என் மலர்
செய்திகள்

ரியோ ஒலிம்பிக்: மகளிர் வில்வித்தை போட்டியில் இந்திய அணி தோல்வி
ரியோ ஒலிம்பிக் தொடரில் மகளிர் வில்வித்தை போட்டியில் இந்திய அணி காலிறுதியில் தோல்வி அடைந்து போட்டியில் இருந்து வெளியேறியுள்ளது.
ரியோ:
பிரேசில் நாட்டின் ரியோ நகரில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் தொடரில் மகளிர் வில்வித்தை போட்டிகள் நேற்று நடைபெற்றது. இதில், தீபிகா குமாரி, பொம்பல்யா தேவி மற்றும் லக்ஸ்மி ரானி மஜ்ஹி ஆகியோர் கொண்ட இந்திய மகளிர் அணி கலந்து கொண்டது.
தகுதி சுற்றில் கொலம்பியா அணியுடன் இந்திய அணி மோதியது. இந்தப் போட்டி வெற்றி பெற்று இந்திய அணி காலிறுதிக்கு முன்னேறியது. காலிறுதியில் ரஷ்ய அணியுடன் காலிறுதியில் மோதியது.
மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் முதல் சுற்றில் ரஷ்ய அணி வெற்றி பெற்றது. பின்னர் சுதாரித்துக் கொண்டு ஆடிய இந்திய வீரர்கள் இரண்டாவது மற்றும் மூன்றாவது சுற்றுகளை கைப்பற்றினர்.
இருப்பினும், 4-வது சுற்றினை ரஷ்ய அணி தக்க வைத்துக் கொண்டது. இதனால் புள்ளிகள் அடிப்படையில் இந்திய அணி ரஷ்ய அணியிடம் தோல்வி அடைந்தது.
இதனால் காலிறுதியில் ரஷ்ய அணியிடம் டை பிரேக்கரில் இந்திய அணி தோல்வி அடைந்து இறுதி சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இழந்து வெளியேறியது.
Next Story






