என் மலர்tooltip icon

    ரியோ ஒலிம்பிக்ஸ்-2016

    ரியோ ஒலிம்பிக்கில் முதல் நாள் போட்டிகள் இந்தியாவுக்கு பாதகமாக அமைந்தது. பெண்கள் இரட்டையர் டென்னிஸ் போட்டியில் சானியா ஜோடி வெளியேறியது.

    ரியோ டி ஜெனிரே:

    ரியோ ஒலிம்பிக்கில் முதல் நாள் போட்டிகள் இந்தியாவுக்கு பாதகமாக அமைந்தது.

    ஆண்கள் இரட்டையர் பிரிவில் லியாண்டர் பெயஸ் - ரோகன் போபண்ணா ஜோடி தொடக்க சுற்றிலேயே வெளியேறி இருந்தது.

    இதே போல் பெண்கள் இரட்டையர் பிரிவிலும் இந்திய ஜோடி முதல் சுற்றிலேயே வெறியேறியது.

    சானியா மிர்சா-பிரார்த் தனா தாம்ரே ஜோடி முதல் சுற்றில் சீனாவை சேர்ந்த பெங்-ஜங் ஜோடியை எதிர் கொண்டது. இதில் சானியா ஜோடி 6-7, 7-5, 5-7 என்ற கணக்கில் தோற்றது.

    முதல் செட்டில் தோற்ற சானியா ஜோடி 2-வது செட்டில் வெற்றி பெற்றது. 3-வது செட்டில் தோற்றதால் போட்டியில் இருந்து வெளியேற வேண்டிய நிலமை ஏற்பட்டது.

    டென்னிசில் இரண்டு பிரிவிலும் வெளியேறிய இந்தியாவுக்கு இன்னும் ஒரே ஒரு வாய்ப்பு மட்டுமே இருக்கிறது.

    கலப்பு இரட்டையர் பிரிவில் சானியா மிர்சா- ரோகன் போபண்ணா ஜோடி விளையாடுகிறது. இருவரும் விளையாடும் முதல் சுற்று ஆட்டம் 10-ந் தேதி நடக்கிறது.

    துடுப்பு படகு போட்டியில் இந்திய வீரர் டட்டு பாபன் போகனல் கால் இறுதிக்கு முன்னேறினார். ஒற்றையர் ஸ்குல்ஸ் பிரிவில் அவர் பந்தய தூரத்தை 7 நிமிடம் 21.67 வினாடியில் கடந்தார்.

    வில்வித்தை போட்டியிலும் இந்தியாவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. வில்வித்தை பெண்களுக்கான தனி நபர் பிரிவில் தீபிகா குமாரி, பாம்யலா தேவி, லட்சுமி ராணி ஆகியோர் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறவில்லை.

    ரியோ ஒலிம்பிக் போட்டியில் துப்பாக்கிச் சுடுதல் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீரர் ஜீத்துராய் 8-வது இடம் பிடித்து தோல்வி அடைந்துள்ளார்.
    ரியோ:

    பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோ நகரில் 31-வது ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில், ஆண்களுக்கான துப்பாக்கி சுடுதல் 10 மீட்டர் 'ஏர் பிஸ்டல்' பிரிவு தகுதி சுற்றில் இந்திய வீரர் ஜித்து ராய் கலந்து கொண்டார். அவருடன் இந்திய வீரர் குர்பிரீத் சிங்கும் கலந்து கொண்டார். 

    தகுதி சுற்றில் ஜித்து ராய் 580 புள்ளிகளுடன் 6-ம் பிடித்து இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார். இருப்பினும் இறுதிச் சுற்றில் தோல்வி அடைந்து 8-வது இடத்தை பிடித்தார்.

    இதனையடுத்து ஆகஸ்ட் 10-ம் தேதி நடைபெறவுள்ள 50 மீட்டர் பிஸ்டல் போட்டியில் ஜீத்து கலந்து கொள்ள உள்ளார். 28 வயதான ராணுவ வீரர் ஜீத்துராய் 2014-ம் ஆண்டு நடைபெற்ற ஆசிய கோப்பை போட்டியில் வெண்கல பதக்கம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக 2014 காமன்வெல்த் போட்டியில் 50 மீட்டர் பிரிவில் அவர் தக்கப்பதக்கம் வென்றுள்ளார் .

