search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    டி.என்.ஏ. ஒப்பீடு: சர்ச்சையாகும் தெலுங்கானா முதல்வரின் முந்தைய பேச்சு
    X

    டி.என்.ஏ. ஒப்பீடு: சர்ச்சையாகும் தெலுங்கானா முதல்வரின் முந்தைய பேச்சு

    • தெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்க முக்கிய காரணமாக இருந்தார்.
    • இன்று மதியம் முதலமைச்சராக பதவி ஏற்றுக் கொண்டார்.

    ஐந்து மாநில தேர்தலில் தெலுங்கானாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்தது. காங்கிரஸ் ஆட்சியை பிடிக்க ரேவந்த் ரெட்டிதான் முக்கிய காரணம் எனக் கூறப்படுகிறது. அவரை காங்கிரஸ் இரண்டு தொகுதிகளில் களம் இறக்கியது. கமாரெட்டி தொகுதியில் தோல்வியடைந்தார். மற்றொரு தொகுதியில் வெற்றி பெற்றார்.

    ரேவந்த் ரெட்டியை முதலமைச்சராக தேர்வு செய்ய கட்சியில் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இருந்த போதிலும் கட்சி மேலிடம் அவரை முதலமைச்சராக தேர்வு செய்தது. இன்று மதியம் அவர் தெலுங்கானா மாநில முதல்வராக பதவி ஏற்றுக் கொண்டார்.

    இதற்கிடையே கடந்த சில மாதங்களுக்கு முன் ஒரு பத்திரிகை சந்திப்பின்போது, உங்களுடைய டி.என்.ஏ.-வை காங்கிரஸ் டி.என்.ஏ-வாக பார்க்கிறீர்களா? என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு ரேவந்த் ரெட்டி என்னுடைய டி.என்.ஏ.-வை தெலுங்கானா டி.என்.ஏ.-வாக பார்க்கிறேன் என்றார்.

    மேலும், சந்திரசேகர ராவ் குறித்து பேசும்போது "சந்திரசேகர ராவின் டி.என்.ஏ. பீகாரைச் சேர்ந்தது, அவரின் சாதி குர்மி. குர்மிஸ் பீகாரில் இருந்து வந்தவர்கள். பீகாரில் இருந்து விஜயநகரம் குடிபெயர்ந்து பின்னர் அங்கிருந்து தெலுங்கானா வந்தனர். என்னுடைய டி.என்.ஏ. தெலுங்காவில் இருந்து வந்தது. என்னுடைய டி.என்.ஏ. தெலுங்கானா. அது பீகார் டி.என்.ஏ.-வை விட சிறந்தது" என்றார்.

    அவர் எம்.பி.யாக இருக்கும்போது இதுகுறித்து பெரியதாக பேசப்படவில்லை. தற்போது தெலுங்கானா களத்தில் சந்திரசேகர ராவை தோற்கடித்து, முதலமைச்சர் பதவிக்கு அவர் பெயர் அடிபட்ட நிலையில் தூசி தட்டி எடுக்கப்பட்டு விமர்சனம் செய்யப்படுகிறது.

    இதுகுறித்து பா.ஜனதா எம்.பி. ரவி சங்கர் பிரசாத் கூறுகையில் "டி.என்.ஏ. குறித்து ரேவந்த் ரெட்டி கூறிய கருத்து பொறுப்பற்றது. வெட்கக்கேடானது. தெலுங்கானா டி.என்.ஏ.-வை விட பீகார் டி.என்.ஏ. பலவீனமானதா?.

    நாட்டை பிளவுப்படுத்தும் வகையிலான இநத் கருத்துக்கு சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, பீகார் முதல்வர் நிதிஷ் குமார் மவுனம் காப்பது ஏன்?. ரேவந்த் ரெட்டி மன்னிப்பு கேட்க வேண்டும்.

    Next Story
    ×