என் மலர்
புதுச்சேரி
புதுவை ரங்கபிள்ளை வீதியில் வியாபாரிகளுக்கு லாட்டரி சீட்டு விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி:
புதுவை பெரியமார்க்கெட் பகுதியில் சிறு வியாபாரிகள் மற்றும் சுமைதூக்கும் தொழிலாளர்களை ஆசைவலையில் சிக்க வைத்து அன்றாடம் சம்பாதிக்கும் பணத்தை சுரண்டும் வகையில் 3 நம்பர் லாட்டரி சீட்டு விற்பனை நடந்து வருகிறது. அவ்வப்போது போலீசார் தங்களுக்கு வரும் தகவல்களை வைத்து லாட்டரி வியாபாரிகளை கைது செய்து வருகிறார்கள்.
அதுபோல் ரங்கப்பிள்ளை வீதியில் ஒருவர் சிறு வியாபாரிகளுக்கு 3 நம்பர் லாட்டரி சீட்டு விற்பனை செய்வதாக பெரியக்கடை போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.
இதையடுத்து உதவி சப்-இன்ஸ்பெக்டர் அய்யனாரப்பன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கண்காணித்தனர். அப்போது ஒருவர் ஒரு பேப்பரில் செல்போன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு லாட்டரி முடிவுகளை தெரிவித்துக்கொண்டிருந்தார்.
இதைத்தொடர்ந்து போலீசார் அவரை பிடித்து விசாரித்து வந்தனர். விசாரணையில் அவர் புதுவை பிள்ளைச்சாவடி பிள்ளையார்கோவில் தெருவை சேர்ந்த ராதா கிருஷ்ணன்(வயது48) என்பது தெரியவந்து. இதைடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து செல்போன், லாட்டரி சீட்டு ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
கோரிமேடு பகுதியில் 3-ந் தேதி மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
புதுச்சேரி :
புதுவை ஜிப்மர் மின் பாதையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் 3-ந் தேதி (வியாழக்கிழமை) காலை 10 மணி முதல் பகல் 2 மணி வரை சோனியா காந்தி நகர், கோரிமேடு காவலர் குடியிருப்பு, ராஜா அண்ணாமலை நகர், பிரிய தர்ஷினி நகர் ஒரு பகுதி, லோகு நகர், புஷ்பா நகர், சீனுவாசபுரம், வீமன் நகர் ஒரு பகுதி, தட்டாஞ்சாவடி ஒரு பகுதி, சுப்பையா நகர், ஜீவானந்தபுரம், தாகூர் நகர், ராஜாஜி நகர், முருகேசன் நகர், முத்துலிங்கபேட், பாக்கமுடையான்பேட், குறிஞ்சி நகர் விரிவாக்கம், சேன்பால்பேட், கொட்டுப் பாளையம், புதுப்பேட் பகுதியில் மின்சாரம் நிறுத்தப்படும்.
இதேபோல் லாஸ்பேட்டை, செல்ல பெருமாள் பேட், நந்தா நகர், பெத்துசெட்டிபேட், மகாவீர்நகர், பாரதிநகர், குமரன் நகர் அன்ட் விரிவாக்கம், அசோக்நகர், அவ்வை நகர், குறிஞ்சி நகர், ராமன் நகர், குமரன்நகர், பெசன்ட் நகர், ஏர்போர்ட் ரோடு ஒரு பகுதி, தில்லைகண்ண அம்மா நகர் ஒரு பகுதி, லாஸ்பேட் கல்வி நிறுவனங்கள் மற்றும் உயர் மின்னழுத்த நுகர்வோர்கள் மற்றும் அதனை சார்ந்த பகுதியில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
அதே போல் வாதானூர் மின் பாதையில் சில பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் 3-ந் தேதி (வியாழக்கிழமை) காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை கொடாத்தூர், கே.மணவெளி, திருக்கனூர், கொண்டா ரெட்டிபாளையம், கூனிச்சம்பட்டு ஒரு பகுதி மற்றும் அதனை சார்ந்த பகுதியில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
வில்லியனூர் மரப்பாலம் மின்பாதையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் 3-ந் தேதி (வியாழக் கிழமை) காலை 10 மணி முதல் பகல் 2 மணி வரை நண்பர்கள் நகர், சிவகாமி நகர், கம்பன் நகர், மரியாள் நகர், தேவா நகர், செல்லம்பாப்பு நகர், அன்னை நகர், கல்யாண சுந்தரமூர்த்தி நகர், ஜெயா நகர், கமலம் நகர், தட்சிணாமூர்த்தி நகர் மற்றும் அதனை சார்ந்த பகுதியில் மின்சாரம் நிறுத்தப்படும்.
