு மூட்டுப் பகுதியில் நீர்த்தேங்கி வீக்கமுற்றவர்கள் வரகினை உணவாக எடுத்துக் கொள்வது நல்லது.
உட்கார்ந்திருப்பவர்களை எந்திரிங்க என்றால் சந்திரமுகியில் நாசர் கேட்பாரே அதுபோல செய்யவே முடியாத செயலைச் செய்யச் சொன்னது போல என்னாது எந்திரிக்கனுமா? என்று பயந்துபோய் உரத்த குரலில் கேட்பார்கள். நிற்பவர்களை உட்காரச் சொன்னால் என்னது உட்காரனுமா? என்று பெரும் பாதகச் செயல் போல திணறுவார்கள். காரணம் மூட்டில் நீர் தேங்கியுள்ள நிலையில் ஒவ்வொரு அசைவுக்கும் அந்த நீர் தளும்பித் தளும்பி அதன் இருப்பை அவர்களுக்கு உணர்த்திக் கொண்டே இருக்கும்.
நீரிழிவின் போது என்ன நடக்கிறது. குறைந்தபட்ச உழைப்பைக் கூட செலுத்தாமல் உடலில் நீண்ட காலமாகச் சேமித்து வைத்த சதை, சதையணுவில், மூட்டுகளில் சேமிக்கப்பட்ட நீர் இனியும் உள்ளே தேங்கியிருந்தால் விஷத் தன்மையை அடைந்து விடும். நீண்ட காலமாகப் பயன்படுத்தாத நீர் நச்சேறி விடுவதைப் போல நிலத்திற்கு அடியில் தேங்கியிருக்கும் சாக்கடைக் குழாயின் மூடியைத் திறந்தால் ஆளையே கொல்லும் விஷக்காற்றாக மாறும் அளவிற்கு தேங்கிய நீர் நச்சுத் தன்மையை அடைந்து விடும்.
இந்நீர் உடலில் இருந்தால் ஆபத்து என்று நம்முடைய உயிராற்றல் அதனை நீக்க முயல்கிறது. சற்றே அடர்த்தி கூடிய வகையில் அடிக்கடி சிறுநீராக வெளியேற்றுகிறது. அவ்வாறு வெளியேறும் பொழுது நா வறட்சி, உடல் சோர்வு போன்றவை ஏற்படுவது இயல்பு. இந்த நிலையில் நாம் செய்ய வேண்டியதெல்லாம் வெளியேறும் நீர்ச்சத்தை ஈடுசெய்யும் வகையிலான நீர்ச்சத்தும், நார்ச்சத்தும் கூடிய உணவு. வெளியேறும் நீரை சிறுநீராக மட்டுமே வெளியேற்றுவதற்குப் பதிலாக முடிந்தளவு வியர்வையாக வெளியேற்றும் வகையிலான உடலுழைப்பு போன்றவற்றைச் செய்தால் உடலைப் பாதுகாக்கலாம்.
மாறாக வெளியே போகும் நீரை உள்ளே நிறுத்தி வைக்கும் வகையிலான மருந்துகளை எடுக்கத் தொடங்கினால் கெட்ட நீர் உள்ளேயே தங்கி கால்பாத வீக்கம் தொடங்கி முட்டிக்கால் வரை வீக்கம் கூடிக் கொண்டே போகும். அடுத்து கால் விரலில் புண்... இனி அடுத்தடுத்த கட்டங்களை நாம் பேசவேண்டியதில்லை.
ஆக நாம் உடலில் நீர்ச்சத்தை நிறுத்தி வைக்காத உணவு வகைகளை நோய் நம் உடலில் உருவாவதற்கு முன்பே எச்சரிக்கையுடன் எடுக்கப் பழகிக் கொண்டால் பிற்காலத்தில் வயதானால் நோய்வரத்தான் செய்யும் என்ற சமாதானத் தத்துவத்தைப் பேசிக்கொண்டு முட்டியை அழுத்திக் கொண்டிருக்க வேண்டியதில்லை.
வரகு நல்ல உணவு தான்... இந்தக் கால வாழ்க்கை முறையில் நமக்குன்னு ஒருஉலை யார் வைச்சுக் கொடுப்பாங்க என்று சலித்துக் கொள்கிறோம். உண்மையில் வரகு சமைப்பதைப் போல எளிமையான சமையல் முறை ஏதும் இல்லை. அரிசியில் என்னென்ன சமைக்கிறோமோ அத்தனையும் வரகிலும் சமைக்கலாம்.
அடுப்பில் உலையேற்றி 100 கிராம் உடைத்த தோலுடன் கூடிய பாசிப்பருப்பைப் போட்டு ஒரு கொதி வரும் நேரத்தில் வரகரிசியை அலசி வைத்துக் கொண்டு வேகும் பாசிப்பருப்புடன் போட்டால் பருப்பும், வரகரிசியும் சம்பந்திகள் போல கலகலப்பாக உரையாடி பேசிமுடித்து ஒருமுடிவை எட்டுகிற நேரத்தில் சுவை மிகு வரகுப் பொங்கல் ரெடி. நல்ல மணமாகவும், நல்ல நிறமாகவும் இருக்கும். வழக்கமான தாளிப்பு ஒன்றைப் போட்டு நெய், சீரக மணத்தை ஏற்றி பொங்கலுடன் கிளறி விட்டால் போதும். சிறுதானியம் என்றால் முகம் சுளிப்போரிடம் எதுவும் சொல்லாமல் எடுத்து வைத்து விட்டால் வழக்கத்தைக் காட்டிலும் கூடுதலாக 2 கரண்டி கேட்டுச் சாப்பிடுவார்கள்.
சத்தான உணவு என்பது நாவினை கஷ்டப்படுத்தி உள்ளே செலுத்த வேண்டிய உணவு என்ற ஒரு மூட நம்பிக்கை இங்கே உலவிக் கொண்டுள்ளது. எவ்வளவு நல்ல உணவாக இருந்தாலும் அது நாவிற்கு ஏற்ற சுவையான முறையில் சமைத்து உண்பதே சரி. உணவே மருந்து என்ற பெயரில் உணவை மருந்துத் தன்மையில் சமைக்கிறார்கள் சிலர். உணவைப் பொருத்தமான முறையில் எடுத்தால் மருந்து தேவையில்லை என்பதற்காகச் சொல்லப்பட்டது தானே தவிர, உணவை மருந்துபோல கடினப்பட்டு விழுங்கி வைப்பதற்காகச் சொல்லப்பட்டது அல்ல. உணவை மருந்துபோல கச்சிதமான அளவில் எடுப்பதற்காகச் சொல்லப்படுவது அது.
நாம் அனைத்து உணவுகளையும் அதன் சத்துக்கள் கெடாத வகையில் சுவைக் கூட்டும் வண்ணம் சமைத்தல் வேண்டும். நாம் கூட்டுகிற சுவைப் பொருட்கள் உணவின் மூலப்பண்பைச் சிதைத்து விடக்கூடாது. நல்ல எடுத்துக்காட்டு நாம் இறைச்சி சமைப்பது. இறைச்சியின் கவிச்சி வாசத்தைப் போக்குகிறேன் என்று மசாலாப் பொருட்களையும், காரத்தையும், எண்ணையையும் கொட்டி அதன் உயிர்ப்பையே சிதைத்து விடுகிறோம். ரத்தக்கவிச்சியின் பச்சை வாசம் தான் நீக்கப்பட வேண்டுமே தவிர இறைச்சியின் ஆதாரச் சுவை கெடக்கூடாது.
அதுபோலவே சமைத்த பிறகும் அதன் முதன்மைப்பண்பு கெடாதவகையில் இருக்க வேண்டும். நம்முடைய கிராமங்களில் ஒரு பழமொழி உண்டு. 'குளிப்பாட்டிக் குளிப்பாட்டி குழந்தையைக் கரைத்த கதையாக' என்பார்கள். அந்த விதமாகத் தான் தற்காலச் சமையல் முறை மாறிக்கொண்டுள்ளது.
நெல் அரிசியை எப்படியெல்லாம் சமைக்கிறோமோ அந்த வகைகள் அத்தனையிலும் வரகினைச் சமைக்கலாம்.
ஆனால் வரகரிசியை வடிப்பது சற்றே கடினம். எனவே ஒரு பங்கு வரகிற்கு இரண்டு பங்கு தண்ணீர் வைத்து உலைகொதித்ததும் அரிசியைப் போட்டு பொங்கி வந்ததும், தணலைக் குறைத்து வைத்தால் 3-4 நிமிடங்களில் வெந்து விடும். அப்படியே நீரும் வற்றி விடும். மல்லிகையைப் போல மலர்ந்த சோற்றை எடுத்து பெரிய பாத்திரத்தில் போட்டு பரத்தி ஆற வைத்தால் உதிரியாக வரும். குழம்பு ஊற்றியும் சாப்பிடலாம். கலந்த சாதமும் கிளறலாம்.
வரகினை குழந்தைகளுக்குப் பழக்குவது என்றால் மிகவும் எளிது. இனிப்புப் பொங்கல், பாயாசம், பணியாரம் என்று துவங்கினால் போதும். அடுத்த முறை அரிசி மாவில் செய்த பணியாரத்தை குழந்தைகள் விரும்ப மாட்டார்கள். வரகு மாவில் அதிரசம் கூட செய்யலாம். இட்லி, தோசை என அரிசி உணவுகள் என்னென்ன உண்டோ அத்தனைக்கும் பொருத்தமானது வரகு. கூடவே வரகு உப்புமா கூட சட்டென்று அவசரத்திற்குச் சமைக்கலாம். ரவைக்குப் பதிலாக தாளிப்புக் கொதியில் வரகினைப் போட வேண்டியது தான். ரவை அளவிற்கு மிகவும் சிறிய அளவிலான தானியம் தானே வரகு. இதன் வடிவம் தான் சிறியது. ஆனால் ஆற்றல் சூரியத் துளியைப் போல வீரியம் மிக்கது.
சுவைப்போம் தொடர்ந்து.
செல்- 96293 45938
- பருவ வயதில் பெண்களுக்கு ஏற்படும் மனநிலை உணர்வு என்பது பொதுவானது.
- பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு எதிர்காலத்தில் என்ன செய்ய வேண்டும் என்றே தெரியாது.
பருவ வயதை தொடும் பெண் குழந்தைகள் உடல் ரீதியாக ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களால் பல்வேறு பிரச்சினைகளை சந்திக்கிறார்கள். அந்த வயதில் சில பெண்கள் தடம்மாறி செல்வதால் அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகிறது. எனவே அவர்களை நல்ல வழிக்கு கொண்டு வருவது பெற்றோர் களின் பொறுப்பாகும்.
தவறு என்று தெரிந்தும் தவிர்க்க தெரியவில்லை:
தங்கள் பெண் குழந்தைகளை நல்வழிப்படுத்துவது தொடர்பாக மருத்துவர்களிடம் கூட பெற்றோர்கள் கலந்தாலோசனை செய்யலாம். அதன் மூலம் அவர்களுக்கு நீங்கள் சிறந்த வழிமுறைகளை கூறலாம். இது தொடர்பாக கவுன்சிலிங் அளிப்பதற்காகவும் மருத்துவர்கள் சிலர் உள்ளனர். அவர்கள் உங்களுக்கு அதற்கான வழிமுறைகளை சொல்வார்கள். இதன் மூலம் கல்வி பெறாத பெற்றோர்களும் தங்கள் குழந்தைகள் பருவ வயதை பக்குவமாக கடந்து செல்வதற்கு உதவ முதல் படியை எடுத்து வையுங்கள்.
பருவ வயதில் ஆண்கள் மீது ஈர்ப்பு ஏற்படுவது தொடர்பாக, அந்த வயதில் உள்ள சில பெண் குழந்தைகள் கூட என்னிடம் ஆலோசனை கேட்டு இருக்கிறார்கள். ஏனென்றால் பல நேரங்களில் அவர்களுக்கு இது தவறு என்று தெரியும். ஆனாலும் அவர்களுக்கு அதில் ஒருவித ஆர்வம் ஏற்படும். அதை எப்படி கட்டுப்படுத்துவது என்று என்னிடம் பல குழந்தைகள் கேட்டுள்ளனர்.
அதாவது அது தவறு என்று தெரிகிறது, ஆனால் அதை எப்படி தவிர்ப்பது என்று தெரியவில்லை என்பார்கள். இந்த காலகட்டத்தில் இதை தவிர்ப்பதற்கு ஒவ்வொரு தாய்மார்கள், வீட்டில் இருக்கும் பெரியவர்கள், ஆசிரியர்கள் ஆகியோர் பருவ வயது குழந்தைகளுக்கு அறிவுரை சொன்னால் மட்டும் போதாது. அவர்களுக்கான வாழ்க்கை முறைகளில் சில விஷயங்களை, அவர்களின் நடைமுறையை பார்த்து அதற்கு ஏற்ப வரையறுக்க வேண்டும்.
இதுபோன்ற சூழ்நிலையில் அவர்களுக்கு பெரிய அளவில் மனரீதியான குழப்பம் வந்துவிடும். இது தப்பு என்று அவர்களுக்கு தெரியும். அதாவது 15, 16 வயதில் ஆண்கள் மீது வரும் ஈர்ப்பு நல்லது இல்லை என்று தெரியும், ஆனால் அவர்களுக்கு அதைத்தான் செய்ய வேண்டும் என்று தோன்றும்.
கல்வி கற்கும் குழந்தைகளுக்கு தெளிவான சிந்தனை:
இதுபோன்ற குழந்தைகள் இதில் இருந்து கடந்து வருவதற்கு பல வழிமுறைகள் உண்டு. இவர்களை வழிமுறைப்படுத்துவதற்கு முக்கிய மான சில விஷயங்கள் உள்ளன. அவர்களின் வாழ்க்கையில் இந்த காலகட்டத்தில் எது முக்கியமான தேவை என்பதை பெற்றோர்கள், ஆசிரியர்கள் ஆகியோர் திரும்பத் திரும்ப அவர்களுக்கு உணர்த்திக்கொண்டே இருக்க வேண்டும். அதேபோல் குழந்தைகளும் தங்களின் எதிர்கால இலக்கு என்ன என்பதை கண்டிப்பாக தெளிவாக தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.
பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு எதிர்காலத்தில் என்ன செய்ய வேண்டும் என்றே தெரியாது. அந்த மாதிரியான பெண் குழந்தைகள் பருவம் அடைந்து வீட்டில் இருக்கும் போது தேவையில்லாத சிந்தனைகள், சமூக வலைதளங்கள் பார்த்து வருகிற எண்ணங்கள் ஆகியவை அவர்களை தவறான பாதைக்கு கொண்டு சென்று விடும். ஆனால் கல்வியை கொடுக்கும்போது இது போன்ற குழந்தை களுக்கு இதைப்பற்றி ஒரு தெளிவான சிந்தனை வரும்.
எனவே அவர்களுக்கு படிப்பதற்காக நல்ல புத்தகங்களை கொடுக்கலாம். நல்ல நிலையில் அதிகாரத்தில் உள்ள நிறைய பெண்களின் வரலாற்று புத்தகங்களை கொடுக்கலாம். அதைப்பற்றி ஆர்வமூட்டும் கதைகளை அவர்களுக்கு சொல்லலாம். இவையெல்லாம் மிகவும் எளிமையான முறைகள் ஆகும். பருவ வயது காலகட்டத்தில் ஒரு பெண் வாழ்க்கையை எப்படி நல்ல முறையில் கடந்து வந்தார், எப்படி ஒரு பெண் இந்த காலகட்டத்தில் தவறான வழியில் சென்று சிக்கலை சந்தித்தார் என்பதை எடுத்து சொல்லலாம்.

