என் மலர்
செய்திகள்

இடைக்கால நிதி அமைச்சராக பியூஷ் கோயல் நியமனம்
நிதி அமைச்சர் அருண் ஜெட்லி அமெரிக்காவில் சிகிச்சையில் உள்ளதால், மத்திய நிதி அமைச்சக பொறுப்பு பியூஷ் கோயலுக்கு கூடுதலாக வழங்கி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார். #ArunJaitley #FinanceMinister #PiyushGoyal
புதுடெல்லி:
மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி சிகிச்சைக்காக அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்கிடையே, பிப்ரவரி ஒன்றாம் தேதி மத்திய அரசு இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளது.
இந்நிலையில், இடைக்கால நிதி அமைச்சராக பியூஷ் கோயல் நியமனம் செய்யப்பட்டு உள்ளார் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியின் பரிந்துரை பேரில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று ஒப்புதல் அளித்துள்ளார்
.
மேலும், இலாகா இல்லாத மத்திய அமைச்சராக அருண் ஜெட்லி தொடர்வார் எனவும் மத்திய அரசு அறிவித்துள்ளது #ArunJaitley #FinanceMinister #PiyushGoyal
Next Story