அது போல் திருபுவனை துணை மின் நிலையத்தில் இருந்து செல்லும் இன்டஸ்ட் ரியல்-3 மின் பாதையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் 3-ந் தேதி (வியாழக்கிழமை) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை திருவண்டார் கோவில் பகுதியில் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
மண்ணாடிப்பட்டில் வீட்டு வாசலில் பந்தல் அமைத்து காய்கறி விவசாயம் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார்.
புதுச்சேரி:
புதுவை மண்ணாடிப்பட்டு பகுதியை சேர்ந்தவர் ஆதி நாராயணன். விவசாயியான இவர் தனது நிலத்தில் நெல்,கரும்பு போன்றவற்றை பயிரிட்டு வருகிறார். அதேநேரத்தில் வீட்டிலும் விவசாயம் செய்யலாம் என வீட்டு வாசலில் காய்கறி விவசாயம் செய்து மற்றவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளார்.
வீட்டு வாசலில் 10-க்கு 10 அடி அளவில் பந்தல் அமைத்து மலைப் பிரதேசங்களில் கிடைக்கக்கூடிய சவ் சவ், பீன்ஸ் போன்ற காய் கறிகளை பந்தலிட்டு பயிரிட்டு வருகிறார்.
இதேபோல் சுரைக்காய், பீர்க்கங்காய், பாகற்காய், அவரைக்காய் போன்ற காய்கறிகளையும் பயிரிட் டுள்ளார்.
வீட்டின் வரவேற்பு பகுதியிலும், சுற்றுப்புற பகுதிகளிலும் சின்ன தொட்டிகளை வைத்து காய்கறி விவசாயம் செய்து வருகிறார்.
இதுகுறித்து விவசாயி ஆதிநாராயணன் கூறியதாவது:-
வீட்டிற்கு தேவையான காய்கறிகளை இயற்கை யாகவும், சுத்தமாகவும் உற்பத்தி செய்கிறேன்.
இதேபோல் தொட்டி களில் ஸ்ட்ராபெர்ரி, பீட்ரூட், முள்ளங்கி போன்ற மலைப்பிரதேச காய்கறிகளை பயிரிட்டுள்ளேன்.
விவசாயம் செய்வதற்கு நிலமில்லை என்று கூறு வதைவிட, இருக்கும் இடத்தில் விவசாயம் செய்ய வேண்டும்.
மற்றவர்களும் இதே போல வீடுகளில் காய்கறி, கீரை வகைகளை பயிரிட வேண்டும். வீட்டிலேயே நமக்கு தேவையான காய் கறிகள் பயிரிடுவதன் மூலம் விலைவாசி ஏற்றத்தின் போது தப்பிக்க முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பங்கு சந்தையில் முதலீடு செய்ததில் ஏற்பட்ட நஷ்டத்தால் கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சேதராப்பட்டு:
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீதர். இவர் தனது குடும்பத்தோடு மதுரையில் வசித்து வருகிறார். இவரது மகன் பிரவீன் டேனியல் (வயது 31). இவர் பிள்ளைச்சாவடி அன்னை நகர் பிள்ளையார் கோவில் வீதியில் உள்ள வாடகை வீட்டில் தங்கியிருந்து புதுவைப் பல்கலைக்கழகத்தில் பி.எச்.டி. பொருளாதார ஆய்வு படித்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக அவரது அறை திறக்கப்படாமல் இருந்தது. மேலும் தூர்நாற்றமும் வீசியது. இதனால் சந்தேகமடைந்த வீட்டின் உரிமையாளர் காலாப்பட்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு சப்-இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான போலீசார் வந்து கதவை உடைத்தனர். பின்னர் உள்ளே சென்று பார்த்த போது அழுகிய நிலையில் பிரவீன் தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்தார்.
