என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெண்கள் ஹாக்கி: ஜப்பானுக்கு எதிரான போட்டி 2-2 என டிராவில் முடிந்தது
    X

    பெண்கள் ஹாக்கி: ஜப்பானுக்கு எதிரான போட்டி 2-2 என டிராவில் முடிந்தது

    ரியோ ஒலிம்பிக் பெண்கள் ஹாக்கி போட்டியில் இந்திய அணி 2-2 என ஜப்பானுக்கு எதிராக டிரா செய்தது.
    இன்று நடைபெற்ற பெண்களுக்கான ஹாக்கி லீக் போட்டியில் இந்திய அணி முதல் போட்டியில் ஜப்பானை எதிர்கொண்டது. 1980-க்கு பிறகு ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இந்தியா அணி வெற்றிபெறும் நோக்கில் களம் இறங்கியது.

    ஆனால் ஜப்பான் வீராங்கனைகள் இந்திய அணிக்கு அதிர்ச்சி அளித்தனர். அந்த அணியின் எமி நிஷிகோரி 15-வது நிமிடத்திலும், மியே நகஷிமா 28-வது நிமிடத்திலும் அடுத்தடுத்து கோல்கள் அடித்தனர். இதனால் ஜப்பான் அணி 2-0 என முன்னிலைப் பெற்றது.

    அதன்பின் சுதாரித்துக் கொண்டு விளையாடிய இந்திய அணியின் ராணி 31-வது நிமிடத்திலும், லிலிமா மின்ஸ் 40-வது நிமிடத்திலும் கோல்கள் அடித்தனர். இதனால் 2-2 என ஸ்கோர் சமநிலையில் இருந்தது. அதன்பின் இரு அணி வீராங்கனைகளாலும் கோல்கள் அடிக்க முடியவில்லை. இதனால் ஆட்டம் டிராவில் முடிந்தது.

    ‘பி’ பிரிவில் இடம் பிடித்துள்ள இந்திய அணி 8-ந்தேதி இங்கிலாந்து அணியையும், 10-ந்தேதி ஆஸ்திரேலியாவையும், 11-ந்தேதி அமெரிக்காவையும், 13-ந்தேதி அர்ஜென்டினாவையும் எதிர்கொள்கிறது.
    Next Story
    ×