என் மலர்tooltip icon

    ரியோ ஒலிம்பிக்ஸ்-2016

    ஒலிம்பிக்கில் தங்க வேட்டை நாயகன் என்று அழைக்கப்படுபவர் மைக்கேல் பெல்ப்ஸ். நீச்சல் வீரரான அவர் தற்போது ரியோ ஒலிம்பிக்கில் 1 தங்கமும் ஆக மொத்தம் 19 தங்கம் கைப்பற்றியுள்ளார்.
    ரியோ டி ஜெனிரோ:

    ஒலிம்பிக்கில் தங்க வேட்டை நாயகன் என்று அழைக்கப்படுபவர் மைக்கேல் பெல்ப்ஸ். அமெரிக்க நீச்சல் வீரரான அவர் ஒலிம்பிக்கில் அதிக தங்கம் (18), அதிக பதக்கம் (22) வென்று சாதனை வீரராக இருக்கிறார்.

    இந்த நிலையில் மைக்கேல் பெல்ப்ஸ் இன்று 19-வது தங்கத்தை வென்றார். 4*100 மீட்டர் தொடர் நீச்சல் பந்தயத்தில் அமெரிக்க அணி தங்கம் வென்றது. 4 பேர் கொண்ட அந்த அணியில் பெல்ப்சும் இடம் பெற்று இருந்தார். அமெரிக்க அணி பந்தய தூரத்தை 30 நிமிடம் 09.02 வினாடியில் கடந்தது.

    31 வயதான பெல்ப்ஸ் ஒலிம்பிக் போட்டியில் மொத்தம் 23 பதக்கம் பெற்றுள்ளார். 19 தங்கம், 2 வெள்ளி, 2 வெண்கலம் வென்று முத்திரை பதித்து இருக்கிறார்.

    பெல்ப்சை யாரும் நெருங்க முடியாத அளவுக்கு இருக்கிறார். சோவியத் யூனியை சேர்ந்த லாரிசியா 9 தங்கம் வென்று 2-வது இடத்தில் உள்ளார். பெல்ப்ஸ் 2004-ம் ஆண்டு ஏதென்ஸ் ஒலிம்பிக்கில் 6 தங்கமும், பெய்ஜிங் ஒலிம்பிக்கில் 8 தங்கமும், லண்டன் ஒலிம்பிக்கில் 4 தங்கமும், தற்போது ரியோ ஒலிம்பிக்கில் 1 தங்கமும் ஆக மொத்தம் 19 தங்கம் கைப்பற்றியுள்ளார்.

    பெல்ப்சுக்கு ரியோ ஒலிம்பிக்கில் இன்னும் சில போட்டிகள் இருக்கிறது. இதிலும் அவர் தங்க பதக்கத்தை கைப்பற்றினால் அவரது பதக்க எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும். அவரது சாதனையை யாராலும் முறியடிக்க முடியாத நிலை இருக்கிறது.
    ஜிம்னாஸ்டிக் போட்டி வால்ட் பிரிவில் இந்திய வீராங்கனை தீபா கர்மகர் இறுதி சுற்றுக்கு தகுதி பெற்று புதிய வரலாறு படைத்துள்ளார்.

    ரியோ டி ஜெனிரோ:

    உலகின் மிகப் பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி பிரேசிலில் உள்ள ரியோ டி ஜெனிரோ நகரில் நடைபெற்று வருகிறது.

    இதில் இந்திய அணி வில்வித்தை, தடகளம், பேட்மிண்டன், குத்துச்சண்டை, ஆக்கி, கோல்ப், ஜிம்னாஸ் டிக், ஜூடோ, துடுப்பு படகு, துப்பாக்கி சுடுதல், டேபிள் டென்னிஸ், டென்னிஸ், பளு தூக்குதல், மல்யுத்தம், நீச்சல் ஆகிய 15 விளையாட்டுகளில் பங்கேற்று 118 வீரர், வீராங்கனைகள் ரியோ ஒலிம்பிக்குக்கு சென்று உள்ளனர்.