அந்த அறையில் போலீசார் சோதனை நடத்திய போது அங்கிருந்த மேஜையில் தன்னுடைய பெற்றோர் செல்போன் எண்ணை எழுதி வைத்திருந்தார். அதன் மூலம் போலீசார் அவரது தந்தை ஸ்ரீதர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில், புதுவையில் தங்கி புதுவை பல்கலைக்கழகத்தில் படித்து வந்த பிரவீன் டேனியல் பங்கு சந்தையில் லட்சக்கணக்கில் முதலீடு செய்துள்ளார். இதில் ஏற்பட்ட திடீர் நஷ்டத்தால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.
பங்கு சந்தையில் ஏற்பட்ட நஷ்டத்தால் புதுவை பல்கலைக் கழக ஆய்வு மாணவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மாணவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீதர். இவர் தனது குடும்பத்தோடு மதுரையில் வசித்து வருகிறார். இவரது மகன் பிரவீன் டேனியல் (வயது 31). இவர் பிள்ளைச்சாவடி அன்னை நகர் பிள்ளையார் கோவில் வீதியில் உள்ள வாடகை வீட்டில் தங்கியிருந்து புதுவைப் பல்கலைக்கழகத்தில் பி.எச்.டி. பொருளாதார ஆய்வு படித்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக அவரது அறை திறக்கப்படாமல் இருந்தது. மேலும் தூர்நாற்றமும் வீசியது. இதனால் சந்தேகமடைந்த வீட்டின் உரிமையாளர் காலாப்பட்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு சப்-இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான போலீசார் வந்து கதவை உடைத்தனர். பின்னர் உள்ளே சென்று பார்த்த போது அழுகிய நிலையில் பிரவீன் தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்தார்.
அந்த அறையில் போலீசார் சோதனை நடத்திய போது அங்கிருந்த மேஜையில் தன்னுடைய பெற்றோர் செல்போன் எண்ணை எழுதி வைத்திருந்தார். அதன் மூலம் போலீசார் அவரது தந்தை ஸ்ரீதர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில், புதுவையில் தங்கி புதுவை பல்கலைக்கழகத்தில் படித்து வந்த பிரவீன் டேனியல் பங்கு சந்தையில் லட்சக்கணக்கில் முதலீடு செய்துள்ளார். இதில் ஏற்பட்ட திடீர் நஷ்டத்தால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.
பங்கு சந்தையில் ஏற்பட்ட நஷ்டத்தால் புதுவை பல்கலைக் கழக ஆய்வு மாணவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மாணவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உக்ரைனில் சிக்கி தவிக்கும் புதுவை மாணவர்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்படுவார்கள் என -கவர்னர் தமிழிசை உறுதி அளித்துள்ளார்.
புதுச்சேரி :
வெங்கடேஸ்வா பல் மருத்து கல்லூரி முகம், தாடை சீரமைப்பு துறையின் சார்பில் ஹெல்மெட் விழிப்புணர்வு இருசக்கர பேரணி நடந்தது.
