என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    ஏ.எப்.டி.மில்லில் இரும்பு பொருட்களை திருடிய 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
    புதுச்சேரி:

    புதுவை முதலியார் பேட்டையில் பழமையான ஏ.எப்.டி. மில் உள்ளது. இந்த மில் செயல்படாததால் பல லட்சம் மதிப்புள்ள எந்திரங்கள் பராமரிப்பின்றி உள்ளது. இந்த எந்திர பாகங்களை அவ்வப்போது மர்ம நபர்கள் திருடி செல்கின்றனர்.

    இந்த நிலையில் 2 வாலிபர்கள் மில்லின் உள்ளே அத்துமீறி நுழைந்து அங்கிருந்த ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள இரும்பு பொருட்களை திருடி சென்றனர். 

    இதனை அறிந்த மில்லின் காவலாளி நடராஜன் இது குறித்து முதலியார் பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் இனியன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். 

    விசாரணையில் இரும்பு பொருட்களை திருடியது உப்பளம் நேதாஜி நகர் அசோகன் தெருவை சேர்ந்த பெயிண்டரான முத்து குமரன் (வயது 26) என்பதும் மற்றொருவர் வாணரப்பேட்டை எல்லையம்மன் கோவில் தோப்பை சேர்ந்த பிரவின் குமார் (23), என்பதும் தெரியவந்தது.

    பின்னர் அவர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்ட பிரவின் குமார் மீது ஒதியஞ்சாலை போலீஸ் நிலையத்தில் மூதாட்டியை கற்பழித்த வழக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.
    ஸ்மார்ட் சிட்டி பணிகள் குறித்து நேரு எம்.எல்.ஏ. அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
    புதுச்சேரி:

    உருளையன் பேட்டை தொகுதி எம்.எல்.ஏ.வும் மனித நேய மக்கள் சேவை இயக்க நிறுவனத் தலைவருமான நேரு, பொதுப்பணித் துறை செயலர் அருண் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

    ஆலோசனையில் தொகுதியில் நடைபெற வேண்டிய மேம்பாட்டு பணிகளை  விரைந்து முடித்து கொடுக்குமாறு கேட்டுக் கொண்டார்.
    அண்ணாநகரில் கட்டிலில் இருந்து கீழே விழுந்து மூதாட்டி இறந்தார்
    புதுச்சேரி:

    புதுவை நெல்லித்தோப்பு அண்ணாநகரை சேர்ந்தவர் ஜனார்த்தன். இவரது மனைவி பிரகன்நாயகி.  இவரது தாய் ஆண்டாள் (வயது78) ஆகியோர் ஒன்றாக வசித்து வருகின்றனர். ஆண்டாளுக்கு உடல் நிலை சரியில்லாததால் வீட்டில் இருந்து சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்தநிலையில் கடந்த 23-ந் தேதி இரவு திடீரென ஆண்டாள் கட்டிலில் இருந்து தடுமாறி  கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

    இதனையறிந்த அவரது மகள் பிரகன்நாயகி ஆண்டாளை மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தார். அங்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த ஆண்டாள் பரிதாபமாக இறந்து போனார்.
    இதுகுறித்து பிரகன்நாயகி உருளையன்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    கணவன்-மனைவிக்கிடையே தகராறு தட்டிக்கேட்ட சட்டசபை காவலரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார்.
    புதுச்சேரி:

    புதுவை லலித் தொலாத்திரே வீதியை சேர்ந்தவர் சிவபாலன். இவரது மனைவி சரண்யா. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கணவன்-மனைவிக்கிடையே கருத்து வேறுபாடால் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
    இந்த நிலையில் தேதி சிவபாலன் அவரது நண்பர் ஜெயசிங்குடன் சரண்யாவின் வீட்டுக்கு சென்று ஆபாசமாக திட்டி தகராறு செய்து கொண்டிருந்தார். 

    இதனையறிந்த சரண்யாவின் உறவினரான ஓய்வு பெற்ற சட்டசபைகாவலர் புண்ணியமூர்த்தி(வயது62) இதுகுறித்து தட்டிக்கேட்டார். இதில் ஆத்திரமடைந்த சிவபாலன் அவரையும் ஆபாசமாக திட்டி கையால் தாக்கினார். 

