என் மலர்
செய்திகள்

ரியோ ஒலிம்பிக்: துப்பாக்கிச் சுடுதல் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீரர் ஜீத்துராய் தோல்வி
ரியோ ஒலிம்பிக் போட்டியில் துப்பாக்கிச் சுடுதல் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீரர் ஜீத்துராய் 8-வது இடம் பிடித்து தோல்வி அடைந்துள்ளார்.
ரியோ:
பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோ நகரில் 31-வது ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில், ஆண்களுக்கான துப்பாக்கி சுடுதல் 10 மீட்டர் 'ஏர் பிஸ்டல்' பிரிவு தகுதி சுற்றில் இந்திய வீரர் ஜித்து ராய் கலந்து கொண்டார். அவருடன் இந்திய வீரர் குர்பிரீத் சிங்கும் கலந்து கொண்டார்.
தகுதி சுற்றில் ஜித்து ராய் 580 புள்ளிகளுடன் 6-ம் பிடித்து இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார். இருப்பினும் இறுதிச் சுற்றில் தோல்வி அடைந்து 8-வது இடத்தை பிடித்தார்.
இதனையடுத்து ஆகஸ்ட் 10-ம் தேதி நடைபெறவுள்ள 50 மீட்டர் பிஸ்டல் போட்டியில் ஜீத்து கலந்து கொள்ள உள்ளார். 28 வயதான ராணுவ வீரர் ஜீத்துராய் 2014-ம் ஆண்டு நடைபெற்ற ஆசிய கோப்பை போட்டியில் வெண்கல பதக்கம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக 2014 காமன்வெல்த் போட்டியில் 50 மீட்டர் பிரிவில் அவர் தக்கப்பதக்கம் வென்றுள்ளார் .
மற்றொரு இந்திய வீரர் குர்பிரீத் சிங் 576 புள்ளிகளுடன் 20வது இடம் பிடித்து இறுதிச் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தார்
Next Story






