என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    120 பவுன் நகை மோசடி

    புதுவையில் தொழில் அதிபர் மனைவியிடம் 120 பவுன் நகை மோசடி செய்து தலைமறைவான தோழியை போலீசார் தேடி வருகிறார்கள்.
    புதுச்சேரி:

    புதுவை லாஸ்பேட்டை பெத்திசெட் பேட் புது தெருவை சேர்ந்தவர் பிரபல தொழில் அதிபரின் மனைவி விஜயலட்சுமி. இவரிடம் வாணரப்பேட்டையை சேர்ந்த கட்டிட காண்டிராக்டர் பாபு என்பவரின் மனைவி விஜயகுமாரி கடந்த 40ஆண்டுகளாக  நெருங்கிய தோழியாக பழகி வந்தார்.  விஜயலட்சுமியின் குடும்பத்தில் ஒருவராக விஜயகுமாரி இருந்து வந்தார். 

    விஜயலட்சுமியின் குடும்ப நிகழ்ச்சிகளை தானே முன்னின்று விஜயகுமாரி நடத்தி வந்ததால்  அவர் மீது விஜயலட்சுமி நம்பிக்கை வைத்திருந்தார். 

    இதனை சாதகமாக பயன்படுத்தி விஜயகுமாரி தனது கணவரின் தொழில் மேம்பாட்டுக்காவும், அவசர தேவைக்காகவும் விஜயலட்சுமியிடம் கடந்த 2018 -ம் ஆண்டு முதல் சிறுக சிறுக 120 பவுன் நகை வாங்கியதாக கூறப்படு–கிறது.  

    அந்த நகையை விஜயகுமாரி புதுவையில் ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் அடகு வைத்து பணம் பெற்றார்.  ஆனால் அந்த நகையை  விஜயகுமாரி மீட்டு விஜயலட்சுமியிடம் கொடுக்கவில்லை.

    இந்த நிலையில் விஜயலட்சுமியின் மகளுக்கு திருமணம் ஏற்பாடாகியதால் நகையை திருப்பி கொடுக்குமாறு விஜயகுமாரிடம் விஜய–லட்சுமி கேட்டார். 
    ஆனால் நகையை திருப்பி கொடுக்காமல் விஜயகுமாரி காலம் கடத்தி வந்தார். கடந்த சில நாட்களாக விஜயகுமாரியை விஜயலட்சுமி போனில் தொடர்பு கொண்டு நகையை  திருப்பி கேட்ட போது அவர் சரியான காரணத்தை கூறவில்லை.

    இந்த நிலையில் விஜய–குமாரி தனது கணவர் மற்றும் குடும்பத்தினருடன் திடீரென தலைமறைவானார். இதனால் நகை மோசடி செய்யப்பட்டதை அறிந்து விஜயலட்சுமி அதிர்ச்சி–யடைந்தார்.
    பின்னர் இதுகுறித்து லாஸ்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவான விஜயகுமாரியை தேடி வருகிறார்கள்.
    Next Story
    ×