என் மலர்
ரியோ ஒலிம்பிக்ஸ்-2016
ரியோ ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டியில் அமெரிக்க வீரர் கோன் வெல்லை வீழ்த்தி இந்திய வீரர் விகாஸ் கிருஷ்ணன் வெற்றி பெற்று கால் இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெற்றார்.
ரியோ டி ஜெனீரோ:
ரியோ ஒலிம்பிக்கில் நேற்றைய 4-வது நாள் போட்டி இந்தியாவுக்கு ஏற்றம் நிறைந்ததாக இருந்தது. பதக்கத்தை இதுவரை வெல்ல முடியாவிட்டாலும் போட்டிகளில் வெற்றி பெற்றது.
குத்துச்சண்டை போட்டியில் ஹிவதாபா (பாந்தம்), மனோஜ்குமார் (லைட் வெல்டர் பிரிவு), விகாஸ் கிருஷ்ணன் யாதவ் (மிடில் வெல்டர்) ஆகிய 3 வீரர்கள் பங்கேற்றனர்.
இதில் விகாஸ் கிருஷ்ணன் மோதிய போட்டி இந்திய நேரப்படி நள்ளிரவு 2.30 மணிக்கு நடந்தது. அவர் அமெரிக்க வீரர் கோன் வெல்லை சந்தித்தார். இதில் விகாஸ் கிருஷ்ணன் 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். 3 நடுவர்களும் விகாசுக்கு ஆதரவாக (29-28, 29-28, 29-28) முடிவு அறிவித்தனர்.
இந்த வெற்றி மூலம் அவர் கால் இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெற்றார். இந்த சுற்றில் விகாஸ் துருக்கி வீரர் ஒன்டர் ஹிபலை சந்திக்கிறார்.
2-வது இந்திய வீரர் மனோஜ்குமார் பங்கேற்கும் முதல் சுற்று இன்று நடக்கிறது. அவர் லாத்வியா வீரர் பெட்ராசுகாவை எதிர் கொள்கிறார். இந்திய நேரப்படி நள்ளிரவு 3 மணிக்கு இந்தப் போட்டி நடக்கிறது.
நேற்று நடந்த வில்வித்தை, ஆக்கி போட்டியில் இந்தியாவுக்கு வெற்றி கிடைத்தது. தனிநபர் வில்வித்தை போட்டியில் இந்திய வீரர் அதானுதாஸ் கால் இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார். ஆக்கி ஆண்கள் பிரிவில் இந்திய அணி 2-1 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினாவை வீழ்த்தியது.
துப்பாக்கி சுடுதலில் இந்திய வீராங்கனை ஹீனா சித்து தோற்றார்.

ஊக்கமருந்து சோதனையில் சிக்கியவர்களுக்கு ஒலிம்பிக்கில் கலந்து கொள்ள தடை விதிக்க வேண்டும் என்று ரஷிய வீராங்கனைக்கு எதிராக அமெரிக்க நீச்சல் நட்சத்திரம் லில்லி கிங் போர்க்கொடி தூக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
ரியோ டி ஜெனீரோ :
31-வது ஒலிம்பிக் போட்டி பிரேசில் நாட்டில் உள்ள ரியோ டி ஜெனீரோ நகரில் நடந்து வருகிறது. இதில் இந்தியாவுக்கு தொடர்ந்து ஏமாற்றமே மிஞ்சி வரும் நிலையில், அமெரிக்கா, சீனா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் பதக்கங்களை அள்ளி குவிக்கின்றன.
நீச்சலில் பெண்களுக்கான 100 மீட்டர் பிரஸ்டிரோக் பந்தயத்தில் அமெரிக்க வீராங்கனை லில்லி கிங் 1 நிமிடம் 04.93 வினாடிகளில் இலக்கை கடந்து தங்கப் பதக்கத்தை கபளகரம் செய்தார். ரஷியாவின் யுலினா எபிமோவா (1 நிமிடம் 05.50 வினாடி) வெள்ளிப் பதக்கமும், மற்றொரு அமெரிக்க வீராங்கனை கேட்டி மெய்லி வெண்கலப் பதக்கமும் (1 நிமிடம் 05.69 வினாடி) கைப்பற்றினர்.
