என் மலர்
செய்திகள்

வயநாட்டில் ராகுல் காந்தியை எதிர்த்து போட்டியிடும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் அறிவிப்பு
கேரள மாநிலம், வயநாடு பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் ராகுல் காந்திக்கு எதிராக களமிறங்கும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் பெயரை பாஜக தலைவர் அமித் ஷா இன்று அறிவித்துள்ளார். #BJPally #BharatDharmaJanaSena #ThusharVellappally #RahulinWayanad
புதுடெல்லி:
உத்தரபிரதேசம் மாநிலம், அமேதி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூடுதலாக கேரள மாநிலம், வயநாடு பாராளுமன்ற தொகுதியிலும் போட்டியிடுகிறார்.
ராகுலின் இந்த முடிவுக்கு கேரள மாநிலத்தை ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் வயநாட்டில் ராகுல் காந்தியை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் யாராக இருக்கும்? என்ற ஆவல் அந்த தொகுதிவாழ் மக்களிடையே எழுந்துள்ளது.
இந்நிலையில், வயநாடு தொகுதியில் ராகுலை எதிர்த்து தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக பாரத் தர்ம ஜன சேனா தலைவர் துஷார் வெள்ளப்பள்ளி போட்டியிடுவார் என்று தனது டுவிட்டர் பக்கத்தில் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா இன்று அறிவித்துள்ளார்.
'வயநாடு தொகுதிக்கான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக பாரத் தர்ம ஜன சேனா தலைவர் துஷார் வெள்ளப்பள்ளியின் பெயரை நான் பெருமையுடன் அறிவிக்கிறேன். மிக ஆற்றல் வாய்ந்த வீரியமான இளம்தலைவரான துஷார் வெள்ளப்பள்ளி நம்முடைய சமூகநீதி மற்றும் வளர்ச்சி ஆகிய குறிக்கோள்களின் பிரதிநிதியாக திகழ்கிறார். அவருடன் இணைந்து கேரள அரசியலில் மாற்றுசக்தியாக தேசிய ஜனநாயக கூட்டணி மாறும்’ என தனது டுவிட்டர் பக்கத்தில் இன்று பதிவிட்டுள்ள அமித் ஷா குறிப்பிட்டுள்ளார்.

துஷார் வெள்ளப்பள்ளி
கேரள மாநில அரசியலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக கூட்டணி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக கூட்டணி ஆகிய இரு அணிகளின் ஆதிக்கம் மட்டுமே மேலோங்கி இருக்கும் நிலையில் இம்மாநிலத்தில் வாழும் பொருளாதாரத்தில் பின்தங்கிய 'எழவா’ உள்ளிட்ட வகுப்புகளை சேர்ந்த சில தலைவர்களால் பாரத் தர்ம ஜன சேனா கட்சி உருவாக்கப்பட்டது.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்து கேரளாவில் உள்ள இந்து மக்களின் மத்தியில் மிகவும் பிரபலமாகி வரும் பாரத் தர்ம ஜன சேனா கட்சியின் தலைவரான துஷார் வேளப்பள்ளியை ராகுல் காந்தியை எதிர்த்து போட்டியிடும் வேட்பாளராக பாஜக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. #BJPally #BharatDharmaJanaSena #ThusharVellappally #RahulinWayanad
Next Story






