என் மலர்tooltip icon

    செய்திகள்

    10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் ஹீனா சித்து தோல்வி
    X

    10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் ஹீனா சித்து தோல்வி

    ரியோ ஒலிம்பிக்கில் இந்திய துப்பாக்கி சுடும் வீராங்கனை ஹீனா சித்து தகுதிச் சுற்றில் தோல்வியடைந்து வெளியேறினார்.
    ரியோ ஒலிம்பிக்கின் இன்றைய தினத்தில் இந்திய வீராங்கனை ஹீனா சித்து 10 மீட்டர் ஏர் பிஸ்டல் துப்பாக்கி சுடும் பிரிவில் கலந்து கொண்டார். இறுதிப் போட்டியில் பங்கேற்பதற்கான தகுதிச் சுற்று நடைபெற்றது. இதில் ஹீனாவுடன் 44 வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

    நான்கு முறை சுடுவதற்கு அனுதிக்கப்பட்ட இந்த தகுதிச் சுற்றில் இந்திய வீராங்கனை ஹீனாவால் 14-வது இடத்தையே பிடிக்க முடிந்தது. முதல் 8 இடங்களை பிடிக்கும் வீராங்கனைகளே இறுதிச் சுற்றுக்கு முன்னேற முடியும் என்பதால் ஹீனாவின் பதக்க கனவு பறிபோனது.

    ஹீனா 94, 95, 96, 95 (380) புள்ளிகளுடன் 14-வது இடத்தை பிடித்தார். ரஷிய வீராங்கனை விடாலினா பட்சாராஷ்கினா 98, 98, 95, 99 (390) புள்ளிகளுடன் முதல் இடம் பிடித்தார். மற்றொரு ரஷிய வீருாங்கனை எகாடெரினா கொர்ஷூனோவா 2-வது இடத்தையும், கிரீஸ் வீராங்கனை 3-வது இடத்தையும், மெக்சிகோ, எகிப்து, செர்பியா, சீனா, ஸ்பெயின் வீராங்கனைகள் முறையே 4-வது இடத்தில் இருந்து 8-வது இடம் வரை பிடித்தனர்.
    Next Story
    ×