வெள்ளிப்பதக்கம் வென்ற 24 வயதான யுலினா எபிமோவா ஊக்கமருந்து சர்ச்சையில் இரண்டு முறை சிக்கியவர். 2013-ம் ஆண்டு அவருக்கு 16 மாத கால தடை விதிக்கப்பட்டது. அதன் பிறகு கடந்த மார்ச் மாதம் ‘மெல்டோனியம்’ என்ற ஊக்கமருந்தை பயன்படுத்தியதாக மீண்டும் சிக்கினார்.
இதனால் ஒலிம்பிக்கில் பங்கேற்க முதலில் தடை விதிக்கப்பட்டது. ஆனால் மெல்டோனியத்தை தடை செய்யப்பட்ட ஊக்கமருந்து பட்டியலில் சேர்ப்பதற்கு முன்பாகவே பயன்படுத்தினேன். எனவே என் மீது தவறு இல்லை என்று வாதிட்ட எபிமோவா சர்வதேச நீச்சல் சங்கத்திடம் மீண்டும் முறையிட்டு கடைசி நேரத்தில் ரியோ ஒலிம்பிக்கில் கலந்து கொள்ளும் வாய்ப்பை பெற்றார்.
என்றாலும் அவர் நீச்சல் குளத்திற்குள் பாய்வதற்கு வந்தபோதெல்லாமல் அவருக்கு எதிராக ரசிகர்கள் கோஷம் எழுப்பினர். முன்னதாக எபிமோவா தகுதி சுற்றில் தனது பிரிவில் முதலிடத்தை பிடித்ததும், தான் ‘நம்பர் ஒன்’ என்பதற்கு அடையாளமாக விரலை உயர்த்தி காட்டினார். லில்லி கிங் தனது பிரிவு போட்டி முடிந்ததும் எபிமோவாவுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக தனது விரலை உயர்த்தி காண்பித்தார். மேலும் இறுதி சுற்று முடிந்ததும் எபிமோவாவுடன் கைகுலுக்கி வாழ்த்து தெரிவிக்க லில்லி கிங் மறுத்து விட்டார்.
இது குறித்து 19 வயதான லில்லி கிங்கிடம் நிருபர்கள் கேட்ட போது, ‘நீங்கள் (எபிமோவா) நம்பர் ஒன் என்று விரலை அசைத்து காட்டுகிறீர்கள். ஊக்கமருந்து மோசடி செய்தவர்கள் நீங்கள்....இவ்வாறு காட்ட உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது. இப்படிபட்டவர்களை நான் ரசிக்கமாட்டேன். நான் அப்பழுக்கற்றவளாக இருப்பதால் தான் அமெரிக்க அணிக்காக இந்த போட்டியில் பங்கேற்கிறேன்’ என்றார்.
அமெரிக்க 100 மீட்டர் ஓட்டப்பந்தய வீரர் ஜஸ்டின் கேத்லின் கூட இரண்டு முறை ஊக்கமருந்தில் சிக்கியவர். அவர் உங்களது அணியில் அங்கம் வகிக்கிறாரே? என்று நிருபர்கள் கேட்ட போது, ‘யாராக இருந்தாலும் சரி...ஊக்கமருந்து சோதனையில் சிக்கியவர்களை ஒலிம்பிக்கில் பங்கேற்க அனுமதிக்க கூடாது’ என்று தைரியமாக பேசினார்.
லில்லி கிங்குக்கு, ‘சாதனை மன்னன்’ சக நீச்சல் வீரர் மைக்கேல் பெல்ப்சும் ஆதரவு தெரிவித்துள்ளார். பெல்ப்ஸ் கூறும் போது, ‘நீச்சல் மட்டுமல்ல, பொதுவாக எல்லா விளையாட்டுகளிலும் ஊக்கமருந்து கறை படிந்தவர்கள், குறிப்பாக பல முறை அந்த சர்ச்சையில் சிக்கியவர்கள் மீண்டும் போட்டிகளில் பங்கேற்க அனுமதிக்கப்படுவது வேதனை அளிக்கிறது’ என்றார்.
எபிமோவா பேசும் போது ‘எனது உணர்வுகளை விவரிக்க வார்த்தைகள் இல்லை. முடிந்த வரை என்னை புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்’ என்று கண்ணீர் மல்க கூறினார்.

