என் மலர்tooltip icon

    இந்தியா

    ஓடும் ரெயிலின் கழிவறையில் வைத்து சிறுமி பாலியல் வன்கொடுமை.. வீடியோ எடுத்த கொடூரம்
    X

    ஓடும் ரெயிலின் கழிவறையில் வைத்து சிறுமி பாலியல் வன்கொடுமை.. வீடியோ எடுத்த கொடூரம்

    • சிறுமியை வெகு நேரமாக நோட்டம் விட்ட 20 வயது சக பயணி சிறுமியை பின்தொடர்ந்து கழிவறைக்கு சென்றான்.
    • சிறுமியின் தந்தை அந்த இளைஞனை பிடித்து அவனின் செல்போனை ஆராய்ந்ததில் அதில் சிறுமியை அவன் வன்கொடுமை செய்யும் வீடியோ பதிவுகள் இருந்துள்ளன.

    தெலுங்கானாவில் ஓடும் ரெயில் கழிவறையில் வைத்து சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

    குற்றம் சாட்டப்பட்டவர் பீகாரைச் சேர்ந்தவர் என்றும், பாதிக்கப்பட்ட சிறுமி ஒடிசாவைச் சேர்ந்தவர் என்றும் ரயில்வே காவல்துறை வட்டாரம் தெரிவித்துள்ளது.

    பாதிக்கப்பட்ட சிறுமி தனது குடும்பத்தினருடன் ஏப்ரல் 2 ஆம் தேதி ஒடிசாவிலிருந்து ரெயிலிலில் சென்றுகொண்டிருந்தார். ஏப்ரல் 3 ஆம் தேதி அதிகாலை 2 மணியளவில் தெலுங்கானாவில் ரெயில் வந்துகொண்டுருந்தபோது சிறுமி கழிவறைக்கு சென்றுள்ளார்.

    அப்போது சிறுமியை வெகு நேரமாக நோட்டம் விட்ட 20 வயது சக பயணி சிறுமியை பின்தொடர்ந்து கழிவறைக்கு சென்று உள்ளே வைத்து அவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளான். இதனை சிறுமி தனது பெற்றோரிடம் கூறினாள்.

    சிறுமியின் தந்தை அந்த இளைஞனை பிடித்து அவனின் செல்போனை ஆராய்ந்ததில் அதில் சிறுமியை அவன் வன்கொடுமை செய்யும் வீடியோ பதிவுகள் இருந்துள்ளன.

    இதைத்தொடர்ந்து அளிக்கப்பட்ட புகாரின்பேரில் போலீசார் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். குற்றம்சாட்டப்பட்ட இளைஞனிடம் விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×