என் மலர்tooltip icon

    ரியோ ஒலிம்பிக்ஸ்-2016

    பிரேசில் நாட்டின் தலைநகரான ரியோ டி ஜெனீரோவில் இன்று தொடங்கிய 31-வது ஒலிம்பிக் போட்டிகளை காணச் சென்ற இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கர் அங்குள்ள பிரமாண்டமான இயேசுநாதர் சிலைக்கு அருகில் அதே பாவத்தில் போஸ் கொடுக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது.
    ரியோ டி ஜெனீரோ:

    பிரேசில்  நாட்டின் தலைநகரான ரியோ டி ஜெனீரோவில் இன்று தொடங்கிய 31-வது ஒலிம்பிக் போட்டிகளை காணச் சென்ற இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கர் அங்குள்ள பிரமாண்டமான இயேசுநாதர் சிலைக்கு அருகில் அதே பாவத்தில் போஸ் கொடுக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது.

    தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த புகைப்படத்தை இன்று பதிவேற்றம் செய்துள்ள சச்சின், ’நான் எங்கே இருக்கிறேன் தெரிகிறதா?, ஒலிம்பிக் திருவிழாவின் கோலாகலம் இந்த இடத்தை மேலும் ரம்மியமாக மாற்றியுள்ளது’ என டுவிட் செய்துள்ளார். இங்குள்ள கடற்கரையோரம் தென்னை மர நிழலில் நின்று இளநீர் குடிப்பதுபோல் மற்றொரு புகைப்படத்தையும் அவர் பதிவேற்றம் செய்துள்ளார்.



    ரியோ டி ஜெனீரோ நகரில் அமைந்துள்ள இந்த இயேசு கிறிஸ்துவின் சிலை உலகிலேயே 4-வது மிகப்பெரிய இயேசுவின் சிலையாகும். இது 9.5 மீட்டர் உயரமுள்ள அடிப்பீடத்தோடு சேர்த்து, 39.6 மீட்டர் உயரமும், 30 மீட்டர் அகலமும் உடையது. இதன் மொத்த எடை 635 டன்கள் ஆகும்.

    திசுகா காடுகளில் உள்ள 700 மீட்டர் உயரமுள்ள கொர்கொவாடோ மலையின் மீது ரியோ டி ஜெனீரோ நகரை நோக்கியவாறு இந்த சிலை அமைந்துள்ளது, குறிப்பிடத்தக்கது.

    ரியோ ஒலிம்பிக் கால்பந்து போட்டியில் உள்ளூர் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவுடன் களம் புகுந்த பிரேசிலுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
    ரியோ ஒலிம்பிக்கில் கால்பந்து போட்டி மட்டும் மூன்று நாட்களுக்கு முன்பே தொடங்கி விட்டது. ஆண்களுக்கான கால்பந்து போட்டியில் 16 அணிகள் பங்கேற்றுள்ளன. அவை 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன.

    5 முறை உலக சாம்பியனான பிரேசில் கால்பந்து அணிக்கு, ஒலிம்பிக் மகுடம் தான் இன்னும் எட்டாக்கனியாக இருக்கிறது. ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ள நெய்மார் தலைமையிலான பிரேசில் அணி தனது தொடக்க ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்காவுடன் மோதியது. உள்ளூர் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவுடன் களம் புகுந்த பிரேசிலுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. கடைசி வரை இரு அணி வீரர்களும் கோல் ஏதும் போடாமல் (0-0) டிராவில் முடிந்தது. இதே பிரிவில் நடந்த ஈராக்- டென்மார்க் இடையிலான ஆட்டமும் கோல் இன்றி டிரா ஆனது.