டாக்டர் ஜெயராணி காமராஜ், குழந்தையின்மை சிகிச்சை நிபுணர், செல்: 72999 74701
உதாரணங்களுடன் கூடிய நிஜ வாழ்க்கை கதைகள்:
உலக சுகாதார நிறுவனம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபை ஆகியவற்றின் இணைய தளங்களில் பெண்களின் முன்னேற்றம் பற்றி நல்ல பதிவுகள் பல உள்ளன. அதை பதிவிறக்கம் செய்து பார்த்தால் அவர்களுக்கு பல விஷயங்கள் புரியும். பருவ வயது பெண் ஒருவர் இந்த மாதிரியான ஒரு ஈர்ப்பு, காதல் விவகாரம் என்று வரும்போது, எப்படி படிப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து அதை கடந்து சென்றார், கல்வியில் சிறந்து விளங்கி நல்லதொரு வாழ்க்கையை எப்படி தேர்ந்தெடுத்தார், வாழ்க்கையில் எப்படி முன்னேறினார் என்று சாதித்த பெண்களின் நிஜ கதைகள் இருக்கும்.
அதேபோல் சாதித்த பெண்ணுடன் படித்த இன்னொரு பெண், பருவ வயதில் ஒரு தவறான உறவில் விழுந்து, காதல் விவகாரத்தில் சிக்கி, இளம் வயதில் திருமணம் செய்து, குழந்தை பெற்று, வாழ்க்கையில் பிரச்சினைகள் ஏற்பட்டு, உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும், சமுதாய ரீதியாகவும் பலவித இழப்புகளை சந்தித்து, வாழ்க்கையில் முக்கியமான எதிர்காலத்தை இழந்து, எப்படி மோசமான நிலைக்கு சென்றார் என்கிற உண்மையான சம்பவங்களும் கதைகளாக இருக்கும். இந்த கதைகள் பருவ வயது பெண்களுக்கு விழிப் புணர்வு ஏற்படுத்தும் வகையில் பலவிதமான உதாரணங்களுடன் கூறப்பட்டு இருக்கும்.இதை எடுத்து உங்கள் குழந்தைகளுக்கு படிக்க கொடுக்கலாம்.
அவர்களுக்கு நீங்கள் அறிவுரை சொல்வதை விட இந்த மாதிரியான விளக்கங்களை கொடுக்கலாம். இதுபோன்ற கதைகளை பருவ வயது குழந்தைகளுக்கு ஆசிரியர்கள், நண்பர்கள், குடும்பத்தில் உள்ள மூத்த உறுப்பினர்கள் எடுத்து படிக்க கொடுக்கலாம். பெற்றோர்களுக்கு இதுபற்றி தெரியவில்லை என்றால், தங்களுக்கு நன்கு தெரிந்தவர்கள் மூலமாக இந்த வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்கலாம். இது பெற்றோர்களின் முக்கியமான கடமை.
இவற்றை கொடுக்கும்போது அந்த பெண் குழந்தைகளுக்கு இதில் இருந்து எப்படி மீண்டு வருவது என்பதற்கான மன மாற்றம் கிடைக்கும். இந்த காலகட்டத்தில் படிப்பு என்பது, தனது வாழ்க்கையின் லட்சி யத்தை அடைவதற்கு மிகவும் முக்கியமானது என்பதை அவர்களுக்கு உணர வைக்கும்.
இந்த காலகட்டத்தில் நாம் படிப்பில் கவனம் செலுத்தாமல் திசை மாறி சென்று, வாழ்க்கையில் தோல்வி அடைந்தால் எதிர்காலம் பாழாகிவிடும் என்கிற உணர்வுகளை இந்த மாதிரியான சம்பவங்களும், கதைகளும் அவர்களுக்கு புரிய வைக்கும். தவறான விஷயத்தை செய்யாதே என்று கூறி அதனால் வருகிற விளைவுகளை நீங்கள் சொன்னால் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். விளக்கங்களோடும், சில உதாரணங்களோடும் சொன்னால் கண்டிப்பாக ஏற்றுக்கொள்வார்கள்.
மனநிலை உணர்வுகள் மாறிக்கொண்டே இருக்கும்:
இந்த காலகட்டத்தில் அவர்களுடைய உணர்வுகளுக்கு ஆதரவு என்பது ரொம்ப ரொம்ப முக்கியம். அவர்கள் தங்களின் பிரச்சினைகளை தோழிகளிடம் தான் முக்கிய மாக பகிர்ந்து கொள்வார்கள். அவர்களிடம் போய் சொல்லும் போது அவர்களுக்கு இவர்களை சரியாக கையாள தெரியாது. அவர்கள் இந்த குழந்தைகளை தவறாக வழிநடத்த வாய்ப்பு உள்ளது.
எனக்கு ரொம்பவும் மன அழுத்தமாக இருந்தது. அதனால் புகைபிடித்தேன். இப்ப ரொம்ப சந்தோஷமாக இருக்கிறேன் என்பார் கள். இவர்களும் அதேபோல் செய்ய ஆரம்பித்தால் பிரச்சினைதான் ஏற்படும். ஒரு சினிமா பார்க்கும் போது பெரியவர்கள் அதில் வரும் ஒரு விஷயத்தை பார்ப்பது வேறு மாதிரி இருக்கும். இளம் பருவத்தினர் பார்ப்பது வேறு மாதிரி இருக்கும். குழந்தைகள் பார்ப்பது இன்னொரு மாதிரி இருக்கும்.
இப்படி இவர்களின் பரிமாணங்களோ, ஏற்றுக்கொள்கிற தன்மையோ வித்தியாசமாக இருக்கும்போது, பருவ வயதில் ஏற்படும் பாதிப்புகள் பற்றி அவர்கள் என்ன சிந்திப்பார்கள் என்று யாராலும் கணிக்கவே முடியாது. ஆனால் ஒரு பொதுவான விஷயம், இது தவறான ஒன்று என்பது அவர்களுக்கு தெரிய வேண்டும். இந்த விஷயம் தவறு என்று புரிந்தால் இதை தவிர்க்க முயல்வார்கள். அதற்கு மேல் ஆர்வம் இருந்தால் கூட அந்த விஷயத்தை செய்ய வேண்டும் என்று நினைக்க மாட்டார்கள்.
பருவ வயதில் பெண்களுக்கு ஏற்படும் மனநிலை உணர்வு என்பது பொதுவானது. ஆனால் அது ரொம்பவும் முக்கியமானது. இந்த நேரத்தில் நாம் சொல்லும் போது சரி என்பார்கள். அதன்பிறகு அவர்கள் அதை வேறு மாதிரி யோசிப்பார்கள். இது சரியா, தவறா என்பது போல அவர்களின் மனநிலை உணர்வுகள் இருக்கும். அவர்களின் மனநிலை மாறிக்கொண்டே இருக்கும். இதனால் தேவையில்லாத மன அழுத்தத்துக்கு ஆளாவார்கள்.
இதில் சிலர் என்ன செய்வது என்று தெரி யாமல் கவலையுடன் இருப்பார்கள். சிலருக்கு இது சோகமான விஷயங்களாக இருக்கும். சிலர் அதில் இருந்து மீண்டு வருவதற்கு என்ன வழிமுறை இருக்கிறது என்று யோசிப் பார்கள். எனவே அவர்களுக்கு இந்த பருவ வயது காலகட்டத்தை கடந்து வரு வதற்கான வழிமுறைகளை நாம் கண்டிப்பாக கற்றுக் கொடுக்க வேண்டும். பெண் குழந்தைகளின் பருவ வயது பிரச்சினைகளுக்கு முழுமையான தீர்வுகள் என்ன...? அதுபற்றி அடுத்த வாரம் பார்ப்போம்.
- ஜாதகரீதியாக இந்த யோகம் ஆரம்பிக்கும் இடத்தை வைத்து உண்டாகும் பலன்களை பார்க்கலாம்.
- திருமணத்திற்குப் பின்னர் பொருளாதார முன்னேற்றம் ஏற்படும்.
பல்வேறு விந்தைகளையும் வினோதங்களையும் தன்னுள் அடக்கியது ஜோதிடம். இதை புரிந்து கொள்ள பிரபஞ்ச சக்தியின் அனுக்கிரகம் வேண்டும். ஜோதிட சாஸ்திரத்தில் கூறப்பட்ட பல்வேறு யோகங்களில் மிகச்சிறப்பான யோகமானது கிரக மாலிகா யோகம். ஒரு ஆண்டின் சில குறிப்பிட்ட நாட்களில் மட்டுமே உருவாகக்கூடிய யோகம். இந்த யோகம் கிடைக்கப் பெற்றவர்கள் பாக்கியசாலிகள்.மிக அரிதாக உருவாகக்கூடிய கிரக அமைப்பு. இந்த கிரக நிலவரத்தில் பிறந்தவர்கள் சாதாரண குடும்பத்தில் பிறந்தாலும் சாதனையாளர்களாக வலம் வருவார்கள். இவர்கள் தொட்டது துலங்கும். பட்டது பூக்கும் தன்மை கொண்ட ராஜயோக கிரக சஞ்சாரமாகும். தற்போது வருட கிரகங்கள் அனைத்தும் பெயர்ச்சியாகி உள்ள இந்த நிலையில் கோட்ச்சார ரீதியாக கிரக மாலிகா யோகம் ஏற்பட்டு உள்ளது. இந்த யோகம் 23.5.2025 அன்று மதியம் 1.05 மணி வரை நீடிக்கிறது.
அதன் பிறகு 24.5.2025 மதியம் 1.48 மணி முதல் 26.5.2025 மதியம் 1.41 மணி வரை உள்ளது. மறுபடியும் 31.5.2025 முதல் 6.6.2025 வரை ஏற்படுகிறது. இந்த காலகட்டத்தில் பிறக்கும் குழந்தைகள் மிகவும் பாக்கிய பலன் மிகுந்த அதிர்ஷ்டசாலிகள். அதுவும் மகர லக்னமாக பிறந்தால் அதிர்ஷ்டம் இரட்டிப்பாகும்.
கிரக மாலிகா யோகம்: ராசிக் கட்டத்தில் குறைந்தபட்சம், 6 முதல் 8 கட்டங்களில் கிரகங்கள் வரிசையாக மாலை தொடுத்தது போல் அமையும் போது அது கிரகமாலிகா யோகமாகும். 6 கட்டங்களுக்கு குறைவாக கிரகங்கள் அமையும் போது கிரக மாலிகா யோகமாக கணக்கிடப்படாது. இந்த யோகம் வெற்றி மற்றும் செல்வத்தை அடைய உதவுகிறது. எண்ணற்ற நல்ல பலன்களைத் தருகிறது. இது ஜாதகரை சமுதாயத்தில் தலை சிறந்த குடி மகனாக மாற்றுகிறது. எதையும் எதிர்கொண்டு வெல்லும் வலிமை படைத்தவர்களாக இருப்பார்கள். யோகம் என்று ஒன்று இருந்தால் அதில் சில அசவுகரியங்களும் இருக்கும். அதே போல் இது அவரவர்களின் ஜென்ம லக்ன ரீதியாக சில மாறுபட்ட பலனை தந்தாலும் புகழ், செல்வாக்கு, அந்தஸ்து, கவுரவம் உண்டு. சுய ஜாதகரீதியாக இந்த யோகம் ஆரம்பிக்கும் இடத்தை வைத்து உண்டாகும் பலன்களை பார்க்கலாம்.
மாலிகா யோகம் லக்னத்தில் ஆரம்பித்தால்: ஜாதகர் எதையும் சமாளிக்கும் திறன் உள்ளவராக இருப்பார். தோல்வி பயம் இல்லாதவர். நல்ல உடற்கட்டு, புகழ், ஸ்திரபுத்தி உண்டு. நீண்ட ஆயுள் உள்ளவராக இருப்பார். நல்ல குணங்கள் உள்ளவராக இருப்பார். சுய முயற்சியில் முன்னேற கூடிய வராக இருப்பார். பொதுநலம் சார்ந்த விஷயங்களில் ஈடுபாடு உள்ளவராக இருப்பார்கள்.
மாலிகா யோகம் 2ம்மிடத்தில் ஆரம்பித்தால்: செல்வாக்கு, சொல்வாக்கு மிகுந்தவர்கள். இவரின் பேச்சுக்கு கட்டுப்பட்டே குடும்ப உறுப்பினர்கள் இருப்பார்கள். பேச்சுத்திறமை உள்ளவர்கள். இனிமையாகப் பேசி குடும்பத்தை திறம்பட நிர்வகித்து செல்வார்கள். நல்ல குடும்பம் அமையும். பேச்சை மூலதனமாக கொண்ட தொழிலில் தனித்திறமையுடன் மிளிர்வார்கள். பொருளீட்டுவதிலும்,தனம் சேர்ப்பதிலும் கவனம் செலுத்துவார்கள். வாக்கு வன்மை மிகுந்தவர்கள். கொடுத்த வாக்கை காப்பாற்றுபவர்கள்.
மாலிகா யோகம் 3ம்மிடத்தில் ஆரம்பித்தால்: வீரம், விவேகம், நிறைந்த செல்வம் உடையவர்கள். தன் சுய முயற்சியால் வாழ்க்கையில் முன்னேறுவார்கள். கடினமான விடாமுயற்சி உள்ளவராக இருப்பார்கள். சுயநலவாதியாக இருப்பார்கள். பிறர் கூறும் கருத்தை ஏற்காமல் தான் சொல்வதே சரி என்று வாதம் செய்பவர்கள். தைரியம் உள்ள வராகவும் துணிச்சல் மிக்கவராகவும் இருப்பார்கள். கதை, கட்டுரை, கவிதை எழுதுவதில் ஆர்வம் உண்டு. ஆபரணச் சேர்க்கை உண்டு.
மாலிகா யோகம் 4ம்மிடத்தில் ஆரம்பித்தால்: தாய், தாய்வழி ஆதாயம் மிகுந்தவர்கள். சுகவாசியாக இருப்பார்கள். சொத்து சுக சேர்க்கை மிகுதியாக உள்ளவர்கள். நல்ல கல்வி அறிவு உண்டு. உயிரின வளர்ப்பு, விவசாய நாட்டம் அதிகம். உடல்நலத்தைப் பேணிக் காப்பதிலும் தன்னை அழகுபடுத்திக் கொள்வதிலும் தனி கவனம் செலுத்துவார்கள். பிறரால் விரும்பப்பட கூடியவராக இருப்பார்கள். சம யோசித புத்தியும், சாதுர்யமும் உள்ளவராக இருப்பார்கள்.

ஐ.ஆனந்தி
மாலிகா யோகம் 5ம்மிடத்தில் ஆரம்பித்தால்: பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் நின்றால் ஜாதகர் அதிர்ஷ்டம், பேரதிர்ஷ்டம் நிரம்பியவர்கள். புண்ணிய காரியங்களில் ஈடுபடுவார்கள். இரக்க குணம் உண்டு. தானம், தர்மம் செய்வதில் ஆர்வம் உள்ளவர்கள். ஆன்மீக நாட்டம் இருக்கும். குணத்தில் பணிவும் அடக்கமும் இருக்கும். ஜாதகரிடம் இயல்பாகவே நற்குணங்கள் இருக்கும். குல தெய்வ அருள் நிரம்பியவர்கள். தாத்தாவின் உருவ ஒற்றுமை இருக்கும். குழந்தைகள் மேல் அதிக பற்று இருக்கும். நல்ல புத்திரபாக்கியம் உள்ளவராக இருப்பார்கள்.
மாலிகா யோகம் 6ம்மிடத்தில் ஆரம்பித்தால்: ருண, ரோக, சத்ரு ஸ்தானத்திற்கு லக்னாதிபதி சம்பந்தம் இருந்தால் கடன்,நோய், வம்பு வழக்குகள் இதில் ஏதேனும் ஒன்று இருக்கும். எல்லோரிடமும் பகையையும், வெறுப்பையும் காட்டக்கூடியவராக இருப்பார்கள். நோயும் ஜாதகரும் இரட்டை பிறவிகளாக வாழ்வார்கள். உடலில் ஏதாவது நோய் தொல்லை இருந்து கொண்டே இருக்கும்.
பிறர்மீது குற்றம் கண்டுபிடிப்பது மற்றும் பிறர் பொருளின் மீது ஆசைப்படுவது போன்ற குணங்கள் இருக்கும். எதிலும் திருப்தி அடையாதவராக இருப்பார்கள். அனைத்திலும் குறைபட்டுக் கொண்டே இருப்பார்கள்.
மாலிகா யோகம் 7ம்மிடத்தில் ஆரம்பித்தால்: வாழ்க்கைத் துணையால் வளர்ச்சி உண்டு. சமுதாயத்தில் மதிப்பு, மரியாதை நிறைந்த நல்ல வாழ்க்கைத் துணை அமையும். மனைவிவழி ஆதாயமும் உண்டு. திருமணத்திற்குப் பின்னர் பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். இன்பம், துன்பம் என அனைத்து சூழ்நிலைகளிலும் மனைவியின் ஆதரவும், அரவணைப்பும் உண்டு. ஜாதகரின் முன்னேற்றத்திற்கு வாழ்க்கைத் துணை பக்கபலமாக இருப்பார். அதிக நண்பர்கள் உண்டு. நண்பர்களின் ஆதரவும், ஆதாயமும் கிடைக்கும். கூட்டுத் தொழிலில் ஆதாயம் உண்டாகும்
மாலிகா யோகம் 8ம்மிடத்தில் ஆரம்பித்தால்: நித்திய கண்டம், பூரண ஆயுள் என வாழ்க்கையே போராட்டமாக இருக்கும். ஆயுள் பயம் இருந்து கொண்டே இருக்கும். தாழ்வு மனப்பான்மை மிகுந்தவர்கள். விரக்தி அதிகம் இருக்கும். வாழ்க்கை அவமானம், கேவலம், துக்கம், நிறைந்ததாக இருக்கும். இனம் காணமுடியாத நோய் இருக்கும். அங்கீனம், திருட்டுத்தனம் உண்டு.
இழப்புகள் அதிகம் இருக்கும். சட்டத்திற்குப் புறம்பான சமூகவிரோத செயல்களில் ஈடுபடுவார்கள். சொத்திற்காக கோர்ட் கேஸ் என்று அலைந்து கொண்டிருப்பார்கள். அதிர்ஷ்டத்தை நம்பி வாழ்வை தொலைப்பார்கள். வெளிநாட்டு வாழ்க்கை சிறப்பு. சிலருக்கு பினாமி சொத்து அல்லது உயில் சொத்து கிடைக்கும்.
மாலிகா யோகம் 9ம்மிடத்தில் ஆரம்பித்தால்: குடும்பத்தில் மூத்த வாரிசாக இருப்பார்கள். தர்ம ஸ்தாபனம் நடத்துவர்கள். ஆன்மீக நாட்டம் மிகுந்தவர்கள். கோவில் விழாக்களில் முன்னே நின்று தலைமை தாங்குபவர்கள். ஆன்மீக குருமார்களின் ஆசி உண்டு. புனித யாத்திரை செல்லும் பாக்கியம் உண்டு. தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்று வாழ்வார்கள். அழியாப்புகழ் கிடைக்கும். வேதங்கள் கற்பவர்கள். ஆச்சார அனுஷ்டானங்களை கடைபிடிப்பார்கள். சுய ஒழுக்கம் உள்ளவராக இருப்பார்கள். வெளிநாட்டு வருமானம் உண்டு. தந்தை, தந்தை வழி முன்னோர்களின் நல்லாசி உண்டு. பித்ருக்கள் வழிபாட்டில் ஆர்வம் உண்டு.
மாலிகா யோகம் 10ம்மிடத்தில் ஆரம்பித்தால்: ஜாதகர் சுய தொழில் செய்பவராக இருப்பார்கள் அல்லது கவுரவப் பதவியில் இருப்பார்கள். சிலர் பரம்பரை குலத்தொழிலை நடத்துவார்கள். தொழில் வியாபாரத்தில் தனி முத்திரை பதிப்பவர்கள். பொருளாதாரத்தில் வளர்ச்சியும் புகழும் கிடைக்கும். அடிமைத் தொழிலை விரும்பாத கடினமான உழைப்பாளியாக இருப்பார்கள். தாய், தாய்வழி உறவுகளுடன் தொழில் தொடர்பு உண்டு. உழைப்பை நம்புபவராகவும் இருப்பார். தொழிலில் நேர்மையை கடைபிடிப்பார். சுய கவுரவம் உள்ளவராக இருப்பார்கள். நல்ல கல்வி அறிவு உண்டு. படித்த படிப்பிற்கு சம்பந்தமான தொழில் உத்தியோகம் உண்டு.
மாலிகா யோகம் 11ம்மிடத்தில் ஆரம்பித்தால்: ஜாதகர் திரண்ட சொத்து, ககம் நிரம்பியவர். பல வழிகளில் ஆதாயம் கிடைக்கும். மூத்த சகோதர, சகோதரிகளால் ஆதாயமும் அனு கூலமும் கிடைக்கும். செல்வம், செல்வாக்கு நிரம்பிய வாழ்க்கை துணை உண்டு. 7-ம் அதிபதி பலம் குறைந்து இருந்தால் இருதார தோஷத்தை கொடுக்கும். பூர்வீகச் சொத்துக்களால் லாபமும் ஆதாயமும் கிடைக்கும். 10-ம் அதிபதியின் தொடர்பு இருந்தால் பல தொழில் செய்து லாபம் சம்பாதிப்பார்கள். கூட்டுத் தொழில் வெற்றி உண்டு. வழக்குகளில் வெற்றி உண்டு.
மாலிகா யோகம் 12ம்மிடத்தில் ஆரம்பித்தால்: ஜாதகர் நிறைய விரயங்களை சந்திப்பார். ஜாதகர் தனது செயல்பாடுகளால் நிறைய விரயங்களை உண்டாக்குவார். வரவுக்கு மீறி செலவு செய்வார். கட்டுக்கடங்காத விரயம் இருந்து கொண்டே இருக்கும். சேமிக்கும் பழக்கம் இருக்காது. கடன் பெற்றும் வீண் செலவு செய்ய தயங்க மாட்டார். சோம்பேறியாக இருப்பதுடன் சொந்த ஊரை விட்டு அடிக்கடி நீண்ட தூரம் பயணம் செய்யும் தொழிலில் இருப்பார். பிறர் மீது நம்பிக்கை இல்லாதவராக இருப்பார்கள். வீண் வம்பு, வழக்கு, விரோதங்களை தானே உருவாக்குவார். கடன், வம்பு வழக்கிற்காக அடிக்கடி தலைமறைவாக வாழ்வார்கள்.
ஒரு ஜாதகத்தில் நவக்கிரகங்களும் மாலை போன்ற அமைப்பில் ஒன்றன்பின் ஒன்றாக அடுத்தடுத்த ராசிகளில் வரிசையாக அமைந்திருக்கும் இந்த யோகம் ஜோதிட சாஸ்திரத்தில் உயர்வான யோகமாக கருதப்படுகிறது. கிரக மாலிகா யோகத்தில் லக்னத்திற்கு அசுப கிரக சம்பந்தம் இருக்க கூடாது.
லக்னம் சுத்தமாக இருப்பது நலம். லக்னத்தையும் லக்னாதிபதியையும் எந்த கிரகமும் பார்க்கக் கூடாது. லக்னம், லக்னாதிபதிக்கு அதிக கிரகங்களின் சம்பந்தம் இருந்தால் அனுபவிக்க வேண்டிய வினைப் பதிவு மிகைப்படுதலாக இருக்கும். லக்னம் வலிமை குறைந்து அனைத்து முயற்சியிலும் தோல்வியை சந்திப்பார்கள்.
அதே போல் லக்னாதிபதி பகை, நீசம், வக்ரம் அஸ்தமனம் அடைந்தாலும் சுபத்தன்மை மட்டுப்படும். நவ கிரகங்களும் தனித்தன்மையான நிலையில் இயங்கினால் இந்த யோகம் தனித்துவம் கொண்ட இயல்புகளுடன் பலன் தரும். ஒவ்வொரு கிரகமும் மற்ற கிரகங்களுடன் தொடர்பு படாமல் சுயமாக செயல்பட்டால், கூட்டு விளைவுகள் இன்றி அந்த ஜாதகம் தனித்தன்மையுடன் இயங்கும். இந்த யோகத்தில் கிரகங்கள் ஒன்றுடன் ஒன்று இணைந்து அஸ்தமனம், கிரகயுத்தம் போன்ற நிலைகளை பெரும்பான்மையாக அடைவதில்லை.
பகைக் கிரகங்கள் ஒரு ராசியில் இணையும் போது அந்த வீட்டிற்கான பலன்கள் ஜாதகருக்கு முழுமையாகக் கிடைப்பதில்லை. நட்புக் கிரகங்கள் இணைவது யோகமான பலன்களை தனித்தன்மையான பலன்களை அதிகரிக்கும். இந்த யோகத்தில் கிரகங்கள் ஒன்றுடன் ஒன்று இணையாமல், அடுத்தடுத்த கட்டங்களில் வரிசையாக அமர்ந்து சுப நன்மைகளை அளிப்பதே இந்த யோகத்தின் சிறப்பம்சமாகும்.
செல்: 98652 20406
- திருச்செந்தூர் அகவல் பாடல் மொத்தம் 428 வரிகளை கொண்டது.
- சித்தராக மாறுவதற்கு திருச்செந்தூர் முருகன் அருள்தான் முக்கிய காரணம் என்று சொல்வார்கள்.
திருச்செந்தூர் முருகன் மீது அளவில்லாத பக்தி கொண்டவராக திருச்சிற்றம்பல நாடிகள் என்ற சித்தர் இருந்தார். இவர் 14-ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்.
சீர்காழி அருகே உள்ள புள்ளிருக்கு வேலூர் என்ற ஊரில் பிறந்த இவர் தில்லை நடராஜரை நாடி துடிப்பாக கொண்டு வாழ்ந்ததால் சீர்காழி சிற்றம்பல நாடிகள் என்ற பெயர் பெற்றார். இவருக்கு 63 சீடர்கள் இருந்தனர். இவர்களுடன் தல யாத்திரை செல்வதை வழக்கத்தில் வைத்து இருந்தார் சிற்றம்பல நாடிகள் சித்தர்.
திருச்செந்தூர் முருகன் மீது கொண்ட பற்று காரணமாக இவர் ஒரு தடவை அங்கு சென்று அந்த ஆலயத்தில் நீண்ட தவத்தில் ஆழ்ந்தார். முருகன் மீது பல்வேறு பாடல்களை எழுதினார். முருகனை போற்றி இவர் எழுதிய நூல் திருச்செந்தூர் அகவல் என்று அழைக்கப்படுகிறது.
திருச்செந்தூர் அகவல் பாடல் மொத்தம் 428 வரிகளை கொண்டது. அதில் திருச்செந்தூர் முருகனை பல வழிகளில் அவர் புகழ்ந்து பாடி உள்ளார். உதாரணத்திற்கு ஒன்றை பார்க்கலாம்.
ஓம் எனும் தாரக ஒண்பொருள் சிவனுக்கு
ஆம் என மொழிந்தே அருள்குரு ஆனோன்;
பொற்புறு பொதிய வெற்புறு முனிக்கு
நற்பொருள் விளக்கும் ஞானதேசிகன்;
பொய்வழிச் சமணப் புலைஇருள் நீக்கிச்
சைவம் வளர்க்கும் சம்பந்த மூர்த்தி
முருகன்; குமரன் ; மூவிரு முகன் மால்
மருகன்; சிவன் அருள் மைந்தன் ; கந்தன்;
மலைமகள் பாலன் வயங்கிளர் வேலன்:
கலைபயில் புலவன்; கார்த்திகேயன்
வளை ஒரு மருப்பு வாரண முகவற்கு
இளையவன் குகன்; மயில் ஏறும் பெருமாள்
சூரசங்காரன்; சுப்பிரமணியன்;
வீரருள் வீரன்; விரைகமழ் கடம்பன்:
சேந்தன்; வள்ளி தெய்வயானை
காந்தன்; செவ்வேள் காங்கெயன்; சிலம்பன்
ஆயிர நாமத்து ஐயன்: துய்யன்;
சேய்; அருள் கோமான்; சேவத்துவசன்
வரங்கிளர் கருணைப் பரங்கிரி உறைவோன்
மாவினம் விளங்கும் ஆவினன் குடியோன்;
நந்தூர் அலைவாய்ச் செந்தூர்க் கடவுள்;
பாரகம் விளக்கும் ஏரகத்து அமர்வோன்
மாலயன் இறைஞ்சும் சோலைமாமலையோன்
குன்றுதோறாடல் நன்றென மகிழ்ந்தோன்;
குமரவேள் சரணம் குறித்து மாதவத்தீர்
நிமல மெய்ஞானம் நீவிரும் பெறுவீர்
கருத்துரை : 'ஓம்' என்ற பிரணவப்பொருளைச் சிவபெருமானுக்கு உபதேசம் செய்து குருமூர்த்தி ஆனவன். பொதிகை மலையிலே உள்ள அகத்திய முனிவருக்கு உபதேசம் செய்த ஞான தேசிகன். பொய் வழியாகிய சமணவழி எனும் இருளைப் போக்கிச் சைவம் வளர்த்த சம்பந்த மூர்த்தி யாகிய ஞான சூரியன், முருகன், குமரன், ஆறு முகத்தோன், திருமால் மருகன், சிவபெருமானின் மைந்தன், கந்தன்; பார்வதியின் பாலன், ஒளி பொருந்திய வேலாயுதம் ஏந்தியவன், பல்கலைப் பண்டிதன், கார்த்திகேயன்; குகன், மயில் ஏறும் பெருமாள், சூரனை சம்ஹாரம் செய்தவன்; சுப்பிரமணியன்: வீரருள் வீரன்; மணம் வீசும் கடம்பமாலை அணிந்தவன்; சேந்தன், வள்ளி தெய்வயானை மணாளன்; செய்வேள்; காங்கேயன், சிலம்பன். ஆயிரம் பெயர் கொண்ட ஐயன் தூயவன், சேய், அன்பர்க்கு அருளும் அரசு; சேவல் கொடியோன், திருப்பரங்கிரியிலே எழுந்தருளி இருப்பவன்; திருவாவினன் குடி எனும் பழநியில் வாழ்வோன்; திருச்செந்தூரன்; திருவோகம் எனும் சுவாமிமலையில் இருப்பவன், திருமாலும் பிரமனும் துதிக்கப் பழமுதிர் சோலை எனும் அழகர் மலையில் அமர்ந்திருப்பவன், குன்றுகள் தோறும் எழுந்தருளித் திருவிளையாடல் புரியோன்.