    மற்றொரு இந்திய வீரர் குர்பிரீத் சிங் 576 புள்ளிகளுடன் 20வது இடம் பிடித்து இறுதிச் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தார்
    ரியோ ஒலிம்பிக் போட்டி நடைபெறும் பகுதியில் வெடிகுண்டு சத்தம் கேட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியர்கள் அனைவரும் பத்திரமாக உள்ளதாக சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.
    ரியோ:

    4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் ஒலிம்பிக் திருவிழாவின் தொடக்க விழா பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனீரோ நகரின் மரக்கானா திடலில் இன்று நடைபெற்றது. 

    இந்நிலையில், ஒலிம்பிக்கில் சைக்கிளிங் போட்டி நடைபெறும் பகுதியில் வெடிகுண்டு சத்தம் கேட்டுள்ளது. இதனால் அங்குள்ள பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். காயங்கள் குறித்த தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

    இதனிடையே, வெடிகுண்டு சத்தம் கேட்டுள்ள நிலையில் அங்குள்ள இந்தியர்கள் அனைவரும் பத்திரமாக உள்ளதாக தனது டுவிட்டர் இணையதளத்தில் வெளியுறவுத் துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார். மேலும், பிரேசில் நாட்டிற்கான இந்திய தூதர் தொடர்பில் உள்ளதாக சுஷ்மா கூறியுள்ளார்.

    முன்னதாக, ஒலிம்பிக் நடைபெறும் இடங்களில் வெவ்வேறு இடங்களில் நடைபெற்ற வன்முறை சம்பவங்களில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    பிரேசில் நாட்டில் ரியோ ஒலிம்பிக் நடைபெறும் இடங்களில் வெவ்வேறு இடங்களில் நடைபெற்ற வன்முறை சம்பவங்களில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
    ரியோ:

    4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் ஒலிம்பிக் திருவிழாவின் தொடக்க விழா பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனீரோ நகரின் மரக்கானா திடலில் இன்று நடைபெற்றது. 

    ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் இடங்களில் பாதுகாப்பிற்காக 85 ஆயிரம் ராணுவ வீரர்களும், ஏராளமான போலீசாரும் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். 

    இந்நிலையில் நேற்று மாலையில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் பகுதியில் வன்முறை சம்பவங்கள் நடைபெற்றது. இந்த வன்முறை சம்பவங்களின் போது வெவ்வேறு இடங்களில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். 

    மரகான மைதானம் அருகே ஒரு நபர் மக்கள் கூடி இருந்த இடத்தில் தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அங்கிருந்த போலீஸ் அதிகாரிகளுள் ஒருவர் அவனை அங்கிருந்து அப்புறப்படுத்த முயன்றுள்ளார். அப்போது ஏற்பட்ட தாக்குதலில் ஈடுபட்ட நபர் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தெரிகிறது. 

    இந்த சம்பவம் நடைபெற்ற சில மணி நேரம் கழித்து கட்டட வடிவமைப்பாளர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

    அதேபோல், பெண் ஒருவர் மீது மூன்று பேர் தாக்குதலில் ஈடுபட்டனர். அங்கிருந்து தப்பித்துச் சென்ற அந்த பெண்னின் தலை மீது துப்பாக்கியால் சுட்டனர்.
    ரியோ ஒலிம்பிக் டென்னிஸ் போட்டியின் ஆண்களுக்கான இரட்டையர் பிரிவில் இந்தியாவின் போபண்ணா- லியாண்டர் பயஸ் ஜோடி முதல் சுற்றிலேயே தோல்வியடைந்து வெளியேறியது.
    ஒலிம்பிக் டென்னிஸ் போட்டியில் இன்று ஆண்களுக்கான இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோகன் போபண்ணா- லியாண்டர் பயஸ் ஜோடி போலந்தின் லூகாஸ் குபோட்- மார்சின் மாட்கோவ்ஸ்கி ஜோடியை எதிர்கொண்டது.

    முதல் செட்டில் போலந்து ஜோடிக்கு இந்திய ஜோடியால் ஈடுகொடுக்க முடியவில்லை. இதனால் முதல்செட்டை இந்திய ஜோடி 32 நிமிடத்தில் இழந்தது. போலந்து ஜோடி 6-4 என அந்த செட்டை கைப்பற்றியது.

    2-வது செட்டில் தோற்றால் ஒலிம்பிக்கை விட்டு வெளியேற வேண்டும் என்பதால் இந்திய ஜோடி ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இதற்கு போலந்து ஜோடியும் சரியான வகையில் ஈடுகொடுத்தது. ஆகையால் இரு ஜோடியும் மாறிமாறி கேம்களைக் கைப்பற்றினார்கள்.