    மற்ற ஆட்டங்களில் நைஜீரியா 5-4 என்ற கோல் கணக்கில் ஜப்பானையும், தென்கொரியா 8-0 என்ற கோல் கணக்கில் பிஜியையும், போர்ச்சுகல் 2-0 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினாவையும், ஹோண்டுராஸ் 3-2 என்ற கோல் கணக்கில் அல்ஜீரியாவையும் தோற்கடித்தன. மெக்சிகோ-ஜெர்மனி (2-2), சுவீடன்-கொலம்பியா (2-2) அணிகள் மோதிய ஆட்டங்கள் டிரா ஆகின.
    உலகின் மிகப்பெரிய விளையாட்டு போட்டியான 31-வது ஒலிம்பிக் போட்டியின் துவக்க நாளான இன்று ரியோ டி ஜெனீரோவில் ஒலிம்பிக் கொடி மற்றும் தீபம் ஏற்றி வைக்கப்பட்டது.
    ரியோ டி ஜெனீரோ:

    உலகின் மிகப்பெரிய விளையாட்டு போட்டியான 31-வது ஒலிம்பிக் போட்டியின் துவக்க நாளான இன்று ரியோ டி ஜெனீரோவில் ஒலிம்பிக் கொடி மற்றும் தீபம் ஏற்றி வைக்கப்பட்டது.



    4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் ஒலிம்பிக் திருவிழாவின் தொடக்க விழா பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனீரோ நகரின் மரக்கானா திடலில் இன்று நடைபெற்றது.

    தென்அமெரிக்காவில் அரங்கேறும் முதல் ஒலிம்பிக்கான இதில் கலாசாரத்தை பிரதிபலிக்கும் பல்வேறு உணர்வு பூர்வமான கலை நிகழ்ச்சிகள், அதிரடி நடனங்கள், சாகசங்கள் மற்றும் லேஸர் ஷோ, வண்ணமயமான வாணவேடிக்கை ஆகியவை நடைபெற்றன.



    ரியோ ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளின் தலைவர் கார்லோஸ் குஸ்மான் வரவேற்புரைக்கு பின்னர்,  உள்நாட்டு நேரப்படி சரியாக அதிகாலை 3.25 மணிக்கு ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கியதாக பிரேசில் நாட்டின் தற்காலிக அதிபர் மைக்கேல் டெமர் அறிவித்தார்.

    இதையடுத்து, குழந்தைகளின் குதூகலமான ஆடல், பாடலுடன் ஒலிம்பிக் கொடி ஏற்றிவைக்கப்பட்டது. போதைப் பொருளை பயன்படுத்த மாட்டோம், ‘போங்கு ஆட்டம்’ ஆட மாட்டோம் என்பன உள்ளிட்ட உறுதிமொழிகளை இந்த போட்டிகளில் பங்கேற்கும் வீரர்-வீராங்கனைகள், பயிற்சியாளர்கள், அணிகளின் நிர்வாகிகள் ஆகியோர் ஏற்றுக் கொண்டனர்.

    இதற்கிடையில், ஒலிம்பிக் ஜோதியை ஏற்றிவைக்க பிரேசில் நாட்டு கால்பந்தாட்ட வீரர் பீலேவுக்கு முன்னர் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

    ஆனால், உடல்நிலையை காரணம் காட்டி ஜோதியை ஏற்றிவைக்க அவர் மறுத்து விட்டார். எனவே, ஒலிம்பிக் ஜோதியை யார் ஏற்றி வைப்பார்கள்? என்பது இறுதி வரையில் ’சஸ்பன்ஸ்’ ஆகவே இருந்தது.



    இந்நிலையில், கொடி ஏற்றத்துக்கு பின்னர், பிரேசில் நாட்டின் பிரபல டென்னிஸ் வீரரான குஸ்ட்டாவோ குவெர்ட்டென் ஒலிம்பிக் தீபத்தை கையில் ஏந்தியபடி மரக்கானா திடலை சுற்றி வந்தார். இறுதியாக, பிரேசில் நாட்டின் பிரபல மாரத்தான் வீரரான வான்டர்லியி டெ லிமா ஒலிம்பிக் ஜோதியை ஏற்றி வைத்தார்.

