என் மலர்
இந்தியா

கடந்த 3 பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் பெற்ற தொகுதியைவிட பா.ஜ.க. வென்றது அதிகம்: அமித்ஷா
- ஜார்க்கண்டில் நடந்த பா.ஜக. செயற்குழு கூட்டத்தில் உள்துறை மந்திரி அமித்ஷா கலந்துகொண்டார்.
- அப்போது பேசிய அவர், இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் ரூ.12 லட்சம் கோடி ஊழல் செய்துள்ளனர் என்றார்.
ராஞ்சி:
ஜார்க்கண்ட் மாநிலத்தில் பா.ஜக. செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் உள்துறை மந்திரி அமித்ஷா பேசியதாவது:
ஜார்க்கண்டில் ஆதிக்கம் செலுத்தும் பழங்குடியினரின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து வருகிறது.
நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் 81 சட்டசபை தொகுதிகளில் 52 தொகுதிகளில் ஏற்கனவே தாமரை மலர்ந்துள்ளது.
ஜார்க்கண்டில் ஆட்சி அமைப்பதில் பா.ஜ.க. உறுதியாக உள்ளது. ஆட்சி அமைத்த பிறகு பழங்குடியின மக்களின் நிலங்கள், இட ஒதுக்கீடு மற்றும் மக்கள் தொகை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடுவோம்.
பாராளுமன்ற தேர்தலில் ஏற்பட்ட தோல்வியை ஏற்கமுடியாமல் ராகுல் உள்பட இந்தியா கூட்டணியினர் ஆணவத்தைக் காட்டி வருகின்றனர். இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் ரூ.12 லட்சம் கோடி ஊழல் செய்துள்ளனர்.
கடந்த 2014, 2019, 2024-ம் ஆண்டுகளில் நடந்த பாராளுமன்ற தேர்தல்களில் மொத்தமாக காங்கிரஸ் வெற்றி பெற்றதை விட, இந்த தேர்தலில் பா.ஜ.க. அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.
ஹேமந்த் சோரன் தலைமையிலான அரசு நாட்டிலேயே மிகவும் ஊழல் நிறைந்தது. அதை நிரூபிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என தெரிவித்தார்.
#WATCH | Speaking at the Jharkhand BJP working committee meeting in Ranchi, Union HM Amit Shah says, "A tribal CM instead of worrying about the tribals is disturbing the balance of land and population by doing 'land jihad' and 'love jihad'. Thousands of infiltrators marry tribal… pic.twitter.com/0m8MyL9XdE
— ANI (@ANI) July 20, 2024