    இறுதியில் போலந்து ஜோடி 7(8)-6(6) என இந்திய ஜோடியை வீழ்த்தி வெற்றி பெற்றது. 1 மணி நேரம் 24 நிமிடங்கள் நடைபெற்ற இந்த போட்டியில் இந்திய ஜோடி 0-2 என்ற நேர்செட் கணக்கில் தோல்வியடைந்து ரியோ ஒலிம்பிக்கில் இருந்து வெளியேறியது.

    டேபிள் டென்னிஸ் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் மௌமா தாஸ், மணிகா பத்ரா ஆகியோர் தங்கள் பிரிவு முதல் சுற்று ஆட்டங்களில் தோல்வியடைந்தனர்.
    ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் இந்திய அணி அயர்லாந்தை 3-2 என்ற கணக்கில் வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.
    ரியோ ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் இந்தியா ‘பி’ பிரிவில் இடம் பிடித்துள்ளது. இன்று நடைபெற்ற முதல் லீக்கில் அயர்லாந்து அணியை எதிர்கொண்டது. 15-வது நிமிடத்தில் இந்தியாவிற்கு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது. இதை சரியாக பயன்படுத்தி ரகுநாத் வாக்காலிகா கோல் அடித்தார்.

    27-வது நிமிடத்தில் மேலும் ஒரு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இந்த வாய்ப்பை ரூபிந்தர் பால் சிங் சரியாக பயன்படுத்தி கோல் அடித்தார். இதனால் இந்தியா 2-0 என முன்னிலை பெற்றது.

    அதன்பின்னர் கடுமையாக போராடிய அயர்லாந்துக்கு 45-வது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இந்த வாய்ப்பில் அயர்லாந்து வீரர் ஜான் ஜெர்மைன் கோல் அடித்தார். அதன்பின் 49-வது நிமிடத்தில் ரூபிந்தர் பால் சிங் மேலும் ஒரு கோல் அடித்து அணியை வலுவான முன்னிலை பெறச் செய்தார். அதன்பின்னர் 56-வது நிமிடத்தில் கானோர் ஹார்ட்டே ஒரு கோல் அடிக்க, இந்தியா 3-2 என முன்னிலையில் இருந்தது.

    கடைசி நான்கு நிமிடத்தில் இரண்டு அணி வீரர்களும் கோல் அடிக்காததால் இந்தியா 3-2 என வெற்றி பெற்றது. இந்தியா 8-ந்தேதி ஜெர்மனியையும், 9-ந்தேதி அர்ஜென்டினாவையும், 11-ந்தேதி நெதர்லாந்து அணியையும், 12-ந்தேதி கனடாவையும் எதிர்கொள்கிறது.
    ரியோ ஒலிம்பிக்கில் அமெரிக்க வீராங்கனை துப்பாக்கி சுடு போட்டியில் தங்கம் வென்றதன் மூலம் அமெரிக்க முதல் தங்கத்தை கைப்பற்றி அசத்தியுள்ளது.
    ரியோ:

    தென்அமெரிக்காவில் உள்ள பிரேசில் நாட்டின் தலைநகர் ரியோ டி ஜெனிரோவில் நேற்று கோலாகல கலை நிகழ்ச்சியுடன் ‘ரியோ ஒலிம்பிக்- 2016’ தொடங்கியது.

    இன்று பெண்களுக்கான 10 மீ்ட்டர் ஏர் ரைபிள் துப்பாக்கி சுடும் போட்டி நடைபெற்றது. தகுதிச் சுற்றின் முடிவில் 8 வீராங்கனைகள் இறுதி சுற்றுக்கு தகுதிப் பெற்றார்கள்.

    இறுதிச் சுற்றில் அமெரிக்கா மற்றும் சீனா வீராங்கனைகளுக்கு இடையில் கடும் போட்டி நிலவியது. இறுதியில் அமெரிக்க வீராங்கனை விர்ஜினியா த்ராஷெர் 108.0 புள்ளிகள் பெற்று தங்க பதக்கம் வென்றார். சீனா வீராங்கனை லீ டு 207.0 புள்ளிகள் பெற்று 2-வது இடம் பிடித்து வெள்ளி பதக்கம் வென்றார். மற்றொரு சீன வீராங்கனை சிலிங் யீ 185.4 புள்ளிகளுடன் 3-வது இடம் பிடித்து வெண்கல பதக்கம் வென்றார்.