பேரணியை கவர்னர் தமிழிசை தலைமை வகித்து கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் 100 பல் மருத்துவ மாணவர்கள் ஹெல்மெட் அணிந்து பேரணியாக சென்றனர். கடற்கரை சாலையில் தொடங்கிய பேரணி அரியூர் வெங்கடேஸ்வரா பல் மருத்துவக்கல்லூரி வளாகத்தில் முடிவடைந்தது.
கல்லூரியின் முதன்மை இயக்க அதிகாரி வித்யா, கல்லூரி முதல்வர் செந்தில் நாதன், துணை முதல்வர்கள், கல்லூரி மருத்துவர்கள் இதில் பங்கேற்றனர். பேரணியை தொடங்கி வைத்த கவர்னர் தமிழிசை நிருபர்களிடம் கூறியதாவது:-
முக கவசம் அணிவது எத்தகைய முக்கியத்துவமோ அதுபோல தலைக்கவசம் அணிவதும் முக்கியமாகும். சட்டத்தின்படி கட்டாயப்படுத்தி தலைக்கவசம் அணிவதைவிட நாமே கட்டுப்பாடுகளுடன் இருந்து தலைக்கவசம் அணிய வேண்டும்.
தலை கவசம் அணியாதவர்கள் விபத்துக்குள்ளாகி தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்படும்போது வேதனையாக உள்ளது. சட்டத்தை கடுமையாக்கி அபராதம் விதித்தால் போலீசாரை பார்க்கும்போது மட்டும் தலைக்கவசம் அணிகின்றனர். அதன்பின் அணியாமல் செல்கின்றனர். தலைக்கவசம் அணிந்தால் தலை கலைந்துவிடும் என நினைக்கின்றனர். உயிர் பாதுகாப்பு மிக முக்கியமானது. உக்ரைனில் சிக்கி தவிக்கும் மாணவர்களை மீட்பதில் எந்த பாரபட்சமும் இல்லை. இந்தியர்கள் அனைவரையும் மீட்க மத்திய அரசு முயற்சித்து வருகிறது.
இதற்காக 4 மத்திய மந்திரிகளை அருகில் உள்ள நாடுகளுக்கு பிரதமர் அனுப்பி மீட்க நடவடிக்கை எடுத்து வருகிறார். இதில் இருந்து மத்திய அரசின் அக்கறை பற்றி தெரிந்துகொள்ளவேண்டும். உக்ரைன் நாட்டின் எல்லையில் இருந்த மாணவர்கள் உடனடியாக மீட்கப்பட்டுள்ளனர். மத்திய பகுதியிலும், பிற பகுதியிலும், ரஷ்யாவின் அருகில் உள்ள மாணவர்களை மீட்பதிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் அனைவரையும் மீட்க மத்திய அரசு முழு முயற்சி எடுத்து வருகிறது. புதுவையில் இருந்து சென்ற மாணவர்கள் அனைவரும் நிச்சயம் பத்திரமாக மீட்கப்படுவார்கள்.
புதுவை அரசும், கவர்னர் மாளிகையும் மத்திய வெளியுறவுத் துறையுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருகிறது. பெற்றோர்களிடம் பேசும்போது மாணவர் களுக்கு தைரியம் அளிக்க வேண்டும். பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்த வேண்டும். புதுவையில் 90 சதவீதத்தினருக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. மீதமுள்ளவர்களும் தடுப்பூசி போட வலியுறுத்தி வருகிறோம்.
தடுப்பூசி அதிகளவு செலுத்தியதால்தான் புதுவையில் கொரோனா 3&வது அலை தீவிரமாக இல்லை. இன்னும் 4, 5&வது அலையை எதிர்கொள்ளவும் தடுப்பூசி அவசியம். தடுப்பூசி செலுத்தாதவர்கள் தாமாக முன்வந்து தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். சுகாதாரத்துறை கணக்கெடுப்பில் சில குறைகள் உள்ளதால் தடுப்பூசி செலுத்தியவர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ளதாக தெரிகிறது. உக்ரைன் நாட்டில் உள்ள மாணவர்களை மீட்க அளிக்கப்படும் முக்கியத்துவம், இலங்கையில் சிக்கியுள்ள மீனவர்களை மீட்கவும் அளிக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு கவர்னர் தமிழிசை தெரிவித்தார்.