இத்தகைய குமரப் பெருமானைத்துதி செய்தால் நீங்களும் மாயை ஒழித்து மெய்ஞான அருள் பெறுவீர்கள்.
-இப்படி திருச்செந்தூர் அகவலில் திருசிற்றம்பல நாடிகள் சித்தர் பல இடங்களில் திருச்செந்தூர் முருகனை பாடி உள்ளார். இதனால் திருச்செந்தூர் முருகனின் அருள் அவருக்கு நிரம்ப கிடைத்தது.
அவர் சித்தராக மாறுவதற்கு திருச்செந்தூர் முருகன் அருள்தான் முக்கிய காரணம் என்று சொல்வார்கள். திருச்செந்தூரில் முருகப்பெருமானின் திருவருளைப் பெற்ற சீர்காழி சிற்றம்பல நாடிகள், அங்கிருந்து புறப்பட்டு மயிலாடு துறைக்குச் சென்றார். அங்கு ஒரு மடாலயம் அமைத்து அங்கேயே தங்கியிருந்து தவமியற்றி வந்தார். இவரிடம் உபதேசம் பெற்ற பலர், மெய்ஞான செல்வர்களாக விளங்கினர். இவரது சீடர்களாக அறுபத்துமூன்று பேர் இருந்தனர்.
இந்த நிலையில், சிற்றம்பல நாடிகள் சமாதி நிலையை அடைய விரும்பினார். சீடர்களிடம் தனக்கு உதித்த விருப்பத்தை எடுத்துக் கூறினார். சீடர்கள் அனைவருமே தங்கள் சம்மதத்தைத் தெரிவித்தனர். இதன் பின்பு சோழ மன்னனை அழைத்த சீர்காழி சிற்றம்பல நாடிகள், 'நான் என்னுடைய சீடர்களோடு சித்திரை மாதத்தில் வரும் திருவோண நட்சத்திர நாளில் ஜீவ சமாதி என்னும் நிஷ்டையில் கூட விரும்புகின்றேன். அதற்கு தகுந்த இடம் ஒன்றை ஏற்பாடு செய்து தாருங்கள்' என்று கேட்டார். அவரது கோரிக்கையை ஏற்ற மன்னன், அவரது விருப்பப்படியே மயிலாடுதுறைக்கு மேற்கு பகுதியில் உள்ள காவிரிக்கரை சோலை ஒன்றில் இடம் ஒதுக்கிக் கொடுத்தான்.
பின்னர் அங்கு அறுபத்துமூன்று சமாதிக் கோவில்கள் அமைத்து, அதனைச் சிற்றம்பல நாடிகளிடம் தெரிவித்தான். அதே போல இந்தச் செய்தி நாடெங்கும் பறையறைந்தும் தெரிவிக்கப்பட்டது. இந்த அதிசயத்தைக் காண பலரும் அங்கே கூடி நின்றனர். தான் குறித்த நாளில் சிற்றம்பல நாடிகள், தன் அடியவர் கூட்டத்தோடு அச்சோலைக்கு எழுந்தருளினார்.
அங்கிருந்த அன்பர்களுக்கு அருளாசி வழங்கினார். அனைவரும் கேட்கும் வகையில், மூன்று திருவெண்பாக்கள் பாடினார். தனக்கென்று அமைத்த சமாதியில் இறங்கி, சிவ சிந்தனையோடு சின்முத்திரை தாங்கி, மோன நிலையில் வீற்றிருந்தார். இதனைத் தொடர்ந்து அவரது சீடர்களும் தமக்கென ஒதுக்கப்பட்ட சமாதிகளில் இறங்கிச் சித்தி பெற்றனர்.
இந்த இடம் தற்போது சித்தர்காடு என்ற பெயருடன் விளங்குகின்றது. இத்தலமே தற்போது சீர்காழி சிற்றம்பலநாதர் திருக்கோவிலாக அருள் வழங்கி வருகின்றது. சித்தர் அங்கிருந்து அன்று போல் இன்றும் அருள்புரிந்து வருகின்றார். முறையாக தரிசித்து வணங்கும் எல்லோருக்கும் அவரவர் வேண்டும் வரங்களை வழங்கி வருகிறார்.
கிழக்கு பார்த்த வண்ணம் எளிய நுழைவு வாசலைக் கொண்டு அமைந்துள்ளது இந்த ஆலயம். கருவறை முன்மண்டபத்தைத் தாண்டி உள்ளே சென்றால், கருவறைக்குள் தல நாயகர் சீர்காழி சிற்றம்பல நாடிகளின் ஜீவ சமாதியும், அதன் மீது சிவலிங்கத் திருமேனியும் ஒளி வீசும் பொலிவோடு காட்சி தருகிறது.
இவரே முக்காலத்து வினைகளையும் போக்க உதவுபவர் என்பது குறிப்பிடத்தக்கது. கருவறையைச் சுற்றி அறுபத்து மூன்று சீடர்கள் ஐக்கியமானதைக் குறிக்கும் விதமாக அறுபத்துமூன்று சிவலிங்கத் திருமேனிகள், நேர்த்தியாக ஒரே வரிசையில் புடைப்புச் சிற்பங்களாகக் காட்சி தருகின்றன.
மேலும், கருவறையைச் சுற்றி விநாயகர், தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா மற்றும் சண்டிகேஸ்வரர் சிலை வடிவங்கள் அமைந்துள்ளன.
கருவறையின் பின்புறத்தில் விநாயகர், காசி விசுவநாதர், விசாலாட்சி, மகாலட்சுமி, சப்த பீடங்கள், தனி சனீஸ்வரர், சூரியன், பைரவர், நவக்கிரக சன்னிதி ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. அம்பாள், சிவயோக நாயகி என்ற பெயரில் தனிச் சன்னிதியில் வீற்றிருந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
ஆண்டுதோறும் சித்திரை திருவோணத்தில், சீர்காழி சிற்றம்பல நாடிகளுக்கு குருபூஜை வெகு சிறப்பாக நடைபெறுகிறது. இதேபோல, மாதந்தோறும் திருவோணத்தில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகின்றன.
இது தவிர, பவுர்ணமி, அமாவாசை, பிரதோஷம் உள்ளிட்ட அனைத்து விழாக்களும் இங்கு நடத்தப்படுகின்றன. இந்த ஆலயத்தை இந்து சமய அறநிலையத் துறை நிர்வாகம் செய்து வருகிறது.
காலை 7 மணி முதல் நண்பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் ஆலய தரிசனத்திற்காக நடை திறந்திருக்கும். இந்த சமயத்தில் பக்தர்கள் இறைவனை தரிசனம் செய்யலாம்.
நாகை மாவட்டம், மயிலாடுதுறை வட்டத்தில், மயிலாடுதுறை ரெயில் நிலையத்திற்கு மேற்கே இரண்டு கிலோமீட்டர் தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது.
மயிலாடுதுறை - கும்பகோணம் வழித்தடத்தில் மயிலாடுதுறை ரெயில்வே மேம்பாலத்தைக் கடந்ததும், சித்தர்காடு ஊராட்சி வரும். சாலையோர வளைவும் தென்படும். அதில் நுழைந்து வடக்கே சிறிது தூரம் சென்றால் இவ்வாலயத்தை எளிதில் அடையலாம்.
திருச்சிற்றம்பல நாடிகள் சித்தருக்கு அருள் பாலித்தது போல திருச்செந்தூர் முருகன் நிகழ்த்திய மற்றொரு அற்புதத்தை அடுத்த வாரம் காணலாம்.
- சாகருக்கு மீண்டும் கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பது தான் அந்த தகவல்.
- ஒரு விஷயம் நடக்கும் வரை நமது மன உறுதி நமக்கே தெரிவதில்லை.
எனக்கு இப்படி ஒரு நிலை வரும், வாழ்க்கையில் இப்படிப்பட்ட துயரங்களையும் சந்திக்க வேண்டிய காலம் வரும் என்று நான் எதிர்பார்க்கவில்லை.
கொரோனாவின் பிடியில் இருந்து நாடே விடுபட்டு இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டிருந்த கால கட்டம். தொற்றை நினைத்து இனி பயப்பட தேவையில்லை என்று எல்லோரும் நிம்மதி அடைந்திருந்தனர்.
அப்போது எங்களுக்கு மட்டும் பயமுறுத்துவது போல் அந்த தகவல் வந்தது. சாகருக்கு மீண்டும் கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பது தான் அந்த தகவல்.
உடனே சிகிச்சையில் சேர்த்தோம். மருத்துவர்கள் நல்ல சிகிச்சை அளித்தார்கள். ஆனால் கல்லீரலில் ஏற்பட்ட பாதிப்பு என்பது கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்ற நிலைக்கு வந்து விட்டது.
உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை என்பதை நான் ஓரளவு கேள்விப்பட்டு இருந்தேன். மருத்துவ துறையில் பதிவு செய்து வைத்தால் போதும். தேவையான உறுப்பு கிடைத்ததும் ஆபரேஷன் செய்து மாற்றி விடுவார்கள் என்பதுதான் என் நினைப்பு.
ஆனால் ஒரு உறுப்பு கிடைத்தால் மட்டும் போதாது. அதன் திசுக்கள் ஒத்திருக்க வேண்டும். அதே போல் ரத்தம் ஒரே குரூப்பாக இருக்க வேண்டும். தானம் பெறுபவர் மற்றும் தானம் வழங்குபவர்களின் உடல் எடையும், உயரமும் கூட சரியாக இருக்க வேண்டும் என்பதெல்லாம் சாகரை காப்பாற்ற நடந்த போராட்டத்தின் போது நான் கற்றுக் கொண்டது. இதில் இவ்வளவு விசயம் இருக்கா என்று ஆச்சரியமாக இருந்தது. எங்கள் பிரார்த்தனையும், மருத்துவர்களின் போராட்டமும் என் சாகரை மீட்டு வரும் என்று நம்பினேன். ஆனால் என் நம்பிக்கை பயனற்று போனது.
எது நிகழக் கூடாது என்று பயந்து கொண்டிருந்தேனோ அது நிகழ்ந்து விட்டது. 28.6.2022 அன்று என் சாகர் மீண்டு வர முடியாத இடத்துக்கு சென்று விட்டார் என்ற தகவலை மருத்துவர்கள் தெரிவித்தார்கள்.
தாங்க முடியாத இழப்பையும் தாங்க வேண்டிய சூழல். மகிழ்ச்சியையும், சந்தோசத்தையும் மட்டும் அனுபவித்து வந்த எனக்கு முதல் முறையாக மிகப் பெரிய துயரத்தை சுமக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

எவ்வளவோ கனவுகளுடன் தொடங்கிய என் திருமண வாழ்க்கை பன்னிரண்டு ஆண்டுகளில் முடிந்து போகும் என்று நான் நினைக்கவில்லை.
நாங்கள் ஆசையாய் கட்டி வாழ்ந்த எங்கள் வீட்டுக்கு உடலாக கொண்டு வரப்பட்டார் சாகர். என்னோடு வேலை பார்த்தவர்கள், என் நண்பர்கள் என்று எல்லோருக்கும் சாகரை தெரியும். சாகருக்கும் அவர்களை எல்லாம் தெரியும். எனவே சாகர் 'இல்லை' என்றதை யாராலும் நம்ப முடியவில்லை.
இறுதிவரை ஒன்றாக பயணிப்போம் என்று நினைத்து கொண்டிருந்த என் சாகருக்கு நானே இறுதி காரியங்களும் செய்ய வேண்டிய துர்பாக்கிய நிலை. இதுவும் கடவுள் அமைத்ததுதான் என்றால் யாரால் மாற்ற முடியும்?
மகள் நைனிகாவுக்கு அப்போது 11 வயது. இந்த துயரத்தில் இருந்து எப்படி மீள்வோம்...? அடுத்த கட்ட வாழ்க்கை எப்படி இருக்கும் என்று எதிர்காலத்தை நினைத்தபோது மனதுக்குள் சூழ்ந்த பயம்...! அப்போது எதற்கும் என்னிடம் பதில் இல்லை. கண்ணீர் மட்டுமே விடையாக தெரிந்தது. ஒரே ஒரு விஷயத்தில் நான் கொடுத்து வைத்தவள் என்பேன். அதாவது நல்ல அம்மா. நல்ல நண்பர்கள் எனக்கு கிடைத்து இருக்கிறார்கள்.
குழந்தை பருவத்தில் இருந்தே என்னை சரியான பாதையில் வளர்த்து, தன்னம்பிக்கையையும், தைரியத்தையும் ஊட்டியது என் அம்மா. சந்தோசமான தருணங்களை பல நேரங்களில் நண்பர்களுடன் பகிர்ந்து இருக்கிறேன். ஆனால் கஷ்டமான நேரத்திலும் என் துக்கத்தில் பங்கெடுத்து என்னை மீட்டு கொண்டு வர இவ்வளவு நண்பர்கள் இருந்தார்கள் என்பது என்னையே நெகிழ வைத்து விட்டது.
எங்கெங்கு இருந்தெல்லாமோ வந்தார்கள்... யார் யாரெல்லாமோ வந்தார்கள்...ஒவ்வொருவரும் தங்களுக்கு ஏற்பட்ட இழப்பு போல் கருதி எனக்கு நம்பிக்கை, தைரியம் ஊட்டினார்கள்.
ஏதோ ஒன்றிரண்டு நாட்கள் மட்டுமல்ல. தினமும் வீட்டுக்கு வந்தார்கள். என்னோடு இருந்து எதை எதையோ பேசி என்னையும் பேசவும், சிரிக்கவும் வைத்தார்கள். வா... வெளியே போயிட்டு வரலாம் என்று அழைப்பார்கள். நான், நாளை வருகிறேன் என்றாலும் விட மாட்டார்கள். ஏதாவது பிடித்தமான இடத்தை சொல்லி அதுவரை போகலாம் என்பார்கள். அதுவும் நான் ரெடியாகி வரும் வரை காத்திருந்து அழைத்து செல்வார்கள்.
அந்த அளவுக்கு அவர்கள் காட்டிய அன்பு என்னை நெகிழ வைத்தது. வாழ்க்கையில் ஏதாவது ஒரு கட்டத்தில் ஏதாவது ஒரு வகையில் ஏதாவது ஒரு இழப்பை நாம் சந்தித்தே ஆக வேண்டும். இதுதான் வாழ்க்கை என்பதை உணர்ந்தேன். இழப்பின் தன்மையை பொறுத்து அதன் தாக்கமும், பாதிப்பும் நம்மிடம் இருக்கும்.
ஒரு விஷயம் நடக்கும் வரை நமது மன உறுதி நமக்கே தெரிவதில்லை. இவ்வளவு துயரங்களையும், கஷ்டங்களையும் கடந்து மீண்டு வந்தது எப்படி என்பதை நினைக்கும் போது எனக்கே ஆச்சரியமாக இருக்கிறது.
அம்மா உனக்கு எது வேணும்னாலும் செய்வேன். உன்னை எப்போதும் மகிழ்ச்சியாக பார்த்து கொள்வேன் என்று தனது மழலை மொழியில் நைனிகா சொன்னது என் கண்களில் ஆனந்த கண்ணீரை வரவழைத்தது.
இனி நைனிகாவே என் உலகம்... நைனிகாவுடனேயே என் வாழ்க்கை... சுவையான தகவல்களுடன் அடுத்த வாரம் சந்திக்கிறேன்.
(தொடரும்).
- உடல் நலம் என்பது கேள்விக்குறியாகி விடும்.
- சத்து இல்லாத தவறான உணவு, முறையான தூக்கம் இன்மை.
மக்கள் மீதான மன நல தாக்குதலும் உடல் நல பாதிப்பிற்கு முக்கிய காரணம் என்பதனை நாம் அறிவோம். நம் மனம் பல விஷயங்களால் அன்றாடம் நொடிக்கு நொடி பாதிக்கப்படுகின்றது. இதனை நாமே அறிந்து உணர்ந்து நம்மை சரி செய்து கொண்டால் நம் உடல் நலமும் மன நலமும் நன்கு இருக்கும். அவற்றினை அறிவோம்.
* பல நபர்கள் இவ்வாறு பேசுவதைக் கேட்டிருப்பீர்கள். 'நான் இல்லைன்னா... அங்கே எதுவுமே சரியாக நடக்காது'. 'நான் இல்லைன்னா அய்யாவும், அம்மாவும் ரொம்ப கஷ்டப்படுவாங்க'. 'நான் இல்லைன்னா ஆபீசில் ஒரு துரும்பு கூட நகராது-இப்படி பல வசனங்களை நாம் கேட்கின்றோம். இது சொல்பவரின் முழு விசுவாசம், நேர்மை இவற்றினைத் துல்லியமாக காட்டுகின்றது. வரவேற்கத்தக்கதே. ஆனால் இவர்கள் ஒன்றினை உணர வேண்டும். இவர்கள் இருக்கும் அதே அளவு விசுவாசம் எதிர் பக்கத்திலும் இருக்கின்றதா? என்றால் அநேகமாக இல்லை என்றே சொல்ல வேண்டும். அந்த அளவு முக்கியத்துவம் இவர்களுக்கு கிடைப்பதில்லை.
இன்று இவர்கள் இல்லையெனில் மற்றொருவர் என்ற நிலையில் தான் பல இடங்களில் நடக்கின்றது. இதனை உணரும் பொழுது பாதிக்கப்பட்டவர் உருக்குலைந்து விடுவார். உடல் நலம் என்பது கேள்விக்குறியாகி விடும். ஏன் இப்படி? என்று கேட்கலாம். பண்பு ஒழுக்கம் இவையெல்லாம் எழுத்தில் மட்டுமே காணக்கூடிய கலி காலம்.
நமக்கு இருக்கும் நல்ல பண்புகளோடு நாம் இருக்கலாம். ஆனால் அதனையே பிறரிடம் கொஞ்சம் கூட எதிர்பார்க்கக் கூடாது. இது உங்களின் உடல் நலத்தினையும், மன நலத்தினையும் நன்கு பாதுகாக்கும்.
'நீங்கள் உயிரையே ஒருவருக்காக கொடுத்தாலும் அவரே பின் முதுகில் குத்தலாம்' என்ற எச்சரிக்கை உணர்வோடு எந்த செயலையும் செய்வது நல்லது.
சினிமா, சீரியலில் கூட யாரேனும் அழுதால் விக்கி, விக்கி அழுபவர்கள் உண்டு. ஆனால் நிஜ வாழ்வில் உங்கள் கண்ணீரைக் கண்டு இரங்குபவர்கள் மிகக் குறைவு. 'உயிர் போனாலும் பிரியேன்' என்று காதலில் சத்தியம் செய்பவர்கள் எளிதில் பிரிவதை கண் கூடாக பார்க்கவில்லையா? உங்கள் தியாகங்களை பொறுத்தவரை அப்படி ஒன்று நடந்ததா? என்று பிறருக்கு கூட தெரியாது.
பெற்றோர்களுக்கான வார்த்தை- உங்கள் பிள்ளைகள் உங்களுக்கு தோள் கொடுப்பார்கள் என்ற கனவு வேண்டாம். நிறைய நல்ல பிள்ளைகள் இருக்கின்றார்கள். மறுக்க முடியாது. ஆனால் சதவீதம் குறைவுதான் என்பதனையும் உணர வேண்டும்.