    தகுதிச் சுற்றில் சீன வீராங்கன் லீ டு முதல் இடம் பிடித்திருந்தார். த்ராஷெர் 6-வது இடமும், சிலிங் யீ 8-வது இடமும் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
    10 மீட்டர் ஏர் ரைபிள் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீராங்கனைகள் அபூர்வி சண்டேலா, அயோனிகா பால் ஆகியோர் தகுதிச் சுற்றில் ஏமாற்றம் அடைந்து இறுதிச் சுற்று வாய்ப்பை இழந்தனர்.
    ரியோ ஒலிம்பிக்கில் இன்று நடைபெற்று வரும் போட்டிகளில் பதக்கத்திற்குரிய போட்டியில் பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் துப்பாக்கி சுடுதல் போட்டியும் ஒன்று. இந்த போட்டியில் இந்தியா சார்பில் அபூர்வி சண்டேலா, அயோனிகா பால் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    முதல் நாளிலேயே இந்தியாவிற்கு இவர்கள் பதக்கம் வாங்கித் தருவார்கள் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. 51 பேர் கலந்து கொண்ட தகுதிச் சுற்றில் இவர்கள் இருவரும் கலந்து கொண்டனர். ஒவ்வொரு வீராங்கனைகளும் நான்கு முறை சுட வேண்டும். இதில் முதல் 8 இடங்களை பிடிக்கும் வீராங்கனைகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறுவார்கள்.

    அதன்படி நடைபெற்ற போட்டியில் இந்திய வீராங்கனைகள் அபூர்வி சண்டேலா 411.6 புள்ளிகள் பெற்று 34-வது இடத்தையும், அயோனிகா பால் 407.0 புள்ளிகள் பெற்று 43-வது இடத்தையும்தான் பிடிக்க முடிந்தது.

    சீன வீராங்கனை லீ டு 420.7 புள்ளிகள் பெற்று முதல் இடம் பிடித்தார். இது ஒலிம்பிக் சாதனையாகும். ஜெர்மனி வீராங்கனை 420.3 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தையம், ஈரான் வீராங்கனை 417.8 புள்ளிகள் பெற்று 3-வது இடத்தையும் பிடித்தனர். ரஷ்யா, அமெரிக்கா (2), குரோஷியா, சீனா வீராங்கனைகள் முறையே 4-வது இடம் முதல் 8-வது இடங்களை பிடித்தனர்.

    தகுதிச் சுற்றோடு வெளியேறியதால் பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் சுற்றில் இந்தியாவின் பதக்க கனவு தகர்ந்தது.
    துடுப்பு படகு போட்டியில் இந்திய வீரர் தத்து பவன் பொக்கேனல் தகுதிச் சுற்றில் 3-வது இடம் பிடித்து காலிறுதிக்கு முன்னேறினார்.
    ரியோ ஒலிம்பிக் போட்டி நேற்று தொடங்கியது. இன்று ஆண்களுக்கான துடுப்புப் படகு போட்டியின் தகுதிச் சுற்று நடைபெற்றது. அதில் பங்கேற்ற 32 நாட்டு வீரர்கள் 6 பிரிவுகளாக பிரிக்கப்பட்டனர்.

    இதில் இந்திய வீரர் தத்து பவன் பொக்கேனல் முதல் பிரிவில் இடம்பிடித்திருந்தார். இவருடன் 6 பேர் இந்த சுற்றில் கலந்து கொண்டனர். ஒவ்வொரு சுற்றிலும் முதல் மூன்று இடங்களை பிடிக்கும் வீரர்கள் காலிறுதிக்கு தகுதி பெறுவார்கள்.

    இந்த தகுதிச் சுற்றில் இந்திய வீரர் சிறப்பாக செயல்பட்டு 3-வது இடத்தை பிடித்தார். இதன்மூலம் காலிறுதிக்கு முன்னேறினார். அவர் 1500 மீ்ட்டர் தூரத்தை 7 நிமிடங்கள் 21:67 வினாடிகளில் கடந்தார்.

    1500 மீட்டர் துடுப்பு படகு போட்டி இன்று முதல் 9-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது.