புதுவையில் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரி:
புதுவையில் ஆயிரத்து 511 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் புதிதாக 6 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. புதுவையில் 3, காரைக்காலில் 1, ஏனாமில் 2 பேர் புதிதாக தொற்றுடன் சிகிச்சை பெற்று
வருகின்றனர்.
புதுவையில் 8, காரைக் காலில் 1, ஏனாமில் ஒருவர் என 10 பேர் தொற்றுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். புதுவையில் 13, காரைக்காலில் 11 பேர் என 24 பேர் சிகிச்சையில் குணமடைந்தனர். புதுவை மாநிலத்தில் ஒட்டு மொத்த மாக இதுவரை ஒரு லட்சத்து 65 ஆயிரத்து 726 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு லட்சத்து 63 ஆயிரத்து 664 பேர் சிகிச்சையில் குணமடைந்துள்ளனர்.
புதுவையில் 47, காரைக்காலில் 34, ஏனாமில் 5, மாகியில் 4 பேர் என 90 பேர் வீட்டு தனிமையில் உள்ளனர். புதுவை மாநிலத்தில் இப்போது 100 பேர் கொரோனா தொற்றுடன் உள்ளனர். மாநிலத்தில் கொரோ னாவுக்கு பலியானோர் எண்ணிக்கை ஆயிரத்து 962 ஆக உள்ளது. புதுவையில் 2&வது தவணை உள்பட 15 லட்சத்து 92 ஆயிரத்து 350 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். இந்த தகவலை சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தி.மு.க. வுக்கு புதுவை மக்கள் மீது அக்கறை இல்லை என்று ஓம்சக்தி சேகர் குற்றம் சாட்டியுள்ளார்.
புதுச்சேரி:
புதுவை மேற்கு மாநில அ.தி.மு.க. செயலாளர் ஓம்சக்திசேகர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
உக்ரைனில் சிக்கியுள்ள தமிழக மாணவர்கள் மட்டுமல்லாது புதுவை மாணவர்களையும் மீட்க வெளியுறவு மந்திரிக்கு அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் நடவடிக்கை எடுத்துள்ளதற்கு புதுவை மாநில மக்கள் சார்பிலும், மேற்கு மாநில அ.தி.மு.க. சார்பிலும் நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம்.
ஒருங்கிணைப்பாளர் ஜெயலலிதாவின் வழியில் தமிழகம் மட்டும் அல்லாது புதுவை மக்களும் எங்கள் மக்களே என்று கருதி கடிதம் எழுதியதை உளமார வரவேற்கிறோம்.
6 எம்.எல்.ஏ.க்களை கொண்ட தி.மு.க.வும், அதன் தலைவர் ஸ்டாலினும் புதுவை மீது துளி கூட அக்கறை இல்லாமல் உள்ளனர் என்பதை புதுவை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். எப்போதும் புதுவை மக்களின் நலன் மீது அக்கறை கொண்ட ஒரே இயக்கம் அ.தி.மு.க. மட்டும்தான்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
குறைந்த நாட்கள் சட்டமன்ற கூட்டத்தை நடத்தியவர் நாராயணசாமி என்று அன்பழகன் கூறி உள்ளார்.
புதுச்சேரி:
புதுவை கிழக்கு மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் நிருபர்களிடம் கூறியதாவது:-
கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் அறிவித்த அனைத்து திட்டங்களையும் ரங்கசாமி குறுகிய காலத்தில் செயல்படுத்தி உள்ளார். கடந்த கால காங்கிரஸ்- தி.மு.க. கூட்டணி ஆட்சியில் செய்ய முடியாததை தற்போதைய தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் ரங்கசாமி செய்து வருவதை பொறுத்துக்கொள்ள முடியாமல், முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி மனம் வெதும்புகிறார்.