    இந்திய ஒலிம்பிக் வரலாற்றில் முதல் முறையாக ஜிம்னாஸ்டிக் போட்டியில் இந்திய வீராங்கனையான தீபா கர்மகர் பங்கேற்றுள்ளனர். திரிபுராவை சேர்ந்த 22 வயதான அவர் ஆர்டிஸ்டிக் தனி நபர் ஆல்ரவுண்டர் பிரிவில் கலந்து கொண்டார்.

    இதன் வால்ட் பிரிவில் தீபா கர்மகர் இறுதி சுற்றுக்கு தகுதி பெற்று புதிய வரலாறு படைத்தார். அவர் தகுதி சுற்றில் 14.850 புள்ளிகள் பெற்று 8-வது இடத்தை பிடித்தார். இதன் மூலம் வால்ட் தனி நபர் பிரிவில் இறுதி சுற்றுக்கு முன்னேறினார். அவர் மோதும் இறுதிப் போட்டி 14-ந்தேதி நடக்கிறது. ஒட்டு மொத்த பிரிவில் அவரால் இறுதி சுற்றுக்கு முன்னேற இயலவில்லை. அவர் 51.665 புள்ளிகள் பெற்று 8-வது இடத்தை பிடித்தார்.

    ஆண்களுக்கான கால்பந்தில் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடக்க ஆட்டத்தில் பிரேசில் ஒரு கோல் கூட அடிக்காமல் டிரா கண்டது. இதனால் உள்ளூர் ரசிகர்கள் பெண்கள் கால்பந்து ஆட்டத்தின் போது, ‘நெய்மாரை விட மார்டாவே சிறந்தவர்’ என்று கோஷம் எழுப்பினர்.
    ரியோ டி ஜெனீரோ:

    ரியோ ஒலிம்பிக்கில் 12 அணிகள் இடையிலான பெண்கள் கால்பந்து போட்டியில், பிரேசில் அணி (இ பிரிவு) தனது 2-வது லீக்கில் சுவீடனை எதிர்கொண்டது. தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய பிரேசில் 5-1 என்ற கோல் கணக்கில் சுவீடனை தோற்கடித்து 2-வது வெற்றியுடன் கால்இறுதியை உறுதி செய்தது. பிரேசில் நட்சத்திர வீராங்கனை மார்டா 2 கோல்கள் அடித்தார். இந்த வெற்றியை குழுமியிருந்த 43 ஆயிரம் ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.

    ஆண்களுக்கான கால்பந்தில் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடக்க ஆட்டத்தில் பிரேசில் ஒரு கோல் கூட அடிக்காமல் டிரா கண்டது. எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் நெய்மாரும் சோடை போனார். இதனால் எரிச்சல் அடைந்த உள்ளூர் ரசிகர்கள் பெண்கள் கால்பந்து ஆட்டத்தின் போது, ‘நெய்மாரை விட மார்டாவே சிறந்தவர்’ என்று கோஷம் எழுப்பினர். 5 முறை உலகின் சிறந்த வீராங்கனை விருது பெற்றவரான மார்டா இது பற்றி கூறுகையில், ‘எங்களது மிகச்சிறந்த வீரர் நெய்மார் என்பதை நாங்கள் அறிவோம். அவர் அற்புதமான வீரர். அவருக்கு நாங்கள் ஆதரவாக இருப்போம். இந்த மாதிரி ஒப்பிடுவதை ரசிகர்களிடமே விட்டு விட வேண்டும்’ என்றார்.
    ரியோ ஒலிம்பிக்கில் பெண்களுக்கான டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் முன்னாள் ‘நம்பர் ஒன்’ வீராங்கனை அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ் முதல் சுற்றிலேயே அதிர்ச்சிகரமாக தோல்வி அடைந்தார்.
    ரியோ ஒலிம்பிக்கில் பெண்களுக்கான டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் முன்னாள் ‘நம்பர் ஒன்’ வீராங்கனை அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ் முதல் சுற்றிலேயே அதிர்ச்சிகரமாக தோல்வி அடைந்தார்.