    ஃபிசா ஆசியன் மற்றும் ஓசியானியா ஒலிம்பிக் தகுதிச்சுற்று தொடரில் வெள்ளிப் பதக்கம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
    ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழாவில் இந்திய ஆண்கள் ஆக்கி அணி வீரர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை. இந்திய பெண்கள் ஆக்கி அணியினர் பங்கேற்றனர்.

    ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழாவில் இந்திய ஆண்கள் ஆக்கி அணி வீரர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை. இந்திய பெண்கள் ஆக்கி அணியினர் பங்கேற்றனர்.

    இன்று இந்திய ஆண்கள் ஆக்கி அயர்லாந்துடன் மோதுகிறது. இதனால் வீரர்களுக்கு ஓய்வு தேவை என்பதால் தொடக்க விழாவில் கலந்து கொள்ளவில்ல என்று தெரிகிறது.

    ஒலிம்பிக் விளையாட்டு கிராமத்தில் இந்திய ஆக்கி அணிக்கு போதுமான வசதிகள் செய்து தரப்படவில்லை என்று ஆக்கி சம்மேளனம் குற்றச்சாட்டு கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.

    ஒலிம்பிக் விளையாட்டு கிராமத்தில் ஒரே அறையில் போபண்ணாவுடன் தங்க மறுத்ததாக வந்த தகவலை லியாண்டர் பெயஸ் மறுத்துள்ளார்.
    ஒலிம்பிக் போட்டியில் டென்னிஸ் ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் லியாண்டர் பெயஸ்- ரோகன் போபண்ணா ஜோடி விளையாடுகிறது. முதலில் லியாண்டருடன் ஜோடி சேர போபண்ணா விரும்பவில்லை. அதன்பின் இந்திய டென்னிஸ் சங்கம் அவரை சமாதானப்படுத்தியது.

    இந்த நிலையில் ஒலிம்பிக் விளையாட்டு கிராமத்தில் ஒரே அறையில் போபண்ணாவுடன் தங்க லியாண்டர் பெயஸ் மறுத்ததாக வெளியானது. இதை லியாண்டர் பெயஸ் திட்டவட்டமாக மறுத்துள்ளார். அவர் கூறுகையில், போபண்ணாவுடன் நான் தங்க மறுத்ததாக வெளியான தகவல் முற்றிலும் தவறானது. அடிப்படை ஆதாரம் இல்லாமல் இப்படி ப்பட்ட தகவலால் வருத்தமடைந்தேன்.

    ஒலிம்பிக் வில்வித்தை போட்டியில் ரேங்கிங் சுற்றில் தீபிகா குமாரி, லட்சுமிராணி அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

    ஒலிம்பிக் வில்வித்தை போட்டியில் ரேங்கிங் சுற்று நேற்று நடந்தது. இதில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை தீபிகா குமாரி, பாம்பய்லா தேவி, லட்சுமி ராணி பங்கேற்கின்றனர்.

    இதில் தீபிகாகுமாரி 640 புள்ளிகள் பெற்று 20-வது இடத்தை பிடித்தார். பம்பய்லாதேவி 24-வது இடத்தையும், லட்சுமிராணி 43-வது இடத்தையும் பிடித்தனர். 3 பேரும் அடுத்த சுற்றுக்கு (ரவுண்ட் 32) முன்னேறினர்.

    இந்த சுற்றில் தீபிகாகுமாரி ஜார்ஜியா வீராங்கனை கிறிஸ்டினாவுடன் மோதுகிறார். லட்சுமிராணி சுலோ வாக்கியாவின் அலெக்சாண்டராவுடன் பலப் பரீட்சை நடத்துகிறார்.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் அதானு தாஸ் ரேங்கிங் சுற்றில் 5-வது இடத்தை பிடித்தார். அவர் 683 புள்ளிகள் சேர்த்தார்.

    இதில் தென்கொரிய வீரர் கிம்வூஜின் புதிய உலக சாதனை படைத்தார். அவர் 700 புள்ளிகள் குவித்தார். அடுத்த சுற்றில் இந்திய வீரர் அதானு தாஸ் நேபாள வீரர் ஜிட்பெகதூருடன் மோதுகிறார்.

    பெண்கள் அணிகள் பிரிவில் தீபிகாகுமாரி, லட்சுமிராணி, பம்பய்லோ தேவி ஆகியோரை கொண்ட இந்திய அணி ரேங்கிங் சுற்றில் 7-வது இடத்தை பிடித்தது. இந்திய அணி 1892 புள்ளிகள் எடுத்தது.

    ×