என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரியோ ஒலிம்பிக்: 1-2 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியிடம் வீழ்ந்தது இந்திய ஆடவர் ஹாக்கி அணி
    X

    ரியோ ஒலிம்பிக்: 1-2 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியிடம் வீழ்ந்தது இந்திய ஆடவர் ஹாக்கி அணி

    ரியோ ஒலிம்பிக்ஸ் தொடரில் ஜெர்மனிக்கு எதிரான ஆடவர் ஹாக்கி போட்டியில் 1-2 என்ற கோல் கணக்கில் இந்திய அணி தோல்விடையடைந்து அதிர்ச்சியளித்தது.
    ரியோ:

    ரியோ ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் இந்தியா ‘பி’ பிரிவில் இடம் பிடித்துள்ளது. கடந்த சனிக்கிழமை நடைபெற்ற முதல் லீக்கில் அயர்லாந்து அணியை எதிர்கொண்டது. இந்தப் போட்டியில் இந்திய அணி அயர்லாந்தை 3-2 என்ற கணக்கில் வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது.

    இந்நிலையில் நேற்று நடைபெற்ற போட்டியில் இந்திய அணி ஜெர்மனியை எதிர் கொண்டது. ஆட்டத்தின் முதல் குவார்ட்டரில் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை. 2-வது குவார்ட்டரில் ஆட்டத்தின் 18-வது நிமிடத்தில் ஜெர்மனியின் நிக்லஸ் வெலன் முதல் கோலை அடித்தார்.

    இதையடுத்து ஆட்டத்தின் 22-வது நிமிடத்தில் இந்திய அணி தனது முதல் பெனால்டி கார்னர் வாய்ப்பை பெற்றது. அதை ரூபிந்தர் பால் சிங் கோலாக மாற்றினார். இதையடுத்து, 1-1 என்ற சமநிலையில் இரு அணிகளும் இருந்தன.

    இருப்பினும், ஆட்டம் நிறைவடைய 3 வினாடிகளே இருந்த நிலையில் ஜெர்மனி 2-வது கோலை அடித்தது. இதையடுத்து, இந்திய அணியை 2-1 என்ற கணக்கில் வீழ்த்தி ஜெர்மனி அணி வெற்றி பெற்றது.
    Next Story
    ×