என் மலர்
இந்தியா

காஷ்மீரில் அமர்நாத் யாத்திரை வெற்றிகரமாக நடத்தப்படும் - மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நம்பிக்கை
- பஹல்காம் தாக்குதல் சம்பவத்தில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
- இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதைத்தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
பஹல்காம் தாக்குதல் நடந்துள்ள நிலையில், காஷ்மீரில் திட்டமிட்டபடி ஜூலை மாதம் அமர்நாத் யாத்திரை தொடங்கும் என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பேசிய அவர், "இந்திய மக்கள் விரைவில் காஷ்மீருக்கு சுற்றுலா செல்லுவார்கள். அமர்நாத் யாத்திரையை வெற்றிகரமாக நடத்தி காட்டுவோம்" என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
Next Story






