என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    முத்தியால்பேட்டை தொகுதியில் 500 பேருக்கு நலத்திட்ட உதவிகளை சிவா எம்.எல்.ஏ. வழங்கினார்.
    புதுச்சேரி:

    புதுவை மாநில தி.மு..க அமைப்பாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான சிவா எம்.எல்.ஏ. பிறந்தநாள் விழா தி.மு.க. தலைமை பொதுக்குழு உறுப்பினர் பிரபாகரன் தலைமையில் கொண்டாடப்பட்டது. 

    முத்தியால்பேட்டை மணிக்கூண்டு அருகே நடந்த நிகழ்ச்சியில் சிவா எம்.எல்.ஏ. கலந்து கொண்டு கேக் வெட்டினார். சிவா எம்.எல்.ஏ.வுக்கு பிரபாகரன் தலைமையில் தி.மு.க.வினர் சால்வை அணிவித்தும் பரிசுப்பொருள் வழங்கியும், மலர்கொத்து கொடுத்தும் வாழ்த்துக்களை தெரிவித்தனர். 

    அந்த பகுதியில் நீர், மோர் பந்தலை சிவா எம்.எல்.ஏ. தொடங்கி வைத்து 500 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். நிகழ்ச்சியில் பங்கேற்ற பொதுமக்களுக்கு பிரியாணி வழங்கப்பட்டது. 

    இந்நிகழ்ச்சியில் தி.மு.க. புதுவை மாநில அவைத் தலைவர் எஸ்.பி. சிவக்குமார், செந்தில்குமார் எம்.எல்.ஏ. உருளையன்பேட்டை தொகுதி பொறுப்பாளர் கோபால், கதிர்காமம் தொகுதி பொறுப்பாளர் வடிவேலு, தொகுதி செயலாளர் சக்திவேல், மாநில துணை அமைப்பாளர் திலீபன், மாநில உதயநிதி மன்றத்தலைவர் உத்தமன்.தொகுதி முன்னாள் இளைஞரணி அமைப்பாளர் சிவக்குமார், துணை அமைப்பாளர் செல்வம், தொகுதி துணை அமைப்பாளர் பலராமன், பொருளாளர் செல்வம், மாநில மீனவர் அணி துணை அமைப்பாளர் முனுசாமி பூபதி, கலை இலக்கிய அணி துணை அமைப்பாளர் சேகர், மாநில தொண்டரணி துணை அமைப்பாளர் லோகநாதன், மாநில சிறுபான்மையினர் அணி துணை அமைப்பாளர் விவோரெமோ மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள்கலந்து கொண்டனர்.
    வில்லியனூர் லூர்து மாதா ஆண்டு பெருவிழா தேர்பவனி நடைபெற்றது.
    புதுச்சேரி:

    வில்லியனூர்  தூய லூர்து மாதா திருத்தலத்தின் ஆண்டு திருவிழாஆண்டுதோறும் ஈஸ்டர் பண்டிகை முடிந்த 6-ம் நாளில் கொடியேற்றத்துடன் தொடங்குவது வழக்கம். 

    அதன்படி 145-வது ஆண்டு திருவிழா கடந்த 23-ந் தேதி (சனிக்கிழமை) கொடியேற்றதுடன் தொடங்கியது. தொடர்ந்து விழா நாட்களில் தினமும் காலை மற்றும் மாலையில் திருப்பலிகள் மற்றும் சிறியதேர்ப் பவனி நடை–பெற்றது.

    பெருவிழா நடந்தது.  சேலம் மறைமாவட்ட ஆயர் அருள்செல்வம் ராயப்பன், தூத்துக்குடி மறைமாவட்ட முன்னாள் ஆயர் யுவான் அம்புரோஸ் தலைமையில் கூட்டு திருப்பலி நடைபெற்றது.

    இதனைத்தொடர்ந்து  இரவு  புதுவை - கடலூர் உயர் மறைமாவட்ட பேராயர் பிரான்சிஸ் கலிஸ்ட்  தலைமையில்  ஆடம்பர தேர்ப்பவனி நடைபெற்றது.இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்று மலர் தூவி மாதாவை வழிபட்டனர்.
    பிறந்தநாள் கொண்டாடிய கராத்தே சுந்தர்ராஜனுக்கு நேரு எம்.எல்.ஏ. வாழ்த்து தெரிவித்தார்.
    புதுச்சேரி:

    புதுவை மாநில ஒருங்கிணைந்த கோஜூரியோ கராத்தே சங்க மாநிலச் செயலாளர் கராத்தே சுந்தர்ராஜன் தனது பிறந்த நாளை கவுண்டன்பாளையத்தில் உள்ள  முத்துரத்தினம் அரங்கம் மேல்நிலைப்பள்ளி வளாகத்ததில் கொண்டா டினர்.

