என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஐ.என்.டி.யூ.சி. மாநில தலைவர் பாலாஜி ரவிச்சந்திரன் கொடியேற்றி, பெயர் பலகையை திறந்து தொழிலாளர்களுக்கு நலதிட்ட உத
    X
    ஐ.என்.டி.யூ.சி. மாநில தலைவர் பாலாஜி ரவிச்சந்திரன் கொடியேற்றி, பெயர் பலகையை திறந்து தொழிலாளர்களுக்கு நலதிட்ட உத

    ஐ.என்.டி.யூ.சி. சார்பில் தொழிலாளர்களுக்கு நலதிட்ட உதவிகள்

    ஐ.என்.டி.யூ.சி. சார்பில் மே தின விழா தொழிலாளர்களுக்கு நலதிட்ட உதவிகள் மாநில தலைவர் பாலாஜி வழங்கினார்.
    புதுச்சேரி:

    புதுவை மாநில ஐ.என்.டி.யூ.சி. சார்பில் உழவர்கரை நகராட்சி ஊழியர்கள் நலச்சங்கம், சேதராப்பட்டு ஈட்டன், ஒதியம்பட்டு இந்தியன் ஆயில் பாட்டலிங் பிளாண்ட் ஆகிய நிறுவனங்களில்மேதின விழா நடந்தது.

    மாநில தலைவர் பாலாஜி தலைமை தாங்கி ஐ.என்.டி.யூ.சி. கொடியை ஏற்றி, பெயர் பலகை திறந்து வைத்து நலத்திட்ட உதவிகள் வழங்கினார். 

    விழாவில் நிர்வாகிகள் சொக்கலிங்கம், நரசிங்கம், ஞானசேகரன், முத்துராமன், தமிழ்ச்செல்வன், பன்னீர், சபரி, நாகலிங்கம், வெற்றிவேல், கிருஷ்ணமூர்த்தி, தீனதயாளன், சரவணன், குமார், ஜான்சன், முத்து, ஜான், சகாயராஜ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

    மேலும் எம்.ஆர்.எப். பி.ஆர்.டி.சி. பிம்ஸ், திருபுவனை வேல்பிஸ்கட், ஆட்டோ மற்றும் டாக்சி நிறுத்தங்களிலும் ஐ.என்.டி.யூ.சி. சார்பில் மே தினம் கொண்டாடப்பட்டது. 

    காரைக்காலில் மாநில பொதுசெயலாளர் கணேஷ்குமார் தலைமையில் விநாயகா மிஷன், ஜான்சன் டைல்ஸ், உஜாலா, பஞ்சாலைகள் ஆகியவற்றில் மே தினம் கொண்டாடப்பட்டது,

    புதுவை மாநில பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் தொழிலாளர் தினம் எல்லப்பிள்ளை சாவடியில் உள்ள மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனை அருகில் கொண்டாடப்பட்டது.  

    முன்னாள் எம்பியும், பா.ம.க. தலைமை அரசியல் ஆலோசகருமான தன்ராஜ் கொடியேற்றி இனிப்பு வழங்கி  உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கினார். 
    Next Story
    ×