என் மலர்
செய்திகள்

பெண்கள் இரட்டையர் டென்னிஸ்: சானியா ஜோடி வெளியேற்றம்
ரியோ டி ஜெனிரே:
ரியோ ஒலிம்பிக்கில் முதல் நாள் போட்டிகள் இந்தியாவுக்கு பாதகமாக அமைந்தது.
ஆண்கள் இரட்டையர் பிரிவில் லியாண்டர் பெயஸ் - ரோகன் போபண்ணா ஜோடி தொடக்க சுற்றிலேயே வெளியேறி இருந்தது.
இதே போல் பெண்கள் இரட்டையர் பிரிவிலும் இந்திய ஜோடி முதல் சுற்றிலேயே வெறியேறியது.
சானியா மிர்சா-பிரார்த் தனா தாம்ரே ஜோடி முதல் சுற்றில் சீனாவை சேர்ந்த பெங்-ஜங் ஜோடியை எதிர் கொண்டது. இதில் சானியா ஜோடி 6-7, 7-5, 5-7 என்ற கணக்கில் தோற்றது.
முதல் செட்டில் தோற்ற சானியா ஜோடி 2-வது செட்டில் வெற்றி பெற்றது. 3-வது செட்டில் தோற்றதால் போட்டியில் இருந்து வெளியேற வேண்டிய நிலமை ஏற்பட்டது.
டென்னிசில் இரண்டு பிரிவிலும் வெளியேறிய இந்தியாவுக்கு இன்னும் ஒரே ஒரு வாய்ப்பு மட்டுமே இருக்கிறது.
கலப்பு இரட்டையர் பிரிவில் சானியா மிர்சா- ரோகன் போபண்ணா ஜோடி விளையாடுகிறது. இருவரும் விளையாடும் முதல் சுற்று ஆட்டம் 10-ந் தேதி நடக்கிறது.
துடுப்பு படகு போட்டியில் இந்திய வீரர் டட்டு பாபன் போகனல் கால் இறுதிக்கு முன்னேறினார். ஒற்றையர் ஸ்குல்ஸ் பிரிவில் அவர் பந்தய தூரத்தை 7 நிமிடம் 21.67 வினாடியில் கடந்தார்.
வில்வித்தை போட்டியிலும் இந்தியாவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. வில்வித்தை பெண்களுக்கான தனி நபர் பிரிவில் தீபிகா குமாரி, பாம்யலா தேவி, லட்சுமி ராணி ஆகியோர் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறவில்லை.






