என் மலர்
இந்தியா

பிரம்மோஸ் ஏவுகணை உற்பத்தி பிரிவை பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் திறந்து வைத்தார்
- பயங்கரவாதிகளின் இருப்பிடம் தகர்க்கப்படும் என்பதே இந்தியா உலகிற்கு சொன்ன பாடம்.
- பயங்கரவாதிகளின் இருப்பிடங்கள் இனி பாதுகாப்பற்றவையாக இருக்கும்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்தியா தாக்கி அழித்தது. இதற்கு ஆபரேசன் சிந்தூர என்று இந்திய ராணுவம் பெயரிட்டது.
இதனையடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டது. இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்பின் தலையீட்டால் இந்தியாவும் பாகிஸ்தானும் உடனடியாக சண்டை நிறுத்தத்திற்கு ஒப்பு கொள்வதாக அறிவித்தது. நாளை இருநாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளன.
இந்நிலையில், இன்று லக்னோவில் பிரம்மோஸ் ஏவுகணை உற்பத்தி பிரிவை காணொளி வாயிலாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் பேசிய ராஜ்நாத் சிங், "பாகிஸ்தானுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தி பயங்கரவாதிகளுக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி தந்தது. பாகிஸ்தான் ராணுவத்தின் தலைமையகத்தையே இந்திய ராணுவம் தாக்கியது.
பயங்கரவாதிகளின் இருப்பிடம் தகர்க்கப்படும் என்பதே இந்தியா உலகிற்கு சொன்ன பாடம். பயங்கரவாதிகளின் இருப்பிடங்கள் இனி பாதுகாப்பற்றவையாக இருக்கும். இந்தியாவின் பிரம்மோஸ் ஏவுகணை எதிரிகளுக்கு எச்சரிக்கை விடுப்பதாக அமையும்" என்று தெரிவித்தார்.