கடந்த 5 கால காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி ஆட்சியில் ஒரு முறை கூட முழுமையான பட்ஜெட்டை போடாமல் 5 காலமும் இடைக்கால பட்ஜெட்டை சமர்பித்து வந்தார். தனது ஆட்சிக்காலத்தில் ஆண்டுக்கு 10 நாட்கள் கூட சட்டமன்ற கூட்டத்தொடரை நடத்தாமல், சட்டமன்ற ஜனநாயகத்தையே கேலிக் கூத்தாக்கிய முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி தற்போது சட்டமன்ற ஜனநாயகத்தைப் பற்றி பேசுகிறார்.
வருகிற சட்டமன்ற கூட்டத்தொடரை குறைந்தது ஒரு மாத காலம் நடத்த வேண்டும் என கேட்கும் உரிமை முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமிக்கு இல்லை. அவரது 5 கால ஆட்சியில் 5 ஆண்டுக்கும் சேர்த்து மொத்தமாக 72 நாட்களை மட்டும் சட்டமன்றத்தை நடத்தி இந்தியாவிலேயே குறைந்த நாட்கள் சட்டமன்ற கூட்டத்தொடரை நடத்திய பெருமை காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி ஆட்சியையே சேரும்.
கடந்த 5 கால காங்கிரஸ்-தி.மு.க. ஆட்சியில் விவசாய விளைநிலங்கள் பாதியாக குறைக்கப்பட்டது, விவாசாய விளைநிலங்களை பாதுகாக்கக் கூடிய அமைப்பு ஒரு முறைகூட கூட்டப்படவில்லை. விவசாய நிலங்கள் வீட்டு மனைகளாக பிரித்து விற்பனை செய்யப்பட்டது.
விவசாய நிலங்கள் அழிய காரணமாக இருந்தது கடந்த காங்கிரஸ் -தி.மு.க. கூட்டணி அரசு என்பதை மறந்து விட்டு முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி பொய்யான தகவலை தற்போதைய அரசின் மீது கூறுவது தவறான ஒன்றாகும். இவ்வாறு அவர் கூறினார்.
தென்னிந்திய குதிரையேற்ற போட்டிகள் ஆரோவில்லில் தொடங்கியது.
புதுச்சேரி:
புதுவையை அடுத்துள்ள ஆரோவில்லில் ரெட் எர்த் குதிரையேற்ற பள்ளியில் 22-வது தென்னிந்திய குதிரையேற்ற போட்டி 1-ந்தேதி தொடங்கியது.
முதல் நாளான இன்று தனி அணிவகுப்பு, நடைபயிற்சி பிரிவில் போட்டிகள் நடந்தன. பெங்களூரு, புனே, தமிழகத்தின் ஊட்டி, தூத்துக்குடி, ஆம்பூர், கோவை, திருப்பூர்,சேலம், புதுவையில் இருந்து 110 குதிரையேற்ற வீரர்களும், 130 குதிரைகளும் பங்கேற்றன.
1-ந்தேதி முதல் 6&ந்தேதி வரை போட்டிகள் நடக்கிறது. குதிரைகளின் அலங்கார நடைப்போட்டி, தடை தாண்டுதல், உயரம் தாண்டுதல் என பல பிரிவுகளில் நடைபெறும் போட்டியில் தென்னிந்திய அளவில் புகழ்பெற்ற குதிரையேற்ற வீரர்கள் பங்கேற்று திறமைகளை காண்பிக்கின்றனர்.
