அஜித் பவார் இறுதிச் சடங்கில் ரூ.30 லட்சம் மதிப்புடைய நகை, பொருட்கள் திருட்டு - 6 பேர் கைது

அங்கிருந்தவர்களின் நகைகள் மற்றும் விலை உயர்ந்த பொருட்களைத் திருடினர்.திருடப்பட்ட பொருட்களின் மொத்த மதிப்பு சுமார் 30 லட்சம் ரூபாய் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
அஜித் பவார் இறுதிச் சடங்கில் ரூ.30 லட்சம் மதிப்புடைய நகை, பொருட்கள்  திருட்டு - 6 பேர் கைது
Published on

மகாராஷ்டிரா துணை முதல்வராக இருந்த அஜித் பவார் கடந்த ஜனவரி 28 அன்று நடந்த விமான விபத்தில் உயிரிழந்தார்.

அவரின் இறுதிச் சடங்கு கடந்த வியாழக்கிழமை பாராமதியில் உள்ள வித்யா பிரதிஷ்டான் மைதானத்தில் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் பங்கேற்றனர்.

அதிக கூட்டத்தை பயன்படுத்திக் கொண்ட திருடர்கள், அங்கிருந்தவர்களின் நகைகள் மற்றும் விலை உயர்ந்த பொருட்களைத் திருடினர்.

இறுதிச் சடங்குகள் முடிந்த பிறகு, சுமார் 15 பேர் தங்கள் தங்கச் சங்கிலிகள் மற்றும் பொருட்கள் திருடு போனதாகப் போலீசில் புகார் அளித்தனர்.

திருடப்பட்ட பொருட்களின் மொத்த மதிப்பு சுமார் 30 லட்சம் ரூபாய் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட போலீசார், இன்று (செவ்வாய்க்கிழமை) இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய 7 சந்தேக நபர்களைக் கைது செய்துள்ளனர்.

அவர்களின் வாக்குமூலம் அடிப்படையில் திருடப்பட்ட பொருட்களை மீட்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.  

X

Maalai Malar
www.maalaimalar.com