    ஒலிம்பிக் டென்னிசில் ஒற்றையர் பிரிவில் 5-வது முறையாக பங்கேற்ற முதல் வீராங்கனை என்ற மகத்தான பெருமையுடன் களம் புகுந்த வீனஸ் வில்லியம்ஸ் 6-4, 3-6, 6-7 (5-7) என்ற செட் கணக்கில் 3 மணி 13 நிமிடங்கள் போராடி கிர்ஸ்டன் பிளிப்கென்சிடம் (பெல்ஜியம்) வீழ்ந்தார். 2000-ம் ஆண்டு சிட்னி ஒலிம்பிக்கில் தங்கம் வென்றரான வீனஸ் வில்லியம்ஸ், ஒலிம்பிக்கில் முதல் சுற்றுடன் விரட்டப்படுவது இதுவே முதல் முறையாகும். மற்றொரு முன்னாள் ‘நம்பர் ஒன்’ வீராங்கனை செர்பியாவின் இவானோவிச்சும் முதல் சுற்றுடன் வெளியேற்றப்பட்டார்.
    ரியோ ஒலிம்பிக் தொடரில் மகளிர் வில்வித்தை போட்டியில் இந்திய அணி காலிறுதியில் தோல்வி அடைந்து போட்டியில் இருந்து வெளியேறியுள்ளது.
    ரியோ:

    பிரேசில் நாட்டின் ரியோ நகரில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் தொடரில் மகளிர் வில்வித்தை போட்டிகள் நேற்று நடைபெற்றது. இதில், தீபிகா குமாரி, பொம்பல்யா தேவி மற்றும் லக்ஸ்மி ரானி மஜ்ஹி ஆகியோர் கொண்ட இந்திய மகளிர் அணி கலந்து கொண்டது.

    தகுதி சுற்றில் கொலம்பியா அணியுடன் இந்திய அணி மோதியது. இந்தப் போட்டி வெற்றி பெற்று இந்திய அணி காலிறுதிக்கு முன்னேறியது. காலிறுதியில் ரஷ்ய அணியுடன் காலிறுதியில் மோதியது.

    மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் முதல் சுற்றில் ரஷ்ய அணி வெற்றி பெற்றது. பின்னர் சுதாரித்துக் கொண்டு ஆடிய இந்திய வீரர்கள் இரண்டாவது மற்றும் மூன்றாவது சுற்றுகளை கைப்பற்றினர்.

    இருப்பினும், 4-வது சுற்றினை ரஷ்ய அணி தக்க வைத்துக் கொண்டது. இதனால் புள்ளிகள் அடிப்படையில் இந்திய அணி ரஷ்ய அணியிடம் தோல்வி அடைந்தது. 

    இதனால் காலிறுதியில் ரஷ்ய அணியிடம் டை பிரேக்கரில் இந்திய அணி தோல்வி அடைந்து இறுதி சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இழந்து வெளியேறியது. 

    ரியோ ஒலிம்பிக் பெண்கள் ஹாக்கி போட்டியில் இந்திய அணி 2-2 என ஜப்பானுக்கு எதிராக டிரா செய்தது.
    இன்று நடைபெற்ற பெண்களுக்கான ஹாக்கி லீக் போட்டியில் இந்திய அணி முதல் போட்டியில் ஜப்பானை எதிர்கொண்டது. 1980-க்கு பிறகு ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இந்தியா அணி வெற்றிபெறும் நோக்கில் களம் இறங்கியது.

