என் மலர்tooltip icon

    ரியோ ஒலிம்பிக்ஸ்-2016

    பொழுதுபோக்குக்கு கூட இனிமேல் துப்பாக்கி தூக்க மாட்டேன் என்று துப்பாக்கி சுடும் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக அபினவ் பிந்த்ரா அறிவித்துள்ளார்.
    ரியோ:

    ரியோ ஒலிம்பிக்கில் நேற்று ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவு இறுதிப் போட்டியில் அபினவ் பிந்த்ரா 163.8 புள்ளிகள் பெற்று நான்காவது இடம் பிடித்து பதக்கம் வாய்ப்பை இழந்தார்.

    இதையடுத்து, துப்பாக்கி சுடும் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக அபினவ் பிந்த்ரா அறிவித்துள்ளார்.

    ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்த பிறகு, பத்திரிகையாளர்களுக்கு நிதானமாகவும், புன்னகையுடனும் அபினவ் பிந்த்ரா பேட்டியளித்தார்.

    ‘இந்த போட்டியில் ஒவ்வொரு சுற்றிலும் என்னுடைய திறமையை சிறந்த முறையில் வெளிப்படுத்தினேன். இருந்தாலும் நான்காவது இடத்தை பிடித்து பதக்கத்தை இழந்தது சற்று வருத்தமளிக்கிறது. போட்டிகளில் வெற்றி, தோல்வி என்பதை ஏற்றுக்கொள்ளதான் வேண்டும்.

    என்னுடைய எதிர்காலத்தை பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை. ஆனால் கண்டிப்பாக எனது வாழ்க்கை மற்றும் பொழுதுபோக்கில் கூட துப்பாக்கியை தொட மாட்டேன்’ என்றார்.

    ஓய்வையடுத்து பயிற்சியாளராக இருப்பிர்களா? என்ற கேள்விக்கு, ‘ஒருவேளை நான் பயிற்சியாளரானால், என்னிடம் பயிலும் மாணவர்கள் இரண்டே மணிநேரங்களில் ஓடிவிடுவார்கள், என்னுடைய அமைப்பின் மூலம் துப்பாக்கி சுடுதலில் இளம்  வீரர்களுக்கு ஏற்கனவே சிறந்த முறையில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகின்றது. இளைஞர்கள் கடுமையாக உழைத்து கொண்டு இருந்தால் நிச்சயம் ஒருநாள் வெற்றி வந்து சேரும்’ என்றார்.

    துப்பாக்கி சுடுதல் விளையாட்டில் இந்தியாவின் எதிர்காலம் குறித்த கேள்விக்கு, ‘பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும். அடுத்தமுறை ஒலிம்பிக் போட்டியில் ஒரு பத்திரிகையாளனாக கூட வருவேன், யாராவது எனக்கு வேலை கொடுப்பீர்களா?’ என்று புன்னகையுடன் பதிலளித்தார்.


    அபினவ் பிந்த்ரா கடந்த 2008-ம் ஆண்டு நடந்த ஒலிம்பிக் போட்டியில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் தங்க பதக்கமும், காமன்வெல்த் போட்டிகளில் நான்கு முறை தங்கப் பதக்கமும் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்தவர் என்பதும், ஒலிம்பிக் போட்டிகளில், தனிப்பட்ட வீரராக கலந்து கொள்ளும் போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை அபினவ் பிந்த்ரா பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

    ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்றுள்ள நமீபியா குத்துச்சண்டை வீரர் பாலியல் புகாரில் கைதாகி உள்ளார்.
    நமீபியா நாட்டை சேர்ந்த குத்துச்சண்டை வீரர் ஜோனாஸ் ஜினியஸ் (வயது 22). ஒலிம்பிக் தொடக்க விழாவில் அந்நாட்டு தேசிய கொடியை ஏந்தி வந்தவர் ஆவார்.

    இந்த நிலையில் ஒலிம்பிக் கிராமத்தில் துப்புரவு பணியில் ஈடுபட்ட பெண்ணிடம் ஜோன்ஸ் தவறாக நடக்க முயன்றார். இதுதொடர்பாக அந்த பெண் போலீசில் புகார் கொடுத்தார்.

