என் மலர்
இந்தியா

அமெரிக்காவின் தாக்குதல் குறித்து ஈரான் அதிபருடன் தொலைபேசியில் பேசிய பிரதமர் மோடி
- ஈரானில் அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது.
- அமெரிக்காவின் தாக்குதல் சர்வதேச சட்டத்தை மீறுவதாக ஈரான் அணுசக்தி கழகம் கண்டனம்
அமெரிக்க ராணுவம் (இந்திய நேரப்படி இன்று அதிகாலை), ஈரானின் ஃபோர்டோ (Fordo), இஸ்ஃபஹான் (Isfahan) மற்றும் நடான்ஸ் (Natanz) அணுசக்தி தளங்கள் மீது தாக்குதல்களை நடத்தியதாகத் அதிபர் டிரம்ப் தெரிவித்திருந்தார்.
அமெரிக்காவின் தாக்குதல் சர்வதேச சட்டத்தை மீறுவதாக ஈரான் அணுசக்தி கழகம் கண்டனம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியனுடன் தொலைபேசியில் பேசினார்.
இது தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "தற்போதைய நிலைமை குறித்து ஈரான் அதிபரிடம் பேசினேன். சமீபத்திய மோதல்கள் குறித்து ஆழ்ந்த கவலை தெரிவித்தேன். பிராந்திய அமைதி, பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை விரைவாக மீட்டெடுப்பதற்கும், பதற்றத்தை உடனடியாகக் குறைப்பதற்கும் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வலியுறுத்தினேன்" என்று பதிவிட்டுள்ளார்.
Next Story






