என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்.
நாட்டிலேயே குறைந்த நாட்கள் சட்டமன்ற கூட்டத்தை நடத்தியவர் நாராயணசாமி-அன்பழகன் பேட்டி
குறைந்த நாட்கள் சட்டமன்ற கூட்டத்தை நடத்தியவர் நாராயணசாமி என்று அன்பழகன் கூறி உள்ளார்.
புதுச்சேரி:
புதுவை கிழக்கு மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் நிருபர்களிடம் கூறியதாவது:-
கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் அறிவித்த அனைத்து திட்டங்களையும் ரங்கசாமி குறுகிய காலத்தில் செயல்படுத்தி உள்ளார். கடந்த கால காங்கிரஸ்- தி.மு.க. கூட்டணி ஆட்சியில் செய்ய முடியாததை தற்போதைய தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் ரங்கசாமி செய்து வருவதை பொறுத்துக்கொள்ள முடியாமல், முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி மனம் வெதும்புகிறார்.
கடந்த 5 கால காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி ஆட்சியில் ஒரு முறை கூட முழுமையான பட்ஜெட்டை போடாமல் 5 காலமும் இடைக்கால பட்ஜெட்டை சமர்பித்து வந்தார். தனது ஆட்சிக்காலத்தில் ஆண்டுக்கு 10 நாட்கள் கூட சட்டமன்ற கூட்டத்தொடரை நடத்தாமல், சட்டமன்ற ஜனநாயகத்தையே கேலிக் கூத்தாக்கிய முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி தற்போது சட்டமன்ற ஜனநாயகத்தைப் பற்றி பேசுகிறார்.
வருகிற சட்டமன்ற கூட்டத்தொடரை குறைந்தது ஒரு மாத காலம் நடத்த வேண்டும் என கேட்கும் உரிமை முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமிக்கு இல்லை. அவரது 5 கால ஆட்சியில் 5 ஆண்டுக்கும் சேர்த்து மொத்தமாக 72 நாட்களை மட்டும் சட்டமன்றத்தை நடத்தி இந்தியாவிலேயே குறைந்த நாட்கள் சட்டமன்ற கூட்டத்தொடரை நடத்திய பெருமை காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி ஆட்சியையே சேரும்.
கடந்த 5 கால காங்கிரஸ்-தி.மு.க. ஆட்சியில் விவசாய விளைநிலங்கள் பாதியாக குறைக்கப்பட்டது, விவாசாய விளைநிலங்களை பாதுகாக்கக் கூடிய அமைப்பு ஒரு முறைகூட கூட்டப்படவில்லை. விவசாய நிலங்கள் வீட்டு மனைகளாக பிரித்து விற்பனை செய்யப்பட்டது.
விவசாய நிலங்கள் அழிய காரணமாக இருந்தது கடந்த காங்கிரஸ் -தி.மு.க. கூட்டணி அரசு என்பதை மறந்து விட்டு முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி பொய்யான தகவலை தற்போதைய அரசின் மீது கூறுவது தவறான ஒன்றாகும். இவ்வாறு அவர் கூறினார்.
Next Story