    விழாவில் புதுவை மாநில ஒருங்கிணைந்த கோஜூரியோ கராத்தே சங்க தலைவரும்,  உருளையன்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ.வு மான  நேரு கராத்தே சுந்தர்ராஜனுக்கு பொன்னாடை  அணிவித்தும், பூங்கொத்துெகாடுத்தும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். 

    ேமலும் மனிதநேய மக்கள் சேவை இயக்க  இளைஞரணி தலைவர் விநாயகம் மற்றும் செங்குட்டுவன், ரெனோ, பாபு, பாலு மற்றும் உருளையன்பேட்டை தொகுதியை சேர்ந்த இளைஞர்கள் ஏராளமானோர் கராத்தே சுந்தர்ராஜனுக்கு ஆளுயர மாலை அணிவித்தும், சால்வை அணிவித்தும் வாழ்த்து தெரிவித்தனர்.

     மேலும் கராத்தே சங்க நிர்வாகிகள்- பயிற்சியாளர்கள் மற்றும் கராத்தே மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள், பல்வேறு இயக்க நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

    கராத்தே சுந்தர்ராஜன் பிறந்தநாளையொட்டி உலக கவிஞர்கள் சங்க நிறுவனர் புதுவை குமார் தலைமையில் மாற்றுத் திறனாளிகளுக்கு உடைகளும் அசைவ உணவு களும் வழங்கப்பட்டது.
    காலாப்பட்டில் தனியார் பள்ளி பெண் ஊழியர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    புதுச்சேரி:

    புதுவை காலாப்பட்டு முருகன்கோவில் தெருவை சேர்ந்தவர் கமலக்கண்ணன். இவரது மனைவி லட்சுமி. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். 

    கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு கமலக்கண்ணன் இறந்து விட்டார். இதையடுத்து லட்சுமி பெரியகாலாப்பட்டை சேர்ந்த சேகர் என்பவரை 2-வது திருமணம் செய்து கொண்டார். லட்சுமியுடன் அவரது தாய் வள்ளி மற்றும் இளையமகள் ஜீவிதா ஆகியோர் வசித்து வந்தனர்.

    லட்சுமி காலாப்பட்டில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் உதவியாளராக பணிபுரிந்து வந்தார். கடந்த சில நாட்களாக லட்சுமி இடுப்பு வலியால் அவதியடைந்து வந்தார். அதற்காக ஆஸ்பத்திரியில்  அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றும் லட்சுமிக்கு இடுப்பு வலி குறையவில்லை.

    இந்த நிலையில்  லட்சுமியின் மூத்த மகள் சரஸ்வதி தாய் வீட்டுக்கு வந்திருந்தார். பின்னர் சரஸ்வதி அவரது தங்கை ஜீவிதா மற்றும் பாட்டி வள்ளி ஆகிய 3 பேரும் பக்கத்து வீட்டில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அப்போது லட்சுமிக்கு இடுப்பு வலி அதிகமானதாக கூறப்படுகிறது. இதனால் வேதனையடைந்த லட்சுமி வீட்டில் மின் விசிறியில் சேலையால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து அவரது மூத்த மகள் சரஸ்வதி கொடுத்த புகாரின் பேரில் காலாப்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    கடலில் நண்பர்களுடன் குளித்த போது ராட்சத அலையில் சிக்கி என்ஜீனியரிங் மாணவர் பலியானார்.
    புதுச்சேரி:

    புதுவை கோரிமேடு ஜிப்மர் குடியிருப்பை சேர்ந்தவர் ரமேஷ். இவர் ஜிப்மரில் முதுநிலை எழுத்தராக பணிபுரிந்து வருகிறார். இவரது மகன் யுவராஜ்(வயது20). இவர் மதகடிப்பட்டில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.