    பின்னர், கண்கவர் வாணவேடிக்கைகளுடன் துவக்க விழா நிறைவடைந்தது. விழா அரங்கில் மொத்தம் 74 ஆயிரத்து 738 பேர் தொடக்க விழா நிகழ்ச்சிகளை நேரில் கண்டுகளித்தனர். உலகம் முழுவதும் சுமார் 100 கோடி மக்கள் தொலைக்காட்சி மூலமாக நேரடி ஒளிபரப்பை பார்த்து ரசித்தனர்.



    ரியோ ஒலிம்பிக்கில் 206 நாடுகளை சேர்ந்த 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். 28 வகையான விளையாட்டுகளில் 306 பந்தயங்களில் பதக்கத்தை வெல்ல இவர்கள் மல்லுக்கட்ட ஆயத்தமாகி வருகிறார்கள்.



    இந்த 31-வது ஒலிம்பிக் போட்டியில் முதன்முறையாக மூன்றாம் பாலினத்தவர்களுக்கும், தாய்நாட்டை கடந்து வேறு நாடுகளில் அகதிகளாக வாழ்பவர்களுக்கும் பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டுள்ளது, குறிப்பிடத்தக்கது.
    ஒலிம்பிக் குத்துச்சண்டையில் இந்திய வீரர்கள் பங்கேற்கும் போட்டி அட்டவணை கடினமாக அமைந்துள்ளது.
    ரியோ ஒலிம்பிக்கில் இந்திய குத்துச்சண்டை அணியில் ஷிவ தபா (56 கிலோ), மனோஜ்குமார் (64 கிலோ), விகாஸ் கிருஷ்ணன் (75 கிலோ) ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் ‘பை’ வாய்ப்பு மூலம் நேரடியாக 2-வது சுற்றில் விளையாட இருந்தாலும் போட்டி அட்டவணை கடினமாக அமைந்துள்ளது.

    22 வயதான ஷிவ தபா, தனது முதல் ஆட்டத்தில் லண்டன் ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்றவரான கியூபா வீரர் ரோபிஸி ரமிரேசுடன் (ஆக.9-ந்தேதி) பலப்பரீட்சை நடத்துகிறார். ஆசிய விளையாட்டு சாம்பியனான விகாஸ் கிருஷ்ணன், 18 வயதான அமெரிக்காவின் சார்லஸ் கான்வெல்லை (ஆக.10) எதிர்கொள்கிறார். மனோஜ்குமார் தனது சவாலை, லிதுவேனியா வீரர் எவல்டாஸ் பெட்ராவ்ஸ்காசுடன் (ஆக.10) தொடங்குகிறார்.

    ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லும் ரெயில்வே வீரர், வீராங்கனைகளுக்கு ஊக்கத்தொகை, பதவி உயர்வு வழங்கப்படும் என்று மத்திய ரெயில்வே துறை மந்திரி சுரேஷ் பிரபு அறிவித்துள்ளார்.
    ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லும் ரெயில்வே வீரர், வீராங்கனைகளுக்கு ஊக்கத்தொகை, பதவி உயர்வு வழங்கப்படும் என்று மத்திய ரெயில்வே துறை மந்திரி சுரேஷ் பிரபு அறிவித்துள்ளார்.

    இதன்படி தங்கம் வென்றால் ரூ.1 கோடியும், வெள்ளி வென்றால் ரூ.75 லட்சமும், வெண்கலம் வென்றால் ரூ.50 லட்சமும் வழங்கப்படும்.

    8-வது இடம் வரை பிடிப்போருக்கு ரூ.30 லட்சமும், பங்கேற்கும் அனைவருக்கும் தலா ரூ.5 லட்சமும் கிடைக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். ரியோ ஒலிம்பிக்கில் இந்திய ரெயில்வேயில் பணியாற்றும் 35 பேர் பங்கேற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.
    ஒலிம்பிக்கில் வில்வித்தை போட்டியில், தென்கொரிய வீரரும், உலக சாம்பியனுமான கிம் வூ ஜின் புதிய உலக சாதனை படைத்துள்ளார்.
    ஒலிம்பிக்கில் வில்வித்தை போட்டியில், ரேங்கிங் சுற்று நேற்று நடந்தது. இதில் தென்கொரிய வீரரும், உலக சாம்பியனுமான கிம் வூ ஜின் புதிய உலக சாதனை படைத்துள்ளார்.

