என் மலர்
செய்திகள்

ரியோ ஒலிம்பிக்: இந்திய ஹாக்கி அணி வெற்றி
ரியோ ஒலிம்பிக்கில் இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி 2-1 என்ற கோல் கணக்கில் அர்ஜெண்டினா அணியை வீழ்த்தியது.
ரியோ:
ஒலிம்பிக் ஆண்கள் ஆக்கி போட்டியில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் இந்திய அணி 2-1 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினாவுக்கு அதிர்ச்சி அளித்து 2-வது வெற்றியை பதிவு செய்தது.
ரியோ ஒலிம்பிக் ஆண்கள் ஆக்கி போட்டியில் 'பி' பிரிவில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் இந்திய அணி, அர்ஜென்டினாவை எதிர்கொண்டது. விறுவிறுப்பு நிறைந்த இந்த ஆட்டத்தில் இந்திய அணி தொடக்கம் முதலே தாக்குதல் ஆட்டத்தை தொடுத்தது. அதற்கு நல்ல பலனும் கிட்டியது.
8-வது நிமிடத்தில் இந்திய அணி முதல் கோலை அடித்தது, பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி சிங்லென்சனாசிங் இந்த கோலை அடித்தார். 35-வது நிமிடத்தில் இந்திய அணி 2-வது கோலை போட்டது. இந்த கோலை கோதாஜித்சிங் லாவகமாக அடித்தார். இதன் மூலம் இந்திய அணி 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.
பின் பாதி ஆட்டத்திலும் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தினாலும் கோல் எதுவும் அடிக்க முடியவில்லை. 49-வது நிமிடத்தில் அர்ஜென்டினா அணி பதில் கோல் திருப்பியது. பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி அந்த அணி வீரர் கொன்சாலோ பெய்லாட் இந்த கோலை திணித்தார்.
கடைசி கட்டத்தில் அர்ஜென்டினா அணி, இந்தியாவுக்கு கடும் நெருக்கடி அளித்தது. இருப்பினும் அந்த அணியால் மேலும் கோல் எதுவும் அடிக்க முடியவில்லை. முடிவில் இந்திய அணி 2-1 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினாவுக்கு அதிர்ச்சி அளித்து 2-வது வெற்றியை ருசித்தது. 7 ஆண்டுகளுக்கு பிறகு அர்ஜென்டினா அணியை முதல்முறையாக இந்தியா வீழ்த்தி இருப்பது குறிப்பிடத்தக்கது. முதல் ஆட்டத்தில் 3-2 என்ற கோல் கணக்கில் அயர்லாந்தை வென்று இருந்த இந்திய அணி, அடுத்த லீக் ஆட்டத்தில் கடைசி நிமிட கோலால் 1-2 என்ற கோல் கணக்கில் ஒலிம்பிக் சாம்பியன் ஜெர்மனியிடம் தோற்று இருந்தது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி கால் இறுதி வாய்ப்பை நெருங்கி இருக்கிறது.
இந்திய அணி தனது அடுத்த லீக் ஆட்டத்தில் நாளை (வியாழக்கிழமை) லண்டன் ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்ற நெதர்லாந்தை எதிர்கொள்கிறது.
இந்த போட்டி இந்திய நேரப்படி மாலை 6.30 மணிக்கு தொடங்குகிறது.

Next Story