வாழ்க்கை இப்படித்தான். உணர்ந்து வாழ்வதும் மூலையில் உட்கார்ந்து அழுவதும் தனி நபர் கையில்தான் உள்ளது. மேலும் ஒன்றினையும் அறிய வேண்டும். மன உளைச்சல் மன அழுத்தம் அதிகம் ஆவதற்கு இந்த காரணங்களும் உண்டு.
* உடற்பயிற்சி இன்மை, சூரிய ஒளியே உடலில் படாது இருத்தல்.
* சத்து இல்லாத தவறான உணவு, முறையான தூக்கம் இன்மை.
* அதிகம் டி.வி. செல்போன் என இருப்பது.
* நேரத்தினை உபயோகமற்று செலவழிப்பது. வேலைகளை ஒத்திப் போடுவது ஆகியவை ஆகும்.
ஒவ்வொருவரும் தன்னைத் தானே செதுக்கிக் கொள்ள வேண்டும்
* சிலர் சாதாரணமாகவே ஏதோ தலை போகின்ற வேலை போல் நடையையே ஓட்டம் போல் நடப்பர். முட்டிக் கொள்வர். பரபரவென்று இருப்பர். கையில் உள்ள பொருட்கள் சிதறும். எதற்கு இந்த அவசரம் என்று அவர்களுக்கே தெரியாது. உடற்பயிற்சி தவிர்த்து மற்ற நேரங்களில் நிதானமாக நடை பழகுங்கள். இது உங்கள் கம்பீரம், மதிப்பு, மரியாதையினைக் கூட்டும்.
* சிறு விஷயங்களுக்குக் கூட 'ஆ..... ஊ.....' என்ற அமர்க்கலங்கள் செய்தால் டிராமா போன்று இருக்கும். ஆக உணர்ச்சிகளை கட்டுப்படுத்த பழகுங்கள்.
* யாராவது குற்றம் சொல்லும் விதமாக வேண்டுமென்றே குதர்க்கமான கேள்விகள் கேட்டால் பாய்ந்து பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை. சற்று நிதானித்து சரியான பதிலைக் கூறுங்கள்.
* நம் திட்டங்களை வெளிச்சம் போட்டு அனைவருக்கும் சொல்ல வேண்டுமா என்ன? நம் சாதனைகள் அதனை செய்யட்டுமே.
* நம் பின்னால் பேசுபவர்களைப் பற்றி கவனமே கொடுக்க வேண்டாம். அது தானே அழிந்து விடும்.
* இவைகளை செய்தாலே நம் ஒழுக்கமும், பலமும் கூடி விடும்.

கமலி ஸ்ரீபால்
மன உளைச்சல்-மன அழுத்தம் இவை அதிகரிப்பதற்கு இவையும் காரணங்கள் தான்.
உடற்பயிற்சி, சூரிய ஒளியே உடலில் படாது இருத்தல், சத்தற்ற, தவறான உணவு, முறையான தூக்கம் இன்மை, அதிகம் டி.வி., செல்போன் என இருப்பது, நேரத்தினை உபயோகமற்று செலவழிப்பது, வேலைகளை ஒத்திப் போடுவது ஆகியவை ஆகும்.
நீங்களே உங்களை அறிய:
சிலர் வந்தாலே போதும். அவரது அதிர்வலைகள் சுற்றி உள்ளவர்கள் மீது ஒரு தாக்கத்தினை ஏற்படுத்தும். காரணம் அவர்களது அதிர்வலைகள் கூடுதல் உறுதியானதாக இருக்கின்றது.
மற்றவர்கள் 'டக்கென' திரும்பி பார்ப்பது (அ) அடிக்கடி அவர் பக்கமே கவனமும், கண்களும் செல்வது அவர் வரும்போதே அந்த இடம் கூடுதல் சக்தி பெற்றது போன்ற உணர்வு.
முன்பின் தெரியாதவர் கூட அவரிடம் தன்னைப்பற்றி மற்றும் தன் வீட்டினைப்பற்றி பேசுவது. தீயவர்கள் இவர்களைக் கண்டால் ஒதுங்குவது.
தேவையில்லாமல், காரணம் இல்லாமல் அந்த நபர் மீது பொறாமை கொள்வது.
குழந்தைகள் அவரைப் பார்த்து சிரிப்பது.
விலங்குகள் கூட பூனை, யானை, குதிரை, நாய், பறவை போன்றவை கூட அவர் அருகில் தைரியமாய் பாதுகாப்பாய் இருப்பது போன்றவை அந்த நபரின் சக்திவாய்ந்த நல்ல அதிர்வலையினைக் காட்டுகின்றது.
சற்று நேரம் எதையும் நினைக்காமல் அமைதியாய் அமர்ந்தாலே அதிக சக்தி. அதன் அதிர்வு உங்களுக்குள் தோன்றிடும் நீங்கள் உறுதியானவர் தான்.
மூளை இளமையாக சுறுசுறுப்பாக இருக்க:
ஓய்வு நேரத்தில் படியுங்கள்
ஆரோக்கியம், செல்வம், தத்துவம், ஆன்மீகம் என பல பிரிவுகளில் படிக்கலாம்.
இயற்கையோடு கண்டிப்பாய் சிறிது நேரம் செலவழிக்கலாம்.
நல்ல சினிமா, பழைய ஓவியங்கள், பழைய கட்டிடக் கலை இவற்றினை ரசியுங்கள்.
கூர்மையான அறிவுக்கு:
வைட்டமின் பி12, சிங்க், ஆன்ட்டி ஆக்சிடென்ட், போலேட் இவற்றினை மருத்துவ ஆலோசனைப்படி எடுத்துக் கொள்ளுங்கள்.
குறுக்கெழுத்து, புதிர், கணக்கு இவை மூளையை கூர்மையாக்கும்.
நல்லவர்களோடு மட்டுமே இருங்கள்.
உடற்பயிற்சி-தன்னம்பிக்கை, நல்ல தூக்கம், மன அமைதி இவற்றினைத் தரும்.
புதிதாக ஏதாவது கற்றுக் கொள்ளலாமே.
இவை அனைத்துமே மூளையினை சுறுசுறுப்பாக வைக்கும். இத்தோடு, போதுமான அளவு நீர் குடிப்பதும், ஓடி ஆடும் விளையாட்டுக் கூட அவசியமே.
சில அறிகுறிகளை நாம் கவனிக்க தவறக்கூடாது:
அடிக்கடி தவைலியா, உயர் ரத்த அழுத்தம் இருக்கின்றதா? என பரிசோதித்துக் கொள்ள வேண்டும்.
விடாத நெஞ்செரிச்சல்: இருதய பாதிப்பு இருக்கின்றதா? என்பதனையும் மருத்துவர் பரிசோதிப்பார். இது வீண் செலவு அல்ல.
காரணமின்றி எடை குறைகின்றதா: சர்க்கரை நோய்க்கும் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
மயக்கம் போல் இருக்கின்றதா: சர்க்கரை அளவு ரத்தத்தில் குறைந்து இருக்கலாம். சோதித்துக் கொள்ளலாமே.
விடாத இருமல்: அலர்ஜி கூட இருக்கலாம்.
மரத்து போதல்: நரம்பு மருத்துவரின் ஆலோசனை பெற வேண்டும்.
மூச்சு வாங்குதா: பல சோதனைகளுடன் ஆஸ்த்மாவையும் பரிசோதித்துக் கொள்ளலாம்.
திடீர் நெஞ்சு வலி : மாரடைப்பாக இருக்கலாம்.
எப்போதும் குளிர்போல் இருத்தல் : 'ரத்த சோகை' பரிசோதனை செய்து கொள்ளலாம்.
அடிக்கடி சிறுநீர் போகுதல்: நீரிழிவு நோய் பாதிப்பாக இருக்கலாம். ஆக இதில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.
சின்ன சின்ன கவனங்கள்
தக்காளி, பால், அடர்ந்த சாக்லேட், தயிர், பூண்டு, முட்டை, பட்டை, கிரீன் டீ இவை உங்கள் அன்றாட உணவில் இடம் பெறுகின்றதா?
உயர் ரத்த அழுத்தம் பாதிப்பா? உப்பு அதிகம் உள்ள உணவுகள், சர்க்கரை, சிகப்பு அசைவம், கேபின், கொழுப்பு உணவு இவை தவிர்த்து விடுகின்றீர்களா?
உயர் ரத்த அழுத்தமா? பப்பாளி, கொய்யா, கொழுப்பில்லாத காரட், வாழைப்பழம், ஆரஞ்சு, ஓட்ஸ். இவை அன்றாட உணவில் சேர்த்துக் கொள்கின்றீர்களா?
மண்ணீரல் பலம் பெற சோளம், சோயா, சிறுதானியம், மஞ்சள் கொடை மிளகாய், மஞ்சள் வாழைப்பழம், அன்னாசி, எலுமிச்சை, மாம்பழம் என மஞ்சள் நிற உணவுகள் உதவுகின்றன.
புரத உணவு என்பது முதல் முக்கியத்துவம் பெற வேண்டும்.
எப்போதும் எதிலும் விழிப்புணர்வு என்ற பழக்கம் வேண்டும். இது நம்மை அமைதியோடு இருக்கவும் வழிவகுக்கும். இதற்கு சில பயிற்சிகளையும் மேற்கொள்ளலாம்.
நேரம் கிடைக்கும் போது நம் மூச்சின் இயக்கத்தினை கவனிக்க வேண்டும்.
கேட்கும்போதும், படிக்கும் போதும் முழு கவனத்துடன் செய்யவும்,
ஒரு நேரத்தில் ஒரு வேலையினை முழு கவனத்துடன் செய்யலாம்.
இயற்கையின் காலை, மாலை பொழுதில் சிறிது நேரம் கவனிக்கலாம்.
உங்கள் டைரி, எண்ணங்களை நோட்புக், பேனா கொண்டு எழுதுங்கள். இதன் வலிமை அதிகம்.
உடற்பயிற்சி அவசியம். ஒரு மணி நேரத்திற்கொரு முறை 5 நிமிடங்கள் வீட்டினுள் கூட நடக்கலாமே.
தியானம்-அன்றாடம் 5 நிமிடங்கள் முதல் 20 நிமிடங்கள் வரை செய்ய வேண்டும்.
அன்றாடம் எதிலும் குறிப்பிட்ட நேரம் என்பதில் ஒழுக்கம் வேண்டும்.
நாமே தவறு செய்திருந்தாலும் நம்மை நாமே மன்னித்து திருத்திக் கொள்ளலாம்.
- வருகிற கவலைகள் அனைத்துமே அனைவருக்கும் ஒரே மாதிரிதான் வரும் என்பது கிடையாது.
- பொது வழிமுறை தேடினால் நமக்கான சாதனை தவறிப்போகும்.
கவலைகளையும் கற்றுக்கொண்டு அவற்றோடு வாழக் காத்திருக்கும் வாசகப் பெருமக்களே! வணக்கம்!.
' மனித ஜாதியில் துயரம் யாவுமே மனதினால் வந்த நோயடா!' என்று ஒரு திரைப்படப் பாடலில் கவியரசு கண்ணதாசன் குறிப்பிட்டிருப்பதைப் போல, மனிதனின் பெரும்பாலான கவலைகளுக்குக் காரணம் அவனது மனமே ஆகும். இன்னும் சொல்லப்போனால் மனிதன் கவலைப்படுவது கூட ஒருவகை மனநோய் தான். வாழ்க்கையில் வருகின்ற துன்பங்கள் துயரங்கள், இன்பங்கள், இழப்புகள் என எல்லாவற்றையும் இலகுவாக எடுத்துக்கொண்டு, எல்லாவற்றையும் இயல்பாகக் கடந்துபோகக் கற்றுக்கொள்பவர்க்குக் கவலைகள் என்பவை ஒரு பொருட்டாகவே அமையாது!.
"இடும்பைக்கு இடும்பைப் படுப்பர்
இடும்பைக்கு
இடும்பைப் படாஅ தவர்"
என்னும் குறளில் திருவள்ளுவர், தமக்கு வருகிற துன்பத்தைக்கண்டு வருந்தி நிற்காதவர்கள், அந்தத் துன்பத்தையே துன்பப்படுத்தும் வல்லமை மிக்கவர்கள் என்று குறிப்பிடுகிறார். வருத்தப்படுகிற மனத்தை, வருத்தப்படாத மனத்தை வைத்துத்தான் வெற்றி கொள்ள வேண்டும்.
மனம் உடையவன் மனிதன். அவன் உழைப்பதற்காக உடலை, உடல் அங்கங்களைக் கொடுத்த கடவுள், மனிதனுக்கு மூளையையும், இதயத்தையும், மனத்தையும் படைத்துச் சிந்திக்கும் ஆற்றலையும் தந்திருக்கிறார். மனம், 'இருப்பதைக்கொண்டு நிறைவாக வாழ்!' என்று சொன்னால் கேட்டு அடங்காது!; கடந்த காலத்தில் அடைய முடியாமல் தொலைத்து விட்டவற்றைப் பற்றியே, நிகழ்காலத்தில் பெரும்பகுதி நேரம் கவலைப்பட்டுக் கொண்டே இருக்கும்!.
அல்லது எதிர்காலத்தில் என்னென்ன செய்து சாதிக்க வேண்டும் என்று கற்பனைக் கோட்டைகட்டி, அதைப்பற்றியே எந்த முயற்சியும் இல்லாமல் வருத்தப்பட்டுக் கொண்டே இருக்கும். எதிர்பார்த்தல், அல்லது ஏமாந்து போதல் ஆகிய இவ்விரண்டின் அடிப்படையிலேயே நம்முடைய பெரும்பாலான கவலைகள், நம் வாழ்க்கையில் கூடு கட்டிக் குஞ்சு பொறித்துக் கொண்டிருக்கின்றன.
வாழ்க்கையில் அவரைப்பார்! இவரைப்பார்!.
அவர்களைப்போல முன்னேறு! என்று பல வெற்றியாளர்களின் சாதனை வரலாறுகளை, நமக்குப் படிப்பினைகள் ஆக்கப்பலர் முயல்வார்கள். அந்த வெற்றியாளர்களின் வாழ்வியல் நிகழ்வுகள் அவர்களின் வெற்றிக்கு வேண்டுமானால் உறுதுணையாக அமையலாம்; ஆனால் உண்மையான வாழ்வியல் வடிவம் என்பது, ஒவ்வொருவருக்கும் என்று தனித்துவமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. நமக்கென்று உள்ள தடைகளையும், கவலைகளையும் நமக்கென்று உள்ள சிறப்பு முயற்சிகளில் உடைத்து முன்னேறுவதே நமக்கான தனித்துவ வெற்றிக்கு அடையாளமாகும். கவலைகளும், தடைகளும் வருவது என்பது அனைவருக்கும் பொதுவானது, இயற்கையானது தான். ஆனால் வருகிற கவலைகள் அனைத்துமே அனைவருக்கும் ஒரே மாதிரிதான் வரும் என்பது கிடையாது. அவரவருக்கு வருகிற துன்பங்களையும், கவலைகளையும் அவர் அவர்க்கு உரிய வழி சென்று மாற்ற வேண்டுமேயொழிய, பொது வழிமுறை தேடினால் நமக்கான சாதனை தவறிப்போகும்.