    பாலியல் குற்றச்சாட்டில் நமீபியா குத்துச்சண்டை வீரர் ஜோன்சை பிரேசில் போலீசார் கைது செய்தனர்.

    ஒலிம்பிக் கிராமத்தில் இதுபோன்ற பாலியல் புகார் கூறப்படுவது 2-வது முறையாகும். ஏற்கனவே இதே குற்றச்சாட்டில் மொராக்கோ குத்துச்சண்டை வீரர் கைதாகி இருந்தார்.
    தீபா கர்மாகருக்கு அவரது பயிற்சியாளர் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளார். அவை என்னவென்று பார்க்கலாம்.
    ரியோ டி ஜெனீரோ :

    சாதனை மங்கை தீபா கர்மாகரின் பயிற்சியாளர் புவனேஷ்வர் நந்தி நேற்று அளித்த பேட்டியில், ‘தீபா கர்மாகரின் கவனம் சிதறக்கூடாது என்பதற்காக அவர் செல்போன் பயன்படுத்துவதற்கு தடை விதித்துள்ளேன். அவரது செல்போனில் இருந்து சிம்கார்டை எடுத்து விட்டேன். அவரது பெற்றோர் என் மூலம் மட்டுமே அவரிடம் பேச முடியும். தீபாவுக்கு நாளை (அதாவது இன்று) பிறந்த நாளாகும். பிறந்த நாள் வாழ்த்தை பெற்றோர் சொல்வதற்கு வசதியாக சிறிது நேரம் அவருக்கு ஓய்வு வழங்கியுள்ளேன்.

    அவருக்கு பெரிய அளவில் தோழிகள் வட்டாரம் கிடையாது. அதனால் தோழிகளுடன் பிறந்த நாள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ள முடியவில்லையே என்ற வருத்தம் அவருக்கு இருக்காது. அவருக்குரிய இறுதிப்போட்டி ஆகஸ்டு 14-ந்தேதி என்றாலும் இந்திய நேரப்படி அது 15-ந்தேதி தேதியாகும். அன்றைய தினம் நாட்டின் சுதந்திர தினமாகும். எனவே அந்த நாளில் அவர் பதக்கம் வென்றால், தேசத்தின் சுதந்திர தின பரிசாக அது அமையும்’ என்றார்.
    ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டியில் இறுதிசுற்றை அடைந்தது மகிழ்ச்சி அளிக்கிறது என்று தீபா கர்மாகர் கூறியுள்ளார்.
    ரியோ டி ஜெனீரோ :

    ரியோ ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக்சில் இந்திய வீராங்கனை தீபா கர்மாகர் இறுதிப்போட்டிக்கு முன்னேறி வரலாறு படைத்தார்.

    பிரேசிலில் நடந்து வரும் ஒலிம்பிக் போட்டியில் பெண்களுக்கான ஆர்டிஸ்டிக் ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டியின் தகுதி சுற்று இந்திய நேரப்படி நேற்று அதிகாலை அரங்கேறியது. இதில் வால்ட், அன்ஈவன் பார்ஸ், பேலன்ஸ் பீம், புளோர் எக்சர்சைஸ் ஆகிய பிரிவுகளில் வீராங்கனைகள் கலந்து கொண்டு தங்களது சாகசங்களை காட்டி மெய்சிலிர்க்க வைத்தனர்.

    இந்திய இளம் புயல் தீபா கர்மாகரும் இந்த பந்தயத்தில் அடியெடுத்து வைத்தார். நான்கு பிரிவுகளிலும் தீபா கர்மாகர் தனது திறமையை வெளிப்படுத்தினாலும், வால்ட்டில் மட்டும் அவரது சாகசஜாலம் பிரமாதமாக அமைந்தது.

    ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக்சுக்கு தகுதி பெற்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமைக்குரிய தீபா கர்மாகர் இப்போது, தனிநபர் வால்ட்டில் இறுதிப்போட்டிக்குள் நுழைந்த முதல் இந்தியர் என்ற சரித்திர நிகழ்வுக்கும் சொந்தக்காரர் ஆகியிருக்கிறார்.