ரியோ ஒலிம்பிக்கில் துப்பாக்கி சுடுதலில் பெண்களுக்கான 25 மீட்டர் பிஸ்டல் பந்தயத்தில் இந்திய வீராங்கனை ஹீனா சித்து தோல்வி அடைந்தார்.
ரியோ ஒலிம்பிக்கில் துப்பாக்கி சுடுதலில் பெண்களுக்கான 25 மீட்டர் பிஸ்டல் பந்தயத்தில் இந்திய வீராங்கனை ஹீனா சித்து சொதப்பினார்.
தகுதி சுற்றில் டாப்-8 வீராங்கனைகள் மட்டுமே இறுதி சுற்றை எட்ட முடியும் என்ற நிலையில் ஹீனா சித்து 576 புள்ளிகளுடன் 20-வது இடத்துக்கு பின்தங்கி தோல்வியை தழுவினார்.
ஏற்கனவே 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவிலும் அவர் தகுதி சுற்றோடு வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

ரியோ ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான தனிநபர் வில்வித்தையில் அதானு தாஸ் கால் இறுதிக்கு முந்தைய சுற்றுக்குள் நுழைந்தார்.
ரியோ ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான வில்வித்தை ரிகர்வ் பிரிவின் வெளியேற்றுதல் சுற்றில் இந்திய வீரர் அதானு தாஸ், நேபாள வீரர் ஜித் பஹதுர் முக்தானை எதிர்கொண்டார். இதில் அபாரமாக செயல்பட்ட அதானு தாஸ் 6-0 என்ற புள்ளி கணக்கில் பஹதுருவை பந்தாடினார். கடைசி கேமில் மட்டும் அதானு மூன்று முறை துல்லியமாக 10 புள்ளிகளை குவித்து பிரமாதப்படுத்தினார்.
இதன் பின்னர் அடுத்த சுற்றில் அதானு தாஸ், அட்ரியன் ஆன்ட்ரஸ் புயன்டெஸ் பெரேசை (கியூபா) சந்தித்தார். இதில் கடும் சவால்களை எதிர்கொண்ட போதிலும் தடைகளை வெற்றிகரமாக கடந்த அதானு தாஸ் 6-4 என்ற புள்ளி கணக்கில் அட்ரியனை தோற்கடித்து கால் இறுதிக்கு முந்தைய சுற்றுக்குள் நுழைந்தார்.
கொல்கத்தாவை சேர்ந்த 24 வயதான அதானு தாஸ் கால்இறுதிக்கு முந்தைய சுற்றில் பலம் வாய்ந்த தென்கொரிய வீரர் லீ செங் யுனுடன் மோதுகிறார். லீ செங் யுன், ரிகர்வ் அணிப்பிரிவில் தங்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆட்டம் நாளை மறுதினம் நடக்கிறது.

பெண்கள் ஆக்கி போட்டியில் ‘பி’ பிரிவில் இந்தியா இங்கிலாந்து அணியிடம் தோல்வி அடைந்தது.
ரியோடிஜெனீரோ :
பெண்கள் ஆக்கி போட்டியில் ‘பி’ பிரிவில் இடம் பிடித்துள்ள இந்திய அணி, தனது 2-வது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்தை எதிர்கொண்டது. ஒருங்கிணைந்த ஆட்டத்தை அபாரமாக வெளிப்படுத்திய இங்கிலாந்து அணியின் தாக்குதல் ஆட்டத்தை தாக்குப்பிடிக்க முடியாமல் இந்தியா திணறியது.
தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய இங்கிலாந்து அணி 3-0 என்ற கோல் கணக்கில் இந்தியாவை வீழ்த்தி 2-வது வெற்றியை ருசித்தது. இங்கிலாந்து அணி தரப்பில் ஆன்ஸ்லே 25-வது நிமிடத்திலும், ஒயிட் 27-வது நிமிடத்திலும், டான்சன் 33-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர்.