சுந்தர ஆவுடையப்பன்
கவலைகளை மகாகவி பாரதி, 'ஈனக்கவலைகள்!' என்றும், 'கொன்றழிக்கும் கவலைகள்' என்றும் கவலை தோய்ந்த வரிகளால் குணப்படுத்துவார். கவலைகளை நாம் எப்போதும் 'நறுமண வாசமிக்கவை' என்று பாராட்டுவதில்லை, இருக்கிறதிலேயே கீழ்த்தரமான நிலையில் இருப்பவையும், அந்த நிலைக்கு நம்மைக் கொண்டு செல்பவையும் கவலைகள் என்பதால், 'ஈனக்கவலைகள்' ஆயின. அதிகமாகக் கவலைப்படும் மனம் 'கவலைகள் போட்டு வைக்கும் நாற்றமெடுத்த குப்பைத் தொட்டி' என்றும் கூட உருவகப் படுத்தப்படும். மனத்தில் கவலைகள் குவியக் குவிய அவை நோயாக மாறி, நம்மையே கொன்று அழித்துவிடக்கூடிய தீய செயலுக்கும் துணிந்து விடும்; எனவே தான் அவை 'கொன்றழிக்கும் கவலைகள்!'.
வாழ்க்கை எப்போதுமே முரண்பாடுகளின் முடிச்சுதான். ஒளியுள்ள பகலும், ஒளியற்ற இருளும் ஒரு நாளின் பகுதிகளாக மாறி மாறி வந்து, ஒரு நாளை உணர்த்துவது போல, இன்பமும், துன்பமும் மாறி மாறி வந்து நமக்கு வாழ்க்கையை உணர்த்துவதும் இயற்கை ஆகும். மேடு-பள்ளம், ஒளி-இருள், மழை- வெயில், இனிப்பு-கசப்பு என்று எல்லாமே வாழ்க்கையில் இயற்கையானதுதான்; இயல்பானதுதான் என்றால், பிறகு ஏன் நாம் வாழ்க்கையில் கவலைகள் கண்டு வருந்த வேண்டும்? இன்பங்கள் கண்டு மகிழ வேண்டும்?.
''இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான்
துன்பம் உறுதல் இலன்"
என்பது வள்ளுவர் வாக்கு. எந்நேரமும் இன்பம் தேடி அலைவதுதான் மனத்தின் குணம். அதுகுறித்து மட்டும் மனத்தைக் கொஞ்சம் கட்டுக்குள் வைத்துக் கொண்டால், பிறகு, துன்பம் என்பது எப்போதுமே இயல்பாக வரும் என்கிற மனநிலை தாமாகவே நமக்கு வந்துவிடும். இன்பத்தின் பக்கம் நமது எதிர்பார்ப்பைக் குறைத்துக் கொண்டால், துன்பம் நமது பக்கம் எட்டிக்கூடப் பார்க்காது என்பது வருத்தம் குறைக்க வள்ளுவர் நமக்குத் தந்த வாக்கு மருந்து.
இன்றைய 21-ம் நூற்றாண்டு எதிர்பார்ப்புகளின் நூற்றாண்டாக மாறி விட்டது. நம்மால் எது முடியாதோ அதை முயன்று பெற வேண்டும் என்று இடைவிடாது எதிர்பார்த்துக் கவலைப் பட்டுக்கொண்டே இருப்பதே பலருக்கு வாடிக்கையாகிப் போனது. விமானம் ஓட்டுவதற்கு அடிப்படையில் அறிவியல் கற்றிருக்க வேண்டியது அவசியம்; ஆனால் அக்கவுண்டன்சி படித்தவர் அதற்கு ஆசைப்பட்டால் வெற்றுக் கவலைகளைத் தவிர வேறென்ன பரிசாகக் கிடைக்கப் போகிறது.
இப்போதெல்லாம், அதிகாலையில் எழுந்து பல் துலக்கிக் காலைக் கடன்களை முடிக்கிறார்களோ இல்லையோ, கண் விழித்தவுடன், கவலைப்படத் தொடங்கி விடுகிறார்கள். அதற்கு என்ன செய்யப் போகிறோம்?, இதற்கு என்ன செய்யப் போகிறோம்? என்று தேவையற்ற கவலைகளை மூளையில் திணித்துக்கொண்டும், மனத்தில் சுமந்து கொண்டும், ஒரு செயலும் ஆற்ற முடியாமல் சும்மா இருந்து கவலைப்பட்டே களைத்துப் போகிறோம். யாரையாவது பார்த்து 'எப்படியிருக்கிறீர்கள்?' என்று நலம் விசாரிக்கத் தொடங்கி விட்டால் போதும்!. 'அதை ஏன் கேட்கிறீர்கள்? என்று கஷ்டப் புலம்பல்களைக் காவியம்போல வர்ணிக்கத் தொடங்கி விடுவார்கள்; இதில் அடுத்தவர் கவலைகளோடு நம்முடைய கவலைகளை ஒப்பிடுவது வேறு சர்வ சாதாரணமாக நடைபெறும்.
கடவுளைக் காண வேண்டி, ஒருவன் தன்னுடைய ஊரில் உள்ள பிரசித்தி பெற்ற கோவிலில் தவமிருந்தான். அவனது தவத்தை மெச்சிய கடவுள், அவன்முன் நேரில் தோன்றி, 'உனக்கு என்ன வரம் வேண்டும்?' என்று கேட்டார். ' கடவுளே நாள்தோறும் நான்படுகிற துன்பங்களின் அளவு மற்ற எவரை விடவும் அதிகப்படியானதாக இருக்கிறது. என்னுடைய கவலைகளைக் குறைத்து விடுங்கள்! என்று நான் கேட்கவில்லை. என்னுடைய துன்பச் சுமையை அடுத்தவர்க்கு மாற்றிவிட்டு, அவருடைய சுமையை எனக்கு ஏற்றி விடுங்கள்!; கொஞ்ச நாள் நான் ஜாலியாக அந்தச் சுமையைத் தூக்கிச் சுமக்கிறேன்!' என்று கேட்டான். இந்த உலகிலேயே மற்ற எவரையும் விட அதிகமான கவலைகளைத் தான் மட்டுமே சுமந்து வருவதாக அவனுக்கு நினைப்பு.
கடவுளும், அன்று இரவு பத்து மணிக்கு, அந்த ஊர்மக்கள் அனைவர் கனவிலேயும் தோன்றி, 'இன்று நள்ளிரவு பனிரெண்டு மணிக்கு, ஊர் மக்கள் அனைவரும் அவரவர் கவலைகளை மூட்டைகளாகக் கட்டிக் கொண்டு, நமது ஊர்க் கோவில் பிரகாரத்துக்கு வந்து விடுங்கள். சரியாகப் 12 மணிக்குக் கோவில் விளக்கு அணைக்கப்படும். அப்போது ஒவ்வொருவரும் தாம் கொண்டு வந்திருந்த கவலை மூட்டைகளை, பிரகாரச் சுவரில் அடிக்கப்பட்டுள்ள ஆணிகளில் தொங்க விட்டு விட வேண்டும்; பிறகு விளக்கு எரியும். இந்த ஊரிலேயே கவலை இல்லாதவர் எவர்? அதிகக் கவலை உள்ளவர் எவர்? மிகக் குறைந்த கவலைகளோடு வாழ்பவர் எவர்? என்பதைக் கண்டு பிடிக்கவே இந்த ஏற்பாடு.
பிறகு மற்றுமொருமுறை விளக்கு அணைக்கப்படும்போது, யார் யாருக்கு எந்த மூட்டை வேண்டுமோ அவற்றை எடுத்துக் கொள்ளலாம்.
மீண்டும் விளக்கு எரியும்போது எடுத்த மூட்டையோடு அவரவர் வீட்டுக்குச் செல்லலாம்!' என்று தெரிவித்தார்.
அன்று நள்ளிரவுக்கு முன்பாக, ஊரிலுள்ள அனைவரும் கவலை மூட்டைகளோடு கோவில் வரத் தொடங்கினர். கடவுளிடம் வரம்கேட்ட நம்ம ஆளும் தன்னுடைய கஷ்டங்களை ஒரு பெரிய சாக்கு மூட்டையில் கட்டித் தோளில் தொங்கவிட்டுக்கொண்டு கோவில் வாசலுக்கு வந்து சேர்ந்தான். ஊர்மக்கள் ஒவ்வொருவரும் கொண்டுவரும் கவலை மூட்டைகளின் அளவுகள் மிகப் பெரியனவாகவே இருந்தன. தலைச்சுமையாகக் கொண்டு வந்தவர்களை விட, ஆட்டோவிலும், மாட்டு வண்டிகளிலும், லாரிகளிலும், பேருந்துகளிலும், ரெயில்களிலும் கொண்டுவந்தவர்கள் எண்ணிக்கைதான் அதிகம்.
அனைவரும் அவரவர் கவலை மூட்டைக் குவியல்களோடு, கோவில் பிரகாரத்தில் வந்து நின்றனர். நள்ளிரவு சரியாகப் 12 மணிக்கு விளக்கு அணைக்கப்பட்டது; ஓரிரு நிமிட இடைவெளிக்குப் பின் விளக்குப் போடப்பட்டது. ஆச்சரியம் என்னவென்றால், வந்திருந்தவர்களில் எவருமே தங்களது கவலை மூட்டைகளை பிரகாரச் சுவற்றில் இருந்த ஆணிகளில் தொங்க விடவே இல்லை. அவரவர் கொண்டு வந்திருந்த கவலை மூட்டைகளின் அளவைப் பார்த்தவுடன் அனைவருமே மலைத்துப் போய் விட்டனர்.
இந்த ஆணிகளில் நம்முடைய மூட்டைகளை மாட்டி, நமக்குத் தெரியாத மூட்டைகளை எடுக்க நேரிட்டால் இன்னும் கவலைகள் பெருகுமேயொழிய குறையாது!. தெரியாத கவலைகளைப் புதிதாக ஏற்றுக்கொள்வதைவிட, ஏற்கனவே தெரிந்த கவலைகளோடு வாழ்வதே புத்திசாலித்தனம் என்கிற முடிவிற்கு அவர்கள் வந்து விட்டனர்.
உண்மையில் கவலை என்று எதுவும் அதுவாக நம்முன் வந்து நிற்பதில்லை. நாம்தான் நமது எண்ணங்களில் ஏற்படுகிற சிறு சிறு சிக்குகளையும், சிடுக்குகளையும் பூதாகரப்படுத்தி நாம் விரிக்கும் எண்ண வலைகளில் நாமே மாட்டிக்கொள்கிறோம். 'இடியாப்பச் சிக்கல்' என்று சில கவலைகளை நாமே உருவகப்படுத்திக்கொள்வோம்.
கொஞ்சம் தேங்காய்ப் பாலையும், சிலகரண்டி இனிப்புகளையும் போட்டு ஊறவைத்து உண்டால் அதைவிடச் சுவையானது வேறு எதுவாக இருக்க முடியும்?. சிக்கல்களைக் கரைப்பதற்கான வழியை விட்டுவிட்டுப் பெரிதாக்க எண்ணினால் சிக்கலோ சிக்கல்தான்.
எதிர்பார்ப்புகளைக் குறைத்துக் கொண்டால், ஏமாற்றங்களும் குறைந்துபோகும். ஏமாற்றங்கள் குறையக் குறையக் கவலைகளும் சுவடுகளின்றி மறைந்தே போகும். நம்முடைய ஒவ்வொரு முயற்சியிலும் கவலை தரக்கூடிய தடைகள் இருக்குமானால், அந்தக் கவலை, நம்மை கவனத்துடன் செயலாற்றத் தூண்டும் ஊக்கமாகவும் மாறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. கவலைகள் நம்மை எச்சரிக்கை செய்வன என்றாகிப்போனால் கவலைகளும் நல்லவைகள் தானே!. கவலைகள் யாருக்குதான் இல்லை!; அவற்றைக் கொஞ்சம் ஓரமாக வைத்துவிட்டு, உற்சாகமாகச் செயலாற்றத் தொடங்குவோம்!.
தொடர்புக்கு 9443190098
- அசுரனின் பிரார்த்தனையின் படி மும்மூர்த்திகளும் அனைத்து தேவதைகளும் இங்கு வசிக்கின்றனர்.
- புத்த மதம் தொடங்கிய இடம் புத்த கயா ஆகும்.
இந்தியாவின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள மாநிலம் பீகார். பழைய காலத்தில் மகதம் என்று இது அழைக்கப்பட்டது.
இந்துக்களுக்கு மிக முக்கியமாக அமைவது கயா திருத்தலமாகும். இதுவே புத்தமதத்தினருக்கும், ஜைன மதத்தினருக்கும் கூட மிக முக்கியமான திருத்தலமாகவும் திகழ்கிறது.
இத்திருத்தலம் பீகார் மாநிலத்தில் அதன் தலைநகரான பாட்னாவில் இருந்து 100 கிலோ மீட்டர் தெற்கில் உள்ளது. கல்கத்தா- வாரணாசி செல்லும் ரெயில் பாதையில் கயா ரெயில் நிலையத்தில் இருந்து 3 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.

ச.நாகராஜன்
மூலவர்: கதாதரர்
தீர்த்தம்: ராமாயணத்தில் நிரஞ்சனா என்று குறிப்பிடப்படும் பல்குனி நதி
தல விருட்சம்: அட்சய வடம் எனப்படும் ஆலமரம்
இந்தத் தலத்தைப் பற்றிய முக்கியமான புராண வரலாறு ஒன்று உண்டு.
முன்பொரு காலத்தில் கயாசுரன் என்று ஒரு அசுரன் இருந்தான். சிறந்த விஷ்ணு பக்தனான அவன் விஷ்ணுவைக் குறித்துத் தவம் செய்தான். பிரம்மா, சிவன் ஆகியோருடைய சரீரங்களை விடத் தனது சரீரம் பரிசுத்தமாக இருக்க வேண்டும் என்று அவன் வேண்டினான். அதன் படியே அவன் பரிசுத்தமாக ஆனான். இதனால் அவன் யாரைத் தொட்டாலும் அவர்கள் சொர்க்கத்தை அடைய ஆரம்பித்தனர். அவனால் பாவிகளும் கூட ஏராளமானோர் சொர்க்கத்திற்குச் செல்லவே தேவர்கள் விஷ்ணுவை நோக்கிப் பிரார்த்தித்து இதற்கு ஒரு தீர்வைத் தருமாறு வேண்டினர். விஷ்ணுவின் கட்டளைப்படி பிரம்மா ஒரு யாகத்தை கயாசுரனின் சரீரத்தின் மீது செய்தார். யாகத்திற்கு பிரம்மாவும் சிவனும் வந்திருந்தனர்.
அக்னியின் சூடு அந்த அசுரனை ஒன்றும் செய்யவில்லை. யமனை அழைத்து அவனை எழுந்திருக்காதபடி செய்ய முயன்ற போதும் அவன் தலை ஆடியது. யமனின் மகன் அந்தத் தலை மீது காலால் அமுக்கியபோதும் உடல் அசைவு நிற்கவில்லை.
விஷ்ணு நேரில் பிரத்யட்சமாகி அசுரன் தலை மேல் தன் பாதத்தை வைத்தார். அத்துடன் அவன் தலை ஆடாமல் நின்றது. யாகமும் பூர்த்தியாயிற்று.
இங்குள்ள கோவில் விஷ்ணுவின் பாதம் பொறிக்கப்பட்டுள்ளது. அசுரனை, விஷ்ணு தன் காலால் பாதாளத்தில் அமிழ்த்தியதால், உண்டான வடுவே இந்த விஷ்ணு பாதம் ஆகும்.
இது கருங்கல்லில் 40 செமீ நீளத்திற்கு உள்ளது. எண்கோண வடிவில் அமைந்த இந்த கோவில் 30 மீட்டர் உயரமும் எட்டு அடுக்குகளும் கொண்டதாகும்.

அசுரனின் பிரார்த்தனையின் படி மும்மூர்த்திகளும் அனைத்து தேவதைகளும் இங்கு வசிக்கின்றனர். இங்குள்ள அட்சய வடத்தில் திதியை முடிப்பவர்களுக்கு முக்தி நிலையைக் கொடுக்க வேண்டும் என்ற கயாசுரனின் வேண்டுதலும் அருளப்பட்டது.
ஆகவே இங்கு சிரார்த்தம் செய்தால் ஏழு தலைமுறை பித்ருக்கள் மோட்சம் அடைவார்கள் என்பது ஐதீகம். ராமாயணத்திலும் மகாபாரதத்திலும் இத்தலம் குறிப்பிடப்பட்டுள்ளது. ராமரும் சீதையும் லட்சுமணரும் இங்கு வந்ததையும் ராமர் தசரதருக்கு பிண்ட தானம் கொடுத்ததையும் ராமாயணம் குறிப்பிடுகிறது.
இங்கு வருபவர்கள் காமம், கோபம், மோகம் ஆகிய மூன்றையும் விட வேண்டும் என்பது ஐதீகம். அட்சய வடத்தில் சிரார்த்தம் செய்பவர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் தங்களுக்குப் பிடித்த ஒரு காய் அல்லது பழம் போன்ற எதையாவது விட்டு விடுதல் வேண்டும். இந்த உறுதி மொழியை வாழ்நாள் முழுவதும் கடைப்பிடிக்க வேண்டும்.
இங்குள்ள அட்சய வடத்தின் வேர்ப்பகுதி பிரயாகையிலும் நடுப்பகுதி காசியிலும் உச்சி மரக்கிளை கயாவிலும் இருப்பதாக ஐதீகம். இதை மூலம் – மத்யம் – அக்ரம் என்று குறிப்பிடுவது வழக்கம்.
இது உயரமான ஒரு இடத்தில் இருப்பதால் படிகளின் மீது ஏறிச் செல்ல வேண்டும். அங்குள்ள கிணறு ஒன்றில் குளிக்கலாம்; கை கால்களைச் சுத்தம் செய்து கொள்ளலாம்.
புத்த கயா
கயாவில் இருந்து புத்தகயா பத்து கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. புத்த மதம் தொடங்கிய இடம் புத்த கயா ஆகும். இங்குள்ள போதிமரத்தடியின் கீழ் அமர்ந்து புத்தர் தியானம் செய்து ஞானம் பெற்றார். புத்தர் ஞானம் பெற்ற நாள் புத்த பூர்ணிமா தினமாகக் கொண்டாடப்படுகிறது.
புத்த கயாவில் போதி விருட்சம் எனப்படும் அரச மரம் உள்ளது.
இங்கிருக்கும் புத்தர் கோவில் 185 அடி உயரம் கொண்டது. இங்குள்ள போதி விருட்சத்தின் அடியில் புத்த பிட்சுக்கள் அமர்ந்து தியானத்தில் ஆழ்ந்திருப்பது பாரம்பரியப் பழக்கமாகும். இந்த மரத்தில் இருந்து உதிரும் இலைகளே இங்கு வழங்கப்படும் பிரசாதமாகும். இங்கு மிகப் பெரிய புத்தர் சிலை உள்ளது. இதன் அருகே வைக்கப்பட்டிருக்கும் மரப்பலகை மீது நமஸ்கரித்து அனைவரும் வணங்குகிறார்கள்.

இங்குள்ள பிரகாரத்தைச் சுற்றி மணி மகுட அமைப்புகள் உள்ளன. புத்தரின் வாழ்க்கை வரலாறு இங்கு சித்திரமாக வரையப்பட்டுள்ளது. இங்குள்ள உருளைகளைச் சுற்றினால் செய்த பாவம் போகும் என்பது பவுத்தர்களின் நம்பிக்கை.
இது யுனெஸ்கோவின் பாரம்பரிய தளங்களில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. இங்கு தாய் மடாலயம், முச்சலிண்டா ஏரி, பல்கு நதி, பிரம்மயோனி கோவில், சங்கமனா, சீனக் கோவில். வியட்நாம் கோவில் உள்ளிட்டவையும் அமைந்துள்ளன. இவற்றிற்கும் அனைவரும் செல்வது வழக்கம்.
நாலந்தா பல்கலைக்கழகம்
கயாவில் இருந்து 73 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது நாலந்தா. 800 வருடங்களுக்கும் மேலாக கல்வி அளித்து வந்த நாலந்தா பல்கலைக் கழகம் உலகெங்கிலும் இருந்து மாணவர்–களை ஈர்த்த பிரம்மாண்டமான பழம்பெரும் கல்வி நிலையமாகும்.
இது யுனெஸ்கோவின் பாரம்பரிய தளமாகும்.