    தனது அறிமுக ஒலிம்பிக்கிலேயே அமர்க்களப்படுத்தியுள்ள தீபா கர்மாகர் கூறுகையில், ‘இறுதிசுற்றை அடைந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால் இதை விட நான் இன்னும் கொஞ்சம் சிறப்பாக செயல்பட்டிருக்கலாம். ஏனெனில் பயிற்சியின் போது நான் இதை காட்டிலும் நன்றாக செயல்பட்டேன். ‘புரோடுனோவா’ பிரிவின் போது அமெரிக்காவின் சிமோன் பைல்ஸ் எனக்கு வாழ்த்து தெரிவித்தார். என்னை கவர்ந்த ஒரு வீராங்கனை அவர். அவருடன் இணைந்து போட்டியிட்டதை நினைக்கும் போதே பெருமையாக இருக்கிறது’ என்றார்.

    ‘புரோடுனோவா’ வால்ட்டில் அவர் கீழே உட்கார்வது போன்று கால்களை ஊன்றினார். நேராக நிற்பது போல் கால்களை பதிய வைத்தால் அதிக புள்ளிகள் கிடைக்கும். இத்தகைய தவறை மட்டும் அவர் களைந்தால் இறுதிப்போட்டியில் நிச்சயம் பதக்கம் வெல்ல முடியும் என்று பயிற்சியாளர்கள் கூறியுள்ளனர்.

    தீபா கர்மாகரின் தந்தை துலால் கர்மாகர் கூறும் போது, ‘தீபா கர்மாகர் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய தகவல் இன்று காலை (நேற்று) கிடைத்தது. பதற்றம் காரணமாக இரவு முழுவதும் தூக்கமே வரவில்லை. எங்கள் வீட்டில் நிறைய உறவினர்கள் குவிந்திருந்தனர். இரவு முழுவதும் டி.வி. முன்பே தவம் கிடந்தோம். ஆனால் தீபாவின் போட்டியை டெலிவிஷனில் முழுமையாக ஒளிபரப்பு செய்யாதது ஏமாற்றம் அளித்தது. இப்போது மிகவும் சந்தோஷத்தில் இருக்கிறோம். அவரது சாதனை எங்களுக்கு மட்டுமல்ல, ஒவ்வொரு இந்தியரையும் குறிப்பாக திரிபுரா மக்களை உற்சாகப்படுத்தக்கூடியது’ என்றார்.

    தீபாவின் தாயார் கவுரவ் தேவி பேசும் போது அவரது கண்களில் ஆனந்த கண்ணீர் எட்டிப்பார்த்தது ‘எங்களது நீண்ட கால கனவு நனவாகி உள்ளது. தீபாவுக்கு இன்று பிறந்த நாள். அவர் சிறப்பாக செயல்பட வேண்டி கோவிலில் சிறப்பு பூஜை செய்ய இருக்கிறேன்’ என்றார்.
    ரியோ ஒலிம்பிக்ஸ் தொடரில் ஜெர்மனிக்கு எதிரான ஆடவர் ஹாக்கி போட்டியில் 1-2 என்ற கோல் கணக்கில் இந்திய அணி தோல்விடையடைந்து அதிர்ச்சியளித்தது.
    ரியோ:

    ரியோ ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் இந்தியா ‘பி’ பிரிவில் இடம் பிடித்துள்ளது. கடந்த சனிக்கிழமை நடைபெற்ற முதல் லீக்கில் அயர்லாந்து அணியை எதிர்கொண்டது. இந்தப் போட்டியில் இந்திய அணி அயர்லாந்தை 3-2 என்ற கணக்கில் வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது.

    இந்நிலையில் நேற்று நடைபெற்ற போட்டியில் இந்திய அணி ஜெர்மனியை எதிர் கொண்டது. ஆட்டத்தின் முதல் குவார்ட்டரில் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை. 2-வது குவார்ட்டரில் ஆட்டத்தின் 18-வது நிமிடத்தில் ஜெர்மனியின் நிக்லஸ் வெலன் முதல் கோலை அடித்தார்.

    இதையடுத்து ஆட்டத்தின் 22-வது நிமிடத்தில் இந்திய அணி தனது முதல் பெனால்டி கார்னர் வாய்ப்பை பெற்றது. அதை ரூபிந்தர் பால் சிங் கோலாக மாற்றினார். இதையடுத்து, 1-1 என்ற சமநிலையில் இரு அணிகளும் இருந்தன.