இங்கிலாந்து அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் 2-1 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவை வென்று இருந்தது. இந்திய அணி சந்தித்த முதல் தோல்வி இதுவாகும். முதலாவது லீக் ஆட்டத்தில் 2-2 என்ற கோல் கணக்கில் ஜப்பானுடன் ‘டிரா’ கண்டு இருந்தது. இந்திய பெண்கள் அணி தனது அடுத்த லீக் ஆட்டத்தில் இன்று (புதன்கிழமை) ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது.

ஒலிம்பிக் போட்டிகளை சேகரிக்க பத்திரிகையாளர்களை ஏற்றிச் சென்ற பஸ் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரியோ டி ஜெனீரோ:
ரியோ டி ஜெனீரோ நகரில் இன்று டியோடோரோ பகுதியில் இருந்து ஒலிம்பிக் பூங்காவை நோக்கி வெளிநாட்டு பத்திரிகையாளர்களை பஸ் மீது சில நபர்கள் தாக்குதல் நடத்தினர். இதில் அந்த பஸ்சின் இரு கண்ணாடி ஜன்னல்கள் உடைந்து நொறுங்கின.
இந்த தாக்குதலில் 12 பத்திரிகையாளர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது. அந்த பஸ்சின்மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதா?, அல்லது, கல்வீச்சு சம்பவத்தில் பஸ் சேதமடைந்ததா? என்பது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் ரியோ டி ஜெனீரோ நகரில் ஏற்கனவே பாதுகாப்பு படைகளை சேர்ந்த சுமார் 85 ஆயிரம் பேர் காவல் பணியில் ஈடுபட்டுள்ளனர். இன்றைய தாக்குதல் சம்பவத்தையடுத்து அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பிரேசிலுக்கு முதல் தங்கப்பதக்கத்தை ஜூடோ வீராங்கனை ரபெலா சில்வா வென்று கொடுத்தார்.
ரியோடிஜெனீரோ :
ரியோ ஒலிம்பிக் போட்டியின் 3-வது நாளில் போட்டியை நடத்தும் நாடான பிரேசில் முதல் தங்கப்பதக்கத்தை கைப்பற்றியது. பெண்களுக்கான ஜூடோ போட்டியில் 57 கிலோ உடல் எடைப்பிரிவில் இறுதி சுற்றில் பிரேசிலை சேர்ந்த 24 வயதான ரபெலா சில்வா, உலகின் நம்பர் ஒன் வீராங்கனையான சுமியா டோர்ஜ்சுரெனை (மங்கோலியா) வீழ்த்தி தங்கப்பதக்கத்தை தனதாக்கினார்.
குடிசைப் பகுதியில் பிறந்தவரான ரபெலா சில்வா 2013-ம் ஆண்டு உலக போட்டியிலும் தங்கப்பதக்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. பிரேசில் முதல் தங்கப்பதக்கத்தை வென்றதை அந்த நாட்டு ரசிகர்கள் ஒன்று திரண்டு ஆட்டம், பாட்டத்துடன் கொண்டாடி மகிழ்ந்தனர்.
தங்கம் வென்ற பிறகு ரபெலா சில்வா கருத்து தெரிவிக்கையில், ‘ஜூடோ தான் எனது வாழ்க்கையாகும். உள்ளூர் ரசிகர்களின் ஆதரவு எனக்கு நல்ல ஊக்கம் அளித்தது. இந்த பதக்கம், பிரேசில் அணி இந்த வாரத்தில் மேலும் பல பதக்கங்களை வெல்ல திறவுகோலாக அமையும் என்று நம்புகிறேன்’ என்றார்.

ரியோ களத்தில் ஓரின சேர்க்கை ஜோடி திருமணம் செய்து கொண்டனர்.
ரியோ டி ஜெனீரோ :
ரியோ ஒலிம்பிக்கில் பிரேசில் பெண்கள் ரக்பி அணி நாக்-அவுட் சுற்றுக்கு முன்பாகவே வெளியேறியது. அந்த அணியில் இடம் பெற்றிருந்த வீராங்கனைகளில் 25 வயதான இசடோரா செருல்லோவும் ஒருவர். இவர் ஓரினச்சேர்க்கை பிரியை. இவருக்கும், ஒலிம்பிக்கில் தன்னார்வ தொண்டு குழுவில் பணியாற்றும் மார்ஜோரி என்யா என்ற பெண்ணும் நீண்ட கால பழக்கம் உண்டு.
