என் மலர்tooltip icon

    இந்தியா

    இந்தியாவை நம்பி வந்தவர்களுக்கு இரங்கலாவது கூறலாம்.. ஈரான் கப்பல் தாக்குதல் குறித்து முன்னாள் வெளியுறவு செயலாளர்
    X

    இந்தியாவை நம்பி வந்தவர்களுக்கு இரங்கலாவது கூறலாம்.. ஈரான் கப்பல் தாக்குதல் குறித்து முன்னாள் வெளியுறவு செயலாளர்

    • நமது ஜனாதிபதிக்கு அணிவகுப்பு மரியாதை செலுத்திச் சென்ற அந்த வீரர்களின் உயிரிழப்புக்கு, ஒரு இரங்கல் செய்தியாவது வெளியிடுவதே முறை.
    • இந்தியாவின் உணர்வுகளையும் மாண்பையும் அமெரிக்கா அலட்சியம் செய்தது.

    கடந்த சனிக்கிழமை முதல் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஈரான் மீது கூட்டுத் தாக்குதல் நடத்தி வருகிறது.

    இதில் ஈரான் உச்சதலைவர் அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டார். இதற்கிடையே ஈரானின் போர் கப்பலை இலங்கைக்கு அருகே இந்திய பெருங்கடலில் வைத்து அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் தாக்கி அழித்தது.

    இதில் கப்பலில் இருந்த ஈரான் ராணுவ வீரர்கள் உட்பட 87 பேர் கொல்லப்பட்டனர். அந்த கப்பல் இந்திய கடற்படையின் அழைப்பை ஏற்று கூட்டுப் பயிற்சிக்காக கடந்த மாதம் இந்தியா வந்திருந்தது.

    நேற்று கப்பல் இந்திய கடல் பகுதியை தாண்டியதும் அமெரிக்கா அதன் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.

    இதுகுறித்து மத்திய அரசு இன்னும் எந்த கருத்தும் தெரிவிக்காதது பேசுபொருளாகி உள்ளது.

    போர் நமது கொல்லைப்புறம் வரை வந்துவிட்டதாகவும் ஈரான் விவகாரத்தில் பிரதமர் மோடி மௌனம் கலைக்க வேண்டும் என்றும், ஈரானுடன் நெருங்கிய உறவு கொண்ட இந்தியா இது குறித்துத் தெளிவான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்றும் மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வலியறுத்தியுள்ளார்.

    இந்த சூழலில், இந்தியாவின் விருந்தினராக வந்த ஈரான் கப்பல் தாக்கப்பட்டது குறித்தும் அதற்கு இந்தியா எந்த எதிர்வினையும் காட்டாதது குறித்தும் முன்னாள் மத்திய வெளியுறவு செயலாளர் கன்டில் சபால் விமர்சித்துள்ளார்.

    அவர் கூறியதாவது, "இந்தியாவின் அழைப்பை ஏற்று பயிற்சியில் பங்கேற்க, ஈரானிய கப்பல் இங்கே வந்திருக்காவிட்டால், அமெரிக்காவின் தாக்குதலுக்கு உள்ளாகி இருக்காது.

    இதற்கு இந்தியா அரசியல் ரீதியாகவோ அல்லது ராணுவ ரீதியாகவோ பொறுப்பல்ல என்றாலும், தார்மீக மற்றும் மனிதாபிமான ரீதியில் ஒரு பொறுப்பு உண்டு.

    இந்தியாவின் உணர்வுகளையும் மாண்பையும் அமெரிக்கா அலட்சியம் செய்ததையே இந்தத் தாக்குதல் காட்டுகிறது.

    நமது ஜனாதிபதிக்கு அணிவகுப்பு மரியாதை செலுத்திச் சென்ற அந்த வீரர்களின் உயிரிழப்புக்கு, ஒரு இரங்கல் செய்தியாவது இந்திய கடற்படை வெளியிடுவதே முறை." என்று வலியுறுத்தியுள்ளார்.

    Next Story
    ×