இங்குள்ள நாலந்தா அகழ்வாராய்ச்சி அருங்காட்சியகம் புத்தமதம் சம்பந்தமான அனைத்து நூல்கள் உள்ளிட்டவற்றைக் காட்சிப் படுத்துகிறது.
ஹுவான்சுவாங் நினைவகம்
பிரபல சீன யாத்ரீகரான யுவான் சுவாம் ஏழாம் நூற்றாண்டில் இங்கு வந்ததை நினைவுபடுத்தும் விதமாக அமைந்துள்ளது இந்த நினைவகம்.
சூரியன் கோவில்
நாலந்தா பல்கலைக்கழகம் இருந்த இடத்திற்கு அருகில் சூரியனுக்கான கோவில் ஒன்று உள்ளது. கட்டிடக் கலையின் உன்னதத்தைக் காட்டும் சிதிலமடைந்த கோவில் இது.
குண்டல்பூர்
நாலந்தாவில் இருந்து நான்கு கிலோமீட்டர் தொலைவில் குண்டல்பூர் அமைந்துள்ளது. இங்கு தான் ஜைன மத நிறுவனரான மஹாவீர் அவதரித்தார். 11 அடி உயரமுள்ள மகாவீரரின் சிலை இங்கு அமைந்துள்ளது. கோவிலின் உயரம் 101 அடியாகும்.
இந்தக் கோவிலுக்கு இரு புறமும் ரிஷப்தேவ் கோவிலும் த்ரிகால் சவுபிசி கோவில்களும் உள்ளன.
பாவாபுரி
பாவங்களே இல்லாத நகர் என்ற பெயரைக் கொண்ட பாவாபுரி பாட்னாவில் இருந்து 95 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. இங்கு தான் ஜைன மதத்தை நிறுவிய பகவான் மஹாவீர் சமாதி அடைந்தார். அழகிய குளமும், குளத்தின் நடுவில் கோவிலும் உண்டு. இங்கு மஹாவீரரின் பாதச்சுவடுகள் உள்ளன.
சாரிபுத்திரர் ஸ்தூபி
நாலந்தா ரெயில் நிலையத்தின் அருகில் 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது சரிபுத்ரா ஸ்தூபி. இதை நாலந்தா ஸ்தூபி என்றும் அழைப்பதுண்டு. இது யுனெஸ்கோவின் பாரம்பரிய தளமாகும்.
பிரமிட் போல இதன் மேற்புறம் அமைந்துள்ளது. கிமு. மூன்றாம் நூற்றாண்டில் அசோக மன்னனால் நிறுவப்பட்டது இது.
கவுதம புத்தரின் முக்கியமான பத்து சீடர்–களுள் ஒருவர் சாரிபுத்திரர்.
புத்தபிரான் மகாநிரிவாணம் அடைவதற்கு சில மாதங்களுக்கு முன்னர் சாரிபுத்திரர் தான் பிறந்த நாலந்தாவிலேயே கார்த்திகை மாத பவுர்ணமி அன்று பரிநிர்வாணம் அடைந்தார். அவரது எலும்புகள் இங்கு பாதுகாக்கப்பட்டு வருகின்றன. ஏழு அடுக்கு கொண்டது இந்த ஸ்தூபி, இங்கு புத்த மதத்தின் புனித நூல்களின் உபதேசங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.
ககோலாட் நீர்வீழ்ச்சி
புத்த கயாவில் இருந்து 83 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது ககோலாட் நீர்வீழ்ச்சி. உலகெங்கிலுமிருந்து பயணிகள் விரும்பி வரும் இடம் இது. சுமார் 160 அடி உயரத்தில் இருந்து விழும் நீர் கீழே ஒரு நீர்த்தேக்கத்தை ஏற்படுத்துகிறது.
இதைப் பற்றிய பழைய புராண வரலாறு ஒன்று உண்டு.

திரேதா யுகத்தில் வாழ்ந்த ஒரு மன்னன் மலைப்பாம்பாக போகும்படி சபிக்கப்பட்டான். அவன் இந்த நீர்வீழ்ச்சியில் வாழ்கிறான் என்பது ஐதீகம்.
பாண்டவர்கள் வனவாச காலத்தில் இந்தப் பகுதிக்கு வந்ததாகவும் வரலாறு கூறுகிறது. இதனால் பாம்பாக இருந்த மன்னன் சாப விமோசனம் பெற்றான். ஆகவே இந்த நீர்வீழ்ச்சியில் குளிப்பவர்கள் ஒருபோதும் பாம்பாக பிறவி எடுக்க மாட்டார்கள் என்று அந்த மன்னன் உறுதி கூறியதாகவும் வழிவழி கதை கூறுகிறது.
இப்படி பீகார் மாநிலத்தை எடுத்துக் கொண்டால் குறைந்த பட்சம் சுமார் 150 சுற்றுலா இடங்கள் உள்ளன. பாட்னா உள்ளிட்ட இடங்களில் இருந்து சுற்றி உள்ள பல மாநிலங்கள் அருகிலும் இவை அமைந்துள்ளன என்பதால் முதலிலேயே நல்லதொரு சுற்றுலா திட்டத்தை வகுத்துக் கொள்வது இன்றியமையாதது.
ஆன்மீக யாத்திரை மேற்கொள்பவர்களுக்கு கயாவே மையத் தலமாக அமையும்.
- உ.வே.சா. தமது குருவான இவரது வாழ்க்கைச் சரிதத்தை எழுதியுள்ளார்.
- உலா, கலம்பகம், பிள்ளைத் தமிழ் போன்ற பற்பல வடிவங்களில் செய்யுள் நூல்களைப் படைத்துள்ளார்.
உண்மையான வித்வான்களால் பெரிதும் மதிக்கப்பட்ட மகாவித்வான் தமிழில் ஒருவர் உண்டு. அவர்தான் தலபுராண வேந்தர் என்று தமிழறிஞர்களால் கொண்டாடப்படும் மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை.
காலத்தால் காணாமல் போகவிருந்த சங்க இலக்கியங்களைத் தொகுக்க வேண்டி ஏடுதேடி நடந்த தமிழ்த் தாத்தா உ.வே. சாமிநாதய்யரின் குருவாக விளங்கிய பெருமையும் மீனாட்சி சுந்தரம் பிள்ளைக்கு உண்டு.
பிள்ளையவர்களின் வாழ்க்கை பல வியக்கத்தக்க சம்பவங்களை உள்ளடக்கியது. நெஞ்சை உருக்கும் நினைவுகளுக்கும் அவர் வாழ்வில் பஞ்சமே இல்லை.
உ.வே.சா. தமது குருவான இவரது வாழ்க்கைச் சரிதத்தை எழுதியுள்ளார். எவ்வளவு தூரம் தமிழே வாழ்வாக வாழ்ந்த தமிழறிஞர் அவர் என்பதை அந்த நூலைப் படித்து அறியலாம். தமிழ்த் தாத்தா எழுதியுள்ள அந்த நூலின் ஒவ்வொரு சொல்லும் அவரது குருவான பிள்ளையவர்களின் பெருமையை உணர்த்தும்.
தவிர உ.வே.சா.வின் தன் வரலாறான `என் சரிதத்திலும்` மீனாட்சி சுந்தரம் பிள்ளை பற்றிய பல முக்கியமான குறிப்புகள் உண்டு.
எண்ணற்ற கோயில்களின் பழைய வரலாறுகளை ஆராய்ந்து தல புராணங்களை அழகிய செய்யுள்களில் எழுதிக் குவித்தவர் இவர். தம் வாழ்நாள் முழுவதும் இந்தப் பணியை அவர் சோர்வில்லாமல் செய்து வந்தார். இதன் காரணமாக தலபுராண வேந்தர் என அழைக்கப்படும் பெருமையும் இவருக்கு ஏற்பட்டது.
சிதம்பரம் பிள்ளைக்கும் அன்னத்தாச்சி அம்மையாருக்கும் 1815 ஆம் ஆண்டு மகனாகப் பிறந்த மீனாட்சி சுந்தரம் பிள்ளை, இளம் வயதிலேயே தமிழில் மிகுந்த தேர்ச்சியோடு விளங்கினார். உலா, கலம்பகம், பிள்ளைத் தமிழ் போன்ற பற்பல வடிவங்களில் செய்யுள் நூல்களைப் படைத்துள்ளார். பழைய இலக்கண வகைகள் பலவற்றிற்கு அவர் புத்துயிர் கொடுத்தார் என்றே சொல்ல வேண்டும்.
பக்தி இலக்கியத் துறையில் கற்பனை வளத்திற்காகக் `கற்பனைக் களஞ்சியம்` எனக் கொண்டாடப்பட்டவர் பிரபுலிங்க லீலை உள்படப் பல அரிய நூல்களின் ஆசிரியரான துறையூர் சிவப்பிரகாச சுவாமிகள். அவரைப் போலவே மீனாட்சி சுந்தரம் பிள்ளையும் கூடத் தமது அழகிய புத்தம்புதுக் கற்பனைகளால் பக்தி இலக்கியத் துறையை வளப்படுத்தியவர்.
மீனாட்சிசுந்தரம் பிள்ளை, தாம் எழுதிய நூல்களை ஏடும் எழுத்தாணியும் கொண்டு எழுதினார் என்று சொல்வதை விடவும் அருவியாய்க் கொட்டினார் என்று சொல்வதே பொருந்தும். பேச்செல்லாம் கவிமழையாய்ப் பொழியும் மாபெரும் மேதைமை அவருடையது.
நிற்கும்போது தமிழ் அவருடன் துணை நின்றது. நடக்கும்போது தமிழ் அவரோடு நடைபயின்றது. நின்றவாறும் நடந்தவாறும் தாமே எழுத்தாணி கொண்டும் தம் உதவியாளரிடம் சொல்லியும் அவர் படைத்த நூல்கள் பலப்பல.
சிதம்பரம் பிள்ளை என்னும் கனவான் பிள்ளையவர்களை நோக்கி, "திருவானைக்காவில் உறையும் ஸ்ரீ அகிலாண்டேசுவரி மீது ஒரு மாலை இயற்ற வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார்.
அப்பொழுது உடன் வந்த ஒருவர், "முன்னமே திருவண்ணாமலையை வலம் வரத் தொடங்கிய துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள் ஒருமுறை வலம் வருவதற்குள் சோணாசல மாலையைப் பாடி முடித்தார். அதுபோல நீங்கள் திருவானைக்காவில் உள்ள சம்புநாதரைத் தரிசனம் செய்து திரும்புவதற்குள் அம்மாலையைச் செய்வதற்கியலுமா?" என்று கேட்டார். இது பிள்ளையவர்களின் கவிப்புலமைக்கு விடப்பட்ட நேரடியான சவால்.
அடக்கமே உருவான மீனாட்சிசுந்தரம் பிள்ளை, நேருமானால் செய்யலாம் என்று பணிவோடு பதில் கூறினார்.
அன்று திருவானைக்கா பிரகாரத்தைச் சுற்றிவரும் போது அகிலாண்டேஸ்வரியின் அருளால் அவரிடமிருந்து செய்யுள்கள் பொங்கிப் பிரவகித்தன.
அப்படிச் சுற்றி வருவதற்குள் பாடி முடித்த பெருமைக்குரிய செய்யுள் நூல்தான் `அகிலாண்ட நாயகி மாலை` என்னும் தமிழ் நயம் செறிந்த அரிய நூல். சவாலை முன்வைத்தவர் அளவற்ற பிரமிப்போடு அவர் காலில் விழுந்து பணிந்தார்.

திருப்பூர் கிருஷ்ணன்
ஒருமுறை திருச்சியில் இருந்து நடந்தே திருச்சி அருகே உள்ள உறையூர் சென்று கொண்டிருந்தார் பிள்ளையவர்கள். வழியில் ஒரு வாய்க்கால் தென்பட்டது. நேரமோ அதிகாலை நேரம்.
பல் துலக்குவதற்காக அங்கு நின்று ஆலங்குச்சியை எடுத்துப் பல் துலக்கத் தொடங்கினார். சில வழிப்போக்கர்கள் அதைப் பார்த்தவாறு அவரைக் கடந்து சென்றார்கள்.
சுமார் ஒரு மணிநேரம் கழித்து அந்த வழிப்போக்கர்கள் அதே வழியில் திரும்பி வந்தார்கள். என்ன வியப்பு. மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் அங்கேயே கையில் பல் துலக்கும் குச்சியோடு சிந்தனையில் ஆழ்ந்து அமர்ந்திருந்தார்.
திகைப்படைந்த வழிப்போக்கர்கள் அவரிடம் `பெருமானே! உதய காலம் முதல் வெய்யில் வரும் வரையில் பல் துலக்குவது ஏன்?` என்று ஆச்சரியத்தோடு வினவினார்கள்.
அப்போதுதான், எழுதவிருக்கும் கவிதைகளைப் பற்றிச் சிந்தித்தவாறே நெடுநேரம் பல் துலக்கியிருக்கிறோம் என்பது பிள்ளையவர்களுக்கு உறைத்தது.
அவர் நகைத்தவாறே தலைப்பாகையில் செருகியிருந்த ஓலைகளையும் எழுத்தாணியையும் எடுத்து அங்கேயே அமர்ந்து தங்குதடை இல்லாமல் வெள்ளம்போல் கடகடவென்று பாடல்கள் எழுதலானார்.
சிறிது நேரத்தில் அவர் எழுத்தாணியில் இருந்து முழுமையாக உருவாகியது தியாகராச லீலை என்னும் புத்தம் புதிய செய்யுள் நூல். அந்த அதிசயத்தைப் பார்த்த வழிப்போக்கர்கள் திகைத்தார்கள். தேவரீர் சரஸ்வதி கடாட்சத்தை முழுமையாகப் பெற்றவர் எனக் கூறி அவரை இருகரம் கூப்பி வணங்கினார்கள் அவர்கள்.
மீனாட்சி சுந்தரம் பிள்ளை சிவனை வழிபடும் சைவர். அவர் சிவாலயங்களுக்குத் தான் தலபுராணங்கள் எழுதினார். அவரது அப்பழுக்கற்ற சிவபக்தியின் வெளிப்பாடே அவர் எழுதிய தலபுராணங்கள் என்று சொல்லலாம்.
ஒருமுறை விஷ்ணு ஆலயம் ஒன்றிற்குத் தல புராணம் இயற்ற வேண்டும் என அவருக்கு ஒரு வேண்டுகோள் வந்தது.
சிவ பக்தரான பிள்ளையவர்கள் ஒருபோதும் திருமாலை நிந்தனை செய்தவர் அல்லர். ஆனாலும் சிவனடியாரான தான் விஷ்ணு கோவிலுக்குத் தலபுராணம் எழுதுவது பொருத்தமாக இராது என எண்ணியது அவரது உள்ளம்.
திருமால் அடியவரான வேங்கடாசல முதலியாரிடம் விஷ்ணு புராணத்தை எழுதிப் பெறுவதே பொருத்தம் எனக் கூறி அந்தப் பணியை இன்னொருவர் செய்யுமாறு பரிந்துரைத்தார் பிள்ளை.
`தன்பெருமை தானறியாத் தன்மையன்` என்று சில அறிஞர்களைப் பற்றிச் சொல்வதுண்டு. இந்தக் கூற்று மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களுக்குப் பெரிதும் பொருந்தும்.
எண்ணற்ற செய்யுள்களை எழுதிக் குவித்த பிள்ளையவர்களுக்குத் தாம் எழுதிய செய்யுள்கள் பல மறந்துபோன சந்தர்ப்பங்களும் உண்டு. ஒரு செய்யுளை ஒருவர் சொன்னபோது `அடேடே. இந்தக் கற்பனை மிகச் சிறப்பாக உள்ளதே, இச்செய்யுள் எதில் உள்ளது?` என வியப்போடு வினவினார் பிள்ளை.
`தாங்கள் இயற்றிய கும்பகோண புராணத்தில்தான் இந்தச் செய்யுள் உள்ளது` எனப் பணிவோடு பதில்சொன்னார் அவரது சீடர்! பிள்ளையவர்களின் மனம் வியப்பில் ஆழ்ந்தது.
மாபெரும் கவியாற்றலோடு திகழ்ந்தாலும், ஒருபோதும் அவர் கர்வம் கொண்டதில்லை. `சிவபெருமான் என் மூலம் தன்னைப் பற்றி எழுதுவித்துக் கொள்கிறான்` என்றே அவர் மனப்பூர்வமாகக் கருதினார்.
மயிலாடுதுறையில் தமிழாசிரியராக வாழ்வைத் துவங்கினார் பிள்ளை. தம்மை நாடிவந்த மாணவர்களுக்குத் மிகுந்த ஈடுபாட்டோடு தமிழ் இலக்கியம் கற்பித்தார். தமிழைக் கற்பிப்பதில் அவருக்குப் பேரார்வம் இருந்தது.
அவர் வாழ்ந்த காலகட்டத்தில் ஆசிரியர்களுக்குக் கொடுக்கப்பட்ட ஊதியம் மிகக் குறைவு. சங்க காலம் தொட்டுத் தமிழ்ப் புலவர்களின் இல்லங்களில் நிரந்தரமாய்க் குடிகொள்ளும் வறுமை அவர் இல்லத்திலும் குடியேறத் தவறவில்லை. வாழ்நாள் முழுதும் பொருளாதாரச் சிக்கல் அவரைத் துரத்திக் கொண்டே இருந்தது.
திருவாவடுதுறை ஆதீனத்தில் பணிபுரிந்தவர் அவர். பிள்ளையவர்கள் காலமானபின் இவருக்கிருந்த கடனை அறிந்து இவர் மகனை வரச்சொல்லி கடன் கொடுத்தவர்களையும் வரச்சொல்லி எல்லாக் கடனையும் திருவாவடுதுறை ஆதீனம் அடைத்தது.
பிள்ளையவர்களுக்கென்று சலுகை செய்ததாய்ப் பின்னாளில் யாரும் குறை சொல்லக் கூடாது என்பதற்காக அவர் வீட்டிலிருந்த அவரது நூல்கள் அனைத்தையும் செய்த உதவிக்குப் பிரதியாக ஆதீனமே பெற்றுக் கொண்டது.
`இன்று மடத்திலேயே ஆகாரம் பண்ணினமையால் பலநாள் கழித்து இன்று நெய் கிடைத்தது` என்று உ.வே.சா.விடம் இவர் சொன்னதாக உருக்கத்துடன் உ.வே.சா. குறிப்பிட்டிருக்கிறார்.
நெய்ச்சோறு உண்ண இயலாத அளவு பொருளாதார சிரமங்கள் இவருக்கு இருந்தன. ஆனால் தம் வறுமையை என்றும் இவர் ஒரு பொருட்டாய் எண்ணியதில்லை. தமிழே வாழ்வாக வாழ்ந்தவர் பிள்ளை.
மீனாட்சி சுந்தரம் பிள்ளை சொல்லச் சொல்ல அவர் சொல்லும் கவிதைகளை ஏட்டில் எழுதிவந்தார் ஓர் உதவியாளர். நான் எழுதும் வேகத்திற்கு அவரால் செய்யுள் சொல்ல இயலவில்லை என்று அவர் தம் நண்பர் ஒருவரிடம் அங்கலாய்த்தார் அவர். அந்த விவரத்தை அறிந்துகொண்டார் பிள்ளையவர்கள்.
மறுநாள் அந்த உதவியாளர் வந்தபோது, கடகடவென மடைதிறந்தாற்போல் பிள்ளை கவிசொல்லத் தொடங்கினார். அதைப் பிரதியெடுக்க இயலாமல் திகைத்துப் போன அந்த உதவியாளர் பிள்ளையவர்களின் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டுக் கொண்டாராம்.
எழுதுபவரின் கைவலிக்கக் கூடாதே என்பதற்காகத்தான் பிள்ளையவர்கள் கருணையோடு நிதானமாகச் செய்யுள் சொல்லி வந்தார் என்ற விவரத்தை அப்போதுதான் அறிந்துகொண்டார் அந்த உதவியாளர்.
தம் உள்ளத்தில் பொங்கி வந்த தமிழை ஓலைச் சுவடியில் இறக்கி வைத்த பெரும் புலவரான மீனாட்சி சுந்தரம் பிள்ளை 1876 ஆம் ஆண்டு காலமானார்.
இன்றளவும் அவர் எழுதிய அளவு அத்தனை அதிக எண்ணிக்கையில் செய்யுள்கள் எழுதியவர் யாருமில்லை என்பதே அவர் பெருமையைப் புலப்படுத்தும்.
தொடர்புக்கு-thiruppurkrishnan@gmail
- ஆறு விதமான சக்திகளை கொண்டவராக தோன்றியவர் தான் முருகப்பெருமான்.
- திதிகளின் வரிசையில் சஷ்டி ஆறாவதாக வருவதால் அதற்கு மிகப்பெரிய வலிமை உண்டு.
முருகன் அருள் வேண்டி பக்தர்கள் இருக்கும் விரதங்களுள் மிகச்சிறப்புடையது சஷ்டி விரதம் ஆகும். மாதந்தோறும் வருகின்ற சஷ்டி, கிருத்திகை போன்ற தினங்களில் முருகப்பெருமானை வழிபாடு செய்வது சிறப்பான பலன்களை தரும்.
அமாவாசையை அடுத்து வரும் சஷ்ட வளர்பிறை சஷ்டி என்றும், பவுர்ணமியை அடுத்து வரும் சஷ்டி தேய்பிறை சஷ்டி என்றும் அழைக்கப்படுகிறது.
ஆறு விதமான சக்திகளை கொண்டவராக தோன்றியவர் தான் முருகப்பெருமான். முருகப்பெருமானை வழிபடுபவர்களுக்கு வாழ்வில் வல்வினைகள் நீங்கி நன்மைகள் ஏற்படும் என்பது நிச்சயம்.
திதிகளின் வரிசையில் சஷ்டி ஆறாவதாக வருவதால் அதற்கு மிகப்பெரிய வலிமை உண்டு. ஐஸ்வர்யத்தை தரக்கூடியது 6 என்ற வழக்கு ஜோதிடத்தில் உள்ளது.
ஜோதிடத்தில் 6-ம் எண்ணுக்கு உரிய கிரகம் சுக்கிரன். இவர் லட்சுமியின் அம்சமாக கருதப்படுகிறார். திருமணம், வாகனம், வீடு ஆகியவற்றை தரக் கூடியவரும் சுக்கிரன்தான். எனவே சஷ்டி திதியில் விரதம் இருந்தால் வேண்டிய அனைத்தையும் பெறலாம். 16 பேறுகளில் ஒன்றாகவே குழந்தைப்பேறு கருதப்படுகிறது. எனவே குழந்தைப்பேறுடன் மீதமுள்ள 15 பேறுகளையும் அளிக்கும் வல்லமை சஷ்டி விரதத்திற்கு உண்டு.
முருகன் அருள் வேண்டி பக்தர்கள் இருக்கும் விரதங்களுள் மிகச்சிறப்புடையது சஷ்டி விரதம். இந்த விரதத்தை மனதில் கொண்டே 'சஷ்டியிலிருந்தால் அகப்பையில் வரும்' என்ற பழமொழி எழுந்தது.
திருமணம் இல்லாமல் ஒருவருக்கு வாழ்க்கை முழுமையடையாது என்பது போல, குழந்தை இல்லாமல் திருமண வாழ்க்கை நிறைவு பெறாது. சஷ்டி விரதம் இருந்தால் நல்ல குழந்தைப்பேறு கிடைக்கும். நம் உள்ளத்தில் இறைவன் குடி கொள்வான் என்ற பொருளும் உண்டு.
வீட்டிலேயே சஷ்டி விரதத்தை கடைபிடிப்பவர்கள் அதிகாலையில் எழுந்து குளித்து விட்டு, முருகனுக்கு உகந்த வாசம் மிகுந்த மலர்களை சாற்றி, ஆறு விளக்குகளை கிழக்கு நோக்கி இருக்குமாறு ஏற்றி, பூஜை செய்து விரதத்தை தொடங்கலாம்.
ஆறுமுகனுக்கு ஆறு விளக்குகளை ஏற்றி வழிபடுவது மிகவும் சிறப்பு.
முருகனுக்கு உகந்த ஏதாவது ஒரு நைவேத்திய பொருளை படைக்கலாம். அதாவது சுண்டல் அல்லது சர்க்கரைப் பொங்கல் போன்று செய்யலாம்.
தேய்பிறை சஷ்டி அன்று வீட்டில் குறிப்பிட்ட முறையில் விளக்கேற்றி வழிபட்டால் வாழ்க்கையில் தோல்வி என்பதே ஏற்படாது. தொட்ட காரியங்கள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். அதோடு நீங்கள் என்ன வேண்டுதலை முன்வைத்து இந்த விளக்கை ஏற்றுகிறீர்களோ அந்த வேண்டுதல் நிச்சயம் நிறைவேறும்.
இதற்காக தேய்பிறை சஷ்டி நாளில் அதிகாலையில் எழுந்து நீராடி, வீட்டின் பூஜை அறையில் முருகன் படம் அல்லது விக்ரகத்தை எடுத்து, சுத்தம் செய்து, அலங்கரித்து வைத்துக் கொள்ளுங்கள். முருகன் படம் அல்லது விக்ரகத்திற்கு முன்பு இரண்டு வாழைப்பழங்களை ஒரு சிறிய தட்டில் எடுத்து வையுங்கள். அந்த வாழைப்பழத்தின் மத்தியில் சிறிதாக குழி போன்று ஏற்படுத்தி, அதில் சிறிதளவு நெய் விட்டு, திரிப் போட்டு தீபம் ஏற்றுங்கள். பஞ்சாமிர்தம் எப்படி முருகனுக்கு மிகவும் பிரியமான அபிஷேகப் பொருளோ அதே போல் இது முருகப் பெருமானுக்கு மிகவும் பிரியமான வேண்டுதலாகும். நெய் விளக்காக இதை ஏற்றுவது மிகவும் சிறப்பானது.
இந்த வாழைப்பழ தீபத்தை செவ்வாய்கிழமையிலும் கூட ஏற்றலாம். இருந்தாலும் சஷ்டி திதியில், அதுவும் நாளை தேய்பிறை சஷ்டி அன்று ஏற்றுவது மிகவும் சிறப்பானதாகும். இந்த விளக்கை ஏற்றி வைத்து, ஏதாவது ஒரு கோரிக்கையை முருகனிடம் முன் வைத்து மனதார வேண்டிக் கொள்ளுங்கள்.
அடுத்து வரும் சஷ்டி திதி அன்று இதே போல் விளக்கேற்றி மற்றொரு வேண்டுதலை வைக்கலாம். இந்த விளக்கை நம்பிக்கையுடன் ஏற்றி வந்தால் வாழ்வில் பல மாற்றங்களையும், அதிசயங்களையும் முருகப் பெருமான் நடத்துவதை காணலாம்.