போட்டி முடிந்தும் திடீரென மார்ஜோரி, செருல்லோவிடம் நாம் திருமணம் செய்து கொள்ளலாமா? என்று கேட்டார். அவரும் உடனடியாக சம்மதம் தெரிவித்தார். மோதிரம் இல்லாததால் ரிப்பனால் செருல்லோவின் விரலில் முடிச்சு போட்டு திருமணம் செய்து கொண்டார். ரியோ ஒலிம்பிக் களத்தில் நடந்த வித்தியாசமான இந்த திருமணத்தை புகைப்பட கலைஞர்கள் போட்டா போட்டியுடன் படம் எடுத்தனர்.

ஒலிம்பிக்கில் தமிழக வீரர் தங்கம் வென்றால் ரூ.2 கோடி பரிசு மாநில அரசால் வழங்கப்படும்.
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் கொள்கை விளக்க குறிப்பில், “சர்வதேச மற்றும் ஒலிம்பிக் போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு வழங்கப்படும் பரிசுத் தொகையினையும் தமிழக அரசு கணிசமாக உயர்த்தியுள்ளது. எனவே, ஒலிம்பிக் போட்டிகளில் தங்கப்பதக்கம் வெல்லும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவருக்கு ரூ.2 கோடி மாநில அரசால் வழங்கப்படும்.
ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கங்கள் வெல்வதற்கான தகுதியினைக் கொண்ட தடகளம், மேசைப்பந்து, நீச்சல், வாள் சண்டை மற்றும் பாய்மரப் படகோட்டுதல் ஆகிய விளையாட்டுகளைச் சேர்ந்த தலை சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு தங்களுடைய திறமையை மேம்படுத்திக் கொள்ளும் வகையில் ஆண்டுதோறும் தலா ரூ.25 லட்சம் வீதம் 5 ஆண்டுகளுக்கு வழங்கி இத்திறனாளர்களை ஊக்குவித்து ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கச் செய்யும் திட்டத்தினை தமிழ்நாடு அரசு நிறுவியுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரியோ ஒலிம்பிக்கில் இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி 2-1 என்ற கோல் கணக்கில் அர்ஜெண்டினா அணியை வீழ்த்தியது.
ரியோ:
ஒலிம்பிக் ஆண்கள் ஆக்கி போட்டியில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் இந்திய அணி 2-1 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினாவுக்கு அதிர்ச்சி அளித்து 2-வது வெற்றியை பதிவு செய்தது.
ரியோ ஒலிம்பிக் ஆண்கள் ஆக்கி போட்டியில் 'பி' பிரிவில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் இந்திய அணி, அர்ஜென்டினாவை எதிர்கொண்டது. விறுவிறுப்பு நிறைந்த இந்த ஆட்டத்தில் இந்திய அணி தொடக்கம் முதலே தாக்குதல் ஆட்டத்தை தொடுத்தது. அதற்கு நல்ல பலனும் கிட்டியது.
8-வது நிமிடத்தில் இந்திய அணி முதல் கோலை அடித்தது, பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி சிங்லென்சனாசிங் இந்த கோலை அடித்தார். 35-வது நிமிடத்தில் இந்திய அணி 2-வது கோலை போட்டது. இந்த கோலை கோதாஜித்சிங் லாவகமாக அடித்தார். இதன் மூலம் இந்திய அணி 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.
பின் பாதி ஆட்டத்திலும் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தினாலும் கோல் எதுவும் அடிக்க முடியவில்லை. 49-வது நிமிடத்தில் அர்ஜென்டினா அணி பதில் கோல் திருப்பியது. பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி அந்த அணி வீரர் கொன்சாலோ பெய்லாட் இந்த கோலை திணித்தார்.
