என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    தி.மு.க. வுக்கு புதுச்சேரி மக்கள் மீது அக்கறை இல்லை- ஓம்சக்தி சேகர் குற்றச்சாட்டு

    தி.மு.க. வுக்கு புதுவை மக்கள் மீது அக்கறை இல்லை என்று ஓம்சக்தி சேகர் குற்றம் சாட்டியுள்ளார்.
    புதுச்சேரி:

    புதுவை மேற்கு மாநில அ.தி.மு.க. செயலாளர் ஓம்சக்திசேகர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    உக்ரைனில் சிக்கியுள்ள தமிழக மாணவர்கள் மட்டுமல்லாது புதுவை மாணவர்களையும் மீட்க வெளியுறவு  மந்திரிக்கு அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் நடவடிக்கை எடுத்துள்ளதற்கு புதுவை மாநில மக்கள் சார்பிலும்,  மேற்கு மாநில அ.தி.மு.க. சார்பிலும் நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம். 

    ஒருங்கிணைப்பாளர் ஜெயலலிதாவின் வழியில் தமிழகம் மட்டும் அல்லாது புதுவை  மக்களும் எங்கள் மக்களே என்று கருதி கடிதம் எழுதியதை உளமார வரவேற்கிறோம். 

    6 எம்.எல்.ஏ.க்களை கொண்ட தி.மு.க.வும், அதன் தலைவர்  ஸ்டாலினும் புதுவை மீது துளி கூட  அக்கறை இல்லாமல் உள்ளனர் என்பதை புதுவை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். எப்போதும்  புதுவை மக்களின் நலன் மீது அக்கறை கொண்ட ஒரே இயக்கம் அ.தி.மு.க. மட்டும்தான். 

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×