search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    மோடி தேவையில்லை என்று மக்கள் முடிவு செய்துவிட்டனர்
    X

    மோடி தேவையில்லை என்று மக்கள் முடிவு செய்துவிட்டனர்

    • தமிழகத்தில் அனைத்து தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும்.
    • தோல்வி பயம் தான் மோடியை இது போன்ற தவறுகளில் குதிக்க வைக்கிறது.

    திருவனந்தபுரம்:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு சிறப்பு பேட்டி அளித்திருக்கிறார். முதலமைச்சரிடம் கேட்கப்பட்ட கேள்விகள் மற்றும் அதற்கு அவர் அளித்திருக்கும் பதில் விவரம் வருமாறு:-

    கேள்வி: தமிழகம் யாருடன் இருக்கும்?

    பதில்: தமிழகத்தில் அனைத்து தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும். ஒவ்வொரு நாளும் நான் பார்க்கும் மக்களின் முகங்களில் அந்த நம்பிக்கை தெரிகிறது. கடந்த 3 ஆண்டுகளில் மாநில அரசு செயல்படுத்திய திட்டங்கள் மக்களுக்கு தெரியும். எங்களுக்கு 2021-ல் இருந்ததை விட ஆதரவு அதிகரித்துள்ளது.

    இதற்கிடையே பிரதமர் மோடிக்கு எதிரான மக்களின் கோபம் பல மடங்கு அதிகரித்துள்ளது.மோடி ஒரு நொறுங்கிய கட்டுக்கதை. தமிழகத்தில் கடந்த 2 சட்டசபை தேர்தல்களில் பா.ஜனதா வெற்றி பெறவில்லை. தமிழ் மொழிக்கும், நாட்டுக்கும் துரோகம் செய்த பா.ஜ.க.வை வீழ்த்தவேண்டும் என்பதில் மக்கள் உறுதியாக உள்ளனர்.

    கேள்வி: டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டது பற்றி...

    பதில்: தோல்வி பயம் தான் மோடியை இது போன்ற தவறுகளில் குதிக்க வைக்கிறது. 370-400 இடங்களில் வெற்றி பெறு வேன் என்று கூறும் ஒருவர், எதிர்க்கட்சி தலைவர்களை கைது செய்வது ஏன்? வட இந்திய மாநிலங்களில் காங்கிரஸ்-ஆம்ஆத்மி கூட்டணி வலுப்பெற்றுள்ளது.

    இந்த மாநிலங்களில் கெஜ்ரிவால் பிரசாரத்தை தொடங்கினால் எதிர்பார்த்த இடங்களை கூட வெல்ல முடியாது என்பது உறுதி. அவர் பிரசாரத்தில் ஈடுபடுவதை தடுக்கவும், அவரது நற்பெயரை கெடுக்கவும் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட பிறகு கெஜ்ரிவாலின் புகழ் பல மடங்கு அதிகரித்தது.

    கேள்வி: மோடியின் மாற்று யார்?

    பதில்: இனி மோடி தேவையில்லை என்று மக்கள் முடிவு செய்துவிட்டனர். இந்நிலையில் மோடியின் மாற்று யார் என்று மக்களின் வாக்குகள் மூலம் நிரூபிக்கப்படும். மக்களின் விரும்பப்படி மோடி ஆட்சியில் இருந்து அகற்றப்படுவார். ஒரு தகுதியான நபர் ராஜ்ஜியத்தை ஆளுவார்.

    கேள்வி: மோடி அரசின் 10 ஆண்டு கால ஆட்சி குறித்து உங்களின் கருத்து என்ன?

    பதில்: மோடி வாக்காளர்களுக்கு பல கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை அளித்தார். ஆனால் அந்த வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. கறுப்பு பணத்தை மீட்டு அனைவரின் வங்கி கணக்கிலும் 15 லட்சம் டெபாசிட் செய்யப்படும் என்று வடமாநிலங்களில் பிரசாரம் செயதார். இந்த வாக்குறுதி பாரதிய ஜனதா பெரும்பான்மையை வெல்ல உதவியது. ஆட்சிக்கு வந்ததும் வங்கி கணக்கு தொடங்கச்சொல்லி அனைவரையும் ஏமாற்றினார்.

    இந்திய பொருளாதாரம் மட்டுமின்றி மாநிலங்களில அமைதியான சூழலும் அழிக்கப்பட்டது. மோடி வெற்றி பெறுவது நாட்டுக்கு மட்டுமல்ல. பாரதிய ஜனதாவுக்கும் நல்லதல்ல.

    கேள்வி: தமிழகத்தில் தி.மு.க.-அ.தி.மு.க.வுக்கு இடையே சண்டையா?

    பதில்: தமிழகத்தில் தி.மு.க. முன்னிலையில் உள்ளது. இரண்டாவது இடத்துக்கு போராடும் அ.தி.மு.க. மிகவும் பின்தங்கியுள்ளது. மற்ற கட்சிகள் கனவுலகில் உள்ளன. தி.மு.க.வை எதிர்ப்பது மட்டுமே அ.தி.மு.க.வின் கொள்கை.

    Next Story
    ×