    மேலும் மரக்கட்டையால் தலையில் பலமாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இதில் புண்ணியமூர்த்திக்கு ரத்த காயம் ஏற்பட்டது. வலி தாங்கா முடியாமல் சத்தம் போடவே கூட்டம் கூடியது. இதனை சரண்யா தனது செல்போனில் வீடியோ பதிவு செய்தார். இதில் மேலும் ஆத்திரமடைந்த அவர்கள் செல்போனை பிடுங்கி எறிந்து விட்டு அங்கிருந்து தப்பியோடி விட்டனர்.

    இதுகுறித்து புண்ணியமூர்த்தி பெரியக்கடை போலீசில் புகார்  அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    புதுச்சேரியில் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டுள்ளது.
    புதுச்சேரி:

    இஸ்லாமியர்களின் 5 கடமைகளில் ஒன்று புனித ரமலான் மாதத்தில் நோன்பு கடைபிடிப்பதாகும். இஸ்லாமிய காலண்டரில் 9-வது மாதம் ரமலான் மாதம் ஆகும்.

    ஆண்டுதோறும் இந்த மாதத்தில் பிறை தொடங்கிய நாளில் இருந்து இஸ்லாமியர்கள் ரம்ஜான் நோன்பை கடைபிடிப்பார்கள். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான ரம்ஜான் கடந்த மாதம் 3-ந்தேதி தொடங்கியது. அன்று முதல் ஒரு மாத காலம் இஸ்லாமியர்கள் நோன்பு இருந்து வந்தனர். இந்த ஒரு மாத நோன்பு முடிவடைந்தது.

    ரம்ஜான் பண்டி கையை புதுவை  முழுவதும் இஸ்லாமியர்கள் சிறப்பாக கொண்டாடினார்கள். அதிகாலையிலேயே எழுந்து குளித்து புத்தாடைகளை அணிந்து மகிழ்ச்சியுடன் ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். 

    தமிழ்நாடு ஜவ்ஹீத் ஜமாஅத் சார்பில் புதுவை கடற்கரை சாலையில் காலை 7.30 மணிக்கு சிறப்பு தொழுகை நடந்தது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் பங்கேற்று தொழுகை நடத்தினர். சிறப்பு தொழுகைக்கு பிறகு உலக நன்மை, கொரோனா தாக்கத்தில் இருந்து விடுபடுவது மற்றும் மழை வேண்டி தொழுகை நடத்தப்பட்டது. தொழுகை முடிந்ததும் அவர்கள் ஒருவருக்கொருவர் கட்டித்தழுவி ரமலான் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.

    இதேபோல்  புதுவை எச்.எம் காசிம் சாலை முஹ்ஹிதியா பள்ளி வாசல், தேபேசம்பேட்டை மஸ்ஜிதே நூரானிய்யா பள்ளி வாசல், சாந்தாசாகிப்தெரு அஹமதியா பள்ளி வாசல், டி.எம். நகர் மஸ்ஜிதே அல்ஹமீதியா பள்ளிவாசல், நெல்லித்தோப்பு மஸ்ஜிதே சுல்தானிய்யா பள்ளி வாசல், பெரியக்கடை மஸ்ஜிதே இஸ்லாமியா, ஏனாம் வெங்கடாசலம் பிள்ளை தெரு மீராபள்ளிவாசல், முல்லா வீதியில் உள்ள முஹம்மதியா பள்ளி வாசல், காலாப்பட்டு மஸ்ஜிதே இபுராஹிம் பள்ளி வாசல் உள்ளிட்ட பள்ளி வாசல்களில் சிறப்பு தொழுகை நடைபெற்றது.
    புதுவையில் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
    புதுச்சேரி:

    புதுவை மாநிலத்தில்  338 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. 

    இதில் 4 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 4 பேருமே புதுவையை சேர்ந்தவர்கள். காரைக்கால், மாகி, ஏனாம் பகுதிகளில் தொற்று கண்டறியப்படவில்லை. 