    இந்த நிலையில் யுவராஜ் தனது நண்பர்களான லாஸ்பேட்டையை சேர்ந்த விக்னேஷ், வில்லியனூரை சேர்ந்த பாலசுப்பிரமணியன் ஆகியோருடன் புதுவை கடற்கரைக்கு வந்தார். பின்னர் அவர்கள் 3 பேரும் காந்திசிலை பின்புறம் கடலில் இறங்கி குளித்தனர். அப்போது எழுந்த ராட்சத அலை 3 பேரையும் கடலுக்கு இழுத்து சென்றது. உடனே  இதனை பார்த்து அங்கிருந்தவர்கள் அபய குரல் எழுப்பினர்.

    இதையடுத்து சிலர் கடலில் மூழ்கிய 3 பேரையும் மீட்டனர். பின்னர் அவர்கள் சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி யுவராஜ் பரிதாபமாக இறந்து போனார்.  மற்ற இருவரும் சிகிச்சை பெற்று  வீடு திரும்பினர்.

    இதுகுறித்த புகாரின் பேரில் பெரியக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    கொம்பாக்கத்தில் பேக்கரியை சூறையாடி உரிமையாளரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.
    புதுச்சேரி:

    புதுவை கொம்பாக்கம் குமரன்நகர் பிள்ளையார் கோவில் தெருவில் வசித்து வருபவர் ராஜீவன்(வய53). கேரள மாநிலத்தை சேர்ந்த இவர் கடந்த 23 ஆண்டுகளாக புதுவையில் வசித்து வருகிறார். கடந்த 3 ஆண்டுகளாக வில்லியனூர்-கொம்பாக்கம் மெயின் ரோட்டில் ராஜீவன் பேக்கரி கடை நடத்தி வருகிறார். இவரது பேக்கரி கடைக்கு கொம்பாக்கம் செட்டிக்குளம் பகுதியை சேர்ந்த சக்திவேல் மற்றும் பிரகாஷ் ஆகியோர் அடிக்கடி பொருட்கள் வாங்க வருவது வழக்கம்.

    இந்தநிலையில் சக்திவேலும், பிரகாசும் பொருட்கள் வாங்க ராஜீவனின் பேக்கரி கடைக்கு வந்தனர். அப்போது அவர்கள்  வெளியூரில் இருந்து வந்து இங்கு கடை வைத்துக்கொண்டு பொருட்களை அதிக விலைக்கும், தரமற்றதாக விற்கிறாயா? என கேட்டு தகராறு செய்தனர்.

    இதனை ராஜீவன் தட்டிக்கேட்ட போது அவரை தகாத வார்த்தை களால் திட்டி சரமாரியாக தாக்கினர். மேலும் பேக்கரி கடையில் இருந்த பொருட்களை அடித்து உடைத்து சூறையாடி இனிமேல் இங்கு கடை நடத்தினால் கொலை செய்து விடுவோம் என்று மிரட்டல் விடுத்து சென்றனர்.

    இதையடுத்து ராஜீவன் நடந்த சம்பவங்களை தனது கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான  காட்சிகளுடன் முதலியார்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து  பேக்கரி கடையை சூறையாடிய சக்திவேல் மற்றும் பிரகாசை தேடி வருகிறார்கள்.
    ஐ.என்.டி.யூ.சி. சார்பில் மே தின விழா தொழிலாளர்களுக்கு நலதிட்ட உதவிகள் மாநில தலைவர் பாலாஜி வழங்கினார்.
    புதுச்சேரி:

    புதுவை மாநில ஐ.என்.டி.யூ.சி. சார்பில் உழவர்கரை நகராட்சி ஊழியர்கள் நலச்சங்கம், சேதராப்பட்டு ஈட்டன், ஒதியம்பட்டு இந்தியன் ஆயில் பாட்டலிங் பிளாண்ட் ஆகிய நிறுவனங்களில்மேதின விழா நடந்தது.

    மாநில தலைவர் பாலாஜி தலைமை தாங்கி ஐ.என்.டி.யூ.சி. கொடியை ஏற்றி, பெயர் பலகை திறந்து வைத்து நலத்திட்ட உதவிகள் வழங்கினார். 

    விழாவில் நிர்வாகிகள் சொக்கலிங்கம், நரசிங்கம், ஞானசேகரன், முத்துராமன், தமிழ்ச்செல்வன், பன்னீர், சபரி, நாகலிங்கம், வெற்றிவேல், கிருஷ்ணமூர்த்தி, தீனதயாளன், சரவணன், குமார், ஜான்சன், முத்து, ஜான், சகாயராஜ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

    மேலும் எம்.ஆர்.எப். பி.ஆர்.டி.சி. பிம்ஸ், திருபுவனை வேல்பிஸ்கட், ஆட்டோ மற்றும் டாக்சி நிறுத்தங்களிலும் ஐ.என்.டி.யூ.சி. சார்பில் மே தினம் கொண்டாடப்பட்டது. 