கடைசி கட்டத்தில் அர்ஜென்டினா அணி, இந்தியாவுக்கு கடும் நெருக்கடி அளித்தது. இருப்பினும் அந்த அணியால் மேலும் கோல் எதுவும் அடிக்க முடியவில்லை. முடிவில் இந்திய அணி 2-1 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினாவுக்கு அதிர்ச்சி அளித்து 2-வது வெற்றியை ருசித்தது. 7 ஆண்டுகளுக்கு பிறகு அர்ஜென்டினா அணியை முதல்முறையாக இந்தியா வீழ்த்தி இருப்பது குறிப்பிடத்தக்கது. முதல் ஆட்டத்தில் 3-2 என்ற கோல் கணக்கில் அயர்லாந்தை வென்று இருந்த இந்திய அணி, அடுத்த லீக் ஆட்டத்தில் கடைசி நிமிட கோலால் 1-2 என்ற கோல் கணக்கில் ஒலிம்பிக் சாம்பியன் ஜெர்மனியிடம் தோற்று இருந்தது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி கால் இறுதி வாய்ப்பை நெருங்கி இருக்கிறது.
இந்திய அணி தனது அடுத்த லீக் ஆட்டத்தில் நாளை (வியாழக்கிழமை) லண்டன் ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்ற நெதர்லாந்தை எதிர்கொள்கிறது.
இந்த போட்டி இந்திய நேரப்படி மாலை 6.30 மணிக்கு தொடங்குகிறது.

ஒலிம்பிக்கில் தனிநபர் துடுப்பு படகு காலிறுதிப் போட்டியில் இந்திய வீரர் தத்து பொக்கேனல் 4ம் இடம் பிடித்ததன் மூலம் அரையிறுதி வாய்ப்பை இழந்து வெளியேறினார்.
ரியோ:
ரியோ ஒலிம்பிக்கில் இன்று ஆண்களுக்கான தனிநபர் துடுப்பு படகு போட்டியின் காலிறுதி சுற்று நடைபெற்றது. இதில் இந்தியா சார்பில் தத்து பொக்கேனல் கலந்து கொண்டார்.
4 பிரிவுகளாக நடத்தப்பட்ட காலிறுதியில் இந்திய வீரர் தத்து பொக்கேனல் 4-வது பிரிவில் கலந்து கொண்டார். இவருடன் மேலும் 5 வீரர்கள் இடம் பெற்றிருந்தனர்.
போட்டியின் முடிவில் பந்தய தூரமான 1500 மீட்டரை குரோஷியா நாட்டைச்சேர்ந்த தமிர் மார்ட்டின் 6 நிமிடங்கள் 44:44 நொடிகளில் எட்டி சாதனை படைத்தார்.
பிரிட்டனைச் சேர்ந்த ஆலன் கேம்பெல் 2-வது இடத்தையும், போலந்து நாட்டைச்சேர்ந்த நாதன் வெக்ரெஸ்கி 3-வது இடத்தையும் எட்டிப் பிடித்தனர்.
இந்திய வீரர் தத்து போக்கெனல் 6 நிமிடங்கள் 59:89 நொடிகளில் இலக்கை எட்டி 4-வது இடம் பிடித்தார். முதல் 3 இடங்களைப் பிடித்தவர்கள் மட்டுமே அரையிறுதிக்கு செல்ல முடியும் என்பதால் ஒலிம்பிக்கில் அரையிறுதி வாய்ப்பை இழந்து ரியோ ஒலிம்பிக் தொடரிலிருந்து தத்து பொக்கேனல் வெளியேறினார்.

ஆண்களுக்கான ஜிம்னாஸ்டிக் பிரிவுக்கான ஒலிம்பிக் போட்டிகளில் தொடர்ந்து மூன்றுமுறை தங்கம் வென்றுவந்த சீனாவின் ஆதிக்கத்தை ஜப்பான் முடிவுக்கு கொண்டுவந்துள்ளது.

ரியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டிகளில், இன்று நடந்த ஆண்களுக்கான ஜிம்னாஸ்டிக் பிரிவில் ஜப்பான் அணி 274 புள்ளிகள் பெற்று தங்கப்பதக்கம் வென்றுள்ளது. ரஷியாவிற்கு வெள்ளி பதக்கமும், சீனாவிற்கு வெண்கலப் பதக்கமும் கிடைத்துள்ளது.
இதன்மூலம், எட்டு ஆண்டுகளாக ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக் பிரிவில் சீன வீரர்கள் செலுத்தி வந்த ஆதிக்கத்தை ஜப்பான் முடிவிற்கு கொண்டுவந்துள்ளது.