search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    தெலுங்கானாவில் இன்று பிரதமர் மோடி, ராகுல் காந்தி போட்டி பிரசாரம்
    X

    தெலுங்கானாவில் இன்று பிரதமர் மோடி, ராகுல் காந்தி போட்டி பிரசாரம்

    • காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பிரியங்கா காந்தி 2 நாள்களாக பிரசாரம் செய்து வருகிறார்
    • பிரதமர் மோடி, மத்திய மந்திரிகள் உள்ளிட்ட தேசிய தலைவர்கள் வருகையால் தெலுங்கானா முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலத்தில் உள்ள 119 சட்டமன்ற தொகுதிகளுக்கு வருகிற 30-ந் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது.

    தேர்தல் பிரசாரம் வருகிற 28-ந்தேதி மாலை 5 மணியுடன் நிறைவு பெறுகிறது. இந்நிலையில் நேற்று முதல் தொடர்ந்து 3 நாட்களுக்கு தேசிய தலைவர்கள் தெலுங்கானாவில் தொடர் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    இதில் நேற்று மாலை பா.ஜ.க. வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிப்பதற்காக கட்சியின் மூத்த தலைவரும் மத்திய உள்துறை மந்திரியுமான அமித்ஷா பிரசாரம் செய்தார். ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங் இன்று பிரசாரம் செய்கிறார்.

    இதே போன்று காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பிரியங்கா காந்தி 2 நாளாக பிரசாரம் செய்து வருகிறார். இன்று மாலை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி பிரசாரம் செய்கிறார்.

    இன்று மாலை முதல் அடுத்த 3 நாட்களுக்கு பிரதமர் மோடி தெலுங்கானாவுக்கு வந்து பிரசாரம் செய்கிறார். குறிப்பாக பொதுக்கூட்டம், ரோடுஷோ ஆகியவற்றில் அவர் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பா.ஜ.க., காங்கிரஸ் கட்சியினர் போட்டி பிரசாரம் செய்து வருகின்றனர்.

    பிரதமர் மோடி, மத்திய மந்திரிகள் உள்ளிட்ட தேசிய தலைவர்கள் வருகையால் தெலுங்கானா முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    இதனிடையே தெலுங்கானாவில் ஆளும் பாரத் ராஷ்டிரிய சமிதி தலைவர் சந்திரசேகரராவ், அவரது மகன் மற்றும் ஜனசேனா கட்சி தலைவர் பவன் கல்யாண் உள்ளிட்ட அனைத்து கட்சிகளை சேர்ந்த மாநில, தேசிய தலைவர்கள் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    தேர்தலுக்கு இன்னும் 5 நாட்களே உள்ளதால் தெலுங்கானா முழுவதும் தேசிய தலைவர்களின் படையெடுப்பால் களை கட்டியுள்ளது.

    Next Story
    ×