    இருப்பினும், ஆட்டம் நிறைவடைய 3 வினாடிகளே இருந்த நிலையில் ஜெர்மனி 2-வது கோலை அடித்தது. இதையடுத்து, இந்திய அணியை 2-1 என்ற கணக்கில் வீழ்த்தி ஜெர்மனி அணி வெற்றி பெற்றது.
    ஆண்களுக்கான 200 மீட்டர் பட்டர்பிளை நீச்சல் போட்டியில், இந்திய வீரர் சஜன் பிரகாஷ் 4-வது இடம் பிடித்து போட்டியில் இருந்து வெளியேறினார்.
    ரியோ:

    ரியோ ஒலிம்பிக் போட்டிகளில் தொடர்ச்சியாக இந்தியாவிற்கு ஏமாற்றமே நீடித்து வருகிறது. முன்னணி வீரர்கள் உட்பட அனைவரும் சொதப்பி வருகின்றனர்.

    இந்தியாவின் முன்னணி துப்பாக்கி சுடுதல் வீரர் அபினவ் பிந்த்ரா 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் 4-வது இடத்தை பிடித்து பதக்க வாய்ப்பை இழந்தார்.

    இந்நிலையில், ஆண்களுக்கான 200 மீட்டர் பட்டர்பிளை நீச்சல் போட்டியில், இந்திய வீரர் சஜன் பிரகாஷ் 4-வது இடம் பிடித்தார். இருப்பினும் அரையிறுதிக்கு தகுதி பெறும் வாய்ப்பை அவர் இழந்தார்.

    சிலர் ஒலிம்பிக்கில் சாதனை செய்வதற்காக செல்வார்கள். சிலர் பங்கேற்பதற்காகவும், எதிர்காலத்திற்காக முன்னேற்றத்தை வெளிப்படுத்தவும் செல்வர். சஜன் பிரகாஷ் 4-வது இடம் பிடித்துள்ளது, எதிர்காலத்தில் தனது சவால்களை கடக்க இது உதவும்.
    இந்தியாவின் முன்னணி துப்பாக்கி சுடுதல் வீரர் அபினவ் பிந்த்ரா 10 மீ ஏர் பிஸ்டல் பிரிவில் 4-வது இடத்தை பிடித்து பதக்க வாய்ப்பை இழந்தார்.
    ரியோ ஒலிம்பிக்கில் இன்று ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் தகுதிச் சுற்று நடைபெற்றது. இதில் இந்திய வீரர்கள் அபினவ் பிந்த்ரா, ககன் நரங் ஆகியோர் உள்பட 50 பேர் கலந்து கொண்டனர். 6 சுற்றுகள் கொண்ட இதில் அபினவ் பிந்த்ரா 625.7 புள்ளிகளுடன் 7-வது இடத்தைப் பிடித்தார். முதல் 8 இடங்களை பிடிக்கும் வீரர்கள் இறுதிப் போட்டிக்கு செல்ல முடியும் என்பதால் அபினவ் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

    தகுதிச் சுற்றில் இத்தாலி வீரர் நிக்கோலா சம்ப்ரியானி 630.2 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்தார். அத்துடன் ஒலிம்பிக் சாதனையையும் பதிவு செய்தார். ரஷிய வீரர் 629 புள்ளிகளுடன் 2-வது இடத்தையும், குரோஷிய வீரர் 628 புள்ளிகளுடன் 3-வது இடத்தையும், உக்ரைன் வீரர் 627 புள்ளிகளுடன் 4-வது இடத்தையும், 626.2 புள்ளிகளுடன் மற்றொரு உக்ரைன் வீரர் 5-வது இடத்தையும், ஹங்கேரி வீரர் 625.9 புள்ளிகளுடன் 6-வது இடத்தையும், பல்கேரிய வீரர் 625.5 புள்ளிகளுடன் 8-வது இடத்தையும் பிடித்தனர். ககன் நரங் 621.7 புள்ளிகளுடன் 23-வது இடத்தை பிடித்து ஏமாற்றம் அளித்தார்.

    பின்னர் இறுதி போட்டி நடைபெற்றது. இதில் தகுதிப்பெற்ற 8 வீரர்களும் கலந்து கொண்டனர். இதில் அபினவ் பிந்த்ரா 4-வது இடம் பிடித்து பதக்க வாய்ப்பை இழந்தார்.