இவ்விரதத்தை முழு நேரமும் இருக்க முடியாதவர்கள் பால் மற்றும் பழம் போன்றவற்றை சாப்பிடலாம்.
மீண்டும் மாலையில் பூஜை செய்து விரதத்தை முடித்துக் கொள்ளலாம். வீட்டிலேயே இருப்பவர்கள் விரதம் முடியும் வரை முருகனுக்கு விளக்கு ஏற்றி வைப்பது மிகவும் நல்லது.
வீட்டிலேயே முருகனின் பாமாலைகளைப் பாடலாம். குறிப்பாக கந்த சஷ்டி, திருப்புகழ் உள்ளிட்ட முருகனின் சிறப்புகளை உணர்த்தும் பாடலை படிக்கலாம்.
மாலையில் அருகில் உள்ள கோயிலுக்கு சென்று முருகப்பெருமானை வணங்க வேண்டும். மேலும் நவகிரக சன்னிதியில் இருக்கும் சுக்கிர பகவானுக்கு தீபங்கள் ஏற்றி வணங்க வேண்டும்.
பின்பு வீடு திரும்பியதும் பூஜை அறைக்கு சென்று, முருகப்பெருமானை வணங்கி உங்களின் சஷ்டி விரதத்தை முடித்து அவருக்கு வைக்கப்பட்ட நெய்வேத்திய பிரசாதங்களை சாப்பிட்டு விரதத்தை முடிக்கலாம்.
நாளை (ஞாயிற்றுக்கிழமை) தேய்பிறை சஷ்டியில் முருகன் கோவிலுக்கு சென்று அபிஷேகத்திற்கு தேவையான பொருட்களில் உங்களால் முடிந்த பொருட்களை வாங்கி கொடுக்கலாம். குறிப்பாக இளநீர் மற்றும் தேன் போன்றவற்றை வாங்கி கொடுப்பதன் மூலம் சுபிட்சம் பெருகும்.
தேய்பிறை சஷ்டி விரதம் இருப்பவர்களுக்கு திருமண தடை நீங்கி மனதிற்கேற்ற வாழ்க்கை துணை அமையும். ஈடுபடும் காரியங்கள் அனைத்திலும் சிறப்பான வெற்றிகள் உண்டாகும். நேரடி, மறைமுக எதிரிகள் விலகுவார்கள்.
உடல் மற்றும் மன ஆரோக்கியம் மேம்படும். பொருளாதாரத்தில் இருந்துவந்த கஷ்ட நிலை நீங்கும். தொழில், வியாபாரங்களில் லாபம் பெருகும்.
பொதுவாக தீராத பிரச்சினையில் தவிப்பவர்கள், திருமணம் ஆகாமல் தள்ளி போய் கொண்டே இருப்பவர்கள், குழந்தை இல்லாதவர்கள், வாழ்க்கையில் தோல்விகளை மட்டுமே சந்தித்து வருபவர் ஆகியோர் சஷ்டி திதியில் விரதம் இருந்து முருகனை வழிபடலாம். சஷ்டியில் விரதம் இருப்பவர்கள் முருகனுக்குரிய மந்திரம், சுலோகம் போன்றவற்றை சொல்லித்தான் வழிபட வேண்டும் என்பது கிடையாது. உண்மையான பக்தியுடன், மனமுருகி முருகப்பெருமானை அழைத்து வேண்டுதலை சொன்னால் போதும், முருகப் பெருமான் அந்த வேண்டுதலை நிச்சயம் நிறைவேற்றி வைப்பார்.
வேலை காரணமாக வெளியில் செல்பவர்கள், உடல் வேலையில் ஈடுபட்டிருந்தாலும் மனத்தில் ஓம் முருகா என்ற மந்திரத்தை ஜெபித்தபடி பணியை தொடரலாம். புலால் உணவுகள் மற்றும் போதை வஸ்துக்களை தவிர்க்க வேண்டும். மனதில் தீய எண்ணங்களோ, கடுமையான உணர்ச்சிகளோ இல்லாதவாறு இவ்விரதத்தை அனுஷ்டிக்க வேண்டும்.
உடல்நிலை சரியில்லாதவர்கள் ஒரு வேளை உணவு மட்டும் உண்டு இந்த சஷ்டி விரதத்தை அனுஷ்டிக்கலாம். குடும்பத்தில் துன்பங்கள் நீங்கவும், வேலைவாய்ப்பு, கடன் தொல்லைகள் முழுவதுமாக நீங்கவும் சஷ்டிவிரதத்தை கடைப்பிடிக்கலாம். முழு நாளும் உபவாசம் இருக்க இயலாதவர்கள் அன்றைய தினம் காலையில் ஆறு மிளகையும் ஆறு கை நீரையும் முதல் உணவாக எடுத்துக் கொள்ளலாம்.
இந்த முறையில் தொடர்ந்து விரதம் இருந்திட முருகப்பெருமானின் அருளால் மேலான செல்வமும், வெற்றியடையும் யோகமும் கிட்டும் என்பது ஐதீகம். நாளை தேய்பிறை சஷ்டி விரதம் இருந்து முருகனின் திருவருள் பெறுவோம்.
மணமாலை தந்தருள்வாய்
விரைவில் திருமணம் நடைபெற அருணகிரிநாதர் இயற்றிய இந்த பாடலை தேய்பிறை சஷ்டி தினத்தன்று உளப்பூர்வமாக பாடி வந்தால் பலன் கிடைக்கும்.
நீலங்கொள் மேகத்தின் மயில்மீதே
நீ வந்த வாழ்வைக் கண்டதனாலே
மால் கொண்ட பேதைக்குன் மணநாறும்
மார்தங்கு தாரைத் தந்தருள்வாயே!
வேல்ெகாண்டு வேலைப் பண்டெறிவோனே
வீரங்கொள் சூரர்க்குங் குலகாலா
நாலந்த வேதத்தின் பொருளோனே
நானென்று மார்தட்டும் பெருமானே.
பொருள்: அன்றொரு நாள், சூரன் மீது வேலாயுதத்தை விடுத்தவனே! வீரம்மிக்க அசுரர் குலத்திற்கு காலனாக வந்தவனே! வேதங்கள் கூறுகின்ற உறுதிப் பொருளாகத் திகழ்பவன் நான் என்று மார்தட்டிக் கொண்டு வருகின்ற எம்பெருமானே! நீலவண்ணம் கொண்ட மேகம் போல தோகை விரித்தாடுகின்ற மயில் மீது வரும் முருகப் பெருமானே! நீ வருகின்ற அழகினைக் கண்டு, மயக்கம் கொண்ட பேதையாகிய எனக்கு, உன் மார்பில் ஆடுகின்ற நறுமணம் மிக்க மலர் மாலையினைத் (மணமாலை)தந்தருள்வாயாக.
- இன்றைய செலவுக்கு சம்பாதிக்கிறோம்; நாளைய செலவுக்கு சேமிக்கிறோம்; பின்னால் வரக்கூடிய செலவுகளுக்கு முதலீடு செய்து பணத்தைப் பெருக்குகிறோம்.
- நம் ஒவ்வொருவரின் வீட்டிலும், ஒவ்வொருவரின் பொருளாதாரத்திலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் விஷயமாக இருக்கிறது.
மாலை மலர் வாசகர்களுக்கு அன்பார்ந்த வணக்கங்கள். செல்வத்தை நோக்கிய நம் பயணத்தில் வரவை விட சேமிப்பு முக்கியம் என்று பார்த்தோம். சேமிப்புக்கான வழிகள் பற்றிப் பேசும் முன் அந்த சேமிப்பை செய்யவிடாமல் நம்மைத் தடுக்கும் தடைகளை உடைக்க வேண்டும் அல்லவா? நாம் உடைக்கவேண்டிய முதன்மையான தடை எது? நமது செலவுப் பழக்கம்.
மிதக்கும் நகரம் என்று வர்ணிக்கப்படும் மாபெரும் கப்பல்கள் கூட கடலில் மூழ்கிப் போகக் காரணம் அவற்றில் உருவாகும் சிறு ஓட்டைதான் என்று கூறப்படுகிறது. யாரும் கவனிக்கும் முன் அந்த ஓட்டை மெல்ல மெல்லப் பெரிதாகி, அதன் வழியே உள்ளே வரும் கடல் நீர் கப்பலையே முழுகடித்துவிடுமாம். இது போலவே நாம் பார்த்துப் பார்த்துக் கட்டமைக்கும் குடும்பம் என்னும் கப்பல் கூட முழுகிப் போவதற்கு, நம்மிடம் உருவாகும் அநாவசியச் செலவு என்னும் சிறு பழக்கம் காரணமாகிவிடுகிறது.
இதையெல்லாம் பேசுவதால் நான் ஏதோ செலவு செய்வதே தவறு என்று உபதேசிப்பதாக எண்ணவேண்டாம். செலவில்லாவிட்டால் ஏன் படிப்பு, எதற்கு வேலை, என்னத்–துக்கு வருமானம்? செல–வில்லாவிட்டால் வாழ்க்கையே இல்லை. இன்றைய செலவுக்கு சம்பாதிக்கிறோம்; நாளைய செலவுக்கு சேமிக்கிறோம்; பின்னால் வரக்கூடிய செலவுகளுக்கு முதலீடு செய்து பணத்தைப் பெருக்குகிறோம்.
ஆனால் சில பொருட்கள் அநாவசியம் என்று உணராமலே அல்லது உணர்ந்தாலுமே நாம் அவற்றை வாங்கிக் குவிக்கும் போக்குக்கு அடிமை ஆகிவிட்டோம். நம்பவில்லை என்றால், ஒரு முறை உங்கள் வீட்டைச் சுற்றிப் பாருங்கள். அலமாரியைத் திறந்தாலே வெளியே வந்து விழும் அளவுக்கு டிரச்கள்; பாதி படிக்கப்பட்டும், தொடவே தொடாமலும் தூசி படிந்து கிடக்கும் புத்தகங்கள்; நான்கைந்து வகை ஷூக்கள்; ஹேண்ட்பேகுகள்; போன்கள், அவற்றின் அக்சசரீஸ்; தேவையில்லாத பர்னிச்சர்கள்; அடுப்படியில் கூட ஏழெட்டு வாணலிகள், தேவைக்கு அதிகமான தட்டு, தம்ளர், கரண்டி வகையறாக்கள்; வெறும் பந்து விளையாட்டிலேயே சந்தோஷம் கொள்ளும் நாய்க்குக்கூட சிறிதும், பெரிதுமாகப் பலவித விளையாட்டுப் பொருட்கள், தின்பண்டங்கள்.
இவை போதாதென்று இன்னும் சில வீடுகளில் ஒரு ஓட்டை சைக்கிள், ஓடாத கடிகாரங்கள், பேன்கள், ரிப்பேராகிப் போன கம்ப்யூட்டர், வாசல் ஓரத்தில் மூடி முக்காடு போட்டு இரண்டு வருடங்களாகத் தூசி படிந்த பைக் போன்றவற்றையும் காணலாம். இவற்றில் தேவைக்காக வாங்கியவை சிலவே. மற்றவற்றை ஏன் வாங்கினோம்? சிலர் ஆசைக்காகவும், சிலர் அடுத்தவரை அசத்துவதற்காகவும் வாங்கியிருக்கலாம். ஆனால் இவை இரண்டையும் விட ஆபத்தான காரணம் ஒன்று உண்டு.
ஆரம்பத்தில், வேலை செய்யும் இடத்துக்கு வந்து டீ சப்ளை செய்பவரிடம் 5 ரூபாய்க்கு டீ வாங்கும் நாம், சற்று அதிக சம்பளம் கிடைத்ததும், கடைக்குச் சென்று பதினைந்து ரூபாய்க்கு இஞ்சி டீ குடிப்பதை வழக்கமாக்குகிறோம். இது மெல்ல மெல்ல வளர்ந்து கோடைக் காலத்தில் 50 ரூபாய் ஜூசாக மாறுகிறது.
10 ஆயிரம் ரூபாய்க்கு ஒரு ஸ்மார்ட் போன் வாங்கினோம், சரி. பெட்டர் மாடல், பெட்டர் கேமரா என்று ஏதேதோ சொல்லி ஒரே வருடத்தில் 25 ஆயிரத்துக்கு அடுத்த மாடலை வாங்குகிறோமே, ஏன்? நம் பணத்தைச் சுரண்டும் இந்த அபாயகரமான பழக்கத்துக்கு ஒரு பெயர் உண்டு. அதுதான் லைப்ஸ்டைல் இன்ப்ளேஷன் – அதாவது நமக்கு வருமானம் உயர, உயர அதற்கு நிகராக செலவையும் அதிகரிக்கும் பழக்கம்.
இந்த லைப்ஸ்டைல் இன்ப்ளேஷன் வியாதி உங்களிடம் இருக்கிறதா என்று அறிந்து கொள்ள கீழ்க்காணும் பட்டியலில் எந்தெந்தப் பழக்கங்களை நீங்கள் அனுசரிக்கிறீர்கள் என்று பாருங்கள்:
* கையில் தண்ணீர் எடுத்துச் செல்லாமல் கடையில் வாட்டர் பாட்டில் வாங்குவது.
* ஓட்டலில் 100 ரூபாய்க்குக் கிடைக்–கும் மசால் தோசைக்கு, சுவிக்கியில் 160 ரூபாய் வசூலிக்கப்படும் என்று தெரிந்தாலும் ஓட்டலுக்கு நடந்து செல்ல சோம்பேறித்தனப்பட்டு சுவிக்கி, சொமாட்டோவில் ஆர்டர் செய்வது.
* ஓட்டல், சினிமா இல்லாத வாரக்கடைசி வேச்ட் என்று எண்ணுவது
* ஒரு டிவி நிகழ்ச்சியில் கூறியது போல பிரியாணி ஆசையில் 100 கிலோமீட்டர் தூரம் கூட பயணிக்கத் துணிவது
* 50 ரூபாய்க்கான மளிகைப் பொருள் தேவை என்றால், பிரீ டெலிவரிக்கு ஆசைப்–பட்டு, 600 ரூபாய்க்கு ஏதேதோ ஆர்டர் போடுவது.
* சிறியதோ, பெரியதோ, விசேஷங்களுக்குப் போகும் முன் பியூட்டி பார்லருக்கு ஒரு விசிட் தேவை என்பது
* ஒவ்வொரு சின்ன பார்ட்டிக்கும் புதிய ஆடைகள், அணிமணிகள் அணிந்து அசத்தவேண்டும் என்று ஆசைப்படுவது.