    காரைக்காலில் மாநில பொதுசெயலாளர் கணேஷ்குமார் தலைமையில் விநாயகா மிஷன், ஜான்சன் டைல்ஸ், உஜாலா, பஞ்சாலைகள் ஆகியவற்றில் மே தினம் கொண்டாடப்பட்டது,

    புதுவை மாநில பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் தொழிலாளர் தினம் எல்லப்பிள்ளை சாவடியில் உள்ள மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனை அருகில் கொண்டாடப்பட்டது.  

    முன்னாள் எம்பியும், பா.ம.க. தலைமை அரசியல் ஆலோசகருமான தன்ராஜ் கொடியேற்றி இனிப்பு வழங்கி  உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கினார். 
    புதுவையில் மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
    புதுச்சேரி,:

    புதுவை மாநிலத்தில் நேற்று 204 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. 

    இதில் புதுவையை சேர்ந்த ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. காரைக்கால், மாகி, ஏனாம் பகுதிகளில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் யாரும் இல்லை. தற்போது கொரோனா தொற்று பாதிக்க ப்பட்டவர்களில் ஒருவர் மருத்துவ மனையிலும், 8 பேர் வீட்டு தனிமையிலும் என மொத்தம் 9 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

    வீட்டு தனிமையில் சிகிச்சை பெற்று வந்த 4 பேர் குணமடைந்துள்ளனர். உயிரிழப்பு ஏதும் இல்லை.

    புதுவை மாநிலத்தில் இதுவரை 1 லட்சத்து 65 ஆயிரத்து 790 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் 1 லட்சத்து 63 ஆயிரத்து, 819 பேர் குணமடைந்துள்ளனர். 1962 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து ள்ளனர்.  இந்த தகவல்களை சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது
    மேல் சாத்தமங்கலத்தில் குற்றங்களை தடுக்க 4 சி.சி.டி.வி. கேமிரா அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் தொடங்கி வைத்தார்.
    புதுச்சேரி:

    மங்கலம் தொகுதி மேல்சாத்தமங்கலம் கிராம மக்கள் சார்பில் குற்ற சம்பவங்களை தடுக்கும் பொருட்டு கிராம நுழைவு வாயில், கோவில், அரசு பள்ளி கூடம் உட்பட  4  பகுதிகளில் சி.சி.டி.வி. கேமரா பொருத்தப்பட்டுள்ளது இதனை அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் மக்கள் பயன்பாட்டிற்கு இயக்கி வைத்தார்.

    தொடர்ந்து அப்பகுதிகளில் உள்ள தெரு விளக்குகளை எல்.இ.டி. பல்புகளை மாற்றி அதனை மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தார் நிகழ்ச்சியில் என்.ஆர். காங்கிரஸ் பிரமுகர்கள் ராஜவேலு, வேல்முருகன், பரமசிவம் , பலராமன், வாழ்முனி, சக்திவேல் ஜானகிராமன், அய்யப்பன், சிவமணி, சிவபாலன் மற்றும் ஊர் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
    தொ.மு.ச. சார்பில் 30 இடங்களில் மே தின விழா சிவா எம்.எல்.ஏ. கொடியேற்றி நலதிட்ட உதவி வழங்கினார்.
    புதுச்சேரி:புதுவை தொ.மு.ச சார்பில்  மே தினம் கொண்டாடப்பட்டது.    

    புதுவை ஏரிப்பாக்கத்தில் உள்ள தனியார் தொழிற்சாலை வளாகத்தில் நடந்த மே தின விழாவில் சட்டமன்ற எதிர்கட்சி தலைவரும், தி.மு.க. மாநில அமைப்பாளருமான சிவா எம்.எல்.ஏ. தலைமை தாங்கி தொ.மு.ச. கொடியேற்றி தொழிலாளர்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.  

