என் மலர்
இந்தியா

பிரதமர் மோடி ஆபரேஷன் சிந்தூரிலிருந்து அரசியல் ஆதாயம் பெற விரும்புகிறார்: காங்கிரஸ்
- என்டிஏ முதலமைச்சர்களுடன் ஆலோசனை நடத்துவதற்கு மட்டும் அழைப்பு.
- பின்னர் அனைத்து கட்சி பிரதிநிதிகளை வெளிநாடுகளுக்கு அனுப்புவதற்கு விரும்புகிறார்- ஜெய்ராம் ரமேஷ்
ஆபரேஷன் சிந்தூரிலிருந்து பிரதமர் மோடி ஆதாயம் பெற விரும்புகிறார் என காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக ஜெய்ராம் ரமேஷ் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
பிரதமர் மோடி மே 25ஆம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி முதலமைச்சர்களுடன் ஆலோசனை நடத்த அழைப்பு விடுத்துள்ளது அரசியல் ஆதாயம் பெறுவதற்கானதாகும். ஆனால் இப்போது பாகிஸ்தானில் இருந்து பயங்கரவாதம் குறித்த இந்தியாவின் நிலைப்பாட்டை விளக்குவதற்காக அனைத்து கட்சிகளின் எம்.பி.க்களும் வெளிநாடு செல்ல வேண்டும் என்று அவர் விரும்புகிறார்.
சிறப்பு பாராளுமன்ற கூட்டத் தொடருக்கு காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளதை பிரதமர் மோடி ஏற்றுக்கொள்ளவில்லை. பயங்கரவாதத்தில் பாகிஸ்தானிடமிருந்து இந்தியாவின் நிலையை குறித்து விளக்குவதற்காக அனைத்து கட்சி எம்.பி.க்கள் பிரதிநிதிகளை வெளிநாட்டிற்கு அனுப்ப பிரதமர் மோடி தற்போது திடீரென முடிவு எடுத்துள்ளார்.
காங்கிரஸ் கட்சி எப்போதும் தேசிய நலன்தான் முதன்மையானது என்ற நிலையை எடுத்து வருகிறது. பாஜகவைப் போல தேசிய பாதுகாப்பு பிரச்சினைகளை ஒருபோதும் அரசியலாக்குவதில்லை. எனவே, இந்த பிரதிநிதிகளின் ஒரு பகுதியாக காங்கிரஸ் நிச்சயமாக இருக்கும்.
இவ்வாறு ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.






