என் மலர்tooltip icon

    இந்தியா

    பியூஸ் கோயல் என்னதான் நெஞ்சில் அடித்துக்கொண்டாலும் டிரம்புக்கு மோடி அடிபணிந்தே தீருவார் - ராகுல் காந்தி
    X

    பியூஸ் கோயல் என்னதான் நெஞ்சில் அடித்துக்கொண்டாலும் டிரம்புக்கு மோடி அடிபணிந்தே தீருவார் - ராகுல் காந்தி

    • எந்த காலக்கெடுவையும் விட தேசிய நலனுக்கே முன்னுரிமை எனவும் கோயல் கூறியிருந்தார்.
    • இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்ய ஜூலை 9 ஆம் தேதிக்குள் டிரம்ப் காலக்கெடு நிர்ணயித்துள்ளார்.

    இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடப் போவதில்லை என்று வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் கூறியதை அடுத்து, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இந்த ஒப்பந்தம் குறித்து பிரதமர் நரேந்திர மோடியை விமர்சித்துள்ளார்.

    அமெரிக்காவுடனான முன்மொழியப்பட்ட வர்த்தக ஒப்பந்தம் முழுமையாக இறுதி செய்யப்பட்டால் மட்டுமே இந்தியா அதை ஏற்றுக்கொள்ளும் என்றும் எந்த காலக்கெடுவையும் விட தேசிய நலனுக்கே முன்னுரிமை எனவும் கோயல் கூறியிருந்தார்.

    இந்நிலையில், "பியூஷ் கோயல் எவ்வளவு வேண்டுமானாலும் தனது நெஞ்சை அடித்துக் கொள்ளலாம். ஆனால் மோடி டிரம்பின் வரி காலக்கெடுவுக்கு பணிவுடன் அடிபணிவார் என்று நான் கூறுகிறேன்" என்று ராகுல் காந்தி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

    இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்ய ஜூலை 9 ஆம் தேதிக்குள் டிரம்ப் காலக்கெடு நிர்ணயித்துள்ளார்.

    Next Story
    ×