என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கராத்தே சுந்தர்ராஜனுக்கு நேரு எம்.எல்.ஏ. சால்வை அணிவித்தும், பூங்கொத்து கொடுத்தும் வாழ்த்து தெரிவித்த காட்சி.
    X
    கராத்தே சுந்தர்ராஜனுக்கு நேரு எம்.எல்.ஏ. சால்வை அணிவித்தும், பூங்கொத்து கொடுத்தும் வாழ்த்து தெரிவித்த காட்சி.

    கராத்தே சுந்தர்ராஜனுக்கு நேரு எம்.எல்.ஏ. வாழ்த்து

    பிறந்தநாள் கொண்டாடிய கராத்தே சுந்தர்ராஜனுக்கு நேரு எம்.எல்.ஏ. வாழ்த்து தெரிவித்தார்.
    புதுச்சேரி:

    புதுவை மாநில ஒருங்கிணைந்த கோஜூரியோ கராத்தே சங்க மாநிலச் செயலாளர் கராத்தே சுந்தர்ராஜன் தனது பிறந்த நாளை கவுண்டன்பாளையத்தில் உள்ள  முத்துரத்தினம் அரங்கம் மேல்நிலைப்பள்ளி வளாகத்ததில் கொண்டா டினர்.

    விழாவில் புதுவை மாநில ஒருங்கிணைந்த கோஜூரியோ கராத்தே சங்க தலைவரும்,  உருளையன்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ.வு மான  நேரு கராத்தே சுந்தர்ராஜனுக்கு பொன்னாடை  அணிவித்தும், பூங்கொத்துெகாடுத்தும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். 

    ேமலும் மனிதநேய மக்கள் சேவை இயக்க  இளைஞரணி தலைவர் விநாயகம் மற்றும் செங்குட்டுவன், ரெனோ, பாபு, பாலு மற்றும் உருளையன்பேட்டை தொகுதியை சேர்ந்த இளைஞர்கள் ஏராளமானோர் கராத்தே சுந்தர்ராஜனுக்கு ஆளுயர மாலை அணிவித்தும், சால்வை அணிவித்தும் வாழ்த்து தெரிவித்தனர்.

     மேலும் கராத்தே சங்க நிர்வாகிகள்- பயிற்சியாளர்கள் மற்றும் கராத்தே மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள், பல்வேறு இயக்க நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

    கராத்தே சுந்தர்ராஜன் பிறந்தநாளையொட்டி உலக கவிஞர்கள் சங்க நிறுவனர் புதுவை குமார் தலைமையில் மாற்றுத் திறனாளிகளுக்கு உடைகளும் அசைவ உணவு களும் வழங்கப்பட்டது.
    Next Story
    ×