என் மலர்tooltip icon

    இந்தியா

    அமெரிக்காவுக்கு பதிலடி வரி விதிக்கவுள்ளதாக உலக வர்த்தக அமைப்பில் இந்தியா திட்டவட்டம்
    X

    அமெரிக்காவுக்கு பதிலடி வரி விதிக்கவுள்ளதாக உலக வர்த்தக அமைப்பில் இந்தியா திட்டவட்டம்

    • டிரம்ப் இந்தியா உள்பட 75-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரஸ்பர வரிகளை விதித்தார்.
    • அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு வரி விதிக்க இந்தியா முடிவு

    அமெரிக்கா மீது பல்வேறு நாடுகள் அதிக வரிகளை விதிப்பதாக அதிபர் டிரம்ப் குற்றம்சாட்டி இந்தியா உள்பட 75-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரஸ்பர வரிகளை விதித்தார்.

    இந்தியா மீது 26 சதவீத வரியை விதித்தார். பின்னர் சீனாவை தவிர மற்ற நாடுகள் மீதான வரி விதிப்பை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்தார்.

    இதையடுத்து இந்தியா உள்பட பல நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. 90 நாட்கள் வரிவிதிப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கான காலக்கெடு வருகிற 9 ஆம் தேதியுடன் முடிவடைகிறது.

    தங்களுடன் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளாத நாடுகள் மீது 9-ந் தேதிக்குப் பின்னர் வரி விதிப்பு அமலாகும் என்றும் குறிப்பிட்ட நாடுகளுடன் மட்டுமே ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும் என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில், அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வாகனங்கள், அதன் உதிரி பாகங்கள் மீது பதிலடி வரி விதிக்கவுள்ளதாக உலக வர்த்தக அமைப்பில் இந்தியா தெரிவித்துள்ளது.

    அமெரிக்காவின் பரஸ்பர வரிக்கு பதிலடியாக, உலக வர்த்தக அமைப்பின் விதிகளுக்கு உட்பட்டு சுமார் ரூ. 6,200 கோடி வரி விதிக்க இந்தியா திட்டமிட்டுள்ளது.

    Next Story
    ×