search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரியோ ஒலிம்பிக்கில் முதல் வெற்றியை பதிவு செய்தது இந்திய ஹாக்கி அணி: அயர்லாந்தை 3-2 என வீழ்த்தியது
    X

    ரியோ ஒலிம்பிக்கில் முதல் வெற்றியை பதிவு செய்தது இந்திய ஹாக்கி அணி: அயர்லாந்தை 3-2 என வீழ்த்தியது

    ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் இந்திய அணி அயர்லாந்தை 3-2 என்ற கணக்கில் வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.
    ரியோ ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் இந்தியா ‘பி’ பிரிவில் இடம் பிடித்துள்ளது. இன்று நடைபெற்ற முதல் லீக்கில் அயர்லாந்து அணியை எதிர்கொண்டது. 15-வது நிமிடத்தில் இந்தியாவிற்கு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது. இதை சரியாக பயன்படுத்தி ரகுநாத் வாக்காலிகா கோல் அடித்தார்.

    27-வது நிமிடத்தில் மேலும் ஒரு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இந்த வாய்ப்பை ரூபிந்தர் பால் சிங் சரியாக பயன்படுத்தி கோல் அடித்தார். இதனால் இந்தியா 2-0 என முன்னிலை பெற்றது.

    அதன்பின்னர் கடுமையாக போராடிய அயர்லாந்துக்கு 45-வது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இந்த வாய்ப்பில் அயர்லாந்து வீரர் ஜான் ஜெர்மைன் கோல் அடித்தார். அதன்பின் 49-வது நிமிடத்தில் ரூபிந்தர் பால் சிங் மேலும் ஒரு கோல் அடித்து அணியை வலுவான முன்னிலை பெறச் செய்தார். அதன்பின்னர் 56-வது நிமிடத்தில் கானோர் ஹார்ட்டே ஒரு கோல் அடிக்க, இந்தியா 3-2 என முன்னிலையில் இருந்தது.

    கடைசி நான்கு நிமிடத்தில் இரண்டு அணி வீரர்களும் கோல் அடிக்காததால் இந்தியா 3-2 என வெற்றி பெற்றது. இந்தியா 8-ந்தேதி ஜெர்மனியையும், 9-ந்தேதி அர்ஜென்டினாவையும், 11-ந்தேதி நெதர்லாந்து அணியையும், 12-ந்தேதி கனடாவையும் எதிர்கொள்கிறது.
    Next Story
    ×