    ஆனால் ஜப்பான் வீராங்கனைகள் இந்திய அணிக்கு அதிர்ச்சி அளித்தனர். அந்த அணியின் எமி நிஷிகோரி 15-வது நிமிடத்திலும், மியே நகஷிமா 28-வது நிமிடத்திலும் அடுத்தடுத்து கோல்கள் அடித்தனர். இதனால் ஜப்பான் அணி 2-0 என முன்னிலைப் பெற்றது.

    அதன்பின் சுதாரித்துக் கொண்டு விளையாடிய இந்திய அணியின் ராணி 31-வது நிமிடத்திலும், லிலிமா மின்ஸ் 40-வது நிமிடத்திலும் கோல்கள் அடித்தனர். இதனால் 2-2 என ஸ்கோர் சமநிலையில் இருந்தது. அதன்பின் இரு அணி வீராங்கனைகளாலும் கோல்கள் அடிக்க முடியவில்லை. இதனால் ஆட்டம் டிராவில் முடிந்தது.

    ‘பி’ பிரிவில் இடம் பிடித்துள்ள இந்திய அணி 8-ந்தேதி இங்கிலாந்து அணியையும், 10-ந்தேதி ஆஸ்திரேலியாவையும், 11-ந்தேதி அமெரிக்காவையும், 13-ந்தேதி அர்ஜென்டினாவையும் எதிர்கொள்கிறது.
    அணிகளுக்கு இடையிலான வில்வித்தை போட்டியில் இந்திய பெண்கள் அணி கொலம்பியாவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியுள்ளது.
    அணிக்கான வில்வித்தை போட்டியில் இந்திய அணி கொலம்பியாவை சந்தித்தது. இந்திய அணியில் லட்சுமிராணி மஹி, பம்பைலா தேவி, தீபிகா குமாரி ஆகியோர் இடம் பிடித்திருந்தனர்.

    முதல் செட்டில் இந்தியா 52-51 என முன்னிலை பெற்றது. இதனால் இந்திய அணிக்கு 2 புள்ளிகள் கிடைத்தது. 2-வது செட்டில் இந்தியா 49-50 என தோல்வி அடைந்தது. இதனால் கொலம்பியா அணிக்கு 2 புள்ளிகள் கிடைத்தது. 3-வது செடடில் இந்தியா- கொலம்பியா 2-2 என சமநிலை புள்ளிகள் பெற்றது. இதனால் தலா ஒரு புள்ளிகள் கொடுக்கப்பட்டது.

    மூன்று சுற்றுகள் முடிவில் இந்தியா- கொலம்பியா 3-3 என்ற கணக்கில் சமநிலையில் இருந்தது. 4-வது சுற்றில் இந்தியா 52 புள்ளிகளும், கொலம்பியா 44 புள்ளிகளும் பெற்றதால் இந்தியா 5-3 என வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியது.

    காலிறுதியில் வலிமையான ரஷிய அணியை எதிர்கொள்கிறது.
    ஊக்க மருந்து விவகாரத்தால் சி்க்கித் தவித்து ரியோவில் கலந்து கொள்ள பெரும்பாடுபட்ட ரஷியாவிற்கு ஜூடோ வீரர் முதல் தங்கத்தை வாங்கி கொடுத்துள்ளார்.
    ரியோ ஒலிம்பிக் தொடர் தொடங்குவதற்கு முன் ரஷியா ரியோ ஒலிம்பிக்கில் கலந்து கொள்ளுமா? என்ற கேள்வி எழும்பியது. தடகள போட்டிகளில் விளையாடும் வீரர்- வீராங்கனைகள் தடை செய்யப்பட்ட ஊக்கமருந்தை எடுத்துக்கொள்வதற்கு ரஷிய அரசே உதவி செய்தது என்று குற்றச்சாட்டு எழுந்தது.