    இதேபோல் உப்பளத்தில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணிமனை, புதுவை அரசு போக்குவரத்து கழக பணிமனை, நெல்லித்தோப்பு, உருளையன்பேட்டை, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட இடங்களில் தொ.மு.ச. கொடியேற்றப்பட்டு, தொழிலாளர்களுக்கு இனிப்புகள் மற்றும் சீருடை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சிகளுக்கு தொ.மு.ச. தலைவர் அண்ணா அடைக்கலம் முன்னிலை வகித்தார். இதில் எம்.எல்.ஏ.க்கள் அனிபால்  கென்னடி, சம்பத், செந்தில்குமார், துணை அமைப்பாளர்கள் சண்.குமரவேல், குணா திலீபன், தொகுதி பொறுப்பாளர்கள்  கோபால், கார்த்திகேயன், வடிவேல், தொகுதி செயலாளர் சக்திவேல், இளைஞரணி அமைப்பாளர் காந்தி, தொ.மு.ச. நிர்வாகிகள் காயாரோகனம், சிவக்குமார்,, மிஷேல், பூமிநாதன், கண்ணன், அய்யனார், பாஸ்கர், கிருஷ்ணமூர்த்தி,, ராஜாராம், தட்சிணாமூர்த்தி, துரை பக்தவச்சலம், ராஜேந்திரன், திருக்குமரன், காசி வீரப்பன், சூர்யா, கலியசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
    திருவள்ளூவர் அரசு பள்ளியில்கால்நடை வளர்ப்பு கருத்தரங்கு நடைபெற்றது.
    புதுச்சேரி:

    புதுவை பிராணிகள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் கால்நடை மருத்துவ தினத்தை முன்னிட்டு புதுவை திருவள்ளுவர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கால்நடைகள் செல்லப்பிராணிகள் வளர்ப்பு மற்றும் மேம்பாட்டில் கால்நடை டாக்டர்களின் பங்கு என்ற தலைப்பில் ஒருநாள் கருத்தரங்கு நடந்தது.

    கருத்தரங்கிற்கு பள்ளி துணை முதல்வர் கலாவதி முன்னிலை வகித்தார்.மத்திய பிராணிகள் நலவாரிய அதிகாரி செல்வமுத்து தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். கால்நடைதுறை இயக்குனர் லதா மங்கேஷ்கர்  மாணவர்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்து சான்றிதழ் வழங்கினார்.  

    கால்நடை மருத்துவக் கல்லூரி பயிற்சி மாணவர்கள் சுபயர் முகமத், டயானா பிரியதர்ஷினி. தன்வந்தி, ஹேமாவதி ஆகியோர் மாணவர்களுக்கு கால்நடை  பாதுகாப்பது குறித்து விளக்கினர். 
    100-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவிகள் பங்கேற்றனர். 
    கருத்தரங்க ஏற்பாடுகளை பிராணிகள் பாதுகாப்பு இயக்க நிர்வாகிகள் செல்வபாண்டியன், கலைவாணன்,சக்திவேல்,சதீஷ், ராகுல் ஆகியோர் செய்து இருந்தனர்.
    தமிழ் எழுத்தாளர்கள் சங்கம் சார்பில் பாரதிதாசன் விழா கொண்டாடப்பட்டது.
    புதுச்சேரி:

    அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர்கள் புதுவை கிளை சார்பில் பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த நாள் விழா, நூல் வெளியீட்டு விழா, விருது வழங்கும் விழா என முப்பெரும் விழா கொண்டாடப்பட்டது.

    விழாவுக்கு தேசிய தலைவர் பெரியண்ணன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் இதயகீதம் முன்னிலை வகித்தார். மாநில பொருளாளர் பிரபாகரன் நோக்க உரையாற்றினார். இணை செயலாளர் அரங்க.முருகையன் அறிமுக உரையாற்றினார். டெல்லி கலை இலக்கிய பேரவை பொதுச்செயலாளர் குமார் சிறப்புரையாற்றினார். இதில் பல்வேறு மாவட்ட தலைவர்கள் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர். 

    விழாவில் புதுவை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் கலந்து கொண்டு விருது வழங்கி பேசினார். இதனை தொடர்ந்து நூல் வெளியீட்டு விழா நடந்தது. நூலினை பிரசிடென்சி மேல்நிலைப்பள்ளி தாளாளர் கிறிஸ்துராஜ் வெளியிட்டார். அதனை தமிழ் ஆர்வலர் தனசேகரன் பெற்றுக்கொண்டார். 

    முடிவில் சங்க பொருளாளர் குணசேகர் நன்றி கூறினார். இந்த விழாவில் தமிழ் அறிஞர்கள், எழுத்தாளர்கள், தமிழ் ஆர்வலர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் திரளாக கலந்து கொண்டனர். 
    ×