    துல்லியமாக செயல்பட்ட அவர் 72 முறை அம்பு எய்தும் சுற்றில் மொத்தம் 700 புள்ளிகள் குவித்து அசத்தினார். இதற்கு முன்பு லண்டன் ஒலிம்பிக்கில் சக நாட்டவர் இம் டோங் ஹியூன் இந்த பிரிவில் 699 புள்ளிகள் எடுத்ததே சாதனையாக இருந்தது.

    அதை முறியடித்த 24 வயதான கிம் வூ ஜின், உலக சாதனை படைத்தது முக்கியமானது தான். ஆனால் அதை விட நாளைய (இன்று) ஆட்டங்கள் மிகவும் முக்கியமானது என்று குறிப்பிட்டார்.
    ரியோ ஒலிம்பிக்கில் பதக்க வாய்ப்புள்ள துப்பாக்கி சுடுதலில் இந்திய முன்னணி வீரர் ஜிதுராய் இன்று களம் குதிக்கிறார்.
    ரியோ டி ஜெனீரோ:

    31-வது ஒலிம்பிக் போட்டி பிரேசில் நாட்டில் உள்ள ரியோ டி ஜெனீரோ நகரில் கோலாகலமாக தொடங்கியது. உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான இதில் இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, சீனா, பிரேசில் உள்பட 206 நாடுகளை சேர்ந்த 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். மொத்தம் 306 தங்கப்பதக்கங்கள் வழங்கப்படுகிறது. முதல் நாளில் வில்வித்தைக்கான ரேங்கிங் சுற்றுகள் மட்டுமே நடந்தன.

    2-வது நாளான இன்று (சனிக்கிழமை) தான் பதக்கத்திற்கான போட்டிகள் ஆரம்பிக்கின்றன. இந்த ஒலிம்பிக்கின் முதல் தங்கப்பதக்கம் பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் வழங்கப்படுகிறது. இந்திய நேரப்படி மாலை 5 மணிக்கு தொடங்கும் இந்த பந்தயத்தில் இந்தியா சார்பில் அபூர்வி சன்டிலா, அயோனிகா பால் ஆகியோர் களம் இறங்குகிறார்கள். இந்த பிரிவின் நடப்பு சாம்பியன் சீனாவின் யி சிலிங், முதல் தங்கப்பதக்கத்திற்கு குறி வைத்திருக்கிறார்.

    அதைத் தொடர்ந்து ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் போட்டி நடக்கிறது. இதில் ராணுவத்தில் பணியாற்றும் இந்திய நட்சத்திர வீரர் ஜிதுராய் அடியெடுத்து வைக்கிறார். காமன்வெல்த் மற்றும் ஆசிய போட்டி சாம்பியனான 29 வயதான ஜிதுராய் உலக துப்பாக்கி சுடுதல் போட்டிகளில் 6 பதக்கங்களை வென்றவர். இரு ஆண்டுகளாக சூப்பர் பார்மில் உள்ள அவர், இந்தியாவுக்கான பதக்க எண்ணிக்கையை தொடங்கி வைப்பார் என்று ஒட்டுமொத்த தேசமும் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கிறது.

    ஆண்கள் ஆக்கி போட்டியில் 12 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘பி’ பிரிவில் அங்கம் வகிக்கும் இந்தியாவுடன் நடப்பு சாம்பியன் ஜெர்மனி, நெதர்லாந்து, அர்ஜென்டினா, கனடா, அயர்லாந்து ஆகிய அணிகளும் உள்ளன. ஒவ்வொரு அணிகளும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் இரு பிரிவிலும் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் கால்இறுதிக்கு தகுதி பெறும்.