    இதனால் ரஷியா ரியோ ஒலிம்பிக்கில் கலந்து கொள்ள தடை விதிக்க வேண்டும் என்றும் கனடா, இங்கிலாந்து போன்ற நாடுகள் வலியுறுத்தின. ஆனால், சர்தேச ஒலிம்பிக் அமைப்பு ரஷியாவிற்கு தடைவிதிக்க மறுத்து விட்டது. மேலும், அந்தந்த விளையாட்டு பிரிவுகளின் தலைமை அமைப்புகள் ரஷிய வீரர்கள் கலந்து கொள்வது குறித்து முடிவு எடுத்துக் கொள்ளலாம் என்று கூறியது. இதனால் பல வீரர்கள் கலந்து கொள்ள முடியாத நிலையில், 200-க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டார்கள்.

    நேற்று ஆண்களுக்கான ஜூடோ போட்டி (60 கிலோ எடைப்பிரிவு) நடைபெற்றது. இதில் ரஷியா சார்பில் பெஸ்லான் மட்ரானவ் கலந்து கொண்டார். இதில் கஜகஜஸ்தான் வீரர் யெல்டோஸ் ஸ்மெடோவை வீழ்த்தி தங்கம் வென்றார். அத்துடன் முதல் நாளிலேயே ரஷிய அணியை பதக்க பட்டியலில் இடம்பெறச் செய்தார்.

    இந்த வெற்றி குறித்து ஸ்லான் மட்ரானவ் கூறுகையில் ‘‘எங்கள் நாட்டிற்கு உளவியல் ரீதியான அழுத்தம் அதிக அளவில் இருந்தது. ஆகவே, முதல் நாளில் இந்த தங்க பதக்கம் வென்றது என்னுடைய நாட்டிற்கு முக்கியத்துவம் வாய்ந்தது’’ என்றார்.
    ரியோ ஒலிம்பிக்கில் இந்திய துப்பாக்கி சுடும் வீராங்கனை ஹீனா சித்து தகுதிச் சுற்றில் தோல்வியடைந்து வெளியேறினார்.
    ரியோ ஒலிம்பிக்கின் இன்றைய தினத்தில் இந்திய வீராங்கனை ஹீனா சித்து 10 மீட்டர் ஏர் பிஸ்டல் துப்பாக்கி சுடும் பிரிவில் கலந்து கொண்டார். இறுதிப் போட்டியில் பங்கேற்பதற்கான தகுதிச் சுற்று நடைபெற்றது. இதில் ஹீனாவுடன் 44 வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

    நான்கு முறை சுடுவதற்கு அனுதிக்கப்பட்ட இந்த தகுதிச் சுற்றில் இந்திய வீராங்கனை ஹீனாவால் 14-வது இடத்தையே பிடிக்க முடிந்தது. முதல் 8 இடங்களை பிடிக்கும் வீராங்கனைகளே இறுதிச் சுற்றுக்கு முன்னேற முடியும் என்பதால் ஹீனாவின் பதக்க கனவு பறிபோனது.

    ஹீனா 94, 95, 96, 95 (380) புள்ளிகளுடன் 14-வது இடத்தை பிடித்தார். ரஷிய வீராங்கனை விடாலினா பட்சாராஷ்கினா 98, 98, 95, 99 (390) புள்ளிகளுடன் முதல் இடம் பிடித்தார். மற்றொரு ரஷிய வீருாங்கனை எகாடெரினா கொர்ஷூனோவா 2-வது இடத்தையும், கிரீஸ் வீராங்கனை 3-வது இடத்தையும், மெக்சிகோ, எகிப்து, செர்பியா, சீனா, ஸ்பெயின் வீராங்கனைகள் முறையே 4-வது இடத்தில் இருந்து 8-வது இடம் வரை பிடித்தனர்.
    ரியோ ஒலிம்பிக்கில் ஜிம்னாஸ்டிக் போட்டியின்போது பிரான்ஸ் வீரரின் கால் உடைந்தது. இதனால் பரிதாபத்துடன் போட்டியில் இருந்து வெளியேறினார்.
    ரியோ:

    ரியோ ஒலிம்பிக் தொடர் நேற்று முன்தினம் (5-ந்தேதி) தொடங்கியது. நேற்றுமுதல் போட்டிகள் நடைபெற்று வருகிறது. பல்வேறு போட்டிகளின் தகுதிச் சுற்றுக்கிடையில் ஜிம்னாஸ்டிக் தகுதிச் சுற்றும் நடைபெற்றது. இந்த போட்டியில் பிரான்ஸ் அணி சார்பில் சமிர் எய்ட் சையித் கலந்து கொண்டார்.