போட்டியில் பங்கேற்கும் குறைந்த வயது போட்டியாளருக்கு வயது 6. இதில் உள்நாட்டு, வெளி நாட்டு வீரர்கள் ஏராளமானோர் பங்கேற்றுள்ளனர். தமிழகத்தில் காவல்துறையின் ஒரு பெண் உள்பட 6 வீரர்கள் போட்டியில் பங்கேற்றுள்ளனர்
புதுவையில் விரைவில் தி.மு.க. ஆட்சி அமையும் என எதிர்க்கட்சி தலைவர் சிவா தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி:
தி.மு.க .தலைவரும், தமிழக முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலினின் பிறந்தநாள் விழாவையொட்டி ஏம்பலம் தொகுதி தி.மு.க. துணை செயலாளர் பலராமன், ஆதிதிராவிட நலக்குழு அமைப்பாளர் ராமகிருஷ்ணன் ஆகியோர் ஏற்பாட்டின் பேரில் கரிக்கலாம்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் திருமணமண்டபத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
விழாவில் மாநில அமைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவருமான சிவா எம்.எல்.ஏ. கலந்து கொண்டு ஏழை குடும்பத்தின் குடும்ப பொருளாதாரத்திற்கு உதவ கறவை மாடு மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். அவர் பேசியதாவது:&
தமிழகத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஆட்சி பெண்கள், இளைஞர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களிடமும் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
அதுபோன்ற ஆட்சி அமைய வேண்டும் என்று புதுவை மக்களும் விரும்பி வருகின்றனர். அந்த விருப்பத்தை தெரிவிக்கும் வகையில்தான் 100-க்கும் மேற்பட்டோர் தி.மு.க.வில் இணைந்து உள்ளனர். அவர்கள் அனைவரையும் மிகுந்த மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன். தமிழ கத்தை போல் புதுவை மாநிலத்திலும் தி.மு.க. ஆட்சி விரைவில் அமைந்து, புதுவை வளர்ச்சி பெறும்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில், எம்.எல்.ஏ.க்கள் அனிபால் கென்னடி, சம்பத், செந்தில்குமார் மற்றும் தொகுதி பொறுப்பாளர்கள் கோபால், வடிவேல், துணை அமைப்பாளர்கள் சண்.குமாரவேல், குணாதிலீபன், அமுதாகுமார், பொருளாளர் லோகையன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் தைரிய நாதன், இளங்கோ, பொதுக் குழு உறுப்பினர்கள் மாறன், சக்திவேல், வேலவன், பிரபாகரன், அருட்செல்வி, இளைஞரணி அமைப்பாளர் முகமது யூனுஸ், தொகுதி செயலாளர்கள் உருளையன் பேட்டை சக்திவேல், உப்பளம் சக்திவேல், ராஜாராமன், சிவகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மாற்று கட்சியை சேர்ந்தவர்கள் சிவா எம்.எல்.ஏ. முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தனர்.
கல்லூரி பேராசிரியர்களின் கோரிக்கைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என முதல்-அமைச்சர் ரங்கசாமி உறுதியளித்தார்.
புதுச்சேரி:
புதுவை சொசைட்டி கல்லூரி ஆசிரியர்கள் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மாதம் 16-ந் தேதி முதல் தொடர் போராட்டம் நடத்தினர்.
கடந்த வாரம் தொடர் உண்ணாவிரத போராட்டத்தை தொடங் கினர். இதையடுத்து கே.எஸ். பி.ரமேஷ் எம்.எல்.ஏ. பேச்சுவார்த்தை நடத்தி முதல்&அமைச்சரை சந்திக்க ஏற்பாடு செய்வதாக கூறினார். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.
இதையடுத்து சங்க நிர்வாகிகள் முதல்-அமைச்சர் ரங்கசாமியை சந்தித்து பேசினர். பதவி உயர்வு, வீட்டு வாடகைப்படி, பஞ்சப்படி உயர்வு ஆகிய கோரிக்கைகளை நிறைவேற்ற அவர்கள் கோரிக்கை வைத்தனர்.
இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற அதிகாரிகளுக்கு ரங்கசாமி உத்தரவிட்டார். அதிகாரிகள் ஓரிருவாரத்தில் நிறைவேற்றுவதாக தெரிவித்தனர்.