    உலக தரவரிசையில் 5-வது இடம் வகிக்கும் ஸ்ரீஜேஷ் தலைமையிலான இந்திய அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் அயர்லாந்துடன் இன்று மோதுகிறது. 36 ஆண்டு கால பதக்க ஏக்கத்தை தணிக்கும் உத்வேகத்தில் உள்ள இந்திய அணி வெற்றியுடன் தொடங்க வேண்டியது அவசியமாகும். இந்த முறை இந்திய அணி சிறந்த முறையில் தயாராகி இருப்பதால், ஆக்கியில் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. போட்டியில் கவனம் செலுத்துவதற்காக ஆக்கி வீரர்கள் தொடக்க விழாவில் கலந்து கொள்ளவில்லை.

    7-வது முறையாக ஒலிம்பிக்கில் பங்கேற்கும் முதல் இந்தியர் என்ற பெருமையுடன் மூத்த டென்னிஸ் வீரர் லியாண்டர் பெயஸ் தனது முதல் சவாலை இன்று தொடங்குகிறார்.

    மற்ற வீரர்களை காட்டிலும் பெயஸ் மூன்று நாட்கள் தாமதமாக நேற்று முன்தினம் தான் ரியோ வந்து சேர்ந்தார். ரோகன் போபண்ணாவுடன் ஒரே அறையில் தங்குவதை தவிர்க்கவே அவர் இவ்வாறு நடந்து கொண்டதாக சர்ச்சைகள் கிளம்பின. இதை திட்டவட்டமாக மறுத்த 43 வயதான பெயஸ், நியூயார்க்கில் உலக அணிக்காக விளையாடி விட்டு நேராக ரியோவுக்கு புறப்பட்டு வந்ததாக கூறினார். மேலும், தனக்கு ஒலிம்பிக் கிராமத்தில் தனி அறை ஒதுக்கப்படவில்லை என்றும் ஏமாற்றம் தெரிவித்தார்.

    இந்த சலசலப்புக்கு மத்தியில் லியாண்டர் பெயசும், ரோகன் போபண்ணாவும் இன்று தங்களது இரட்டையர் முதலாவது சுற்றில் போலந்தின் மார்சின் மாட்கவ்ஸ்கி- லுகாஸ் குபோத் இணையை எதிர்கொள்கிறார்கள். ஒலிம்பிக்குக்கு நேரடியாக தகுதி பெறாத பெயஸ், டாப்-10 தரவரிசைக்குள் போபண்ணா வந்ததால், அதன் அடிப்படையில் இந்த அதிர்ஷ்டத்தை பெற்றார் என்பது நினைவு கூரத்தக்கது.

    பெண்கள் இரட்டையர் தரவரிசையில் ‘நம்பர் ஒன்’ இடம் வகிக்கும் இந்தியாவின் சானியா மிர்சா, சக ஜூனியர் மங்கை பிராத்தனா தோம்ப்ரேவுடன் கைகோர்த்துள்ளார். இவர்கள் முதல் சுற்றில் சீனாவின் சூய் பெங்- சூய் ஷாங் ஜோடியுடன் மோதுகிறார்கள். இந்த ஆட்டம் இந்திய நேரப்படி நாளை அதிகாலை நடக்கிறது.

    இதே போல் இந்திய வீராங்கனை மீரா பாய் சானு களம் காணும் பெண்களுக்கான பளுதூக்குதல் போட்டியும் (48 கிலோ) நாளை அதிகாலை (3.30 மணி) நடக்க உள்ளது.

    31-வது ஒலிம்பிக் திருவிழா பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனீரோ நகரில் இன்று காலை வாணவேடிக்கைகளுடன் கோலாகலமாக தொடங்கியது.
    ரியோ டி ஜெனீரோ:

    உலகின் மிகப்பெரிய விளையாட்டான ஒலிம்பிக் போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. இதன்படி 31-வது ஒலிம்பிக் திருவிழா பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனீரோ நகரில் இன்று காலை 4.30 மணியளவில் தொடங்கியது.

