என் மலர்tooltip icon

    இந்தியா

    பிரதமர் மோடியின் வந்தே பாரத் தொடக்க விழாவில் ஆர்எஸ்எஸ் பாடல்.. பினராயி விஜயன் கண்டனம்
    X

    பிரதமர் மோடியின் வந்தே பாரத் தொடக்க விழாவில் ஆர்எஸ்எஸ் பாடல்.. பினராயி விஜயன் கண்டனம்

    • இந்த காணொளியை சமூக ஊடகங்களில் பகிர்வதன் மூலம், தேசிய நிறுவனங்கள் சங் பரிவார அரசியலுக்கு எவ்வாறு இரையாகின்றன என்பதை ரயில்வே அதிகாரிகளே அம்பலப்படுத்தியுள்ளனர்.
    • ஒரு காலத்தில் மதச்சார்பற்ற தேசியவாதத்தின் அடையாளமாக நின்ற ரயில்வே, இப்போது வகுப்புவாத சித்தாந்தத்தை விதைக்கும் ஒரு கருவியாக மாறி வருகிறது.

    பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை வாரணாசியில் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் வழியாக இயக்கப்படும் எர்ணாகுளம்–பெங்களூரு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட 4 புதிய வந்தே பாரத் ரெயில் சேவைகளை தொடங்கி வைத்தார். இ

    இந்த நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள் ஆர்எஸ்எஸ் அமைப்பின் பாடலை பாடிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

    இந்நிலையில் பிரதமர் கலந்து கொண்ட அரசு நிகழ்ச்சியில் ஆர்எஸ்எஸ் பாடல் பாடப்பட்டதற்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    முதல்வர் பினராயி விஜயன் வெளியிட்ட எக்ஸ் பதிவில், "எர்ணாகுளம்-பெங்களூரு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் தொடக்க விழாவில் மாணவர்கள் ஆர்எஸ்எஸ் பாடலைப் பாடியதை நான் கடுமையாகக் கண்டிக்கிறேன். ஒரு அதிகாரப்பூர்வ நிகழ்ச்சியில் வெறுப்பு மற்றும் வகுப்புவாத சித்தாந்தத்தை ஊக்குவிக்கும் ஒரு அமைப்பின் பாடலைச் சேர்ப்பது அரசியலமைப்பிற்கு விரோதமானது.

    இந்த காணொளியை சமூக ஊடகங்களில் பகிர்வதன் மூலம், தேசிய நிறுவனங்கள் சங் பரிவார அரசியலுக்கு எவ்வாறு இரையாகின்றன என்பதை ரயில்வே அதிகாரிகளே அம்பலப்படுத்தியுள்ளனர்.

    ஒரு காலத்தில் மதச்சார்பற்ற தேசியவாதத்தின் அடையாளமாக நின்ற ரயில்வே, இப்போது வகுப்புவாத சித்தாந்தத்தை விதைக்கும் ஒரு கருவியாக மாறி வருகிறது.

    அனைத்து மதச்சார்பற்ற மற்றும் ஜனநாயக சக்திகளும் ஒன்றிணைந்து இந்த ஆபத்தான செயலை எதிர்க்க வேண்டும்" என்று அழைப்பு விடுத்துள்ளார்.

    Next Story
    ×