என் மலர்tooltip icon

    இந்தியா

    எதிர்க்கும் அனைத்து தலைவர்களையும் முடித்து கட்ட பிரதமர் மோடி திட்டம்- அரவிந்த் கெஜ்ரிவால்
    X

    எதிர்க்கும் அனைத்து தலைவர்களையும் முடித்து கட்ட பிரதமர் மோடி திட்டம்- அரவிந்த் கெஜ்ரிவால்

    • கெஜ்ரிவால் அரசை வீழ்த்த முடியாது என்று நினைத்தவர்கள், சூழ்ச்சி செய்கிறார்கள்.
    • தேர்தலில் வெற்றி பெற முடியவில்லை என்றால் ஆட்சியை கவிழ்க்க முயற்சி செய்கின்றனர்.

    டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெற்கு டெல்லியில் உள்ள மெஹராஜ் சந்தையில் வாகன பேரணியில் ஈடுபட்டார்.

    வாகன பேரணியில் அரவிந்த் கெஜ்ரிவாலுடன், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் பங்கேற்றார்.

    சிறையில் இருந்து வெளியே வந்த பின் கெஜ்ரிவால் பங்கேற்கும் முதல் தேர்தல் பிரசார வாகன பேரணி நடைபெற்றது.

    அப்போது பொது மக்கள் மத்தியில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பேசினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    கெஜ்ரிவால் அரசை வீழ்த்த முடியாது என்று நினைத்தவர்கள், சூழ்ச்சி செய்கிறார்கள்.

    என்னை ஏன் அமலாக்கத்துறையை கொண்டு கைது செய்தீர்கள்? முதல்வரான என்னை கைது செய்ததன் மூலம், நாட்டில் எவரையும் கைது செய்ய என்னால் முடியும் என அனைவருக்கும் காட்ட விரும்புகிறாரா பிரதமர் மோடி ?

    தேர்தலில் வெற்றி பெற முடியவில்லை என்றால் ஆட்சியை கவிழ்க்க முயற்சி செய்கின்றனர்.

    நாட்டு மக்களை முட்டாள்கள் என நினைக்க வேண்டாம். அவர்கள் அனைத்தையும் பார்த்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

    ஒரே நாடு ஒரே திட்டத்தை கொண்டு வருவதே பிரதமர் மோடியின் ஒரே லட்சியம்.

    எதிர்க்கும் அனைத்து தலைவர்களையும் முடித்து கட்ட பிரதமர் மோடி நினைக்கிறார்.

    ஸ்டாலின் அமைச்சர்களை சிறையில் அடைத்துவிட்டார் பிரதமர் மோடி. ஹேமந்த் சோரனை சிறையில் அடைத்துவிட்டார். மம்தா பானர்ஜியின் அமைச்சர்களையும் சிறையில் அடைத்துவிட்டார்.

    ஒருவேளை இந்த தேர்தலில் வெற்றி பெற்றால், ஸ்டாலினையும், மம்தா பானர்ஜியையும் கூட சிறையில் அடைப்பார்கள்.

    சிவராஜ் சவுகான், வசுந்தரா ராஜே, மனோகர் லால் கட்டார் ஆகியோரின் அரசியலை முடித்தவர் பிரதமர் மோடி.

    உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத்தின் அரசியலுக்கும் விரைவில் முடிவு கட்டுவார். ஒரே நாடு ஒரே தலைவரை தான் பிரதமர் மோடி விரும்புகிறார்.

    சர்வாதிகாரத்தை எதிர்த்து ஒன்றிணைந்து வலிமையோடு போராட வேண்டும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    Next Story
    ×