என் மலர்
உள்ளூர் செய்திகள்

தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் பிரபாகரன் தலைமையில் தி.மு.க.வினர் சிவா எம்.எல்.ஏ.வுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெர
நலத்திட்ட உதவிகள்- சிவா எம்.எல்.ஏ. வழங்கினார்
முத்தியால்பேட்டை தொகுதியில் 500 பேருக்கு நலத்திட்ட உதவிகளை சிவா எம்.எல்.ஏ. வழங்கினார்.
புதுச்சேரி:
புதுவை மாநில தி.மு..க அமைப்பாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான சிவா எம்.எல்.ஏ. பிறந்தநாள் விழா தி.மு.க. தலைமை பொதுக்குழு உறுப்பினர் பிரபாகரன் தலைமையில் கொண்டாடப்பட்டது.
முத்தியால்பேட்டை மணிக்கூண்டு அருகே நடந்த நிகழ்ச்சியில் சிவா எம்.எல்.ஏ. கலந்து கொண்டு கேக் வெட்டினார். சிவா எம்.எல்.ஏ.வுக்கு பிரபாகரன் தலைமையில் தி.மு.க.வினர் சால்வை அணிவித்தும் பரிசுப்பொருள் வழங்கியும், மலர்கொத்து கொடுத்தும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
அந்த பகுதியில் நீர், மோர் பந்தலை சிவா எம்.எல்.ஏ. தொடங்கி வைத்து 500 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். நிகழ்ச்சியில் பங்கேற்ற பொதுமக்களுக்கு பிரியாணி வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் தி.மு.க. புதுவை மாநில அவைத் தலைவர் எஸ்.பி. சிவக்குமார், செந்தில்குமார் எம்.எல்.ஏ. உருளையன்பேட்டை தொகுதி பொறுப்பாளர் கோபால், கதிர்காமம் தொகுதி பொறுப்பாளர் வடிவேலு, தொகுதி செயலாளர் சக்திவேல், மாநில துணை அமைப்பாளர் திலீபன், மாநில உதயநிதி மன்றத்தலைவர் உத்தமன்.தொகுதி முன்னாள் இளைஞரணி அமைப்பாளர் சிவக்குமார், துணை அமைப்பாளர் செல்வம், தொகுதி துணை அமைப்பாளர் பலராமன், பொருளாளர் செல்வம், மாநில மீனவர் அணி துணை அமைப்பாளர் முனுசாமி பூபதி, கலை இலக்கிய அணி துணை அமைப்பாளர் சேகர், மாநில தொண்டரணி துணை அமைப்பாளர் லோகநாதன், மாநில சிறுபான்மையினர் அணி துணை அமைப்பாளர் விவோரெமோ மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள்கலந்து கொண்டனர்.
Next Story






