என் மலர்
செய்திகள்

ரியோ ஒலிம்பிக் துடுப்பு படகு போட்டி: காலிறுதியில் இந்திய வீரர் தத்து பொக்கேனல் ஏமாற்றம்
ஒலிம்பிக்கில் தனிநபர் துடுப்பு படகு காலிறுதிப் போட்டியில் இந்திய வீரர் தத்து பொக்கேனல் 4ம் இடம் பிடித்ததன் மூலம் அரையிறுதி வாய்ப்பை இழந்து வெளியேறினார்.
ரியோ:
ரியோ ஒலிம்பிக்கில் இன்று ஆண்களுக்கான தனிநபர் துடுப்பு படகு போட்டியின் காலிறுதி சுற்று நடைபெற்றது. இதில் இந்தியா சார்பில் தத்து பொக்கேனல் கலந்து கொண்டார்.
4 பிரிவுகளாக நடத்தப்பட்ட காலிறுதியில் இந்திய வீரர் தத்து பொக்கேனல் 4-வது பிரிவில் கலந்து கொண்டார். இவருடன் மேலும் 5 வீரர்கள் இடம் பெற்றிருந்தனர்.
போட்டியின் முடிவில் பந்தய தூரமான 1500 மீட்டரை குரோஷியா நாட்டைச்சேர்ந்த தமிர் மார்ட்டின் 6 நிமிடங்கள் 44:44 நொடிகளில் எட்டி சாதனை படைத்தார்.
பிரிட்டனைச் சேர்ந்த ஆலன் கேம்பெல் 2-வது இடத்தையும், போலந்து நாட்டைச்சேர்ந்த நாதன் வெக்ரெஸ்கி 3-வது இடத்தையும் எட்டிப் பிடித்தனர்.
இந்திய வீரர் தத்து போக்கெனல் 6 நிமிடங்கள் 59:89 நொடிகளில் இலக்கை எட்டி 4-வது இடம் பிடித்தார். முதல் 3 இடங்களைப் பிடித்தவர்கள் மட்டுமே அரையிறுதிக்கு செல்ல முடியும் என்பதால் ஒலிம்பிக்கில் அரையிறுதி வாய்ப்பை இழந்து ரியோ ஒலிம்பிக் தொடரிலிருந்து தத்து பொக்கேனல் வெளியேறினார்.

Next Story