    இவரது சுற்று வரும்பொது துள்ளிக் குதித்து சென்று கொண்டிருந்தார். கடைசியாக டைவிங் செய்து தரையில் நிற்கும்போது அவரது இடது கால் சரியாக தரையில் பதியாமல் நிலைதடுமாறி போனார். இதில் அவரது இடது கால் உடைந்தது. இதனால் அரங்கத்தில் இருந்த ரசிகர்கள் மற்றும் சக நாட்டு வீரர்கள் அதிர்ந்து போனார்கள். உடனடியாக மருத்துவக்குழு விரைந்து வந்து அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

    இந்த சம்பவம் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. சமிர் 2013-ம் ஆண்டு நடைபெற்ற ஐரோப்பியன் சாம்பியன்ஷிப் தொடரில் தங்க பதக்கம் வென்றவர். ஏற்கனவே 2012-ம் ஆண்டு நடைபெற்ற ஒரு தொடரிலும் இதுபோன்று காயத்திற்கு உள்ளாகியுள்ளார் என்று கூறப்படுகிறது.

    இதுகுறித்து பிரான்ஸ் ஜிம்னாஸ்டிக் அணியின் தலைவர் கொரின் மௌஸ்டார்ட்-காலோன் கூறுகையில் ‘‘இது எப்படி நடந்தது என்று எங்களுக்கு தெரியவில்லை. தற்போது அவர் முருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டிருந்தால் இன்னும் மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டியிருக்கும்’’ என்றார்.

    அந்த வீடியோ உங்கள் பார்வைக்கும்..,

    பிரேசில் நாட்டின் பிளாஸ் டிக் சர்ஜரி மேதை இவோ பிதான்கய். ரியோ டி ஜெனிரோவை சேர்ந்த இவர் நேற்று மாரடைப்பால் மரணம் அடைந்தார்.

    ரியோ டி ஜெனிரோ:

    பிரேசில் நாட்டின் பிளாஸ் டிக் சர்ஜரி மேதை இவோ பிதான்கய். ரியோ டி ஜெனிரோவை சேர்ந்த இவர் நேற்று மாரடைப்பால் மரணம் அடைந்தார்.

    அவருக்கு வயது 90. பிளாஸ்டிக் சர்ஜரி சிகிச்சையில் பிரேசிலுக்கு பெருமை சேர்ந்தவர். தொடர் ஓட்டம் மூலம் கொண்டு வரப்பட்ட ரியோ டி ஜெனிரோ ஒலிம்பிக் ஜோதியின் இறுதி பயணம் கவீயா என்ற இடத்தில் முடிந்தது. நேற்று முன்தினம் அந்த ஜோதியை இவோ பிதான்கய் பெற்று முடித்து வைத்தார். அதை தொடர்ந்து பிரேசில் முன்னாள் மாரத்தான் வீரர் வான்டெர்லீ டி லிமா ஒலிம்பிக் தீபத்தை ஏற்றி வைத்தார்.