    தொற்றால் பாதி க்கப்பட்ட யாரும் மருத்து வமனையில் அனு மதிக்கப்படவில்லை. வீட்டு தனிமையிலேயே வைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    தற்போது 9 பேர் வீட்டு தனிமையில் உள்ளனர். 3 பேர் குணமடைந்துள்ளனர். இதில் 2 பேர் புதுவை, ஒருவர் காரைக்காலை சேர்ந்தவர். 

    புதுவை மாநிலத்தில் இதுவரை 1 லட்சத்து 65 ஆயிரத்து 794 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் 1 லட்சத்து 63 ஆயிரத்து 823 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். சிகிச்சை பலனின்றி 1962 பேர் உயிரிழந்துள்ளனர். 

    இந்த தகவல்களை சுகாதார த்துறை தெரிவித்துள்ளது.

    திருநங்கைகளுக்கு சுய தொழில் தொடங்க கடனுதவி வழங்க வேண்டும் ரங்கசாமியிடம் சம்பத் எம்.எல்.ஏ.மனு அளித்துள்ளார்.
    புதுச்சேரி: 

    முதலியார் பேட்டை தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ சம்பத் முதல்-அமைச்சர் ரங்கசாமியை சந்தித்து அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    திருநங்கையாக படைக்கப்பட்டதால் இவர்கள் படும் இன்னல் எண்ணிலடங்காதவை. பள்ளிப்படிப்பு பருவத்திலேயே இவர்களுக்கு பாலியல் மாற்றம் ஏற்படுவதால் பள்ளிப் படிப்பை முடிக்க முடியாமல் பாதியிலேயே இவர்களின் கல்வி கனவு தவிர்க்கப்படுகின்றது. வீட்டை விட்டு துரத்தி அடிக்க படுகின்றனர். 

    இவர்களின் பாலியல் பிரச்சினையால் சாதாரண வேலைவாய்ப்புகள் கூட இவர்களுக்கு மறுக்கப்படுகின்றது. தங்குவதற்கு பாதுகாப்பான இடம் இல்லை. 

    இவர்களில் பல பாலியல் துன்பத்திற்கு ஆளாக்க பட்டு பாலியல் தொழிலிலும் ஈடுபட தள்ளப்படுகின்றனர்.

    இதனால் பொதுமக்கள் மத்தியில் இவர்களுக்கு கெட்ட பெயர்களே அதிகம் ஏற்படுகின்றது. மகளிர் சுய உதவிக் குழுக்கள் உள்ளது போன்று ஊரக வளர்ச்சி முகமை  மூலம் திருநங்கைகள் குழு அமைக்கப்பட்டுள்ளது. 

    ஆனால் மகளிருக்கு வழங்கப்படும் கடனுதவி போல இவர்களுக்கு கடனுதவி வழங்கப்படுவது இல்லை. எனவே இவர்களுக்கு சுயதொழில் புரிய தேவையான சிறு கடன் உதவிகளை நகராட்சி நிர்வாகங்கள் மூலம் வங்கிகளில் ஏற்பாடு செய்ய தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.
    புதுவை லாஸ்பேட்டை கிழக்கு கடற்கரை சாலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு சரக்கு லாரி கேட்பாரற்று நின்று கொண்டிருந்தது.
    புதுச்சேரி:

    தொடர்ந்து அந்த லாரி அதே பகுதியில் நின்றுக்கொண்டி ருந்ததால் இதுகுறித்து அப்பகுதி மக்கள் லாஸ்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் அந்த லாரியின் பதிவு எண்ணை வைத்து விசாரணை நடத்தினர்.

    அப்போது அந்த லாரியின் பதிவு எண் கோவையை சேர்ந்த ஒருவரின் லாரியின் பதிவு எண் என்பது தெரியவந்தது.

    இதையடுத்து அந்த லாரியின் உரிமையாளரை போலீசார் தொடர்பு கொண்டு கேட்ட போது அந்த லாரி தன்னிடம் இருப்பதாகவும், தன்னுடைய லாரியின் பதிவு எண்ணை போலியாக தயாரித்து மற்றொரு லாரியில் பொறுத்தி பயன் படுத்தி வருவதாக  தெரிவித்தார்.

