என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஒலிம்பிக் முதல் சுற்றில் தோற்றதால் கண்ணீர்மல்க வெளியேறிய ஜோகோவிச்
    X

    ஒலிம்பிக் முதல் சுற்றில் தோற்றதால் கண்ணீர்மல்க வெளியேறிய ஜோகோவிச்

    ஒலிம்பிக் போட்டியில் பதக்கப் போட்டியில் முன்னிலையில் இருந்த, உலகின் முதல்நிலை வீரரான ஜோகோவிச் முதல் சுற்றிலேயே வெளியேறினார்.
    ரியோ:

    பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனீரோ நகரில் ஒலிம்பிக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகின்றன. ஆண்கள் டென்னிஸ் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் உலகின் நம்பர் ஒன் வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், அர்ஜென்டினாவின் டெல்போட்ரோவை எதிர்கொண்டார்.

    இப்போட்டியில் ஜோகோவிச் எளிதில் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஆட்டம் டெல்போட்ரோ பக்கம் திரும்பியது. ஜோகோவிச்குக்கு கடும் சவாலாக விளங்கிய டெல் போட்ரோ, 7-6 (7-4) 7-6 (7-2) என்ற செட்கணக்கில் வெற்றி பெற்றார்.

    இதனால் கடும் அதிர்ச்சியும் ஏமாற்றமும் அடைந்த ஜோகோவிச் கண்ணீருடன் டென்னிஸ் அரங்கை விட்டு வெளியேறினார். தனது வாழ்நாளில் மிகவும் கடினமான தோல்விகளில் இதுவும் என்றும், ஒலிம்பிக் போட்டி முற்றிலும் மாறுபட்டது என்றும் அவர் தெரிவித்தார்.

    முதல் சுற்றில் வெற்றி பெற்ற டெல் போட்ரோ இன்று நடைபெற உள்ள 2ம் சுற்று ஆட்டத்தில் போர்ச்சுக்கல் வீரர் ஜோவாவை எதிர்கொள்கிறார்.

    Next Story
    ×