search icon
என் மலர்tooltip icon

    இந்தியா (National)

    பள்ளிக் குழந்தைகள் கழிவறை சுத்தம் செய்வதில் எந்த தவறும் இல்லை.. பாஜக எம்.பி ஓபன் டாக்
    X

    பள்ளிக் குழந்தைகள் கழிவறை சுத்தம் செய்வதில் எந்த தவறும் இல்லை.. பாஜக எம்.பி ஓபன் டாக்

    • சமீப காலமாகப் பள்ளியில் மாணவ மாணவிகள் கழிவறை சுத்தம் செய்து கொண்டிருக்கும் வீடியோ இணையத்தில் பரவி வருகிறது
    • ஜப்பான் நாட்டில் மாணவர்களும் ஆசிரியர்களும் கழிவறையை சுத்தம் செய்கின்றனர்.

    கர்நாடகாவின் முன்னாள் துணை முதல்வரும் சித்திரதுர்கா தொகுதி பாஜக எம்.பியுமான கோவிந்த் கர்ஜோல் மாணவர்கள் கழிவறை கழுவுவதில் எந்த தவறும் இல்லை என்று தெரிவித்துள்ளார். கடந்த செப்டம்பர் 5 ஆம் தேதி ஆசிரியர் தினத்தன்று நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கஜ்ரோல் சமீப காலமாகப் பள்ளியில் மாணவ மாணவிகள் கழிவறை சுத்தம் செய்து கொண்டிருக்கும் வீடியோ இணையத்தில் கண்டனங்களை பெற்று வருவது குறித்துப் பேசுகையில், மாணவர்கள் கழிவறை சுத்தம் செய்வதில் எந்த வித தவறும் இல்லை.

    ஜப்பான் நாட்டில் மாணவர்களும் ஆசிரியர்களும் கழிவறையை சுத்தம் செய்கின்றனர். நான் படிக்கும் சமயத்தில் ஹாஸ்டலை பெருக்கி சுத்தம் செய்திருக்கிறேன். மாணவனின் கையில் ஆசிரியர் துடைப்பத்தை கொடுப்பதை குற்றமாக கூறினால், சுத்தம் செய்யும் வேலை என்பது கீழான செயல் என்று மாணவனுக்கு எண்ணம் ஏற்படும் துன்று தெரிவித்துள்ளார்.

    பாஜக எம்.பியின் இந்த கருத்து விவாதத்தைக் கிளம்பியுள்ள நிலையில் மாணவர்கள் சுத்தத்தைக் கற்றுக்கொள்ள வேண்டும் தான், ஆனால் அது குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களோ, பெண் மாணவிகள் மட்டும் செய்ய வேண்டிய வேலையாகவோ அதை பாகுபடுத்தும்போது அது குற்றமாகிறது என்று பலர் கருத்து தெரிவித்து வருகிறனர்.

    Next Story
    ×