என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமெரிக்க நீச்சல் வீரர் பெல்ப்சுக்கு 19-வது தங்கம்
    X

    அமெரிக்க நீச்சல் வீரர் பெல்ப்சுக்கு 19-வது தங்கம்

    ஒலிம்பிக்கில் தங்க வேட்டை நாயகன் என்று அழைக்கப்படுபவர் மைக்கேல் பெல்ப்ஸ். நீச்சல் வீரரான அவர் தற்போது ரியோ ஒலிம்பிக்கில் 1 தங்கமும் ஆக மொத்தம் 19 தங்கம் கைப்பற்றியுள்ளார்.
    ரியோ டி ஜெனிரோ:

    ஒலிம்பிக்கில் தங்க வேட்டை நாயகன் என்று அழைக்கப்படுபவர் மைக்கேல் பெல்ப்ஸ். அமெரிக்க நீச்சல் வீரரான அவர் ஒலிம்பிக்கில் அதிக தங்கம் (18), அதிக பதக்கம் (22) வென்று சாதனை வீரராக இருக்கிறார்.

    இந்த நிலையில் மைக்கேல் பெல்ப்ஸ் இன்று 19-வது தங்கத்தை வென்றார். 4*100 மீட்டர் தொடர் நீச்சல் பந்தயத்தில் அமெரிக்க அணி தங்கம் வென்றது. 4 பேர் கொண்ட அந்த அணியில் பெல்ப்சும் இடம் பெற்று இருந்தார். அமெரிக்க அணி பந்தய தூரத்தை 30 நிமிடம் 09.02 வினாடியில் கடந்தது.

    31 வயதான பெல்ப்ஸ் ஒலிம்பிக் போட்டியில் மொத்தம் 23 பதக்கம் பெற்றுள்ளார். 19 தங்கம், 2 வெள்ளி, 2 வெண்கலம் வென்று முத்திரை பதித்து இருக்கிறார்.

    பெல்ப்சை யாரும் நெருங்க முடியாத அளவுக்கு இருக்கிறார். சோவியத் யூனியை சேர்ந்த லாரிசியா 9 தங்கம் வென்று 2-வது இடத்தில் உள்ளார். பெல்ப்ஸ் 2004-ம் ஆண்டு ஏதென்ஸ் ஒலிம்பிக்கில் 6 தங்கமும், பெய்ஜிங் ஒலிம்பிக்கில் 8 தங்கமும், லண்டன் ஒலிம்பிக்கில் 4 தங்கமும், தற்போது ரியோ ஒலிம்பிக்கில் 1 தங்கமும் ஆக மொத்தம் 19 தங்கம் கைப்பற்றியுள்ளார்.

    பெல்ப்சுக்கு ரியோ ஒலிம்பிக்கில் இன்னும் சில போட்டிகள் இருக்கிறது. இதிலும் அவர் தங்க பதக்கத்தை கைப்பற்றினால் அவரது பதக்க எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும். அவரது சாதனையை யாராலும் முறியடிக்க முடியாத நிலை இருக்கிறது.
    Next Story
    ×