சுந்தரி ஜகதீசன்
* முக்கியமாக இவையெல்லாம் நமது வாழ்வில் நாம் ஒரு நல்ல நிலையை அடைந்துவிட்டோம் என்பதை மற்றவர்க்குப் பறைசாற்றும் விஷயங்கள்; ஆகவே இவற்றை மாற்றுவதே கௌரவக் குறைச்சல் என்று நினைப்பது.
இந்தப் பழக்கங்கள் உங்களிடம் இருந்தால் மெல்ல மெல்ல நீங்கள் லைப்ச்டைல் இன்ப்ளேஷனுக்கு அடிமை ஆகிறீர்கள் என்று அர்த்தம்.
உங்கள் மைண்ட்வாய்ஸ் கேட்கிறது. – வாழ்வில் உயர்வை அடையத்தானே நாம் இத்தனை மெனக்கெடுகிறோம்? சற்று நமக்காக, நம் வசதிக்காக செலவு செய்வதில் என்ன தவறு என்றுதானே கேட்கிறீர்கள்?
நமக்காக செலவு செய்யலாம்; செய்யவேண்டும். ஆனால் அது நாம் விரும்பி, உணர்ந்து, அபூர்வமாக வாங்கும் ஒன்றாக இருக்கவேண்டும். தினப்படியான செலவுகளில் லைப்ஸ்டைல் இன்ப்ளேஷன் வரக்கூடாது. வருமானம் எவ்வளவு உயர்ந்தாலும், செலவும் அவ்வளவே உயரும் என்றால் சேமிப்பது எப்படி, முதலீடு செய்வது எப்படி, வாழ்வின் அடுத்தடுத்த கட்டங்களுக்கு உயர்வது எப்படி?
ஆனால் அடுத்தவர் போல வாழும் ஆசையும், கிரெடிட் கார்ட் வருகையும் நம்மை செலவு செய்யத் தூண்டுகின்றன. வீட்டு வேலைகளை எளிதாக்க மிக்சி, கிரைண்டர், வாஷிங் மெஷின்களோடு, வேலைக்குப் போய்வர ஒரு பைக் அல்லது சின்னக் கார், செல்போன், கம்ப்யூட்டர், இன்டர்நெட் என்ற எல்லாமும் ஆசைகளாக இருந்து இன்று தேவை என்றாகிவிட்டன. தவறில்லை. ஆனால் அவற்றை ஒவ்வொன்றாக வாங்காமல், மொத்தத்தையும் கடனில் வாங்க முயல்வதுதான் தவறு.
பீச், பார்க், கோவில் என்று இலவசமாகக் காற்று வாங்கிய நாம், ஓட்டல், சினிமா, எக்சிபிஷன், மால், டூர் போன்ற செலவுகள் நிறைந்த பொழுதுபோக்குகள் அத்தியாவசியம் என்று எண்ண ஆரம்பித்து விட்டோம். "சந்தையில் புதிதாக என்ன வந்திருக்கிறது என்று வேடிக்கைதான் பார்க்கிறேன்" என்று ஆரம்பித்து ஆன்லைனில் வாங்கிக் குவிக்கும் மனப்போக்கும் பெருகியுள்ளது.
ஒரு சிறிய விசேஷத்திற்கும், கொண்டாட்டத்திற்கும் கூட சக்திக்கு மீறிய ஆர்ப்பாட்டமான செலவுகள்! ஒரு சாதாரணத் திருமணத்தில் கூட பிளெக்ஸ் பேனர்கள், அரண்மனை போன்று அலங்கரிக்கப்பட்ட மண்டபம், ராஜகுமாரன் போன்ற உடைகள் அணிந்த மணமகன், சரம், சரமாக நகைகள் அணிந்த மணமகள், அதற்கு சற்றும் குறையாத அலங்காரங்களில் உறவினர்கள், தமிழ் கலாச்சாரத்துக்கு அறிமுகமேயில்லாத ஹல்தி, மெஹந்தி, சங்கீத், பேச்சிலர் பார்ட்டிகள், இலையில் இடமே இல்லாத அளவுக்கு நிரப்பப்படும் வித விதமான உணவுப் பதார்த்தங்கள் என்றாகி விட்டது.
இவை அனைத்தும் யாரையும் கசக்கிப் பிழியாத வரையில், கடன் வலையில் வீழ்த்தாத வரையில், சரி என்று கூறலாம். ஆனால் அம்பானி, நயன்தாரா போன்றவர்களின் வீட்டுத் திருமணங்களின் தாக்கம் சமூகத்தின் வேர் வரை சென்று பாய்வதையும், சாதாரண மக்களுக்கும் கடன் வாங்கியாவது ஆடம்பரமாகத் திருமணம் செய்யவேண்டும் என்ற ஒரு பெரிய அழுத்தத்தை உருவாக்குவதையும் பார்க்க முடிகிறது.
அம்பானி செய்த ரூ.5000 கோடி செலவு அவரது நிகர சொத்து மதிப்பில் 0.50 சதவீதம் மட்டுமே. நயன்தாரா தன் திருமணத்தைப் படம் எடுக்கும் வாய்ப்பை நெட்ப்ளிக்சுக்கு வழங்கி லாபம் பார்த்ததாகக் கேள்விப்படுகிறோம்.
ஆனால் நாம் நம் சொத்து மதிப்பில் 10 சதவீதம் முதல் 15 சதவீதம் வரை ஆடம்பரத் திருமணங்களில் இழக்கிறோம். கடன் வாங்கியாவது கொண்டாடுகிறோம். நிதி நிறுவனங்களோ தங்கள் லாபத்தையே கருத்தில் கொண்டு, திருமணத்துக்கு மட்டுமின்றி, ஹனிமூன் போவதற்குக் கூட கடன் தரத் தயாராக உள்ளன. இந்த நிலையில், கடன் என்ற புதை குழியின் மீது திருமணம் என்னும் மாளிகையைக் கட்டுவது உசிதமா என்று யோசிப்பது அவசியம்.
வாரம் ஒரு டாபிக் என்று பேசிவரும் நாம் செலவு பற்றி மட்டும் இரண்டு வாரங்கள் பேச வேண்டிய நிலைக்கு ஆளாகி இருக்கிறோம். காரணம் இது நம் ஒவ்வொருவரின் வீட்டிலும், ஒவ்வொருவரின் பொருளாதாரத்திலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் விஷயமாக இருக்கிறது. ஆகவே இந்த ஜல்லிக்கட்டுக் காளை விளைவிக்கும் பிரச்சினைகள் குறித்தும், அதை அடக்க நாம் எடுக்க வேண்டிய முயற்சிகள் குறித்தும் அடுத்த வாரமும் காணலாம்.
அதுவரை மேலே கூறப்பட்ட அல்லது கூறாமல் விடுபட்ட உங்கள் அநாவசிய செலவுப் பழக்கங்கள் எவை, அவற்றைத் தவிர்ப்பதன் மூலம் எவ்வளவு பணம் மிச்சமாகும் என்பதை ஒருமுறை சிந்திக்கலாமே!
- பழையன முடிந்து புதியவை உருவாக வேண்டும்.
- இன்பங்கள் அனைத்துமே நம்மை மயக்கிப் போட்டு விடும் தன்மை வாய்ந்தவை.
அடுத்ததாக நாம் பார்க்கவிருப்பது ஏழாவது விதிமுறை.
"இன்பங்களில் எச்சரிக்கையாக இருந்து, துன்பச் சோதனைகளை சாதனையாக்க வேண்டும்."
-இதுதான் அந்த ஏழாவது விதிமுறை.
நாம் ஏற்கனவே ஞானம் என்றால் என்ன, விடுதலை என்றால் என்ன என்பதை பார்த்து விட்டோம்.
இயற்கையின் ஒவ்வொரு அம்சமும், கணத்துக்கு கணம் புத்தம் புதியதாக உள்ளது. பழமை என்பது மருந்துக்கு கூட கிடையாது.
பழையன முடிந்து புதியவை உருவாக வேண்டும்.
நம் ஒவ்வொருவரது உடலும் உள்ளமும் ஒவ்வொரு நொடியும் புத்தம் புதிதாக இயங்க வேண்டுவது தான் இயற்கையின் அமைப்பு.
அது ஓர் உயிருள்ள ஆறாகக் கணந்தோறும் இயங்கவேண்டும்.
நமது மனம் அவ்வாறு தடங்கல் இல்லாமல் இயங்குவதைதான் விடுதலை, முக்தி, மோட்சம் என்று அழைக்கிறோம்.
கடந்து போனவை அனைத்தும் முடிந்து போய்விட வேண்டும். அவை முடிந்து போகாமல் தங்கிவிடக் கூடாது.
ஆனால் சிலவற்றை நாம் , அவை தொடர்ந்து இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு விடுவோம்.
எவற்றின் மீது நாம் அவ்வாறு ஆசை கொள்வோம்?
மகிழ்ச்சி மற்றும் மன அமைதியை விரும்பாதவர் எவரும் உண்டோ?
மகிழ்ச்சி மற்றும் மன அமைதியில் நாம் நம்மை மறந்து விடுவோம்.
இன்பங்கள் அனைத்துமே நம்மை மயக்கிப் போட்டு விடும் தன்மை வாய்ந்தவை.
அவை அனைத்தும் நம்மை முடக்கிப் போட்டு விடுபவை. ஆகவே அவற்றின் மீது நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
நீரோட்டமாக இயங்கும் நம்முடைய மனதில், அவை அனைத்தும் ஒரு தடங்கலையும் தேக்கத்தையும் ஏற்படுத்திவிடக்கூடும்.
ஆனால் துன்பங்கள் அவ்வாறு அல்ல.
அவற்றில் இருந்து நாம் அனைவரும் தப்பி ஓடிடவே விரும்புவோம்.
துன்பங்கள் எவையும் நம்மை முடக்கிப் போடுவதில்லை. இயற்கையின் இயக்கத்துக்கு ஆதர வாகவே துன்பங்கள் அனைத்தும் வடிவமைக்கப் பட்டுள்ளன.
அவற்றை நாம் நமது உந்து சக்தியாக மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும். அவை நம்மை நிலைகுலைய வைத்து முடக்கிப் போடுவதற்கு வந்தவையாக எடுத்துக் கொள்ளக் கூடாது.
அவற்றையெல்லாம் துன்பம் எனும் மாறு வேடத்தில் வந்த நல்ல அம்சங்களாகவே எடுத்துக் கொள்ள வேண்டும். அவற்றை ஆக்கப்பூர்வமாக எவ்வாறு பயன்படுத்துவது என்றுதான் பரிசீலிக்க வேண்டும்.
ஒரு கிராமியக் கதை. அந்தக் காலத்தில் நடந்ததாக கூறப்படுகிறது.
அவர் ஒரு கிராமத்துப் பண்ணையார். அந்த கிராமத்தில் உள்ள பெரும்பாலான சொத்துக்கள் அனைத்தும் அவருக்கு மட்டுமே சொந்தம்.
செல்வச் செழிப்போடு இருந்த அவருக்கு குழந்தைச் செல்வம் மட்டும் இல்லை.
கோவில் குளங்களுக்குச் சென்று பிரார்த்தனைகள் விரதங்கள் பலவற்றை மேற்கொண்டதன் விளைவாக அவருடைய வயதான காலத்தில் அவருக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்தது.
அவனுக்கு செல்வம் எனப் பெயரிட்டு ஆசையாக வளர்த்தார்.

ஸ்ரீ பகவத்
வசதிக்குப் பஞ்சமில்லை. அபூர்வமாகக் கிடைத்த செல்லக் குழந்தையாக வேறு இருந்தான்.
கட்டுப்பாடுகள் இல்லாமல் செல்லமாக வளர்ந்த அவனை தீய பழக்கங்கள் பல ஆட் கொண்டு விட்டன.
மோசமான நண்பர்கள் மத்தியில் மாட்டிக் கொண்டான்.
திருமணம் செய்து வைத்தால் திருந்திவிடுவான் என்று திருமணமும் செய்து வைத்தார்.
ஒரு குழந்தை கூட பிறந்து விட்டது. ஆனாலும் இவன் திருந்துவதாக இல்லை.
குழந்தையைப் தூக்கிக் கொண்டு மனைவியும் தாய் வீட்டுக்குப் போய் விட்டாள்.
வருத்தத்தில் இவனுடைய தாயாரும் மறைந்து விட்டார். வயதான தகப்பனாரும் நோய் வாய்ப்பட்டார்.
செல்வச் செழிப்பில் இருந்த இவன் கடன் வாங்கி செலவு செய்யும் நிலைக்கு வந்து விட்டான்.
ஒரு கட்டத்தில் இவனுடைய சொத்துக் களையும் விட கடனே அதிகமாக இருந்தது.
கடன்கள் அதிகரிக்கவும் நண்பர்கள் அனைவரும் காணாமல் போய்விட்டார்கள்.
படுக்கையில் இருந்த தகப்பனார் மகனைக் கூப்பிட்டுக் கூறினார்: "நாம் இந்த ஊரில் பல தலைமுறைகளாக செல்வாக்கோடு வாழ்ந்தவர்கள். நமது வீட்டுக்கு அரண்மனை என்று பெயர்.
அதனால் எந்த கஷ்டங்கள் ஏற்பட்டாலும் இந்த வீட்டை மட்டும் விற்றுவிடக் கூடாது. அப்படியே ஒரு வேளை விற்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும் பட்சத்தில், வடபக்கத்து அறையில் உனக்கு வேண்டிய சில ஏற்பாடுகளைச் செய்துள்ளேன். அதன்படி நடந்து கொள்."
செல்வம் அதனை ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை.
அந்த தகப்பனாரும் சில தினங்களில் இறந்துபோய்விட்டார்.
செல்வம் கடன் சுமை தாங்காமல் தடுமாறினான்.
அவனைச் சுற்றி நண்பர்கள் எவரும் இல்லை. கடன் காரர்கள் மட்டுமே இருந்தார்கள்.
எல்லா சொத்துகளையும் விற்று முடித்துவிட்டான். வீடு மட்டுமே மீதம் இருந்தது. அதை விற்றால் கூட கடன்கள் தீராது.
என்ன செய்வது?
தற்கொலை செய்து கொள்ளலாம்
என முடிவு செய்தான். தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொள்ள பொருத்தமான கயிறு ஒன்றைத் தேடினான்.
அப்போதுதான் அவனுடைய தகப்பனாரும் ஏதோ கூறினாரே என்ற எண்ணம் அவனுக்கு வந்தது.
ஏதோவொரு அறையில் எனக்கு வேண்டிய ஏற்பாடுகளை செய்து வைத்துள்ளதாகக் கூறியிருந்தாரே என்று எண்ணியவாறே அவர் குறிப்பிட்ட அந்த அறையையும் திறந்து பார்த்தான்.
அந்த அறையில் ஒரு தூக்குக் கயிறு தொங்கவிடப் பட்டிருந்தது. அந்தக் கயிற்றில் சீட்டு ஒன்றும் இணைக்கப்பட்டிருந்தது.
"மகனே செல்வம்! இந்த வீடு ஒரு பாரம்பரியம் மிக்க வீடு. எக்காரணத்தைக் கொண்டும் நீ இந்த வீட்டை விற்று விடக் கூடாது. அப்படி ஒரு வேளை இந்த வீட்டை விற்று தான் ஆகவேண்டும் என்ற சூழ்நிலை ஏற்பட்டதேயானால்,
அப்படி விற்பதைவிட இந்த தூக்குக் கயிற்றை பயன்படுத்தி உனது உயிரை மாய்த்துக் கொள்ளலாம்!"
என்று அந்தச் சீட்டில் எழுதப்பட்டிருந்தது.
ஏற்கனவே இவனும் அந்த முடிவில்தான் இருந்தான். அவனுடைய தந்தையும் அதனையே விரும்பியதால், அவனும் அந்தக் கயிற்றிலேயே தலையைக் கொடுத்து தொங்கினான்.
அந்தக் கயிற்றின் மறுமுனையானது விட்டத்சுச்சுவரில் இருந்த ஒரு மரக்கதவில் பொருத்தப்பட்டிருந்தது.
அவன் அந்தக் கயிற்றில் தொங்கவும் அவனுடைய எடையைத் தாங்காமல், அந்தக் கதவும் திறந்து கொண்டது.
அங்கிருந்து தங்கமும் வைரங்களும் கொட்டி, அந்த அறையை நிறைத்தன.
அவன் மீண்டும் செல்வந்தனாக மாறிவிட்டான். தீய நண்பர்களைப் புரிந்து கொண்டு அவர்களை விட்டு ஒதுங்கி விட்டான். தீய பழக்கங்களை விட்டு விலகி விட்டான். அவனுடைய மாற்றத்தைப் புரிந்து கொண்ட மனைவியும் குழந்தையுடன் திரும்பிவிட்டாள்.
உயிரை வாங்கும் தூக்குக் கயிறே அவனுக்கு உலகையே புரிய வைத்து உயிர் வாழவும் கற்றுக் கொடுத்தது.
தூக்குக் கயிறு எனும் துன்பத்தின் பின்னால் ஒளிந்து கிடந்த இன்ப வாழ்வு அவனுக்குக் கிடைத்துவிட்டது.
ஆனால் துன்பத்தை புறக்கணிக்கும் போக்குதான் பெரும்பாலும் உள்ளது.
உத்தங்க மகரிஷி என்று ஒரு ரிஷி வாழ்ந்து வந்தார்.
ஏதோவொரு சந்தர்ப்பத்தில், ஸ்ரீ கிருஷ்ணர், அவருக்கு வேண்டிய வரங்களையெல்லாம் கொடுக்கத் தயாராக இருந்தார்.
ஆனால் உத்தங்கர் மிகவும் உயர்ந்தவர்; எளிமையானவர்.
"நான் நன்றாகவே இருக்கிறேன். எந்தவொரு வரமுமே எனக்குத் தேவையில்லை"
என்று கூறிவிட்டார்.
ஆனால் கிருஷ்ணர் அவரை விடுவதாக இல்லை. ஏதாவதொரு வரத்தை வாங்கித்தான் ஆகவேண்டும் என்று வற்புறுத்தினார்.
உத்தங்கரும் யோசித்துப்பார்த்தார்.
"நான் ஒரு சந்நியாசி. உடுத்திக் கொள்ள ஒரு கந்தல் துணி போதும். நான் எப்போதும் தேசாந்திரமாக எங்கேயாவது போய்க் கொண்டே இருப்பேன். தங்குவதற்கு மரத்தடியோ அல்லது மலைக்குகையோ போதும். வேறு எதுவுமே எனக்கு தேவைப்படவில்லையே" என்று கூறினார்.
கிருஷ்ணர் அவரை விடுவதாக இல்லை.
கடைசியில் எப்படியோ ஒரு வழியாக ஒரு வரத்தைக் கேட்டார்.
"தேசாந்திரமாக நான் போய்க்கொண்டு இருக்கும் போது சில சந்தர்ப்பங்களில் என்னுடைய தாகத்தைத் தணிக்க தண்ணீர் கிடைக்காமல் போய்விடும். அந்த சமயத்தில் நான் உன்னை நினைத்துக் கொள்கிறேன். எனக்கு நீ தண்ணீர் மட்டும் கொடுத்தால் போதும்" என்று கூறிவிட்டார்.
இப்படியும் ஒரு வரமா என்று தோன்றியது. இருந்தாலும் சரி என்று ஒத்துக் கொண்டார்.
அந்த வரத்தைக் கேட்பதற்கான சந்தர்ப்பமும் ஏற்படவில்லை.
ஒரு முறை உத்தங்கர் ஒரு பெரிய பாலைவனத்தின் வழியாக நடக்கவேண்டியது ஏற்பட்டது. நல்ல வெயில். கடுமையான தாகம்.
எங்கு தேடியும் தண்ணீர் கிடைக்கவில்லை.
அப்போதுதான் கிருஷ்ணர் அவருக்குக் கொடுத்த வரம் நினைவுக்கு வந்தது.
அவர் நினைத்தது கிருஷ்ணருக்கும் தெரிந்தது.
"வரம் கிடைப்பதாக இருந்தால், ஒரு சராசரி மனிதன் உலகத்தையே கேட்டு விடுவான். ஆனால் இவரோ வெறும் தண்ணீர் மட்டும் கொடுத்தால் போதும் என்று கூறிவிட்டார். இவருக்கு தண்ணீருக்குப் பதிலாக தேவலோகத்தில் உள்ள அமிர்தத்தையே கொடுத்துவிட வேண்டும்" என்று கிருஷ்ணர் விரும்பினார்.
அவர் உடனடியாக இந்திரனைத் தொடர்பு கொண்டு உத்தங்கருக்கு அமிர்தத்தை வழங்குமாறு கேட்டுக் கொண்டார்.
ஆனால் இந்திரன் சம்மதிக்கவில்லை.
"அமிர்தம் தேவர்களுக்கு மட்டுமே உரியது. உத்தங்கர் ஒரு மனிதர். அதனால் அவர் அமிர்தத்தை எடுத்துக் கொள்ள முடியாது" என்று கூறி இந்திரன் ஆட்சேபித்தார்.
கிருஷ்ணரும் உத்தங்கரின் சிறப்புகளை எடுத்துக் கூறி இந்திரனை சம்மதிக்க வைத்தார்.
இந்திரனும் ஒரு நிபந்தனையுடன் ஒப்புக் கொண்டார்.
அது என்ன நிபந்தனை?
தொடர்புக்கு: வாட்ஸ்அப் - 8608680532






