search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    400 மீட்டர் தனிநபர் மெட்லி நீச்சலில் அங்கேரி வீராங்கனை உலக சாதனை
    X

    400 மீட்டர் தனிநபர் மெட்லி நீச்சலில் அங்கேரி வீராங்கனை உலக சாதனை

    ரியோ ஒலிம்பிக் போட்டியில் பெண்களுக்கான 400 மீட்டர் தனிநபர் மெட்லி நீச்சலில் அங்கேரி வீராங்கனை கதின்கா ஹோஸ்ஜூ புதிய உலக சாதனை படைத்து தங்கம் வென்றார்.
    ரியோ டி ஜெனிரோ:

    ரியோ ஒலிம்பிக்கில் முதல் நாள் ஆட்டத்தில் நீச்சலில் 4 தங்கப்பதக்கத்துக்கான போட்டி நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலியா 2 தங்கப்பதக்கத்தையும், அங்கேரி, ஜப்பான் தலா ஒரு தங்கத்தையும் கைப்பற்றின.

    பெண்களுக்கான 400 மீட்டர் தனிநபர் மெட்லி நீச்சலில் அங்கேரி வீராங்கனை கதின்கா ஹோஸ்ஜூ புதிய உலக சாதனை படைத்து தங்கம் வென்றார். அவர் பந்தய தூரத்தை 4 நிமிடம் 26.36 வினாடியில் கடந்தார். இதற்கு முன்பு லண்டன் ஒலிம்பிக்கில் (2012) சீனியர் வீராங்கனை யூ ஹிவான் 4 நிமிடம் 28.43 வினாடியில் கடந்ததே உலக சாதனையாக இருந்தது. இந்த சாதனையை கதின்கா முறியடித்து புதிய உலக சாதனை நிகழ்த்தினார்.

    அமெரிக்க வீராங்கனை மெட்லின் வெள்ளிப்பதக்கமும் (4 நிமிடம் 31.15 வினாடி) ஸ்பெயின் வீராங்கனை கார்சியா வெண்கல பதக்கமும் (4 நிமிடம் 32.39 வினாடி) பெற்றனர்.

    இதே போல பெண்களுக்கான 4*100 மீட்டர் பிரீஸ் டைல் தொடர் நீச்சலில் ஆஸ்திரேலியா புதிய உலக சாதனை படைத்து தங்கம் வென்றது.

    ஆஸ்திரேலியா மகளிர் அணி பந்தய தூரத்தை 3 நிமிடம் 30.65 வினாடியில் கடந்தது. அமெரிக்காவுக்கு வெள்ளிப்பதக்கமும் (3 நிமிடம் 31.89 வினாடி) கனடாவுக்கு வெண்கல பதக்கமும் (3 நிமிடம் 32.89 வினாடி) பெற்றது.

    11 ஆண்களுக்கான 400 மீட்டர் பிரிஸ்டைல் நீச்சலில் ஆஸ்திரேலிய வீரர் ஹார்டன் தங்கம் வென்றார். அவர் பந்தய தூரத்தை 3 நிமிடம் 41.55 வினாடியில் கடந்தார். சீனா, இத்தாலி வீரர்கள் முறையே வெள்ளி, வெண்கல பதக்கம் பெற்றனர்.

    400 மீட்டர் தனிநபர் மெட்லே நீச்சல் பிரிவில் ஜப்பான் வீரர் கொசுகே ஹர்சினோ 4 நிமிடம் 06.05 வினாடியில் கடந்து தங்கம் வென்றார்.

    அமெரிக்கா, ஜப்பான் வீரர்களுக்கு முறையே வெள்ளி, வெண்கல பதக்கம் கிடைத்தது.
    Next Story
    ×