    தொடக்க விழா கால்பந்து மைதானமான மரக்கானாவில் அந்த நாட்டின் நேரப்படி இரவு 8 மணிக்கு தொடங்கியது. தென்அமெரிக்காவில் அரங்கேறும் முதல் ஒலிம்பிக்கான இதில் கலாசாரத்தை பிரதிபலிக்கும் பல்வேறு உணர்வு பூர்வமான கலை நிகழ்ச்சிகள், அதிரடி நடனங்கள், சாகசங்கள் மற்றும் லேஷர் ஷோ, வண்ணமயமான வாணவேடிக்கை உள்ளிட்டவை நடைப்பெற்று வருகிறது.



    தொடக்க விழாவின் முக்கிய அம்சங்களில் ஒன்றான, மைதானத்தின் மையப்பகுதியில் அமைக்கப்பட்டிருக்கும் கொப்பரையில் ஒலிம்பிக் தீபத்தை பிரேசில் கால்பந்து ஜாம்பவான் பீலே ஏற்றுவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    இந்த விழாவில் 206 நாடுகளை சேர்ந்த 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். இவர்கள் 28 வகையான விளையாட்டில் 306 பந்தயங்களில் பதக்கத்தை வெல்ல மல்லுகட்ட ஆயத்தமாகி வருகிறார்கள்.

    ஐ,நா. சபை தலைவர் பான் கீ மூன் உட்பட உலக தலைவர்கள், விளையாட்டு நட்சத்திரங்கள், ரசிகர்கள் என்று மொத்தம் 78 ஆயிரம் பேர் தொடக்க விழாவை கண்டுகளித்து வருகிறார்கள்.


    ரியோ ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்லும் ரயில்வே வீரர்களுக்கு ரூ.1 கோடி ரொக்கப் பரிசு வழங்கப்படும் என்று ரெயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு அறிவித்துள்ளார்.
    புதுடெல்லி:

    ரியோ ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்றால் ரூ.1 கோடி என இந்திய ரெயில்வே அறிவித்துள்ளது. அவர்களுக்கு பணி உயர்வும் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார். இதன்படி, ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வெல்பவர்களுக்கு ரூ.1 கோடியும், வெள்ளிப் பதக்கம் வெல்வோருக்கு ரூ.75 லட்சமும், வெண்கலப் பதக்கம் வெல்பவர்களுக்கு ரூ.50 லட்சமும் வழங்கப்பட உள்ளன.

    இதுதவிர முதல் 8 இடங்களுக்குள் வரும் வீரர்களுக்கு ரூ.30 லட்சமும், போட்டியில் பங்கேற்கும் வீரர்களுக்கு ரூ.5 லட்சமும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ரியோ ஒலிம்பிக்கில் இந்திய ரெயில்வே துறையைச் சேர்ந்த 35 விளையாட்டு வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.
    இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இந்திய வீரர் வீராங்கனைகளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
    புதுடெல்லி:

    ஒலிம்பிக் போட்டியில் விளையாடுவதற்காக ராகேஷ் குப்தா தலைமையிலான இந்திய அணி பிரேசில் சென்றுள்ளது. விரைவில் போட்டி தொடங்க உள்ள நிலையில், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இந்திய வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அணி தலைவர் ராகேஷ் குப்தாவுக்கு அனுப்பிய வாழ்த்து செய்தியில் ஜனாதிபதி கூறியிருப்பதாவது:-

    ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இந்திய வீரர் வீராங்கனைகளுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இந்திய வீரர் வீராங்கனைகள் மற்ற நாடுகளின் விளையாட்டு வீரர்களுடன் ஒற்றுமை மற்றும் நட்பை ஊக்குவிக்க வேண்டும்.