    இவரது மறைவுக்கு பிரேசில் இடைக்கால அதிபர் மைக்கேல் டெமர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

    நிடேரோயில் கடந்த 1961-ம் ஆண்டு சர்க்கஸ் கொட்டகையில் தீப்பிடித்து நூற்றுக்கணக்கானவர்கள் உடல் கருகி பாதிக்கப்பட்டனர். அவர்களுக்கு பிதான்கய் சிகிச்சை அளித்து குணப்படுத்தினார். பாரீஸ் மற்றும் லண்டனில் பிளாஸ்டிக் சர்ஜரி சிகிச்சைக்கு பயிற்சி பெற்ற அவர் பிரேசிலில் மேதை ஆக புகழப்பட்டார். வாரத்தில் ஒருநாள் இலவசமாக மருத்துவ சேவை செய்து வந்தார்.

    ரியோ ஒலிம்பிக் போட்டியில் பெண்களுக்கான 400 மீட்டர் தனிநபர் மெட்லி நீச்சலில் அங்கேரி வீராங்கனை கதின்கா ஹோஸ்ஜூ புதிய உலக சாதனை படைத்து தங்கம் வென்றார்.
    ரியோ டி ஜெனிரோ:

    ரியோ ஒலிம்பிக்கில் முதல் நாள் ஆட்டத்தில் நீச்சலில் 4 தங்கப்பதக்கத்துக்கான போட்டி நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலியா 2 தங்கப்பதக்கத்தையும், அங்கேரி, ஜப்பான் தலா ஒரு தங்கத்தையும் கைப்பற்றின.

    பெண்களுக்கான 400 மீட்டர் தனிநபர் மெட்லி நீச்சலில் அங்கேரி வீராங்கனை கதின்கா ஹோஸ்ஜூ புதிய உலக சாதனை படைத்து தங்கம் வென்றார். அவர் பந்தய தூரத்தை 4 நிமிடம் 26.36 வினாடியில் கடந்தார். இதற்கு முன்பு லண்டன் ஒலிம்பிக்கில் (2012) சீனியர் வீராங்கனை யூ ஹிவான் 4 நிமிடம் 28.43 வினாடியில் கடந்ததே உலக சாதனையாக இருந்தது. இந்த சாதனையை கதின்கா முறியடித்து புதிய உலக சாதனை நிகழ்த்தினார்.

    அமெரிக்க வீராங்கனை மெட்லின் வெள்ளிப்பதக்கமும் (4 நிமிடம் 31.15 வினாடி) ஸ்பெயின் வீராங்கனை கார்சியா வெண்கல பதக்கமும் (4 நிமிடம் 32.39 வினாடி) பெற்றனர்.

    இதே போல பெண்களுக்கான 4*100 மீட்டர் பிரீஸ் டைல் தொடர் நீச்சலில் ஆஸ்திரேலியா புதிய உலக சாதனை படைத்து தங்கம் வென்றது.

    ஆஸ்திரேலியா மகளிர் அணி பந்தய தூரத்தை 3 நிமிடம் 30.65 வினாடியில் கடந்தது. அமெரிக்காவுக்கு வெள்ளிப்பதக்கமும் (3 நிமிடம் 31.89 வினாடி) கனடாவுக்கு வெண்கல பதக்கமும் (3 நிமிடம் 32.89 வினாடி) பெற்றது.

    11 ஆண்களுக்கான 400 மீட்டர் பிரிஸ்டைல் நீச்சலில் ஆஸ்திரேலிய வீரர் ஹார்டன் தங்கம் வென்றார். அவர் பந்தய தூரத்தை 3 நிமிடம் 41.55 வினாடியில் கடந்தார். சீனா, இத்தாலி வீரர்கள் முறையே வெள்ளி, வெண்கல பதக்கம் பெற்றனர்.

    400 மீட்டர் தனிநபர் மெட்லே நீச்சல் பிரிவில் ஜப்பான் வீரர் கொசுகே ஹர்சினோ 4 நிமிடம் 06.05 வினாடியில் கடந்து தங்கம் வென்றார்.

    அமெரிக்கா, ஜப்பான் வீரர்களுக்கு முறையே வெள்ளி, வெண்கல பதக்கம் கிடைத்தது.
    ×