    இத்தாலி வீரர் நிக்கோலா கேம்ப்ரியானி 206.1 புள்ளிகள் பெற்று தங்க பதக்கம் வென்றார். உக்ரைன் வீரர் செர்கிய் குலிஷ் 204.6 புள்ளிகள் பெற்று வெள்ளி பதக்கம் வென்றார். ரஷ்யா வீரர் விளாடிமிர் மாஸ்லென்னிகோவ் 184.2 புள்ளிகள் பெற்று வெண்கல பதக்கம் வென்றார்.

    அபினவ் பிந்த்ரா 163.8 புள்ளிகள் பெற்று நான்காவது இடம் பிடித்து பதக்கம் வாய்ப்பை இழந்தது.
    இந்தியாவின் முன்னணி துப்பாக்கி சுடுதல் வீரர் அபினவ் பிந்த்ரா ஒலிம்பிக் தகுதிச் சுற்றில் 7-வது இடத்தைப் பிடித்து இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார்.
    ரியோ ஒலிம்பிக்கில் இன்று ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் தகுதிச் சுற்று நடைபெற்றது. இதில் இந்திய வீரர்கள் அபினவ் பிந்த்ரா, ககன் நரங் ஆகியோர் உள்பட 50 பேர் கலந்து கொண்டனர்.

    6 சுற்றுகள் கொண்ட இதில் அபினவ் பிந்த்ரா 625.7 புள்ளிகளுடன் 7-வது இடத்தைப் பிடித்தார். முதல் 8 இடங்களை பிடிக்கும் வீரர்கள் இறுதிப் போட்டிக்கு செல்ல முடியும் என்பதால் அபினவ் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

    இத்தாலி வீரர் நிக்கோலா சம்ப்ரியானி 630.2 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்தார். அத்துடன் ஒலிம்பிக் சாதனையையும் பதிவு செய்தார்.

    ரஷிய வீரர் 629 புள்ளிகளுடன் 2-வது இடத்தையும், குரோஷிய வீரர் 628 புள்ளிகளுடன் 3-வது இடத்தையும், உக்ரைன் வீரர் 627 புள்ளிகளுடன் 4-வது இடத்தையும், 626.2 புள்ளிகளுடன் மற்றொரு உக்ரைன் வீரர் 5-வது இடத்தையும், ஹங்கேரி வீரர் 625.9 புள்ளிகளுடன் 6-வது இடத்தையும், பல்கேரிய வீரர் 625.5 புள்ளிகளுடன் 8-வது இடத்தையும் பிடித்தனர்.

    ககன் நரங் 621.7 புள்ளிகளுடன் 23-வது இடத்தை பிடித்து ஏமாற்றம் அளித்தார். இறுதிப் போட்டி இந்திய நேரப்படி நாளை அதிகாலை 5 மணி அளவில் நடைபெற இருக்கிறது.
    ரியோ ஒலிம்பிக்கில் அமெரிக்கா 3 தங்கம் உள்பட 12 பதக்கங்களுடன் முதல் இடத்தில் உள்ளது. போட்டியை நடத்தும் பிரேசில் 20-வது இடத்தில் உள்ளது.
    தென்அமெரிக்காவில் உள்ள பிரேசில் நாட்டில் ‘ஒலிம்பிக் 2016’ தொடர் ரியோ ஒலிம்பிக் என்ற பெயரில் கடந்த 5-ந்தேதி தொடங்கியது.

    இன்று 4-வது நாள் போட்டிகள் நடைபெற்றுவருகின்றன. நான்காவது நாள் தொடக்கத்தில் பதக்க பட்டியலில் அமெரிக்கா 3 தங்கம், 5 வெள்ளி மற்றும் 4 வெண்கல பதக்கங்களுடன் முதல் இடத்தை பிடித்துள்ளது.

    சீனா 3 தங்கம், 2 வெற்றி, 3 வெண்கலத்துடன் 2-வது இடத்தில் உள்ளது. ஆஸ்திரேலியா 3 தங்கம், 3 வெண்கலத்துடன் 3-வது இடத்தில் உள்ளது.

    ரியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வென்று முன்னிலையில் இருக்கும் நாடுகள் விவரம்:-

    வ. எண்

    நாடு

    தங்கம்

    வெள்ளி

    வெண்கலம்

    மொத்தம்

    1

    அமெரிக்கா

    3

    5

    4

    12

    2

    சீனா

    3

    2

    3

    8

    3

    ஆஸ்திரேலியா

    3

    0

    3

    6

    4

    இத்தாலி

    2

    3

    2

    7

    5

    தென் கொரியா

    2

    2

    1

    5

    6

    ஹங்கேரி

    2

    0

    0

    2

    7

    ரஷியா

    1

    2

    2

    5

    8

    பிரிட்டன்

    1

    1

    0

    2

    8

    ஸ்வீடன்

    1

    1

    0

    2

    10

    ஜப்பான்

    1

    0

    6

    7

    11

    தாய்லாந்து

    1

    0

    1

    2

    11

    தைபே

    1

    0

    1

    2

    13

    அர்ஜென்டினா

    1

    0

    0

    1

    13

    பெல்ஜியம்

    1

    0

    0

    1

    13

    கொசோவோ

    1

    0

    0

    1

    13

    நெதர்லாந்து

    1

    0

    0

    1

    13

    வியட்னாம்

    1

    0

    0

    1

    18

    கனடா

    0

    1

    1

    2

    18

    கஜகஜஸ்தான்

    0

    1

    1

    2

    20

    பிரேசில்

    0

    1

    0

    1

    20

    டென்மார்க்

    0

    1

    0

    1

    20

    இந்தோனேசியா

    0

    1

    0

    1

    20

    நியூசிலாந்து

    0

    1

    0

    1

    20

    பிலிப்பைன்ஸ்

    0

    1

    0

    1

    20

    தென்ஆப்பிரிக்கா

    0

    1

    0

    1

    28

    உஸ்பெகிஸ்தான்

    0

    0

    2

    2

    29

    ஸ்பெயின்

    0

    0

    1

    1

    29

    கிரீஸ்

    0

    0

    1

    1

    29

    போலந்து

    0

    0

    1

    1


    கொசோவோ நாட்டிற்கு ஒலிம்பிக்கில் முதல் பதக்கத்தை வாங்கிக் கொடுத்தவர் என்ற பெருமையை ஜூடோ வீராங்கனை பெற்றுள்ளார்.
    2008-ம் ஆண்டு செர்பியாவில் இருந்து பிரிந்து தனி நாடானது கொசோவோ. இந்த நாடு கடந்த 1992-ல் இருந்து ஒலிம்பிக் கமிட்டியை தொடங்கினாலும், கடந்த 2014-ம் ஆண்டுதான் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்தது.

    இதனால் கொசோவோ நாட்டு வீரர்கள்- வீராங்கனைகள் முதன்முறையாக தங்கள் நாட்டு பிரதிநிதிகளாக ரியோ ஒலிம்பி்க்கில் கலந்து கொண்டனர்.

    இந்த நாட்டைச் சேர்ந்த மஜ்லிந்தா கெல்மென்டி என்ற 25 வயது வீராங்கனை ஜூடோ 52 கிலோ எடைப்பிரிவில் கலந்து கொண்டார். நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் இத்தாலி வீராங்கனை ஒடேட்டே ஜியுஃப்ரிடாவை எதிர்கொண்டார்.

    இதில் மஜ்லிந்தா கெல்மென்டி இத்தாலி வீராங்கனையை தோற்கடித்து தங்கம் வென்றார். இதன் மூலம் ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற முதல் கொசோவோ வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இத்தாலி வீராங்கனை வெள்ளி பதக்கமும், ஜப்பான் மற்றும் ரஷியா நாட்டு வீராங்கனைகள் வெண்கல பதக்கங்களும் வென்றனர்.
    ஒலிம்பிக் போட்டியில் பதக்கப் போட்டியில் முன்னிலையில் இருந்த, உலகின் முதல்நிலை வீரரான ஜோகோவிச் முதல் சுற்றிலேயே வெளியேறினார்.
    ரியோ:

    பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனீரோ நகரில் ஒலிம்பிக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகின்றன. ஆண்கள் டென்னிஸ் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் உலகின் நம்பர் ஒன் வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், அர்ஜென்டினாவின் டெல்போட்ரோவை எதிர்கொண்டார்.