    விளையாட்டு வீரர்கள் தங்கள் திறமையை காட்ட, பல்வேறு விளையாட்டு துறைகளில் தங்களை நிரூபிக்க ஒலிம்பிக் ஒரு வாய்ப்பாக இருக்கும். நமது வீரர்கள் சிறப்பாக விளையாடி நாட்டிற்கு பெருமை சேர்க்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    ‘ரியோ 2016’ ஒலிம்பிக் தொடர் இன்று நடைபெற இருக்கிறது. இந்நிலையில் ஊக்கமருந்து பயன்படுத்தியதாக அயர்லாந்து வீரர் சிக்கியுள்ளார்.
    ரியோ ஒலிம்பிக் தொடருக்கு அனைத்து நாட்டு வீரர்- வீராங்கனைகளும் தயாராகி விட்டார்கள். அயர்லாந்து நாட்டைச் சேர்ந்தவர்களும் ரியோ சென்றிருக்கிறார்கள்.

    அந்த அணியில் 23 வயதான குத்துச் சண்டை வீரர் மிக்கேல் ஓ'ரெய்லி மிடில்வெயிட் குத்துச்சண்டை பிரிவில் இடம் பிடித்திருந்தார்.

    அவரிடம் இருந்து எடுக்கப்பட்ட மாதிரி பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. அப்போது அவர் தடை செய்யப்பட்ட ஊக்க மருந்து பயன்படுத்தியது தெரியவந்தது. இந்த தகவலை அயர்லாந்து விளையாட்டு கவுன்சில் வெளியிட்டுள்ளது.

    இதனால் அவர் ரியோ போட்டியில் கலந்து கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடையை எதிர்த்து அவர் மேல்முறையீடு செய்யலாம். மேலும், ‘பி’ மாதிரி பரிசோதனையை செய்யச் சொல்லியும் வற்புறுத்தலாம்.

    அயர்லாந்து ஊக்க மருந்து தடுப்பு நடவடிக்கை ஒழுங்கு விதிமுறைப்படி விசாரணை மேற்கொள்ளபட்டு முடிவு வரும்வரை போட்டிகளில் கலந்து கொள்ள முடியாது. இதனால் ரியோ ஒலிம்பிக்கில் மிக்கேல் ஓ'ரெய்லி கலந்து கொள்ள இயலாது.

    மிக்கேல் ஓ'ரெய்லி கடந்த ஆண்டு நடைபெற்ற ஐரோப்பிய போட்டியில் தங்கம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
    ஒலிம்பிக் வில்வித்தை ஆண்களுக்கான தனிநபர் ரீகர்வ் போட்டியின் தரநிலைப்போட்டியில் அட்டானு தாஸ் 683 புள்ளிகள் பெற்று ஐந்தாவது இடம் பிடித்தார்.
    வில்வித்தையில் ஆண்களுக்கான தனிநபர் ரீகர்வ் போட்டியின் தரநிலைப் போட்டி இன்று நடைபெற்றது. இதில் இந்திய வீரர் அட்டானு தாஸ் உள்பட 64 பேர் கலந்து கொண்டனர்.

    இது 12 சுற்றுகள் கொண்டது. ஒவ்வொரு சுற்றுக்கும் ஆறு முறை அம்பை எய்தல் வேண்டும். சரியான இலக்கை எட்டினால் 10 புள்ளிகள் கிடைக்கும். குறிப்பிட்ட இடத்தை விட்டு தொலைதூரம் சென்றால் புள்ளிகள் கிடையாது. இடைப்பட்ட இடத்திற்கு சென்றால் குறிப்பிட்டுள்ளபடி 9, 8, 7 என புள்ளிகள் கிடைக்கும்.

    அட்னானு தாஸ் முதல் சுற்றில் 58 புள்ளிகள் பெற்றார். அதன்பின் 2-வது முதல் 12-வது சுற்று வரை முறையே 53, 57, 57, 55, 57, 55, 57, 59, 59, 58 என 720க்கு 683 புள்ளிகள் பெற்று 5-வது இடத்தை பிடித்தார்.

    தென்கொரிய வீரர் கிம் வூகின் முதல் இடத்தை பிடித்தார்.
    ×