    இதையடுத்து சுங்க–சாவடிகளில் ஆய்வு செய்த போது கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த லாரி மொரட்டாண்டி சுங்கசாவடியை கடந்து புதுவைக்கு வந்தது தெரியவந்தது.

    இதை தொடர்ந்து கிழக்கு கடற்கரை சாலையில் நிறுத்தி வைக்கப்பட்ட லாரிைய போலீசார் பறிமுதல்  செய்து போலீஸ் நிலையம் முன்பு நிறுத்தி வைத்தனர்.

    இதற்கிடையே சென்ைன அய்யனாவரத்தை சேர்ந்த சரண் என்பவர் அந்த லாரிக்கு உரிமை கொண்டாடி அந்த லாரியை தன்னிடம் ஒப்படைக்குமாறு லாஸ்பேட்டை போலீசா–ரிடம் முறையிட்டார்.

    அதற்கு போலீசார் அந்த லாரிக்குண்டான ஆவணங்களை சமர்பித்தால் லாரியை ஒப்படைப்பதாக தெரிவித்தனர். இதனையேற்ற சரண் ஆவணங்களை கொண்டு வருவதாக கூறி சென்றார். ஆனால் அதன்பிறகு சரண்  லாரியை எடுத்து செல்ல வரவில்லை.

    எனவே அந்த லாரி திருட்டு லாரியாக இருக்கலாம் என போலீசார் கருதுகிறார்கள். இதுகுறித்து தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    புதுவையில் தொழில் அதிபர் மனைவியிடம் 120 பவுன் நகை மோசடி செய்து தலைமறைவான தோழியை போலீசார் தேடி வருகிறார்கள்.
    புதுச்சேரி:

    புதுவை லாஸ்பேட்டை பெத்திசெட் பேட் புது தெருவை சேர்ந்தவர் பிரபல தொழில் அதிபரின் மனைவி விஜயலட்சுமி. இவரிடம் வாணரப்பேட்டையை சேர்ந்த கட்டிட காண்டிராக்டர் பாபு என்பவரின் மனைவி விஜயகுமாரி கடந்த 40ஆண்டுகளாக  நெருங்கிய தோழியாக பழகி வந்தார்.  விஜயலட்சுமியின் குடும்பத்தில் ஒருவராக விஜயகுமாரி இருந்து வந்தார். 

    விஜயலட்சுமியின் குடும்ப நிகழ்ச்சிகளை தானே முன்னின்று விஜயகுமாரி நடத்தி வந்ததால்  அவர் மீது விஜயலட்சுமி நம்பிக்கை வைத்திருந்தார். 

    இதனை சாதகமாக பயன்படுத்தி விஜயகுமாரி தனது கணவரின் தொழில் மேம்பாட்டுக்காவும், அவசர தேவைக்காகவும் விஜயலட்சுமியிடம் கடந்த 2018 -ம் ஆண்டு முதல் சிறுக சிறுக 120 பவுன் நகை வாங்கியதாக கூறப்படு–கிறது.  

    அந்த நகையை விஜயகுமாரி புதுவையில் ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் அடகு வைத்து பணம் பெற்றார்.  ஆனால் அந்த நகையை  விஜயகுமாரி மீட்டு விஜயலட்சுமியிடம் கொடுக்கவில்லை.

    இந்த நிலையில் விஜயலட்சுமியின் மகளுக்கு திருமணம் ஏற்பாடாகியதால் நகையை திருப்பி கொடுக்குமாறு விஜயகுமாரிடம் விஜய–லட்சுமி கேட்டார். 
    ஆனால் நகையை திருப்பி கொடுக்காமல் விஜயகுமாரி காலம் கடத்தி வந்தார். கடந்த சில நாட்களாக விஜயகுமாரியை விஜயலட்சுமி போனில் தொடர்பு கொண்டு நகையை  திருப்பி கேட்ட போது அவர் சரியான காரணத்தை கூறவில்லை.