கல்லூரி பேராசிரியர்கள் கோரிக்கை அனைத்தும் படிப்படியாக நிறைவேற்றித்தரப்படும் என ரங்கசாமி உறுதியளித்தார்.
தன்னை திருமணம் செய்துகொள்வதாக ஏமாற்றி பணம் பறித்ததோடு வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்ட வாலிபர் மீது இளம்பெண் புகார் அளித்துள்ளார்.
புதுச்சேரி:
புதுவை லாஸ்பேட்டையை சேர்ந்த 23 வயது பெண் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ரெட்டியார்பாளையத்தில் உள்ள ஒரு துணிக்கடையில் வேலை பார்த்து வந்தார்.
தற்போது அந்த பெண் அழகு நிலையத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் துணிக்கடையில் வேலை பார்த்த போது துணிக்கடையின் மாடியில் தங்கியிருந்து தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் எம்.பி.ஏ. படித்து வந்த காரைக்கால் பூவம் சிவன்கோவில் தெருவை சேர்ந்த தினகரன் (24) என்பவருடன் அந்த பெண்ணுக்கு பழக்கம் ஏற்பட்டது.
பின்னர் இது நாளடைவில் காதலாக மாறி இருவரும் காதலித்து வந்தனர். இதனால் தினகரன் அந்த பெண்ணை திருமணம் செய்துகொள்ள அவரது பெற்றோரிடம் பெண் கேட்டார். அவரது பெற்றோரும் படித்து முடித்தவுடன் திருமணம் செய்து வைப்பதாக கூறினர்.
இதற்கிடையே தினகரன் தங்கியிருக்கும் வீட்டில் இருவரும் கணவன்- மனைவி போல் வாழ்ந்து வந்தனர். இதனால் இருவரும் நெருங்கி பழகினர்.
இந்த நிலையில் தினகரன் கல்லூரியில் இறுதியாண்டுக்கான கட்டணம் செலுத்துவதற்கு அந்த பெண்ணிடம் பணம் கேட்டார். அதற்கு அவரும் திருமணத்துக்காக சேர்த்து வைத்திருந்த ரூ.40 ஆயிரத்தை கொடுத்தார். இப்படியாக தினகரன் கேட்ட போதெல்லாமல் நேரிலும், ஆன்லைன் மூலமும் ரூ.5 லட்சம் வரை கொடுத்ததாக தெரிகிறது.
மேலும் தினகரன் தன்னுடைய பிறந்த நாளுக்கு பரிசாக செல்போன் வாங்கி தருமாறு அவரிடம் கேட்டார். அதற்கு ரூ.55 ஆயிரம் மதிப்புள்ள விலை உயர்ந்த செல்போனை தினகரன் பிறந்தநாளன்று பரிசாக அளித்தார்.
இதற்கிடையே தினகரன் படிப்பு முடிந்தவுடன் காரைக்காலுக்கு சென்று விட்டார். அங்கு சென்ற பின்னரும் அவர்கள் காதலை வளர்த்து வந்தனர்.
இந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் முதல் தினகரன் கொஞ்சம் கொஞ்சமாக அந்த பெண்ணிடம் பேசுவதை தவிர்த்து வந்தார். இதனால் சந்தேகமடைந்த அந்த பெண் இதுகுறித்து தினகரனிடம் விசாரித்த போது தினகரன் உன்னை திருமணம் செய்து கொள்ள விருப்பம் இல்லை எனவும், மேலும் வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டேன் எனவும் தெரிவித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் இதுகுறித்து ரெட்டியார்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரில் தன்னை திருமணம் செய்துகொள்வதாக ஏமாற்றி பணம் பறித்ததோடு வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்ட தினகரன் மீது நடவடிக்கை எடுக்குமாறு கூறியுள்ளார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜாகீர் உசேன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.