    இப்போட்டியில் ஜோகோவிச் எளிதில் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஆட்டம் டெல்போட்ரோ பக்கம் திரும்பியது. ஜோகோவிச்குக்கு கடும் சவாலாக விளங்கிய டெல் போட்ரோ, 7-6 (7-4) 7-6 (7-2) என்ற செட்கணக்கில் வெற்றி பெற்றார்.

    இதனால் கடும் அதிர்ச்சியும் ஏமாற்றமும் அடைந்த ஜோகோவிச் கண்ணீருடன் டென்னிஸ் அரங்கை விட்டு வெளியேறினார். தனது வாழ்நாளில் மிகவும் கடினமான தோல்விகளில் இதுவும் என்றும், ஒலிம்பிக் போட்டி முற்றிலும் மாறுபட்டது என்றும் அவர் தெரிவித்தார்.

    முதல் சுற்றில் வெற்றி பெற்ற டெல் போட்ரோ இன்று நடைபெற உள்ள 2ம் சுற்று ஆட்டத்தில் போர்ச்சுக்கல் வீரர் ஜோவாவை எதிர்கொள்கிறார்.

    ரியோ ஒலிம்பிக் போட்டியில் இந்திய நேரப்படி இன்று காலை நடந்த நீச்சல் பந்தயத்தில் 3 புதிய உலக சாதனை படைக்கப்பட்டது.
    ரியோ டி ஜெனிரோ:

    ரியோ ஒலிம்பிக் போட்டியில் இந்திய நேரப்படி இன்று காலை நடந்த நீச்சல் பந்தயத்தில் 3 புதிய உலக சாதனை படைக்கப்பட்டது.

    பெண்களுக்கான 100 மீட்டர் பட்டர்பிளை நீச்சலில் சுவீடன் வீராங்கனை சாரா ஜோஸ்டோம் 55.48 வினாடியில் கடந்து புதிய உலக சாதனை மற்றும் ஒலிம்பிக் சாதனை படைத்து தங்கம் வென்றார். இதற்கு முன்பு அவர் கடந்த 55.64 வினாடியில் கடந்ததே சாதனையாக இருந்தது. தனது சாதனையை அவர் முறியடித்தார்.

    கனடாவை சேர்ந்த பென்னி ஒலிஸ்கா 56.46 வினாடியில் கடந்து வெள்ளிப் பதக்கமும், அமெரிக்காவை சேர்ந்த டானா ஹேல்மர் 56.63 வினாடியில் கடந்து வெண்கல பதக்கமும் பெற்றனர்.

    ஆண்களுக்கான 100 மீட்டர் பிரஸ்டிரோக் நீச்சலில் இங்கிலாந்து வீரர் ஆடம் பெய்ட்டி புதிய உலக சாதனை நிகழ்த்தினார். அவர் பந்தய தூரத்தை 57.13 வினாடியில் கடந்தார்.

    தென் ஆப்பிரிக்க வீரர் கேமரூன் ஹன்டர் 58.69 வினாடியில் கடந்து வெள்ளியும், அமெரிக்க வீரர் மில்லர் 58.87 வினாடியில் கடந்து வெண்கலமும் பெற்றார்.

    பெண்களுக்கான 400 மீட்டர் பிரீஸ்டைல் நீச்சலில் அமெரிக்க வீராங்கனை கேத்லின் லெட்ல்சி 3 நிமிடம் 56.46 வினாடியில் கடந்து புதிய உலக சாதனை படைத்து தங்கம் வென்றார்.

    இதற்கு முன்பு அவர் 2014-ம் ஆண்டு 3 நிமிடம் 58.37 வினாடியில் கடந்ததே சாதனையாக இருந்தது. தனது சாதனையை முறியடித்து கேத்லின் புதிய சாதனை நிகழ்த்தினார்.

    இங்கிலாந்தை சேர்ந்த கார்லின் வெள்ளி பதக்கமும், அமெரிக்காவை சேர்ந்த சுமித் வெண்கலமும் பெற்றனர்.

    ஆண்களுக்கான 50 கிலோ உடல் எடை பிரிவு பளு தூக்குதலில் சீன வீரர் லாங் சிங்குவான் புதிய உலக சாதனை படைத்தார். அவர் 307 கிலோ தூக்கி தங்கம் வென்றார்.
    ×