    இந்த நிலையில் விஜய–குமாரி தனது கணவர் மற்றும் குடும்பத்தினருடன் திடீரென தலைமறைவானார். இதனால் நகை மோசடி செய்யப்பட்டதை அறிந்து விஜயலட்சுமி அதிர்ச்சி–யடைந்தார்.
    பின்னர் இதுகுறித்து லாஸ்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவான விஜயகுமாரியை தேடி வருகிறார்கள்.
    வில்லியனூரில் தனியார் பள்ளி டிரைவரை கத்தியால் குத்திய வாலிபரை போலீசார் தேடிவருகிறார்கள்.
    புதுச்சேரி:

    ரெட்டியார் பாளையம் புது நகர் 4-வது குறுக்குத் தெருவை சேர்ந்தவர் சிவபாலன் (வயது 29) இவர் வில்லியனூர் மணவெளியில் உள்ள தனியார் பள்ளியில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். 

    சிவபாலன் வேலை செய்யும் பள்ளியின் தாளாளர் லூயீசின் வீடு வில்லியனூர் எஸ்.எஸ்.நகரில் உள்ளது. இதற்கிடையே பள்ளியின் தாளாளர் வீட்டில் கரையான் பேட் பகுதியை சேர்ந்த ரவீந்தரன் என்ற வாலிபர் அவ்வப்போது வீட்டு வேலை செய்து வந்தார். 

    அதற்குண்டான பணத்தை பள்ளியின் தாளாளர் ரவீந்தரனுக்கு கொடுத்து வந்தார். நாளடைவில் ரவீந்தி ரனின் நடவடிக்கை சரியில்லாததால் அவரை வீட்டு வேலையில் இருந்து நீக்கி விட்டனர். 

    அது முதல் சிவபாலனே பள்ளியின் தாளாளர் வீட்டு வேலைகளை செய்து வந்தார். ஆனால் தன்னை வேலையில் இருந்து நீக்க சிவபாலன் தான் காரணம் என ரவீந்தரன் ஆத்திரத்தில் இருந்து வந்தார். 

    அவ்வப்போது சிவபாலனிடம் இது பற்றி கேட்டு ரவீந்தரன் தகராறு செய்து வந்தார். ஆனால் இதனை சிவபாலன் பெரிதாக எடுத்துக் கொள்ள வில்லை. 

    இந்த நிலையில் சிவபாலன் தனது உறவினர் ராகுல் என்பவருடன் பள்ளி தாளாளர் வீட்டு வேலைக்கு தேவையான ஜல்லிகளை ஒரு மினி வேனில் ஏற்றிக்கொண்டு வந்தார். பின்னர் ஜல்லிகளை வீட்டு முன்பு சிவபாலன் இறக்கிக்கொண்டு இருந்தார். 

    அப்போது திடீரென அங்கு வந்த ரவீந்தரன் மறைத்து வைத்திருந்த கூர்மையான கத்தியை எடுத்து சிவபாலன் கழுத்தில் குத்தி விட்டு தப்பி ஓடிவிட்டார்.

    இதில் நிலை குலைந்து போன சிவபாலனை அவரது உறவினர் பாபு மீட்டு வில்லியனூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்.

    அங்கு முதலுதவி சிகிச்சை அளித்த பின்னர் மேல் சிகிச்சைகாக சிவபாலன் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    இது குறித்து புகாரின் பேரில் வில்லியனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து ரவீந்தரனை தேடிவருகிறார்கள்.
    தவளக்குப்பத்தில் பெண் சாவில் மர்மம் இருப்பதாக அண்ணன் போலீசில் புகார் தெரிவித்துள்ளார்.
    புதுச்சேரி:

    தவவளக்குப்பம் ராஜீவ்காந்திநகரை சேர்ந்தவர் வெங்கடேசன். கட்டிட தொழிலாளி. இவரது மனைவி சந்தியா(வயது27). இவர்களுக்கு திருமணமாகி 12 ஆண்டுகள் ஆகிறது. ஒரு பெண் மற்றும் ஒரு ஆண் குழந்தை உள்ளது.

    வெங்கடேசனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்தது. அவ்வப்போது மது குடித்து விட்டு வெங்கடேசன் மனைவியிடம் தகராறு செய்வார்.

    இந்த நிலையில் வெங்கடேசன் சந்தியாவின் அண்ணன் சதீசுக்கு போன் செய்து உன் தங்கை சந்தியாவை அடித்துவிட்டேன். அவருக்கு பேய் பிடித்துள்ளது. எனவே சந்தியாவை ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்கிறேன் என்று கூறினார்.

    இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சதீஷ் தவளக்குப்பத்துக்கு விரைந்து வந்தார். அப்போது சதீ்சிடம் சந்தியா இறந்து விட்டதாக வெங்கடேசன் தெரிவித்தார்.

    இதைத்தொடர்ந்து அக்கம் பக்கத்தில் சதீஷ் விசாரித்த போது   வீட்டில் இருந்த குளிர்சாதன பெட்டியில் இருந்து மின் கசிவு ஏற்பட்டு சந்தியா மின்சாரம் தாக்கி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    வெங்கடேசன் மற்றும் அக்கம் பக்கத்தினர் தெரிவித்த வேறுபட்ட தகவல்களால் சந்தேகமடைந்த சதீஷ் தனது தங்கை சாவில் சந்தேகம் இருப்பதாக தவளக்குப்பம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ஒப்பந்த துப்புரவு தொழிலாளர்களுக்கு ரூ.18 ஆயிரம் சம்பளம் வழங்க வேண்டும் என்று உழைக்கும் மக்கள் கூட்டமைப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    புதுச்சேரி:

    உழைக்கும் மக்கள் கூட்டமைப்பு சார்பில் மேதின விழா பீம்சேனா பயிற்சி கூடத்தில் நடைபெற்றது. 

    விழாவிற்கு முன்னாள் எம்.எல்.ஏ. மூர்த்தி தலைமை தாங்கினார். தொழில் வணிகத்துறை இணை இயக்குனர் டாக்டர் ராஜகணேஷ் சிறப்புரையாற்றினார். கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் சுமதி வரவேற்றார். 

    பீம்சேனா நிர்வாகிகள் பழனிச்சாமி, பகிரதன், ரமேஷ், சந்திரன் முன்னிலை வகித்தனர். சமூக இயக்க நிர்வாகிகள் அருள்தாஸ், திருமால், மோகனசுந்தரம், அங்காளன், அய்யனார், ஆதிகேசவன் ஆகியோர் உரையாற்றினர்.
     
    தொழிற்சங்க தலைவர்கள் தாயார், இருதயமேரி, மரகதம், மஞ்சுளா, கயல்விழி ஆகியோர் தொழிலாளர் பிரச்சினைகள் பற்றி விளக்கிப் பேசினர். 

    நிகழ்ச்சியில் துப்புரவுத் தொழிலாளர் சங்கம், விவசாயத் தொழிலாளர் சங்கம், வீட்டு பணியாளர் சங்கம், அமைப்பு சாரா தொழிலாளர் சங்க பிரதிநிதிகள் பங்கேற்றனர்.  தொழிலாளர்களுக்கு பரிசு பொருள்கள் வழங்கப்பட்டன. 
    கூட்டத்தில் நிறை வேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

    மாநிலத்தில் உள்ள அமைப்புசாரா தொழிலாளர்களை முழுமையாக வாரியத்தில் உறுப்பினர்களாக பதிவு செய்து, அவர்களுக்கு மருத்துவ உதவி, விபத்து நிவாரணம், பண்டிகை இனாம், கல்வி உதவி, ஓய்வு ஊதியம் போன்ற சமூகப் பாதுகாப்பு திட்டங்களை முறையாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் அனைத்து விவசாய தொழிலாளர்களுக்கும் 100 நாள் வேலை முழுமையாக கிடைக்க தேவையான 
    ரூ. 200 கோடி நிதியை மத்திய அரசிடமிருந்து பெற்று வர புதுவை அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். 

    புதுவை மாநிலத்தில் ஒப்பந்தம் மூலம் துப்புரவு பணி செய்யும் தொழிலாளர்களின் மாத சம்பளம் ரூ.18 ஆயிரமாக உயர்த்தி தர வேண்டும். 

    மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.முடிவில் மங்கையர்கரசி, சித்தார்த்தன் ஆகியோர் நன்றி தெரிவித்தனர்.
    ×